சனி, 10 ஏப்ரல், 2010

பயணம்

பயணம் ஓர் வேதனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்துவிடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.இதை அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 1804

இரவில் தனியே செல்வதை தவிர்க்கவும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்.”இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி 2998)

பெண்கள் தனியே பயணித்தல்

அபூசயீத் அல்குத்ரீ (ர­ரி) அவர்கள் கூறிதயாவது:நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:1. ஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு பயணம் செய்யக் கூடாது.நூல்; புகாரி 1197

வியாழக்கிழமை செல்வது

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:என் தந்தை கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்று தான் புறப்படுவார்கள்” என்று கூறி வந்தார்கள்.நூல்:புகாரி ௨௯௪௯

இந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு வியாழக்கிழமை பயணம் மேற்கொள்வதை விரும்ப வேண்டும் என்று சில அறிஞர்கள் விளக்கமளிக்கின்றார்கள். ஆனால் இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் நல்லநாள் கெட்டநாள் பார்த்து பயணம் செய்வதோ, குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மகத்துவம் இருப்பதாக கருதுவதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகவும் கண்டித்துள்ள காரியமாகும். எனவே அதுபோன்ற காரியத்தை ஒரு முஸ்­ம் ஒருபோதும் செய்து விடக்கூடாது.வெள்ளிக்கிழமையிலும், வியாழன் அல்லாத மற்ற நாள்களிலும் நபிகளார் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்பதை பார்க்கும் போது நபிகளார் ஏதோ ஒரு வசதிக்காக வியாழக்கிழமை பயணம் செய்துள்ளார்கள் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

பயணிகளின் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்

அபூஹூரைரா (ர­) அவர்கள் கூறியதாவது:மூன்று துஆக்கள் சந்தேகமின்றி பதிலளிக்கப்படும்.1. பெற்றோருக்காக பிள்ளைகள் செய்யும் துஆ 2. பயணியின் துஆ. 3.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: அபூதாவூத் 1313

தொழுகையில் சலுகை

யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அனஸ் பின் மாரி­க் (ர­ரி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘மூன்று ஃபர்ஸக்’ (25 km) தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.நூல்: முஸ்­ம் 1230
குறிப்பு : பயணம் என்பது வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை மட்டும் தான் குறிக்கும் என்று தவறாக விளங்கி கொள்ளக் கூடாது. வெளியூர் பயணம் செய்தவர்கள் வெளியூரில் தங்கியிருக்கும் வரை பயணத்தில் இருப்பவர்களாகவே இஸ்லாத்தின் பார்வையில் கருதப்படுவார்கள். அவர்களுக்குரிய சலுகைகளை தங்கியிருக்கும் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(பார்க்க ஆதாரம் புகாரி 4275, 4276)

நோன்பில் சலுகை

இப்னு அப்பாஸ் (ர­ரி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிரிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். ‘உஸ்ஃபான்’ எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்­ரி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம்.முஸ்­ம் 2033

வாகனத்தில் ஏறியதும் ஓதும் துஆ

அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இப்னு உமர் (ர­ரி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் (‘அல்லாஹு அக்பர்’) கூறுவார்கள். பிறகு ”சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கரிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமரி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாரி வல்அஹ்ல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிரிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிரிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிரிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)