பிறையை கணிப்பது சுன்னாவுக்கு மாற்றமானது - கமாலுதீன் மதனி அறிவிப்பு !!
விஞ்ஞான ரீதியில் முன்னதாகவே பிறையின் ஓட்டத்தை கணித்து அதற்கேற்ப வருடக்காலேண்டரை தயாரித்து, அதன் மூலம் உலகம் முழுவதையும் ஒன்று படுத்தி விடலாம் என்ற சித்தாந்தத்தை கடந்த சில வருடங்களாக மக்களிடம் எடுத்து சொன்ன அஹ்லே குர் ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் , இப்பொழுது அந்த சித்தாந்தம் தவறு என்பதை அல்லாஹ்வுக்காக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிறையை கண்ணால் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும என்று முன்னர் அவர்கள் கொண்டிருந்த நிலைபாட்டின் அடிப்படையிலேயே இனி தொடருவது என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !
அல் ஜன்னத் (ஜூலை மாதம்) - 20 ஆம் பக்கத்தில், அமைப்பின் தலைவர் எஸ். கமாலுதீன் மதனி அவர்கள் தந்துள்ள விளக்கத்தின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.
""இது விஷயத்தில் நம்மை விடவும் அறிவு ஞானம் உடையவர்களின் விளக்கங்களை குர் ஆன், சுன்னாஹ் ஒளியில் பார்க்கும் போது கணித்து சொல்வது நபி (ஸல்) அவர்களின் நேரடிக்கட்டளைக்கும் அவர்களது செயல் முறைக்கும் மாற்றமாக உள்ளதை உணர முடிந்தது."" ....
அல்லாஹ்வுடைய தூதரின் வெளிப்படையான கட்டளைக்கு மாற்றமாகி விடுமே என்ற அச்சத்தை தவிர வேறு எந்த ஆதாயமும் எங்களுக்கில்லை!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக