தங்களை பின்பற்றினால் வழிகேடு !! - இமாம்களே கூறுவதை கேளுங்கள் !!!
இமாம் ஷாபி அவர்கள் கூறுகின்றார்கள்:
‘அல்குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எந்த நபரின் சொல்லும் மார்க்கத்திற்கு ஆதாரம் கிடையாது. யாரையும் கண்மூடிப்பின்பற்றாதீர்கள்.’ (நூல்: ஸலாத்துந்நபி பக்கம் 21)’எனது நூலில் அழ்ழாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான(சட்டத்)தைக் கண்டால் அல்லாஹ் வின் தூதழ்(ஸல்) அவர்களின் வழிமுறையையே (மக்க ளிடம்) சொல்லுங்கள். என் சொல்லை விட்டு விடுங்கள்.’ (நூல்: அல்மஜ்முவு (நவவி) பாகம்-01, பக்கம்-63)
இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகின்றார்கள்:
‘ஒவ்வொரு புதிய வி’யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும். எங்களை கண்மூடிப்பின்பற் றாதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற் றுங்கள்.’ (நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )
‘அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)
‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’ (நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)
‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை (நபிமொழி யை)யே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12)
இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62)
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள். யார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்று கின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’ (நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302) ‘என்னையோ, மாலிக், ‘hபிஈ, அவ்ஸாயி, ஸவ்ரி போன்ற இமாம்களையோ பின்பற்றாதீர்கள். அவர்கள் புரிந்து கொண்டதி(அல்குர்ஆன், அல்ஹதீஸ்)லிருந்து நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்!’(நூல்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 113)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக