புதன், 3 நவம்பர், 2010

பெரியவர்களுக்கு எழுந்து நின்றல் அனுமதிக்கப்பட்டதொன்றா இல்லையா ?

Tajuddeen S
reply-totamilmuslimbrothers@googlegroups.com
totamilmuslimbrothers@googlegroups.com





அஸ்ஸலாமு அலைக்கும்,

பெரியவர்களுக்கு எழுந்து நின்றல் கூடுமா ? கூடாதா ?

ரசூல்(ஸல்) அவர்கள் சஹாபா பெருமக்களை தனக்கு எழுந்து நிற்கவேண்டாமென்றார்கள். இது ரசூல்(ஸல்) அவர்களது பணிவினையும் அடக்கத்தினையும் காட்டுகிறது. ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் சஹாபாப் பெருமக்களை எழுந்து நின்று மற்றப் பெரியவர்களையோ முக்கியமானவர்களையோ வரவேற்கக் கூறியுள்ளார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்கள் ரசூலுல்லாஹ்வினைக் காணவரும்போதெல்லாம் எழுந்து நின்றே வரவேற்றுள்ளார்கள். அவ்வாறே ஃபாத்திமா(ரலி) அவர்களும் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களை தனது வீட்டில் வரவேற்றுள்ளார்கள். ஹதீஸ் கிரந்தங்கள்: புகாரி, அபூதாவுது, ஷுஃபுல் ஈமான்

முழுமையான ஹதீஸ்களை அறிய இந்த வீடியோவினைப் பார்க்கவும்: http://tamilmuslimtube.magnify.net/video/2986301429923007299130192992302

வஸ்ஸலாம்
--

Nashid Ahmed

to tamilmuslimbro., Tajuddeen



சகோ. தாஜ்ஜுதீன் அவர்கள், ஹதீஸ்களின் விளக்கங்களை புரிந்து கொள்ளாதவர் என்பது அவரது இந்த மறுப்புகள் எடுத்துக்காட்டுகின்றன

எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறியது ரசூல்(ஸல்) அவர்களின் பணிவை காட்டுகிறதாம்.

ஒரு ஹதீஸை ஆதாரமாக கூறினால், அதை பின்பற்ற தேவையில்லை, அது ரசூல் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட நிலையை காட்டுகிறது என்று கூறுபவரை என்னே என்று கூறுவது?

காலில் விழுந்து முத்தமிடலாம் என்பதற்கு ஆதாரம் கேட்டேனே, அதற்கு இதுவரை ஆதாரம் தர உங்களால் இயன்றதா?

ரசூல் (ஸல்) அவர்கள் தனது காலில் யாரும் விழக்கூடாது என்று கூறினார்களே, விழுவதே தடுக்கப்பட்டிருக்கிறது எனும்போது, விழுவதற்கும் அடுத்த நிலையான முத்தமிடல், அதை விட தகுதியற்ற நிலையில்லையா?
இதற்க்கெல்லாம் பதில் எங்கே?

கேட்டால், ரசூல்(ஸல்), முக்கிய பிரமுகர்களை எழுந்து தான் வரவேற்ப்பார்கள் என்று சொல்கிறீர்கள்.

மரியாதைக்கு எழுந்து நிற்கக்கூடாது என்பதை மறுப்பதற்கு வரவேர்ப்பதற்க்காக எழுந்து நிற்பதாக வரும் ஹதீஸ் பயனளிக்காது.

ஷைக் என்று நம்பக்கூடிய நபர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அபரிதமான மரியாதை, ஹதீஸ்களை மனமுரண்டாக மறுக்கும் தகாத நிலைக்கு தான் உங்களை தள்ளியுள்ளது !

தனக்காக எழுந்து நிற்கக்கூடாது என்று கூறிய ரசூல் (ஸல்) அவர்கள் தான், தங்களுக்காக
ஃபாத்திமா(ரலி) எழுந்து நின்றதை அனுமதித்தார்கள்.


இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவெனில், எழுந்திருக்க கூடாது என்ற தடை மரியாதைக்காக எழுவதுவதை தான் காட்டுகிறது என்பதும், தன் மகளுக்காக அவர்கள் எழுந்ததையோ, அவர்களுக்காக தங்கள் மகள் எழுந்ததையோ மரியாதைக்காக எழுந்ததாக கருதாமல், அன்பின் வெளிப்பாடாக, விருந்து உபசரிப்பின் (வரவேர்ப்பதின் ) வெளிப்பாடாக அவர்கள் செய்ததாக பிரித்தறிந்து புரிவது தான் அறிவு.

நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸிலேயே, நபிகள் நாயகம்(ஸல்) தங்கள் மகளுக்காகவும், அவர்களது மகள், அவர்களுக்காகவும் இரு சந்தர்ப்பங்களில் எழுந்து நின்று வீட்டுக்கு வருபவரை உபசரிதுள்ளார்கள் என்ற ஹதீஸ், மரியாதைக்கு எழுவதற்கும் உபசரிப்புக்கு எழுவதற்கும் உள்ள வேறுபாட்டை மிக துல்லியமாக நமக்கு பிரிதுக்காடுகிறது!,

மரியாதைக்கு எழுவதில் பரஸ்பரம் செய்து கொள்ளும் நிலை இருக்காது.

இங்கே பரஸ்பரம் (இரு தரப்பாரும்) எழுந்தார்கள் என்று கூறப்படுவதே, அது மரியாதை செலுத்தும் பொருட்டு அல்ல, உபசரிப்புக்காக என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

சரி. பாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து நின்றார்களே, அதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏன் தடுக்கவில்லை?
உங்கள் வாதப்படி, தனக்காக எழுவதை ரசூல்(ஸல்) தடுத்தார்கள் என்பது அவர்களது தனிப்பட்ட பணிவை காட்டுகிறது, பிறருக்கான சட்டம் இல்லை என்றால், தனது பணிவை, இந்தே நேரத்தில் ரசூல்(ஸல்) அவர்கள் ஏன் காட்டவில்லை?
உங்கள் வாதப்படியே, ரசூல்(ஸல்) அவர்கள் பணிவில்லாமல் நடந்து கொண்டார்கள் என்றே ஆகிறது!

இதற்கு பதில் சொல்ல இயலுமா உங்களால்?

மரியாதைக்காக எழுந்து நிற்காதீர்கள் என்று நேரடியாக ரசூல்(ஸல்) கட்டளையிட்டதற்கு என்ன விளக்கம் என்று கேட்டால், அதற்கு விளக்கம் தராமல், விருந்தாளிகளை உபசரிப்பதற்காக எழுவதை ஆதாரம் காட்டி, இதன் மூலம், காலிலும் விழலாம், முத்தமும் இடலாம் என்று உங்கள் வாதத்தை நிறுவப்போகிறீர்களா?

ஒன்று கேட்கப்பட்டதற்கு ஆதாரம் தர வேண்டும், அல்லது மெளனமாக இருக்க வேண்டும். சம்மந்தா சமம்ந்தமில்லாமல் பேசுவது அழகல்ல !


நம்மையெல்லாம் விட ஆயிரம் மடங்கு சிறப்பு வாய்ந்த அந்த மனிதரின் காலிலேயே விழக்கூடாது எனும்போது, என்னையும் உங்களையும் போல அற்பமான இந்த நபர்களின் காலில் விழுந்து முத்தமிடலாம் என்ற உங்கள் நம்பிக்கை, உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளும் கீழான நிலையாக உங்களுக்கு தோன்றவில்லையா?

எனது பதிலை கண்ட உடனேயே மறுப்பு எழுத குறியாக இருக்காமல், ஒரு அரை மணி நேரமாவது இது குறித்து சிந்தியுங்கள். ரசூல்(ஸல்) அவர்களுக்கு இல்லாத மரியாதையை நாம் பிறருக்கு தருகிறோமே, இது அப்பட்டமான இறைவனுக்கு விருத்தமான செயல் இல்லையா?

சிந்திப்பதற்க்காகவே இந்த மடல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக