வெள்ளி, 25 ஜனவரி, 2013

எது கருத்து சுதந்திரம்??






நாட்டின் ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் கட்டிக்காக்கப்படுவதில் பெரும் பங்கை நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயலாக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆளும் வர்க்கமும் வகிக்கிறது.
இதற்கு அடுத்தப்படியாக  இதை உறுதி செய்வது நாட்டின் ஊடகத்துறை என்று சொன்னால் அது மிகையல்ல. வெகுஜன மக்களை எளிதில் சென்றடையவல்ல சக்தி, ஊடகங்களுக்கு உண்டு என்பதை பலரும் உணர்ந்துள்ளதன்  பயனாய், அவை பல்வேறு சமூக நல்லிணக்கங்கள், கலாசார நெறிமுறைகள், மத ஒற்றுமைகள், அரசியல் ரீதியிலான பிரச்சாரங்கள் என நாட்டு ஒற்றுமைக்கு இந்த ஊடகங்கள் பல வகைகளில் பயன்பட்டு வருகின்றன.  

மதத்தின் பெயரால் தீவிரவாதிகளாக உலா வரும மக்கள் எல்லா மதங்களிலும் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் தாண்டிய பெரும்பான்மை நடுநிலை சமூகம் என்றைக்கும் மத நல்லிணக்கத்தையும் அமைதியையுமே விரும்புகின்றது. அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக தான் நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயல்படுத்தவல்ல ஆளும் வர்க்கமும் ஊடகமும் செயல்பட வேண்டும். இத்தகைய கூட்டு ஒத்துழைப்பு (collective responsibility) இருந்தால் மட்டுமே இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட இயலும்.

இதை குறிக்கோளை முன்னிறுத்தி இந்திய நாட்டு மக்கள் பயணப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், எந்த ஆயுதத்தை பயன்படுத்தி இந்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் முயற்சி செய்கிறோமோ, அதே ஆயுததை பயன்படுத்தி இந்த நோக்கத்தை சிதைத்து, ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம். 

இன்றைக்கு பெருவாரியான ஊடகங்களும் அரசியல் வர்க்கமும் தங்களது முழு பலத்தையும் சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்தை  அடித்து ஒடுக்கவே பயன்படுத்தி வருகிறது. மதக்கலவரங்களையும் ஹிந்து - முஸ்லிம் துவேஷங்களையும் தூண்டி விட்டு அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை வஞ்சித்து பழி தீர்ப்பதை இவர்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

பாபர் மஸ்ஜித் உடைப்பு சம்பவமானாலும், அதனையொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட கலவரங்களானாலும் மும்பை வெடிகுண்டு  சம்பவங்களானாலும், இறுதியாக இன்றைக்கு சமீபத்தில் நடந்த புனே, மாலேகான் வெடிகுண்டு சம்பவங்கள் என  எதை எடுத்துக்கொண்டாலும் அவை எல்லாமே இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்கிற ஒன்றை குறிக்கோளுடனேயே நடத்தப்பட்டன.

இந்த முயற்சியின் நவீன கட்டமாக தான் ஊடகத்துறையையும் குறிப்பாக சினிமா துறையையும் இந்த சங்க பரிவார கும்பல்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் கையில் எடுத்துள்ளன.

வெகு ஜன மக்களை எளிதில் கவர்ந்திழுக்கும் இன்றைய சினிமா துறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்து விட்டால் அவை அவர்களின் பாமர  மூளைக்கு எளிதில் சென்றடையும் என்கிற உண்மையை அறிந்து வைத்துள்ள இந்த கும்பல், இதற்காக மிக தீவிரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் முதல் இன்று மத வெறியன் கமல்ஹாசன் தயாரித்துள்ள விஸ்வரூபம் வரை அந்த நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக்கொள்ளும் சில அறிவு ஜீவிகள், இது போன்ற மத துவேஷத்திற்கு இடமளிக்காமல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும் என்கிற நோக்கமில்லாமல், இது போன்ற சதி திட்டங்களின் மூலம் முஸ்லிம்கள் உணர்வாலும் உடலாலும் பாதிக்கப்படுவதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இதற்கு இவர்கள் சொல்லும் ஒரே சால்ஜாப்பு அவை எல்லாம் அவர்களது கருத்து சுதந்திரம், அதை நாம் தடுக்க முடியாது என்பதாகும்.

எது கருத்து சுதந்திரம்?

மாலேகான் குண்டு வெடிப்புக்கும் நாட்டில் நடந்த இன்னும் ஏராளமான குண்டு வெடிப்புகளுக்கும் பாஜக மற்றும் சங் பரிவார கும்பல் தான் காரணம் என்று மத்திய அரசாங்கம் கூறுவதை அடிப்படையாக வைத்து ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா? இந்த அறிவு ஜீவி கும்பல் ஒத்துக் கொள்ளுமா?


மும்பை கலவரத்தின் எதார்த்த முகத்தை காட்டாமல் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வைத்து சினிமா எடுத்தானே மணிரத்தினம், அதற்கு பதிலடியாக, உண்மையில் அங்கே என்ன நடந்தது, முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார்கள், RSS, சங்க பரிவார, விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பல் அங்கே நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் என்னன்ன என்பதை விளக்கி ஒரு கதையை திரைப்படமாக எடுத்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? அதையும் கருத்து சுதந்திரம் என்று கூறி அனுமதிக்கும்மா இந்த கும்பல்??


கோவை கலவரத்திற்கு தமிழக காவல்துறை தான் காரணம் என்று ஒருவன் சினிமா எடுத்தால் தமிழக அரசாங்கம் அத்திரைப்படத்தை அனுமதிக்குமா?


பாபர் மஸ்ஜிதை இடித்தது அப்போதைய காங்கிரஸ் மற்றும் அத்வானி தலைமையிலான பாஜக கும்பல் தான் என்பதை விளக்கி ஒருவன் படம் எடுத்தால் அதை ஒப்புக்கொள்வார்களா? 


இலங்கையில் நடக்கும் போர்களுக்கும் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கும் விடுதலைபுலிகள் தான் காரணம் என்றும் அதை தடுத்து அங்குள்ள மக்களை பாதுகாக்கும் வேலையை தான் இலங்கை அரசு செய்து வருகிறது  என்றும் ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா?


சர்ச்சைக்குரியதாக அறியப்படும் இது போன்ற விஷயங்களை திரைப்படமாக எடுத்தால் அதை கூட தடுப்பதற்கு கங்கணம் கட்டும் இந்த அரசு, ஒட்டு மொத்த ஒரு சமூகத்தையும் இழுவுப்படுதும் நோக்கில் திரைப்படம் எடுப்பதை மட்டும் கருத்து சுதந்திரம் என்கிற போர்வையில் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய விஷமிகள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ள உரிமை என்பது உண்மையாக இருக்குமானால் முல்லை பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் துரோகத்தின் காரணமாக உடைந்து அதனால் பல்லாயிரக்கணக்கான கேரளா உயிர்கள் பலியாயின என்று விளக்கி எடுக்கப்பட்ட திரைப்படதையும் அதே உரிமை கொண்டல்லவா தமிழக அரசு பார்த்திருக்க வேண்டும்?
அதை ஏன் தடுத்தார்கள்??

கருத்து சுதந்திரம் என்கிற பெயரை சூட்டிக்கொண்டு எதை வேண்டுமானாலும் சமூகத்தில் விதிக்கலாம் என்கிற வாசலை இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்குகிரார்களா?  அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழுவுபடுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா?? 

கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுத்த இந்த பார்ப்பனம் கமலஹாசன் இதே சுதந்திரத்தை பயன்படுத்தி மாலேகான் தீவிரவாதத்தை பற்றி படம் எடுப்பானா??  நாட்டின் பெருவாரியான குண்டு வெடிப்புகளுக்கு சங்க பரிவாரத்தின் அந்த பெண் சாமியாரும் அவளுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கும் பாஜகவும் தான் காரணம் என்ன்பதை விளக்கி படம் எடுப்பானா??

இதே  உரிமையை பயன்படுத்தி குஜராத் கலவரத்தை பற்றியும் அதற்கு முழு முதற் காரணமான நரேந்திர மோடியை விமர்சனம் செய்தும் படம் எடுப்பானா?? அந்த திராணி இருக்கிறதா இவனுக்கு? 

முஸ்லிம்களை பிடித்து எங்கள் காளிக்கு பலி கொடுப்போம் என்று பச்சையாக தீவிரவாத விதையை இட்டுள்ள இந்து முன்னணி, இவர்களின் தீவிரவாதத்தை படம் எடுத்து மக்கள் முன் வெளிச்சம் போட்டு கட்டும் திராணி இவனுக்கு இருக்கிறதா??

எந்த பாமரனானாலும் அவனை மூளை சலவை செய்து, தங்களது தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் RSS இன் உண்மை முகத்தை எந்த ஊடகமாவது வெளிக்காட்டியதா?

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே போன்றவர்களின் உண்மை கூற்றுக்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுக்க துப்பு கெட்டவர்கள், அமைதியையும் சாந்தியையும் விரும்பக்கூடிய முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டும் பச்சை துரோகத்தை செய்கிறார்கள் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் தான் என்பதை அடையாளம் கண்டு கொள்ள இதை விட வேறு ஆதாரம் அவசியமில்லை.

ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி சொல்வார்கள். Call the dog mad and then kill it ! அதாவது, தெருவில் அமைதியாக சென்றிருக்கக்கூடிய நாயை அடித்துக்கொன்று விட்டால் ஏண்டா அப்பாவி, வாயில்லா ஜீவனை கொலை செய்தாய் என்று பலரும் கேட்டு விடுவார்கள் என்பதால் முதலில் அந்த நாய்க்கு வெறிநாய் பட்டம் சூட்டி விட்டு அதன் பிறகு கொலை செய்து விடுவது. பிறகு யாரும் நியாயம் கேட்க வர மாட்டார்கள்.

அதை போல இஸ்லாம் என்கிற ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் அந்த இனத்தின் உண்மை முகத்தை மறைத்து, உண்மைகளை திரித்து , இஸ்லாமும் புனித குர் ஆனும் கற்ப்பிக்ககூடிய சட்டங்களில் சேற்றை வாரி பூசி, இது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஒரு இனம் தான் என்கிற செய்தியை மக்கள் மனதில் விதைத்து அதன் பிறகு சிறிது சிறிதாக அழிக்க நினைக்கின்றனர்.

அந்த நோக்கத்தை அடைவதற்கான அடுத்தடுத்த படிகள்  தான் இந்த அயோக்கியன் கமல்ஹாசனும் அவனுக்கு உறுதுணையாய் நின்று அவற்றுக்கு  முட்டுக்கொடுத்துக்கொண்டு வரும் சங்க பரிவாரங்களும் செய்து வரும் சூழ்ச்சிகள். 

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (திருக்குர் ஆன் 9:32) 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களின் அவசியமும் இந்திய ஊடகங்களின் சமீபத்திய முரண்பாடுகளும் - முழு தொகுப்பு






இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய அரை வேக்காட்டுத்தனமான விமர்சனங்களை வைக்கும் இரட்டை முகங்களுக்கு தக்க மறுப்பு 





இஸ்லாமிய குற்றவியல் சட்டம் பற்றி ஆனந்த விகடனின் விஷமத்தனத்திற்கு மறுப்பு 

http://onlinepj.com/unarvuweekly/vikadakkomaliyil_therukkoothu/



இஸ்லாமிய குற்றவியல் சட்டம் பற்றி மனுஷியபுத்திரன் என்கிற அதிக பிரசங்கியின் வறட்டு வாதங்களுக்கு பதிலடி 





இலங்கை பெண் ரிசானா சவூதி அரசால் தண்டிக்கப்பட்டது சரி தான்.





சவூதி அரசு நீதியை தான் நிலைநாட்டியுள்ளது 

http://onlinepj.com/unarvuweekly/risana_nilai_nattapatta_neethi/



ரிசானா விஷயமாக மாற்று  மதத்தவர் எழுப்பும் கேள்விகளும் அதற்க்கான தக்க பதில்களும்.

http://onlinepj.com/unarvuweekly/josbinbabavin_kuruttuparvai/



இஸ்லாமிய சட்டம் தான் ஒரே தீர்வு - மெய்ப்பிக்கும் நாட்டு நடப்புகள் மற்றும் ஊடகங்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள்.




சமீப காலமாக இந்தியாவில் அளிக்கப்பட தண்டனைகளின் அவல நிலை 





உண்மையை உணர மறுக்கும் கூட்டத்தாரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் 



இஸ்லாமிய சட்டங்களை நோக்கி இந்தியாவின் பயணம் ..
http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islamiya-satathai-nokki-india/

http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/karpazipukuku_yar_karanam/

புதன், 16 ஜனவரி, 2013

ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்கள்




முழுமையான ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்களில் சில ..



1. பெண்கள் கப்ர் ஜியாரத் செய்தல்.

கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று திர்மிதி 294 ஹதீஸை அடிப்படையாக வைத்து பெண்கள் கப்ர் சியாரத் செய்வது கூடாது என்று இது நாள் வரை விளங்கி வைத்திருந்தோம். ஆனால் இந்த ஹதீஸை  அறிவிப்பவர்களில் ஒருவரான அபு சாலிஹ் என்பவர் பலகீனமானவர் என்று அறியப்பட்டுள்ளது.

மேலும் கப்ர் சியாரதிற்கு செல்லும் போது ஓத வேண்டிய துஆவை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்  என்கிற 
முஸ்லிம் 1774 ஹதீசையும், கப்ர் ஜியாரத் செய்வது மரணத்தை நினைவுப்படுத்தும் என்கிற முஸ்லிம் 1777 ஹதீசையும் வைத்து பார்க்கையில் மரணத்தை நினைவுப்படுத்தும் விதமாக பெண்களும் ஆண்களும் கபூர் ஜியாரத் செய்யலாம் என்று விளங்குகிறது.


2. நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆ :

தஹபள்ளமவு என்று துவங்கக்கூடிய துஆவை ஓதுமாறு அபூதாவூத் 2010 இல் பதிவாகியுள்ள ஹதீஸ் பலகீனமானது என்று இப்போது அறியப்பட்டுள்ளது. இதில் வரக்கூடிய மர்வான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். ஆகவே இதை ஓதுவது கூடாது.


3.வெள்ளிக்கிழமை சூரதுல் கஹ்ப் ஓதலாமா?


ஹாகிம் 3392 வில் பதிவாகியுள்ள ஹதீஸில் ஜூம்மா நாளில் கஹ்ப் சூராவை ஓதினால் அடுத்த வாரம் முழுவதும் அவருக்கு பிரகாசம் நீடிக்கும் என்று வரக்கூடிய ஹதீஸை நம்பி இதுநாள் வரை இது சுன்னத்தான காரியமாக நம்பி வந்திருந்தோம். அனால், இந்த செய்தி பலகீனமானது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
அதோடு, இந்த ஹதீசின் சனது நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் சஹாபியுடன் முற்றுப்பெற்று விட்டது என்கிற காரணத்தாலும் இதை ஏற்க முடியாது.

கஹப் சூரா சிறப்புக்குரியது என்பதற்கு வேறு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன என்றாலும் வெளிக்கிழமை அன்று ஓதினால் சிறப்பு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



4. தொழுகையில் சப்தமாக ஆமீன் கூறுவது கட்டாயமா?

தொழுகையில் ஆமீன் என்பதை கண்டிப்பாக சப்தமாக ஓத வேண்டும் என்பதற்கு இது நாள் வரையில் பைஹகி 2556 ஹதீஸை ஆதாரமாக கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த ஹதீஸை அறிவிப்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு வந்தவர் என்பதால் இதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தற்போது அறியப்படுகிறது. ஆகவே நபி சம்மந்தப்படாத ஒன்றை சுன்னத் என்றோ கட்டாயம் என்று கருதுவது கூடாது.

இமாம் பாத்திஹா சூராவை ஓதி முடித்தால் ஆமீன் சொல்லுங்கள் என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுலளர்கள், இந்த கட்டளையானது சப்தமிட்டு சொல்வதையும் குறிக்கும்  மெதுவாக சொல்வதையும் குறிக்கும் என்பதால் தொழுகையில் ஆமீன் என்பதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதே சரியான முடிவாகும்.


5. நடு விரலில் மோதிரம் :அணிதல் 

நடு விரலிலும் அதற்கு அடுத்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தார்கள் என்கிற கருத்துப்பட முஸ்லிம் 3910 வில் ஒரு ஹதீஸ் இருப்பதை வைத்து நடு விரலில் மோதிரம் அணிய கூடாது என்கிற நிலைபாட்டை முன்னர் எடுத்திருந்தோம்.

ஆனால், ஹதீஸை கவனமாக படிக்கும் போது , நடு விரலா அடுத்த விரலா என்கிற சந்தேகத்தில் தான் அந்த அறிவிப்பாளர் அந்த ஹதீசை அறிவிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

மற்றுமொரு ஹதீஸில் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் அணிவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று வருகிறது. அனைத்தையும் வைத்து பார்க்கையில் எந்த விரலில் அணிவது கூடாது என்கிற சட்டம் சந்தேகத்திற்கு உள்ளானதாகவே இருக்கிறது. சந்தேகதிற்குரியத்தை நாம் பின்பற்ற முடியாது என்பதால் எந்த விரலிலும் மோதிரம் அணியலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

கணிப்பு கொள்கைவாதிகளின் அறிவுப்பூர்வமான (?) கேள்விகள்



தலைப்பிறை விஷயத்தில் கணிப்பு கொள்கையை சரி காண்பவர்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர். அதற்கான பதில்களை ஒவ்வொன்றாக பார்ப்பதன் மூலம் கேள்வியின் தரத்தை படிப்பவர்களே புரிந்து கொள்ளலாம். 



முதல் கேள்வி : பிறை தகவலை யார் அறிவிக்க வேண்டும்? 

பதில்: பிறையை யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அறிவிக்க வேண்டும். பார்க்காதவர்களால் அறிவிக்க முடியாது.



இரண்டாம் கேள்வி :சுன்னத்(?) ஜமாத்தை சார்ந்தவர் அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: பொய் சொல்லாதவராக இருந்தால் ஏற்றுக்கொள்வோம்.


மூன்றாம் கேள்வி : அறிவியல் சாதனமான கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்ப்பவர் அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: கண்ணாடி போடுவது , கண்ணாடி போடாமல் படிப்பவர் என்ன அளவிற்கு பார்க்கிறாரோ அப்படி பார்ப்பதற்காக தான். 
கண்ணாடி என்பது ஏதோ நாசா விண்வெளி கழகத்தில் இருக்கும் சாதனம் என்பது போன்று இருக்கிறது உங்கள் கேள்வி.


நான்காம் கேள்வி : தூரம், எல்லையை எப்படி தீர்மானிப்பது?

பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறை தகவலை ஏற்றுள்ளார்கள் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்துள்ளார்கள். இருப்பினும் தூரத்தையும் எல்லையையும் அவர்கள் நிர்ணயம் செய்யவில்லை. நிர்வாக வசதிக்கு உட்பட்டு, அருகிலுள்ள கிராமங்களில் பிறை தென்பட்டால் அதை ஏற்றுள்ளார்கள், தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து பெறப்பட்ட செய்தியை தவிர்த்துள்ளார்கள். 
எல்லையை தீர்மானிக்கும் குழப்பம் எர்ப்ப்படுமானால், குழப்பமின்றி, அனைவரும் ஒத்த கருத்தை எட்டும் வகையில் பெருநாளை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லியுள்ளார்கள்.
ஆகவே கேள்வி கேட்பவரும் இதற்கு பதில் சொல்பவரும் இணைந்து முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.


ஐந்தாம் கேள்வி : மாவட்டம் நகரம் என்றெல்லாம் பிரிப்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : நான்காம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


ஆறாவது கேள்வி: தமிழ்நாட்டில் பிறை பார்த்தால் கேரளாவில் பொருந்துமா?

பதில் : ஐந்தாம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


ஏழாம் கேள்வி : கோவைவைவசிகளுக்கு சென்னையை விட கேரளம் அதிக நெருக்கம், அப்படி இருக்கும்  போது சென்னை தகவலை அவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?

பதில் : ஆறாம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


எட்டாம் கேள்வி : 2:189 வசனத்தில் மாதத்தை பிறை தான் தீர்மானிக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். நீங்களோ உங்கள் மாநில தலைமை தீர்மானிக்கும் என்று சொல்கிறீர்களே?

பதில் : பிறை பார்க்கப்பட்டதை ஒவ்வொரு வீட்டில் இருப்பவரும் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் ரமலான் முடிந்து விடும். ஆகையால், மக்கள் வசதிக்காக பார்க்கப்பட்ட பிறை தகவலை மாநில தலைமை அனைவருக்கும் அறிவிப்பு செய்கிறது.
மாதத்தை மாநில தலைமையே தீர்மானிக்கிறது என்று சொல்வதற்கும் பிறையை பார்த்து எப்போது மாதம் பிறந்தது என்கிற செய்தியை மாநில தலைமை அறிவிக்கிறது என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு சிறு குழந்தைக்கும் புரியும். 


ஒன்பதாம் கேள்வி : பெருநாளை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றால் எதற்க்காக பிறை பார்க்க வேண்டும்?

பதில்: நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் பெருநாள் என்று ஹதீஸ்களில் உள்ளன. உங்கள் கேள்வியை ரசூல் (ஸல்) அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.



பத்தாம் கேள்வி : இரு பெருநாட்களுக்கு மட்டும் தான் பிறை பார்க்க வேண்டுமா??

பதில் : அப்படியா??


பதினோராம் கேள்வி : வெளிநாடுகளில் தமிழகம் போல பிறை பார்த்து தான் முடிவு செய்கிறார்களா? எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

பதில் : ஆம், பிறை பார்த்து தான் முடிவு செய்கிறார்கள்.


பனிரெண்டாம் கேள்வி : நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதற்கு ஒரு ஆதாரத்தையாவது தர முடியுமா?

பதில் : புஹாரி 2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.  



ஒரு ஆதாரம் மட்டும் கேட்டுள்ளதால் ஒன்றை தந்திருக்கிறேன்.



பதிமூன்றாம் கேள்வி : கணக்கு செய்ய கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : மூன்றாம் ஆதாரங்கள் உள்ளன.

ஒரு ஆதாரம் -  - நபி (ஸல்) அவர்கள் கணக்கு செய்யவில்லை.
இன்னொரு ஆதாரம்  - நபி (ஸல்) அவர்கள் கணக்கு செய்து பிறையை தீர்மானித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை.
மூன்றாவது ஆதாரம் : ஆதாரம் தர வேண்டிய விஷயங்களில் ஆதாரம் கேட்பது முட்டாள்தனம் என்பதை புரியாமல் இருப்பது.


பதினான்காம் கேள்வி : சூரியனை கணிக்கலாம், சந்திரனை கணிக்க கூடாது என்று சொல்வதற்கு 55:5 வசனம் உறன்படுகிறதே ?

பதில் : கணக்கின் படி இயங்குகின்றன என்று சொல்வதால் கணிக்க வேண்டும் என்று வாதம் வைப்பது அறிவுக்கு எட்டாத வாதம். ஒரு பெண் தனியாக ஒட்டகத்தில் பயணம் செய்து ஹஜ்ஜு செய்வாள் என்று அல்லாஹ் சொல்கிறான். பயணம் செய்வாள் என்று சொல்லி விட்டதால் இனி ஹஜ்ஜுக்கு செல்ல விரும்பும் எல்லா பெண்களும் கட்டாயம் ஒட்டகத்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுடையவர்கள் கூறுவார்களா?

நபி (ஸல்) அவர்கள் சூரியனை கணித்து முடிவு செய்துள்ளார்கள் சந்திரனை கணிக்காமல் முடிவு செய்தார்கள் 55:5 வசனம் நபிக்கு தெரியாமல் இல்லை !!

திங்கள், 7 ஜனவரி, 2013

தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள்




தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கும்பகோணத்தில் இட ஒதிக்கீடு மாநாடு நடத்தப்பட்ட போது, நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் ஜாக் இயக்கத்தின் உலக அமீரான கமாலுதீன் மதனி கீழ்கண்டவாறு பேசினார்.

"சிலர் மாநாடு என்றும் கோரிக்கை என்றும் சொல்கிறார்கள். மாநாடு என்றால் எது மாநாடு?? மக்காவிலே ஹரம் ஷெரிபுக்கு முன்னே கூடுமே லட்சோப லட்சம் - அது தான் மாநாடு. கோரிக்கை என்றால் எது கோரிக்கை? அல்லாஹ்விடம் கையேந்துகிறோமே  அது தான் கோரிக்கை.
இவர்கள் என்னவென்றல் காபிர்களான கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அல்லாஹ்விடம் வைக்க வேண்டிய கோரிக்கையை காபிர்களிடம் வைக்கிறார்கள்."



அதே ஜாக் இயக்கத்தின் தற்போதைய நிலையை காண இணைப்பை சொடுக்கவும். தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள் தான் இவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

மசாலாக்கள் பலவிதம்





மத்ஹப் நூல்களில் உள்ள ஆபாசங்கள் அசிங்கங்கள் பலவற்றை பார்த்து வருவதன் வரிசையில் மேலும் சில அற்புத (?) சட்டங்கள் உங்கள் பார்வைக்கு. 



குளிப்பு கடமையாகாமல் உடலுறவு செய்து கொள்ள எளிய வழி 

ஆசையை அடக்கிக்கொள்ள ஆணுறுப்பை கைகளால் இறுக பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பிடித்தால் ஆசை அடங்கி விடும். அதன் பிறகு விந்து வெளியேறினால் குளிப்பு கடமையில்லை.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 149



மர்ம உறுப்பில் துணியை சுற்றிக்கொண்டு உறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை 
- துர்ருல் முக்தார் பாகம் 2, பக்கம் - 152



பல் குச்சியை வைத்து பல் துலக்குவதன் விஞ்ஞான (?) சட்டங்கள் 


நீள வாக்கிலும் படுக்கை வாக்கிலும் பல் துலக்க கூடாது. அவ்வாறு தேய்த்தால் கல்லீரல் வீங்கி விடும்.
முழு கைகளால் பிடிக்க கூடாது, பிடித்தால் மூல வியாதி வந்து விடும்.
பல் குச்சியை சப்பக்கூடாது. சப்பினால் பார்வை குருடாகும்.
குச்சியை செங்குத்தாக தான் வைக்க வேண்டும். படுக்கை நிலையில் வைக்க கூடாது, மீறினால் பைத்தியம் பிடித்து விடும்.
பல் குச்சியினால் பல் தேய்ப்பது மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 106, 107



ஏகத்துவத்தை தவிடு பொடியாக்கும் சட்டம் 

 காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் நன்கு உயரமான இடத்தில நின்று கொண்டு பாத்திஹா சூரா ஓதி நபி (ஸல்) அவர்களுக்கு அர்பணிக்க வேண்டும். பின்னர், கிப்லாவை நோக்கி சய்யத் அஹ்மத் இப்னு அரவான் அவர்களிடம் கேட்க வேண்டும். நீங்கள் இதை எடுத்து தரவில்லை என்றால் அவ்லியா என்று இனியும் உங்களை அழைக்க மாட்டேன் என்று கூற வேண்டும்.
ரத்துள் முக்தார் பாகம் 3 - பக்கம் 334



நபியின் பெயரால் பொய் 

அத்தஹியாத் ஓதும் பொது அஷ்ஹது லாயிலாஹ.. என்று வருகிற இடத்தில விரலை உயர்த்தி, இல்லல்லாஹ்.. என்று வருகிற இடத்தில மடக்கி விட வேண்டும்.. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 475


இன்னொரு பொய் 

காபிர்களின் தொந்தரவிற்கு பயந்து தான் நபி (ஸல்) அவர்கள் லுஹர் அசர் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதை தடுத்தார்கள்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 497



ஷாபி மத்ஹபை பொய்யாக்கிய ஹனபி சட்டம் 

ஹனபி மத்ஹபின் படி தான் கியாமத் நாளின் போது ஈசா நபி தீர்ப்பு வழங்குவார்கள் 
 - துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 52


குர் ஆனை தரம் தாழ்த்திய சட்டம் 

இந்த பிக்ஹ் சட்டங்களை (மத்ஹப்) கற்பது என்பது குர் ஆணின் சில வசனங்களை கற்பதை விடவும் சிறந்ததாகும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 26


மகரமான பெண்கள் என்றால்.. 

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்களின் முகம், மார்பகங்கள் மற்றும் தொடைக்கு கீழுள்ள கால்கள் ஆகியவற்றை பார்ப்பதில் குற்றமில்லை..
பார்க்கலாம் என்பதால் தொடவும் செய்யலாம்.
- ஹிதாயா பக்கம் 445, 446


குளோனிங் ??

பன்றி அல்லது நாயுடன் ஒரு பெண் உறவு கொண்டு மனித உருவில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் மீது தொழுகை உள்ளிட்ட அனைத்தும் கடமை. ஆனால் அதை வேறு யாரும் தொடக்கூடாது. நிர்பந்தமான நிலையில் தொட்டால் மன்னிப்பு கிடைக்கும்.
பதாகுல் முயீன் பாகம் 1 பக்கம் 94


இமாமின் தகுதிகள்.


முகம் அழகாக இருக்க வேண்டும்.
உயர்ந்த கோலத்தில் இருந்து வந்தவராக இருக்க வேண்டும்.
பணக்காரராக இருக்க வேண்டும்.
உயர்ந்த ஆடை அணிபவராக இருக்க வேண்டும்.
அழகிய மனைவியை பெற்றிருக்க வேண்டும்.
- துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் - 521



அனைத்திற்கும் முத்தாய்ப்பாக...

நபியின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையிலும் அவர்களது தோழர்கள் அபு பக்கர் மற்றும் உமர் (ரலி அவர்களது முன்னிலையிலும் தான் இந்த விளக்கவுரை முழுமைப்பெறும் பணியை செய்தேன் .
- துர்ருல் முக்தார் நூலின் ஆசிரியர் கூறியதாக பாகம் 2, பக்கம் - 152