புதன், 3 நவம்பர், 2010

பொய்யன் ஜமாத்தின் ஈனசெயல் !

கேள்வி: முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படும் போது தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?
பிஜே பதில் :
மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இடச் சென்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களூம் சிறையில் அடைப்பு! அனைத்து முஸ்லிம்கள் கொந்தளிப்பு! தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்த்தது! என்று பலவாறாக மின்னஞ்சல்கள் நேற்று முழுவதும் பரப்பப்பட்டன.

ஒவ்வொருவரும் ஒரு போராட்ட வழிமுறையைக் கையில் எடுப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டத்தைத் தான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என்பது நமது நிலைபாடு இல்லை.

அந்த வகையில் பாக்கர் ஜமாஅத்தினர் ஒரு போராட்டம் நடத்தினார்கள்.

220 பேர் அதில் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வது வழக்கமான நடைமுறை தான். இதிலும் பிரச்சனை இல்லை.

பெரும்பாலும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மாலை நேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள். சில நேரத்தில் கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு. சில மாதங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமுமுக வைத் துவக்கிய ஆரம்ப நேரத்தில் கோவையில் பூட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தினோம். நானும் ஹைதர் அலியும் சுமார் 800 சகோதரர்கள் (என்று நினைக்கிறேன்) கைது செய்யப்பட்டோம். சிறையில் அடைக்கப்பட்டோம்.

இது போல் கைது செய்யப்படும் போது எவ்வாறு தலைவர்கள் நடக்கிறார்கள் என்பதை வைத்துத் தான் சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்படும்.

ஆனால் பாக்கர் கூட்டம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கேவலப்படுத்தி அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

போராட்டக் களத்தில் கைது செய்யப்படும் போது சமுதாயத்தின் மானம் காக்கும் வகையில் வீரியத்தை இழந்து விடாமல் இருக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும், சில முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கைது செய்வது உறுதியானால் பெண்களை அனுப்பிவிடத் தயாராக இருப்பதாக காவல் துறையினர் அறிவிப்பார்கள். போராடும் இயக்கத்தினர் அதை ஏற்று பெண்களை அனுப்பி விட்டு ஆண்கள் மட்டும் கைதாவார்கள். வீரியம் மிக்க அனைத்து இயக்கங்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். கோவையில் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போதும் அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் கைது செய்யப்பட்ட போதும் இதே வழிமுறையைத் தான் கையாண்டு வந்துள்ளோம்.

அது போல் பெண்களை அனுப்பி விடுங்கள் என்று காவல் துறை இந்த வீராதி வீரர்களிடம் சொன்னது. ஆனால் பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு எப்படியாவது சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் கேவலத்தைச் செய்தார்கள்.

அதாவது பெண்களையும் கைது செய்யச் சொன்னால் கைது செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று கணக்குப் போடும் ஈனத்தனமான செயலைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தைக் கோழைச் சமுதாயமாகச் சித்தரித்தார்கள்.

எந்த ஒரு போராட்டமானாலும் அதை நாம் தான் நமது பொறுப்பில் நடத்துகிறோம். எனவே கைது செய்யப்படும் போது பிற இயக்கத் தலைவர்களின் உதவியை நாடாமல் மானம் காப்பது வீரியமிக்க இயக்கத்தவரின் தார்மீகக் கடமையாகும். ஆனால் இவர்கல் என்ன செய்தார்கள்.
காவல் துறையில் கெஞ்சினார்கள். அனைத்து முஸ்லிம் இயக்கங்க்களின் தலைவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு எப்படியாவது எங்களைக் கைது செய்யாமல் இருக்க உதவுங்கள் என்று கெஞ்சினார்கள். நம்மைத் தவிர அனைவரிடமும் கெஞ்சினார்கள். தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் இவர்களுக்கு உதவ் விரும்பி முயற்சித்தாலும் இவர்களுக்கு அரசுடன் தொடர்பு இல்லாததால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்களை முனீர் தொடர்பு கொண்டு உதவி தேடினார். அதிகாரிகள் அனைவரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பஷீரிடம் கூறி விட்டனர்.

இதன் பின்னர் ஆற்காடு வீராசாமியை அவர் முதலில் தொடர்பு கொண்டு பின்னர் முதல்வர் அலுவகத்திலும் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். இடைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் விளக்கியதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது. இது குறித்து தேசிய லீக் தலைவர் என் கருத்தைக் கேட்ட போது சமுதாயத்தைக் கேவ்பலப்படுத்தி விட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். காவல் துறையில் கெஞ்சக் கூடாது. பிற இயக்கங்களின் உதவியை கோரக் கூடாது. பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது இந்த அனைத்து நெறிமுறைகளையும் மீறிய இவர்களை நினத்தால் அருவருப்பாக உள்ளது என்பது தான் என் கருத்து என்று தெரிவித்தேன்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்குத் தயாராக இல்லாத் கோழைகள் ஏன் இத்தகைய போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்? வீரியத்துடன் சிறை செல்லத் தவறியதற்காகவும், மானம் கெட்டு கெஞ்சிக் கூத்தாடியதற்காகவும், பெண்களைக் கேட்யமாக பயன்படுத்தியதற்காகவும் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு பதிலாக அவர்களின் இழிசெயலை நியாயப்படுத்த கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?

வீரியமாகப் போராடுவார்கள்; கைது என்றால் காலில் விழுந்து விடுவார்கள் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களைப் பற்றியும் அரசாங்கம் மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விட்டனர்.

சிறை செல்லத் தயாராக இருக்கும் சமுதாயத்தைத் தான் நாம் உருவாக்கினோம். அது தான் ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தது.

இவர்கள் துணிவுடனும், வீரத்துடனும் முதலில் சிறை செல்லத் தயாராகி இருந்தால் மற்ற இயக்கங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இனியாவது வாய்சொல் வீரம் பேசுவதை நிறுத்திக் கொண்டு சிறை செல்லத் தயாராக இருந்தால் தடை மீறும் போரட்டத்தை நடத்தட்டும். இல்லாவிட்டால் தமது சக்திக்கு ஏற்ப போராட்டக் களத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடோடிச் செல்லவில்லை என்றால் அவர்கள் கோழைகளாகி சமுதாயத்தின் மானத்துடன் விளையாடியதால் தான். அவர்கள் சிறை செல்லத் தயார் நிலையில் இருந்து அதிகாரிகளிடம் கெஞ்சாமல் பிற இயக்கங்களிடம் அழுது வடியமால் இருந்திருந்தால் தான் இவ்வாறு கேட்க உரிமை உள்ளது.

எங்களை விடுவிக்க அனைவரும் ஓடி வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடி வரவில்லை என்று கேட்பதை விட அருவருப்பான கேள்வி வேறு எதுவும் இல்லை.

onlinepj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக