இன்றைய சஹார் நிகழ்ச்சியின் போது சகோ. சம்சுதீன் காசிமியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும்..
கேள்வி : இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?
காசிமி பதில் : ""சகோதரரே, இணை வைக்கும் இமாம் என்று யாரும் இல்லை. நீங்கள் சங்கராச்சாரியாரை, சாய் பாபாவை பற்றியா கேட்கிறீர்கள்?
(அவர்களை மட்டும் தான் பின்பற்றி தொழக்கூடாது)
(அவர்களை மட்டும் தான் பின்பற்றி தொழக்கூடாது)
இந்த கேள்வியே அடிப்படையில் தவறானது. இணை வைக்கும் இமாம் என்று யாரும் கிடையாது.
மவ்லூத் ஓதினால் இணை வைத்தவரா? இமாமை பின்பற்றினால் இணை வைத்தவரா?
யாரோ சில குழப்பவாதிகள் ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார்கள்.""
நமது கேள்வி :
காசிமி அவர்களே, மவ்லூத் ஓதினால், இமாமை பின்பற்றினால் ஷிர்க் ஆகாது என்கிறீர்களே, இதை பகிரங்கமாக அறிவிக்க தயாரா?
மவ்லூத் ஓதினால் ஷிர்க்க் ஆகாது என்பது தான் உங்களது கொள்கையாக இருந்தாலும், அதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்காத நீங்கள் இன்று ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதின் அதை செய்திருக்கிறீர்களே, இதை பகிரங்கமாக அறிவிப்பு செய்ய தயாரா? உங்கள் இணையதளத்திலும் உங்கள் அதிகார ஏடுகளிலும் இதை பிரசுரமாக்க தயாரா?
தயார் எனில், அதை செய்யுங்கள். சமுதாயம் உங்களை நோக்கி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக