வியாழன், 11 நவம்பர், 2010

முஆவியா அவர்கள் பார்த்தது உங்களுக்கு போதாதா?

பிறையை தத்தமது ஊரில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்ககூடிய குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் - பேச்சு வழக்கில் ..


குறைப்:
"உம்முள் பால் (ரலி) அவர்கள் சிரியாவிலிருக்கும் முஆவியா அவர்களிடம் என்னை அனுப்பினார். நான் சிரியாவிலிருக்கும் போது ரமளானின் முதல் பிறை எனக்கு தென்ப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன். பின்னர் அம்மாத இறுதியில் மதீனா வந்தேன்.
இப்னு அப்பாஸ் அவர்கள் பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தப்பேச்சை எடுத்தார்கள்.

இப்னு அப்பாஸ் :
"நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?.

குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம்.

இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா?

குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.

இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் , ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.

குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?


இப்னு அப்பாஸ்:
"போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.




சிரியாவில் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தாகி விட்டது என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சிரியாவுக்கும் மதினாவுக்கும் ஒரே நாள் பிறை தென்படவில்லை, வெவ்வேறு நாட்கள் தான் என்பது தெளிவாக தெரிந்த போதும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது என்ன?

ரசூல் (ஸல்) அவர்கள் சிரியாவை பார்க்க சொல்லவில்லை!, மதினாவில் பிறை பார்த்தாயா? மறுபிறையை மதினாவில் பார்!!
சிரியாவில் பிறை பார்க்கப்பட்டாலும் பார்க்கப்படாவிட்டாலும் , அதை குறித்து மதீனாவாசி அலட்டிக்கொள்ள தேவையில்லை!! அதை பின்பற்ற தேவையில்லை!!!

இதே அடிப்படை தான் உலகமெங்கும், இறுதி வரையிலும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக