1. அல்குர்ஆன்:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட 30 ஜுஸ்வுகள் அடங்கிய இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையான அல்குர்ஆனாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் இருப்பதாக நம்புகின்றனர். ‘இமாமுல் காயிப்’ என்பவரிடம் அது இருப்பதாகவும் அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
2. அல் ஹதீஸ்:
புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அலி (ரழி) அவர்களையும் இவர்கள் நம்பும் இமாம்களும் அறிவித்த அல் உஸ்லுல் காபியில் உள்ளவற்றையே நம்புகின்றனர்.
3. தொழுகை
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ் ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்) அலி (ரழி) பாதிமா (ரழி) ஹஸன் (ரழி)இஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலி (ரழி) ஆவார்.’ இதில் நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
–(அய்யாஷி தப்ஸீர் Page – 1 Page:128 நூருஸ்ஸகலைன் Page – 1 Page: 23
4. அலியின் பொருட்டால் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள்
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் ‘நபி (ஸல்) அவர்கள் ருகூவு ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது அவர்கள் ‘இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக’ என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
–(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் Page – 1 Page: 226)
அலியின் பொருட்டால் நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா?
5. முஸா (அலை) விட அலி (ரலி) சிறந்தவர்
‘நான் முஸா (அலை) ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்’ என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
–அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1 பக்கம் 261
6. அலி (ரலி) அவர்களை கொண்டே மன்னிப்பு
‘உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியை சோதித்தான்’ என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
–அல்புர்ஹான் முன்னுரை பக்கம் 27
7. மிஃராஜுல் நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களை கண்டார்களாம்
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ‘முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ‘ என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அலி’ என்றார்களாம். ‘முஹம்மதே திரும்பிப் பாரும்’ என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
–தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2இ பக்கம் 404
8. மரண நேரம் அவர்களுக்கும் தெரியும்
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
–அல் உஸுலுமினல் காபி பக்கம் 258
9. மலக்குகளுடன் நேரடி தொடர்பு
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பக்கம் 393
10. நபிக்கே இல்லாத ஞானம் உள்ளதாம்
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
–மேற்படி நூல் பக்கம் 402
11. சுலைமான் நபியின் சக்தி
எந்த மனிதனின் பேச்சாயினும் பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
–குர்புல் இஸ்னாத் பக்கம் 146
12. அல்லாஹ் விக்கு நிகர்
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பாகம் 19 பக்கம் 197
13. அல்லாஹ் விக்கு நிகர்
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) ‘வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன்.
நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்’ என்றார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பாகம் 1 பக்கம் 261
14.ஈசா நபியின் சக்தி
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும் பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது ‘முடியுமே’ என்றார்களாம்.
–கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி பாகம் 1 பக்கம் 470
15. அல்லாஹ்வை கிண்டல் செய்யும் போக்கு
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
‘யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.’ அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
–பஹ்ரானியின் ‘புர்ஹான்’ எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
16.அல்லாஹவின் தீர்ப்பில் பங்கு
‘ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்’ என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 78
17. எந்த அமலும் செய்ய வேண்டியதில்லை
‘ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.’ என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 315
18. நரகமே இல்லை !
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும் கற்கள் மணல்கள் மரங்கள் முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
–உயூனு அக்பாரிர் ரிளா பாகம் 2 பக்கம் 236
அயோக்கியத்தனங்கள் தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக