வியாழன், 18 ஏப்ரல், 2013

முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு, முஸ்லிமல்லாதவர்களுக்கு ஆதரவா?




நேர்மையற்றவர் என்று கூறி தமுமுக வேட்பாளர்களை எதிர்க்கும் நீங்கள், மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் நேர்மையானவர்கள் என்று தான் கூறுகிறீர்களா ?


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவரை நேர்மையற்றவர் என்று நாம் புறந்தள்ளினோமேயானால் , அவர் நேர்மையற்றவரில்லை என்று வாதிட்டு, அதை மறுத்த பிறகு தான், ஏன், நீங்கள் ஆதரிக்கும் இன்னார் மட்டும் நேர்மையுள்ளவவரா? என்று கேட்க வேண்டும்.
நாம் எவரை நேர்மையற்றவர் என்று கூறினோமோ, அதற்குரிய உங்களது பதில் என்ன? 

இதற்கு பதில் சொல்லாமல், இன்னார் கூட நேர்மையற்றவர் தானே, அவரை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்பது, வாதத்திற்கு கேட்கப்படும் கேள்வி தானே தவிர, நியாயமான கேள்வி அல்ல!

இன்னும் சொல்லப்போனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள தயாநிதி, கருணாநிதி போன்றோரை விடவும் நேர்மையற்றவர்கள் தான் இவர்கள். 
நேர்மையில் பல வகைகள் உண்டு !!
தங்களுக்கு பணமும் புகழும் வேண்டும் என்பதற்காக ஊழல் செய்து சம்பாதிப்பது, ஒரு வகை என்றால், அதே புகழுக்காக சக முஸ்லிம் சகோதரர்களை, கொள்கைவாதிகளை வஞ்சிப்பது இன்னொரு வகை..
ஒரு முஸ்லிம் என்ற வகையில், நாம் இரண்டாம் வகைக்கு தான் முன்னுரிமை கொடுக்க முடியும்..


சாதாரணமாக வாக்குத்தவறிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்த தேர்தலில் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் முஸ்லிம் வேட்பாளர்கள் வாக்குத்தவறினால் தேர்தலில் மட்டுமின்றி அல்லாஹ்விடமும் பதிலளிக்க வேண்டியுள்ளது - அபு அசீலா 

என்று அபு அசீலாவே கூறியிருக்கிறார்!

சாதார அரசியல்வாதிக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் வேறுபாடு உள்ளது!! 100 % உண்மை!!! 


அந்த வகையில் பார்த்தால் , ஏகத்துவவாதிகளுக்கும், ஏகத்துவ கொள்கைக்கும் இந்த கூட்டம் செய்திருக்கும் அநியாயங்கள் ஒன்றே இவர்களை நேர்மையற்றவர்கள் என்று புறந்தள்ள போதுமான காரணமாகும்..

சாதாரண அரசியல்வாதி மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார் என்றால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்துடனும் சேர்த்து செயல்பட்டாக வேண்டும்..
தன்னால் ஒரு மனிதனோ ஒரு சமூகமோ ஏமாற்றப்பட்டால், அதற்குரிய மன்னிப்பை சம்மந்தப்பட்டவரிடம் பெறாதவரை அல்லாஹ்விடம் பெற முடியாது என்றும் நம்பியாக வேண்டும்!!

அத்தகைய நம்பிக்கை இல்லாமல் செயல்ப்படும் கூட்டத்தை ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஒருவரால் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர்கள் செய்த அநியாயங்களை நாம் பட்டியலிட்டால், அப்போதும், சாதாரண அரசியல்வாதியோடு முஸ்லிம் அரசியல்வாதிகளான இவர்களை ஒப்பிடுவீர்களா?

இது போன்ற இன்னும் பல பல காரணங்களை நாம் பட்டியலிடும் முன்பு, நாம் மேலே கேட்டிருக்கிற  கேள்விக்கு பதில் தரவும்.. 

""ஒருவரை நேர்மையற்றவர் என்று நாம் புறந்தள்ளினோமேயானால் , அவர் நேர்மையற்றவரில்லை என்று வாதிட்டு, அதை மறுத்த பிறகு தான், ஏன், நீங்கள் ஆதரிக்கும் இன்னார் மட்டும் நேர்மையுள்ளவவரா? என்று கேட்க வேண்டும்.
நாம் எவரை நேர்மையற்றவர் என்று கூறினோமோ, அதற்குரிய உங்களது பதில் என்ன? 
"""


நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?



என்னை கனவில் கண்டவர் என்னையே காண்கிறார், சைத்தான் என் வடிவில் தோன்ற முடியாது என்ற கருத்துடைய ஹதீஸ் உள்ளது. இதை வைத்து கொண்டு பலர் இது போல் நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன் என்று சொல்லி வருகின்றனர். 


திர்மிதியில் வரும் ஹதீஸை ஆதாரமாக கொள்ளும் அதே நேரம், அந்த ஹதீசுக்கு விளக்கமாக வரும் இன்னொரு ஹதீசையும் சிந்திக்க வேண்டும்,

""என்னை யார் கனவில் காண்கிறாரோ, அவர் விழித்த பிறகும் என்னை காண்பார். !""

இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ். 

இந்த ஹதீஸ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யாரும் அவர்களை கனவில் காண முடியாது என்பதை தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களை நேரில் கண்ட சஹாபாக்கள் என்றாலும் நபி உயிருடன் இருந்தவரை தான் அவர்களாலும் நபியை கனவில் கண்டிருக்க முடியும்.


இன்னும் சொல்லப்போனால், ஒருவர் தன் தாயை கனவில் கண்டு விட்டு அதை மறு நாள் தன் தாயிடமோ  வேறு ஒருவரிடமோ தெரியப்படுத்தினால் அதில் அர்த்தம் உள்ளது. தன் தாயின் தோற்றத்தை அவர் அறிவார். அண்ணல் நபி(ஸல்) அவர்களை இன்றைய உலகில் யாரும் கண்டதில்லை எனவே அவர் கண்டது நபி(ஸல்) அவர்கள் என்று அவரது இதயம் சாட்சி சொல்லுமே தவிர அவரது புத்தி அதை மெய் காண முடியாது. 

அதே சமயம் யாரும் இது வரை கனவுகளை பற்றிய உண்மை முடிச்சுகளை துல்லியமாக அவிழ்கவில்லை.  எனவே ஒருவர் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன் என்று சொன்னாலும் அது மறுமையில் தான் வெளிச்சமாகுமே தவிர உலகில்  அதனை உறுதி செய்யவே முடியாது.  கனவு கண்டவர் வேண்டுமானால் அதனை ஒரு பெருமையாக நினைத்து கொள்ளலாம். மற்றபடி அவர் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான் என்றும் தனக்கு விசேச சக்தி உள்ளதாகவும் நினைத்தால் அது மனவியாதி தான். 

விழித்த பிறகும் யார் நபியை நேரில் காண்பாரோ, அவர் தான் நபியை கனவில் கண்டதாக சொன்னால் மட்டும் தான் நாம் நம்பலாம். மற்ற அனைவருமே ஒன்று பொய் சொல்கிறார்கள் அல்லது தவறாக புரிகிறார்கள். இது தான் மார்க்கத்தின் நிலை !

நாகர்கோவில் தொகுதியின் நிலை




((2011 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது  நாகர்கோவில் தொகுதியின் நிலை பற்றி அப்போது நாம் எழுதியது..))



அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த தேர்தலில், நாகர்கோவில் தொகுதியை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜகவின் கோட்டையாக முன்பு திகழ்ந்த நாகர்கோவில் தொகுதி காலப்போக்கில் மாற துவங்கினாலும், இன்றும் பாஜக சார்பு நிலை முழுமையாக நீங்கி விடவில்லை. பல பகுதிகளில் பாஜக இன்னும் வலுவாகவே உள்ளது என்ற செய்திகள் நமக்கு கிடைக்கின்றன.
இந்நிலையில், பாஜக சார்பில் வேட்ப்பாளராக போட்டியிடும் மாநில தலைவர் பொன். ராதாக்ருஷ்ணன், அங்குள்ள நடுநிலை சமுதாயங்கள் மத்தியில் கூட பெரும் செல்வாக்கை பெற்றவராவார்.

இவரை எதிர்த்து களம் காணும் அதிமுக வேட்பாளர் முருகேசன் குறித்து நாம் அறிய வேண்டிய இன்னொரு செய்தி - இவர் ஒரு முன்னால் பாஜக தொண்டர்!!!!
நாகர்கோவில் பகுதியில் முன்பு நடைபெற்ற சிறு சிறு கலவரங்களில் எல்லாம் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்று செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான கோட்டாரிலேயே அதுவும், அரபிக்கல்லூரி அமைந்திருக்கும் பகுதிக்கு அருகிலேயே மேடை அமைத்து முஸ்லிம்களை வசைபாடியவர் இந்த அதிமுக வேட்பாளர் ! இவர், நாடார் பிரிவை சேர்ந்தவர். 

ஆக, இருவருமே எதிர் எதிர் அணியில் நின்று தேர்தலை சந்திப்பதால், பாஜக ஆதரவு எண்ணம் கொண்டவர்கள் ராதாக்ரிஷ்ணனுக்கும் , பாஜகவிற்கு எதிர்ப்பாக இருக்கும் கிறிஸ்தவர்களில் உள்ள நாடார்கள் இந்த முருகேசனுக்கும் வாக்களித்தால் , இந்த இருவரில் ஒருவர் பதவிக்கு வருவார்.
இருவரில் எவர் வந்தாலும் அவர் காவி சிந்தனையுடையவர் தான் எனபதை நினைவில் கொள்ளுங்கள்.


இதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இவ்விருவரையும் எதிர்த்து திமுக சார்பில் களம் காணும் மகேஷ் என்பவர், தனிப்பட்ட முறையில் நல்லவர் எனவும், முஸ்லிம்கள் மத்தியில் கூட அதிக எதிர்ப்பாளராக அறியப்படாதவர் எனவும் சொல்லப்படுகிறது.

இவருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தான் மற்ற இரு காவி சக்திகளின் பிடியிலிருந்து நம் தொகுதியை காக்க முடியும்.  நம் வாக்குகள் எந்த வகையிலும் சிதறி விடாமல் மிகுந்த கவனத்துடன் இந்த முறை நாம் செயல்பட வேண்டியது நமது கடமை.
முஸ்லிம்களில் சுயேட்சையாக சிலர் போட்டியிடுவதை வைத்து நமது ஓட்டுக்களை அவர்களுக்கு இட்டால் அதன் விளைவு , இந்த காவிகளுக்கு நாமே வழி செய்து தருவதாக ஆகி விடும் என்பதை கவனத்தில் கொண்டு நம் தொகுதி முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் இன்ஷா அல்லாஹ் திமுகவிற்கே அளிக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாய பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் வாக்குகளை இடுமாறு தூண்டுவதும் நம் கடமையாக இருக்கின்றது.

அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன்.

தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மறுக்க வேண்டுமா?




தஜ்ஜால் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களுக்கு நேரடி அர்த்தம் கொடுக்க கூடாது என்று கூறுவோரின் வாதத்திற்கு  மறுப்பு..

(சூனியம் குர்ஆனுக்கு முரண் என்று சொல்லி ஹதீஸை மறுப்பது போல தஜ்ஜால் ஹதீசையும் மறுக்கலாமே என்று கூறுவோரின் வாதங்களுக்குரிய தக்க மறுப்பு இத்துடன் பின்னர் இணைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.



ஆதாரங்களுடன் எழுதப்படுபவைகளுக்கு தான் மறுப்பு தர முடியும். நீங்கள் forward செய்துள்ள கட்டுரை என்பது ஆதாரங்களுடன் கூடியது இல்லை.
ஏற்கனவே குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் இருப்பவை அனைத்தும் மூட நம்பிக்கை என்று சொல்கிற ஒரு அறிவிப்பு - ஒரு கருத்து. 
ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, அவைகளுக்கு நேரடி அர்த்தம் கொடுக்க கூடாது - கொடுப்பது மூட நம்பிக்கை, என்கிறார் கட்டுரையாளர்.

ஆக, நேரடி அர்த்தம் கொடுத்தால் எப்படி மூட நம்பிக்கை என்பதை இந்த கட்டுரையாளர் தான் ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.
அதன் பிறகு தான் நம்மால் மறுப்பு கொடுக்க முடியும்..

அதை தராமல் இருப்பது வரை இது போன்ற அபத்தமான கட்டுரைகளை பிறருக்கு பரப்புவது சரியில்லை.

இதற்கு மறுப்பு தேவையே கிடையாது. மறுப்பு கொடுக்கும் தரத்திற்கு அந்த கட்டுரை இன்னும் வரவில்லை.
ஒரு ஹதீசையோ ஒரு இறை செய்தியையோ மறுப்பதாக இருந்தால் அதை ஆதாரங்களுடன் தான் மறுக்க வேண்டுமே அல்லாமல், தனது கருத்தாக சொல்லி ஒன்றை மறுப்பது என்பது அர்த்தமற்றது.

ஆதாரமற்ற வறட்டு வாதங்கள் தான் இவர்கள் வைக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்..

தஜ்ஜால் ஒற்றை கண்ணன் என்பது தெளிவான ஹதீஸ். அதற்கு நேரடி அர்த்தம் கொடுக்காமல் ஆன்மீக  ரீதியிலான கண் என்று வியாக்கானம் கொடுப்பது வெறும் வியாக்கானம் தானே தவிர, ஆதாரமல்ல.
ஆன்மீக  கண் என்று கூறுவதற்குரிய ஆதாரம் என்ன? என்பதே நமது கேள்வி. அதை தந்து விட்டு வாதம் வைத்தால் தான் அதற்குரிய மறுப்பை சொல்ல முடியும்.

அதே போன்று, 

சூரத்துல் கஹ்ப் முதல் பத்து வசனங்களை ஓத வேண்டும் என்பது தஜ்ஜாலுக்காக அல்ல, கிறிஸ்தவர்களுக்கு எதிரான நோக்கமாகும் என்று கூறுவதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள் - அதாவது, அந்த அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்கள் இறைவனுக்கு சந்ததிகள் உருவாக்கியவர்களை (நஸ்ராயிகள்) பற்றி கூறுகிறதாம், அதனால், அது அவர்களை பற்றியதாம்!
அந்த முதல் பத்து வசனங்களில் குகை வாசிகளை பற்றியும் அல்லாஹ் கூறுகிறானே, ஏன் குகைவாசிகள் குறித்து தான் இது சொல்கிறது, தஜ்ஜால் குறித்தல்ல, என்று இன்னொருவர் வாதம் வைக்கலாமே?
இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆக, ஒரு ஹதீஸை அணுகும் முறை இதுவா?
ஒன்றை சொல்லி, இதற்க்கு இதை ஓதுங்கள் என்று சொல்லப்பட்டால் அதை அப்படியே புரிந்து கொண்டு செய்ய வேண்டுமேயல்லாமல், இதை இதற்கு சொல்லியிருக்க மாட்டார்கள், அந்த வசனத்தில் வேறு செய்தியை குறித்தல்லவா சொல்லப்பட்டுள்ளது, ஆகவே இது அந்த சம்பவம் குறித்து தான், என்றெல்லாம் வியாக்கானம் கொடுப்பது நபியை மறுப்பதாகவும், வெறும் வறட்டு வியாக்கானமாகவே கருத முடியும்.


அடுத்து, தஜ்ஜால் மழையை பொழிய செய்வான், ஆனால், அது இணை வைப்பாகும். அவவாறு தஜ்ஜால் செய்ய இயலாது என்பதால் தஜ்ஜாலே கிடையாது என்கிறார்கள்.

அப்படியானால், ஷைத்தான் கூட இறைவனது அம்சங்களில் சிலவற்றை பெற்றிருக்கிறானே, இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்? மனிதனின் உள்ளங்களை வழிக்கேடுக்கிற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு, அதை ஷைத்தானும் செய்கிறானே? ஷைதானையும் மூட நம்பிக்கை என்று சொல்வார்களா?  

ஆக, 
குர் ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களை அவர்கள் தந்து தஜ்ஜாலை நம்புவது மூட நம்பிக்கை என்று சொன்னால் அது குறித்து பரிசீலிக்கலாம். இவர்களின்  சுய கருத்துக்கள் கருத்துக்களாகவே இருக்கும்..

குஜராத்: இர​ண்டாந்தர குடிமக்களா​க நடத்தப்படு​ம் முஸ்லிம்கள்




((2011 ஆம் ஆண்டு ஔட்லுக் பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரை ))



குஜராத்:இர​ண்டாந்தர குடிமக்களா​க நடத்தப்படு​ம் முஸ்லிம்கள் ​- அவுட்லுக்​கின் அதிர்ச்சி ரிப்போர்ட்

7 Apr 2011sophia_20110411
புதுடெல்லி:’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க ஹிந்துக்கள் மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவுட்லுக்கின் ஏப்ரல் இதழில் -’குஜராத் ஒன் ஸைட் ஆஃப் டிவைட்’ என்ற பெயரில் பிரக்யா சிங் எழுதிய கட்டுரையில் குஜராத்தில் முஸ்லிம் எல்லா துறைகளிலும் பாரபட்சத்தை அனுபவிக்கும் சூழ்நிலைகள் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை ஹிந்துக்களை விட 800 மடங்கு அதிகமாகும். ஒ.பி.சி பிரிவினரை விட இது 50 சதவீதம் அதிகமாகும். அறுபது சதவீத ஹிந்துக்களும் முஸ்லிம்களுடன் நகரங்களில்தான் வசிக்கின்றனர். கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை ஹிந்துக்களை விட 200 மடங்கு அதிகமாகும்.


முஸ்லிம் மாணவர்களிடையே குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை (கல்வி உதவித்தொகை) அறிவித்த போதும் குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது.இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் இந்த உதவித்தொகையை இழந்து வருகின்றனர்.
குறைந்த வருமானங்களை தரும் சுயத் தொழில்களை குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் செய்துவருகின்றனர்.இவர்களுக்காக உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை.
குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் ஹிந்துக்களுடையதாகும்.மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் ஹிந்துக்களுக்கே கிடைத்துள்ளது.
மிக அதிகமான வழிப்பறைக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவதும் முஸ்லிம்களே.பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினமாகும்.முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை. பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் இல்லை.
வளர்ச்சியின் ஒரு பகுதியாக துவங்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாவர்.வீடுகளில் வைத்து மேற்கொள்ளும் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், எம்ப்ராய்டரி, பட்டம் தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல் ஆகியவற்றைத்தான் முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் முஸ்லிம்களின் இன்னொரு வேலை ரிக்‌ஷா இழுப்பதாகும்.

பச்சோந்தித்தனத்திற்கு சிறு சான்று



கீழ்காணும் கேள்வி பதிலானது 2006 தமுமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான மக்கள் உரிமையில் பிரசுரமானது.

அப்போது அவர்கள் அதிமுகவை எதிர்த்ததையும் எதிர்த்ததற்கு சொன்ன காரணங்களையும் இன்று அந்த காரணங்கள் எதுவுமே நீங்காத நிலையில் அம்மா அடிக்கும் எல்லா பந்துமே சிக்சர் என்று சட்டசபையில் ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கும் இவர்களது பச்சோந்திதனத்தையும் அனைவரும் புரிய வேண்டும் 





இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வால் பிடிப்பவர்கள், கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவர்கள் சொல்லியுள்ள பதிலை குறித்து சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.


1 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் அப்துந்நாசர் மதானி உயிரோடு இருப்பாரா?
 இருக்கமாட்டாரா?


  • இருப்பார் என்றால் அவ்வாறு நீங்கள் சொல்வதற்கு ஏதுவாக ஜெயலலிதா தந்துள்ள வாக்குறுதி என்ன?
  • இருக்க மாட்டார் என்றால், ஜெயலலிதாவின் வாலை இன்று நீங்கள் பிடித்தது சமுதாய துரோகம் இல்லையா? மதானி செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் வால் தான் முக்கியம் என்பதை தவிர வேறென்ன காரணம்?

2 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முனீர் ஹோதாவை போல இன்னும் பல முஸ்லிம்கள் தேச துரோக பட்டத்தை பெறுவார்களா பெற மாட்டார்களா?

  • பெற மாட்டார்கள் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்? எதனடிப்படையில் இவ்வாறு உங்கள் கொள்கையை மாற்றினீர்கள் என்பதை சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பெறுவார்கள் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவுக்கு ஜால்ரா அடித்து சீட்டு பெறுவதில் மட்டும் நோக்கமாக நீங்கள் இருப்பது சமுதாய துரோகமில்லையா? முஸ்லிம் அதிகாரிகள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு சீட்டும் நோட்டும் தான் முக்கியம் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறென்ன காரணம்?

3 . ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பங்களும் பதற்றங்களும் பெருகியிருக்குமா? குறைந்திருக்குமா?

  • குறைந்திருக்கும் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்?
  • பெருகும் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவின் தாஜா தான் முக்கியம், சமுதாயம் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று சொல்கிறீர்களா? குழப்பங்கள் பெருகும் என்ற போதிலும் கூட, அம்மாவின் ஆட்சியை மலர செய்வோம் என்று நீங்கள் கூறுவது ஏன்?

4 . நல்ல வேளையாக தமுமுக அன்றைக்கு ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பியதை போல இன்றைக்கு அவரை வீட்டுக்கு அனுப்புவது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையில்லையா?

  • இல்லை என்றால், அதற்குரிய காரணங்கள் என்ன?
  • ஆம் என்றால், அதை செய்யாமல் அம்மாவின் வாலை விட மாட்டோம் என்று இன்றைக்கு பற்றிப்பிடிப்பது ஏன்?அன்று, "நல்ல வேளையாக" வீட்டுக்கு போனவர், இன்று நிச்சயம் ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் மாறுதல் அடைவதற்கு அல்லது அவரிடம் கண்ட மாறுதல்களாக நீங்கள்  சொல்லும் காரணங்கள் என்னென்ன?


5 . ஜெயலலிதாவிடம் கமிஷன் பெற்று, அவரை ஆதரித்த அனைவரும் அன்றைக்கே அவர்கள் தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய நீங்களே இன்றைக்கு  அதே தவறை செய்தால், உங்களுக்கு அறிவுரை சொல்வது யார்? கமிஷன், அன்றைக்கு கை மாறி இருக்கும் என்றால் இன்றைக்கு கை மாறாதா?

  • கை மாறாது என்றால், அவ்வாறு அன்றைக்கு இதே ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் மட்டும் கமிஷன் வாங்கினார்கள் என்று நீங்கள் கூறியது ஏன்?
  • கை மாறும் என்றால், அது சமுதாய துரோகம் இல்லையா? கமிஷன் வாங்கி நக்கிப் பிழைக்கும் தொழிலை நீங்கள் செய்து வருவது சமுதாயத்தை வஞ்சிப்பதாகாதா?


இவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் சமுதாயம் இவர்களுக்கு வாக்களிக்கும் என்று நம்பினால், இவர்களை விடவும் சமுதாயத்தை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் யார்?

காங்கிரசை ஆதரிக்கலாமா?




((கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது எழுப்பப்பட்ட கேள்வியும் அதற்கான  விடையும்))



அஸ்ஸலாமு அழைக்கும் ,
சஹோதர்களே,. நமது கேள்வி , தி.மு.க கூட்டணில் காங்கிரஸ் போட்டிடும் தொகுதி இல் நாம் காங்கிரஸ் ஐ ஆதரிக்கலாமா வேண்டாமா ? ஏன்  என்றால் சென்ற முறை பாராளு மன்ற தேர்தலிலே முஸ்லிம்களை ஏமாத்தி முஸ்லிம்களுக்கு இட ஓதிகிடு தருவோம் என்று ஒரு பொய்யான ஒரு தேர்தல் வாக்குறுதி குடுத்து விட்டு , பின்பு வெற்றி பெற்றதும் ஆட்சில் இருந்தும் சுகம் அனுபவித்து கொண்டே முஸ்லிம்களை வஞ்சித்த , முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்  ஆதரிக்கலாமா வேண்டாமா ? 



வ அலைக்குமுஸ்ஸலாம் 

சகோதரரின் கேள்வி நியாயமானது தான்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஆதரவு நிலைகளை பொறுத்தவரை நூறு சதவிகிதம் பரிசுத்தமான ஒரு நிலையை எந்த இயக்கத்தாலும் எடுக்க முடியாது.
இருப்பதில் சிறிதேனும் Better ஆக தெரியக்கூடிய ஒரு நிலையை தான் எடுக்க முடியும். எந்த நிலையை எடுத்தாலும் அதில் கேள்விகள் எழ தான் செய்யும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்வதாக இருந்தால், அத்தகைய முடிவை நாம் ஏன் எடுத்தோம் என்ற காரணத்தையும் சேர்த்து எண்ணிப்பார்க்க வேண்டும்.
நடைபெறுவது சட்டமன்றத்துக்கான தேர்தல்.
இதில், மாநில அளவிலான சமுதாய கோரிக்கை ஒன்றை நாம் முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றி தரும் என்று வாக்குறுதி தந்துள்ள அடிப்படையில் நாமும் நம்புகிறோம்.
இப்போது, நமது கோரிக்கையின் படியும் நமது நம்பிக்கையின் படியும்  அவர்கள் நடக்க வேண்டுமென்றால், அடிப்படையான விஷயம் - திமுக வெற்றி பெற்றாக வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றால் தான் நம் கோரிக்கை நிறைவேறும்.
நம் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் நாமும் அவர்களை ஆதரிக்கிறோம்.
ஆக, திமுக வெற்றி பெற வேணடுமானால், அவர்களோடு உள்ள கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதை வைத்து தான் நம்மால் இப்போதுள்ள நிலையில் சிந்திக்க முடியும்.

திமுகவிற்கு 119 தொகுதிகள் தான் கைவசம் உள்ளன.. அதிமுகவிற்கோ 160 உள்ளன.
தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதாக இருந்தால், திமுகவினால், தன்  கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் வர இயலாது.
கணிசமான இடங்களை (63) வைத்துள்ள காங்கிரஸ் கை கொடுத்தால் தான் திமுகவினால் பெரும்பான்மை பெற முடியும் என்பதை வைத்து பார்க்கும் போது திமுக வெற்றி பெற காங்கிரசின் வெற்றியும் முக்கியம்.

காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நிலை ஒரு பக்கம் இருக்கிறது என்றாலும், அதை இப்போது வெளிக்காட்டாமல் வருகின்ற பாராளமன்ற தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்துவதே புத்திசாலிதனமாக தெரிகிறது.

புதன், 17 ஏப்ரல், 2013

இறந்தவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு ஆதாரமா??




கேள்வி : 2:154 வசனம் இறந்தவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளதே?



அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்த வசனத்தில், ஷஹீதானவர்கள் அல்லாஹ்வுடைய பார்வையில்இறக்கவில்லை என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வரும் வாசகமான "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்", என்பது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றாலும், அது நாம் உணரக்கூடிய வகையிலான உயிரோடு இருத்தல் இல்லை, அது "வேறு விதமான" உயிரோடு இருத்தல் என்பது தெளிவாகிறது. 

இவ்வாறு அல்லாஹ் கூறுவதற்கு விளக்கமாக இன்னொரு வசனத்திலும் அல்லாஹ் இதையே கூறுகிறான்.
3 :169 வசனத்தில் ஷஹீதான ஒருவர மரணிக்கவில்லை என்றால், அவர் இறைவனிடத்தில் மரணிக்காமல் உள்ளார்  என்பதே பொருள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாதத்திற்கு, இந்த வசனம், சஹீதானவரை இறக்கவில்லை, நாம் புரிந்து கொள்வதை போன்றே அவர் உயிருடன் தான் உள்ளார் என்று வைத்துக்கொண்டால் கூட,

  • இதன் மூலம், அவர் நாம் பேசுவதை கேட்ப்பார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  • அவர் புரிந்து கொண்டு பதில் அளிப்பார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
  • உயிருடன் இருப்பவர்களிடமேல்லாம் துஆ செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது. நாம் கூட உயிரோடு தான் இருக்கிறோம். நான் உங்களிடமும் நீங்கள் என்னிடமும் துஅ செய்யலாமா? 
  • நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ சஹாபாக்கள் ஷஹீதாகி உள்ளனர். அவ்வாறு இறந்தவர்களிடம் அவர்களிடம் சஹாபாக்கள் எந்த உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை.

Why did TNTJ support DMK?


Ques: Why did TNTJ support DMK? It is purely because TMMK is in ADMK alliance. Correct?


(A refutation during 2011 state election)


Assalaamu alaikkum.

No. Following the history for the past 2 months, we can understand that what you have told is not the real reason.

Initially (During January,2011), TNTJ has announced that TNTJ's support will be provided to any party who provides Muslim reservation of 5% or if ADMK mentions in their election manifesto.
Note that, when TNTJ proclaimed this, TMMK had not formed an alliance with ADMK.

Also note that, as per this proclamation, TNTJ is bound to support any alliance (either DMK or ADMK!!)  who provides reservation. If ADMK had mentioned in their manifesto, TNTJ would have supported, that is what been committed.
What has been committed in front of media cannot be denied.
Till last week, ADMK officials met PJ at his office requesting his support.

PJ himself has written a statement of letter, framing the sentence how it should be mentioned in ADMK's manifesto regarding muslim reservation, and had sent to ADMK.

Finally, to everyone's surprise, ADMK did not publish that in their manifesto & later they have called up PJ & told that "Amma" will definitely provide the reservation but the reason we are not committing it in our manifesto is that, we may lose many other caste votes!

PJ did not accept this.
If you are hesitating to even commit in your manifesto, it means you will hesitate to bring to power too. This is what PJ's stand is.

But, when we checked DMK's manifesto, Karunanidhi has mentioned the same in his manifesto.
Comparing the both, DMK is far better at this stage.
Note that, Karunanidhi had not thought of losing other caste votes unlike how Jaya has thought.
This is the reason.
Understand that, till the eleventh hour, both the parties were at equal distances from TNTJ..

TMMK's alliance with ADMK is not at all a bother to TNTJ.
Even by supporting ADMK, TNTJ can oppose TMMK alone, in their particular constituencies.

So, the reason is not what you told, but what I have mentioned above.


ஹதீஸ்களை மறுக்க சொன்ன இமாம்கள்





இமாம் ஷாஃபி அவர்களின் கூற்று

ஒரு ஹதீஸ் நம்பத்தகுந்ததாக ஆகுவதற்குரிய நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது கட்டாயமாகுமா? இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

اநூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

இமாம் மாலிக்  மற்றும் குர்துபீ அவர்களின் வழிமுறை

குர்துபீ கூறுகிறார் :  மாலிக்  அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தை கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70


இமாம் குர்துபீ அவர்களின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213


இமாம் இப்னு தய்மியா அவர்களின் வழிமுறை
படைப்பின் துவக்கம் சனிக்கிழûயில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகிவிடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் உள்ள குறையை நிறுபித்துள்ளார்கள்.
(என்று, முஸ்லிம் 4997 இல் வரக்கூடிய ஹதீஸை, குரானுக்கு முரண் என்று கூறி மறுக்கிறார்)
நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34



இமாம் ஜுர்ஜானி அவர்களின் கூற்று

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113


இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று 
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276


இமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவதாகும்.
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80


இமாம் அபூபக்கர் சர்ஹஸீ அவர்களின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல் : உசூலுஸ்ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.
நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492


(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்ற) முதல்வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.
நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸீ அவர்களின் கூற்று

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவுசெய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸை கண்டால் அது இட்டுக்கட்டப்பட்டச் செய்தி என்று புரிந்துகொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் !

நூல் : தர்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சி­ர்த்து  அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275


அர்ரபீஉ பின் ஹய்ஸம் அவர்களின் கூற்று

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பக­ன் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்துகொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்துகொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62


முஹம்மத் பின் அபீபக்கர் அஸ்ஸரயீ அவர்களின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.
நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

ஏர்வாடி ஜாக் மறுக்கிறதே?






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதரர் ஏர்வாடி சிராஜ் தனக்கும் "ஹிஜரா கமிட்டியின் பிறை பார்த்தல் நூலுக்கும் எந்த
தொடர்பும் இல்லைன்னு சொல்ராரே பிறகு ஏன் நீங்கள் அதனை உதாரணமாக  காட்ட வேண்டும்..

இதற்கு விளக்கம் அளிக்கவும்...




அஸ்ஸலாமு அலைக்கும்..

அவர் கூறுவது பொய்..

அவரது இரட்டை நிலையை தெளிவாக அறிந்து கொள்ள "பிறை பார்த்தல்"நூலை ஆதாரமாக வைத்தோம்..
அதற்கு  அவர் சொல்லும் பதில், ஏதோ சம்மந்தமில்லாத நூலை பற்றி  நாஷித் பேசுகிறார்  என்கிறார்.

எது சம்மந்தமில்லாத நூல்?

பிறை பார்த்தல் - ஒரு ஆய்வு என்ற நூல் ஹிஜ்ரா கமிட்டி, எர்வாடியின் ஆதரவுடன், அணிந்துரையுடன்
 Er . அப்துஸ்ஸமத் அவர்களது எழுத்தில் வெளிவந்துள்ளது.

அந்த நூலை பற்றி அறிந்தவர்கள் அதில் பக்கம் 8 ஐ பார்க்கவும்..

""""இந்த நூலை மிகவும் கவனத்துடன் படிக்கவும் . உங்களுக்கு தெளிவான விழிப்புணர்ச்சியும்  கருத்தெழுச்சியும் ஏற்ப்படும்"""
 
என்று ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பில் அந்த பக்கத்தில் அவர்கள் ஆதரவளித்துள்ளதை அறியலாம். .


நூல் கிடைக்காதவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். 

ஹிஜ்ரா கமிட்டியின் ஆதரவு என்பது அந்த நூலிலேயே இருக்கும் போது, சம்மந்தமில்லாத நூல் என்கிறார்.

ஒரு வேளை ஏர்வாடி சிராஜுக்கும் ஹிஜ்ரா கமிட்டிக்கும் சம்மந்தமில்லை என்கிறாரா தெரியவில்லை. அவ்வாறாயின், சொல்லுங்கள், இனி சிராஜையும் ஹிஜ்ரா கமிட்டியையும் தொடர்பு படுத்த மாட்டோம்.



அவரிடம், இதை கேளுங்கள்.. 

  • அந்த நூலில் ஹிஜ்ரா கமிட்டியின் முன்னுரையே இல்லை என்று சொல்ல சொல்லுங்கள்.
  • அல்லது, அதில் உள்ள ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள்.

அவர் பக்கம் நியாயம் இருந்தால் மேலே உள்ள இரண்டில் ஏதாவது ஒன்று உண்மையாக இருக்க வேண்டுமல்லவா?



ஹிஜ்ரா கமிட்டி ஆதரவு பெற்ற அந்த நூலில் உள்ள அபத்தங்களையும், சிராஜ் என்னோடு  வாதம் செய்யும் போது ஏற்படுத்திய முரண்பாடுகளையும் அறிந்து கொள்ள கீழே உள்ள இரு கட்டுரைகளை படிக்கவும்.. 

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 1


வஸ்ஸலாம்..


செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஏன் வழக்கு போடாமல் பத்திரிக்கை மீது பாய வேண்டும்?






அவதூறு பேசியவர்கள் மீது வழக்கு போட வேண்டியது தானே? அதற்கு பதில் ஏன் நக்கீரன் பத்திரிக்கை மீது பாய வேண்டும்?
 
((நக்கீரனில்கடந்த 2010 இல் சகோ. பிஜே பற்றி அவதூறு செய்தி போடப்பட்டிருந்த போது எழுப்பப்பட்ட விமர்சனத்திற்கான பதில்.))



குமுதம் பத்திரிக்கையில், சம்மந்தப்பட்ட பொய்யர், பிஜே மீது அவதூறு சொல்கிறார். அந்த அவதூறோடு  சேர்த்து, பிஜேயின் மறுப்பும் இணைத்தே   அந்த கட்டுரையில் வெளியானது.
திருவிடைசெரி சம்பவம் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம்.
முஸ்லிம்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் ஒரு சம்பவம். 
இத்தகைய தருணத்தில், முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேட்டி  எடுத்தால் நல்ல விளம்பரம் தேடலாம் என்பது தான் குமுதத்தின் நோக்கமே தவிர, எந்த தலைவரையும் மட்டம் தட்டும் நோக்கில்லை.

இரு பக்க கருத்தையும் வெளியிட்டிருக்கிறது.


நக்கீரனில், பிஜேயின் மறுப்பு இல்லை.
என்றோ நடந்து முடிந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பத்திற்கு பிஜே தான் காரணம் என்று ஒருவர் சொன்னால், அதில் பிஜேயின் பங்கு என்ன என்பதை விசாரிக்காமலும் , அவரது கருத்தை அறிந்து அதையும் சேர்த்து வெளியிடாமலும் , அவதூறை மட்டும் வெளியிட்டிருப்பதற்கு , பிஜே என்ற நபர் மீது இவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வழக்கு யார் மீது போட வேண்டும் என்று தீர்மானிப்பது சம்மந்தப்பட்டவரின் முடிவே தவிர, மூன்றாம் நபர் அறிவுறுத்துவது நியாயமாகாது.

இரண்டு சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர் பிஜே என்ற வகையில், முடிவெடுக்கும் உரிமை அவரிடம் உள்ளது.

அந்த மூவர் மீது வழக்கு போடவில்லையே என்று மிகவும் வருத்தப்படும் சகோ. பீர் அவர்களே, அந்த மூவரை பகிரங்க விவாதத்தில் சந்திக்க தயார் என்று பிஜே அறிவித்திருக்கிறாரே, அதற்கு அழைத்து வர முயற்சியுங்கள்.

வழக்கு போடுவதும், விவாதத்திற்கு அழைப்பதும் இரண்டுமே உண்மையை அறிய உதவும். வழக்கிற்கு பயந்து பின்வாங்கியவனும், விவாத்திற்கு வராமல் பின்வாங்கியவனும் பொய்யன் தான்  என்று அளவிட போதுமான காரிணிகள் தான்.


இங்கு எழுதியதை போல அந்த மூவருக்கும், விவாதத்திற்கு வரும்படி அழையுங்கள்.

ஆனால், விசாரிக்காமல் அவர் சொல்வது அனைத்தையும் உண்மை என எப்படி நம்புவது? அப்படி நம்புவோமேயானால் அது தான் தக்லீது.


ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சுமத்தி விட்டதாலேயே, இருவரையும் இனி நம்பக்கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனமானது.
குற்றம் சுமத்துபவர் அக்குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் குற்றம் சுமத்தியவர் உண்மையாளர் என்றும் சுமத்தப்பட்டவர் பொய்யர் என்றும் தெரிய வரும்.

அது அல்லாமல், எவரோ மூன்று பேர், ஒருவரை நோக்கி, நீங்கள் தான் குண்டு வைத்தீர்கள் என்று வெறும் வாயளவில் சொல்லி விட்டால், ஆஹ.. பார்த்தீர்களா, சொல்லி விட்டார்கள், இனி பிஜேயை நம்பக்கூடாது, என்று கூப்பாடு போடுவது வடி கட்டிய முட்டாள் தனமே தவிர வேறில்லை.

உங்களை நோக்கி நான், ஊழல்வாதி என்று குற்றம் சுமத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பார்த்தீர்களா, குற்றம் சுமத்தி விட்டார்கள், இனி நாஷித்தையும் நம்ப வேண்டாம், பீரையும் நம்ப வேண்டாம், கோர்டுக்கு செல்லலாம், என்று உங்கள் குடும்பத்தினர்  முடிவு செய்வார்களா ? அவ்வாறு செய்வது தான் சரி என்று தான் நீங்களும் கூறுவீர்களா? அல்லது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை நாஷிதிடம் கேட்டுப்பெறுங்கள் என்று வலியுறுத்துவீர்களா?

குற்றம் சுமத்தியவர் அக்குற்றத்தை நிரூபிக்க திராணி பெற்றவராக இருந்தால் நிரூபிக்கட்டும்.. அதை செய்யாதவரை, அவர்களே பொய்யர்கள்!! 

அது பேராசிரியராக இருந்தாலும் சரி, குண்டு வெடிப்பில் கைதானவர்களாக இருந்தாலும் சரி!!

நீங்கள் பிஜே அனுதாபிகளின் தலைவராக இருந்தால், அந்த மூன்று பேரிடமும் , பேராசிரியரிடமும் அவர்களின் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அவர்களிடம் சென்று கேளுங்கள்.

இல்லை, பேராசிரியரின், மற்றும் அந்த மூவரின் அனுதாபி தான் நீங்கள் என்றால், அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை தந்து விட்டு பிஜேயிடம் கேள்வி கேளுங்கள்.

இரண்டையும் செய்யாமல், (அல்லது செய்யும்படி வற்புறுத்தாமல்) குழுமத்தில் வசை பாடி திரிவது அவதூறை பரப்பிய பொய்யர்களில் நீங்களும் ஒருவர் என்ற கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படும்.

இப்ராஹிம் நபி பொய் சொன்னார்களா?



21 : 63  வசனத்தில் இப்ராஹிம் நபி பொய் சொன்னதாக தானே அர்த்தம் வருகிறது?


அஸ்ஸலாமு அலைக்கும்..

இது போன்ற சந்தேகங்கள் எழுவது பாராட்டுக்குரியது.. ஆய்வு செய்யும் போது, இறை வசனங்கள் குறித்து தீர்க்கமாக சிந்திக்கும் போதும் மட்டுமே இது போன்ற சந்தேகங்கள் எழும்..

அந்த வசனம் பற்றி எனது கருத்தை கேட்டிருப்பதால் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்..

இதை நீயா செய்தது ? என்று கேட்கப்பட்ட போது, ",இல்லை", என்று அவர் மறுத்ததாக மொழியாக்கத்தில் உள்ளது, ஆனால், இல்லை என்ற வார்த்தை அரபிப்பததில் இல்லையே, என்று கேட்க்கிறார்.

"இல்லை", என்ற வார்த்தை அரபி பதத்தில் இல்லை என்றாலும், அவர்கள்,  இல்லை என்று பொருள் கொள்ளும் வகையில் தான் பதில் சொல்லியிருகிறார்கள். 

தொடர்ந்து வரும் அந்த வசனம் கூறுவது, "அந்த சிலை தான் செய்தது!!!", என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"அந்த சிலை தான் செய்தது, என்று ஒருவர் கூறினாலே, அதன் பொருள், "நான் செய்யவில்லை", என்பது தான்!!
ஆக, இந்த இடத்தில் "இல்லை,", என்ற அரபிப்பதம் இல்லைஎன்றாலும் "இல்லை என்று பொருள் கொடுக்கலாம்!! , என்பதற்காக இந்த விளக்கம்..


அடுத்து, "யார் செய்திருப்பார்கள் என்று அந்த சிலையிடமே கேட்டுக்கொள்ளுங்கள் (Someone did it !) என்று மட்டும் சொல்லியிருந்தால், அவர் செய்யவில்லை என்பதை மறுக்காததன் மூலம், அவர் பொய் சொல்வதாக ஆகாது என்று கருத இடமுண்டு. 
ஆனால், இங்கு "அவர் "அந்த சிலையிடம் கேளுங்கள் என்று மட்டும் சொல்லவில்லையே!, அந்த சிலை (அதாவது பெரிய சிலை) தான் செய்தது, வேணடுமானால், இந்த சிறு சிலைகளிடம் கேட்டுப்பாருங்கள்", என்று தான் கூறுகிறார்கள்.
இதன் மூலமும் அவர் தான் செய்யவில்லை என்பதை இங்கு உறுதியாக மறுக்க தான் செய்கிறார்கள்.

ஆக, தான் செய்ததை தான் செய்யவில்லை என்று இப்ராஹீம் நபி உறுதியாக மறுக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்போது இதை அணுகும் முறை என்ன?

சொல்லப்பட்டிருக்கும் செய்தி, குர் ஆனில்! சொல்வது அல்லாஹ்.!!

ஆக, அல்லாஹ் ஒன்றை சொல்கிறான் என்றால், இந்த இடத்தில் ஏதோ ஒரு தனி சிறப்பு இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது! பிரத்யேக அனுமதி உள்ளது.

மார்க்கத்தை புரிய வைப்பதற்காக பொய் சொல்லலாம்!! என்று தான் புரிய வேண்டும்.. 

(இதற்கு ஆதாரமாக சகோ,. செய்யத் எடுத்துக்காட்டிய ஹதீஸை கொள்ளலாம்!)


இந்த இடத்தில், பொய் சொல்லி பிறரை ஏமாற்றும் எண்ணம் இப்ராஹீம் நபிக்கு இருக்க முடியாது. ஏனெனில், இந்த பொய், தன்னை காப்பாற்றிக்கொள்ள உதவாது என்று அவர்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது.

அதே போன்று, கேட்ட அந்த மக்களும், இப்ராஹீம் நபி சொல்வதை உண்மை என்று நம்பவில்லை, நம்ப மாட்டார்கள். நம்ப மாட்டார்கள் என்று தெரிந்தே தான் அவ்வாறு சொல்கிறார்கள் எனும் போது, இங்கு பொய் சொல்வது நோக்கமல்ல, அதில் உள்ள உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதே நோக்கம்!

6 :76 -  77 . படித்துப்பாருங்கள் - அதிலும் அல்லாஹ்வை கடவுள் என்று சொல்வதற்கு பதில், சூரியனையும் சந்திரனையும் இப்ராஹீம் நபி கடவுள் என்று சொல்வதாக இடம்பெற்றிருக்கும் .

இதை வைத்து இப்ராஹீம் நபி அவர்கள் இணை வைப்பு செயலில் ஈடுபட்டார்கள், என்று நாம் சொல்ல மாட்டோம், சொல்லக்கூடாது!. 
எப்படி பிற மக்கள் புரிவதற்காக இது போன்று சூரியனையும் சந்திரனையும் கடவுள் என்பது போல் சொல்லி, அதை அவர்களே மறுத்து விளக்கினார்களோ, அதே போன்றே மேற்கண்ட "பொய்யையும்", புரிய வேண்டும் என்பது எனது கருத்து..

ஓட்டமெடுத்த தர்காவாதி





This is Truth

குழுமத்தின் ஆசிரியர் நாம் ஒரு தளத்தின் முகவரி அளித்தாலே நம்மை மட்டுருத்துகின்றார். ஆனால் இங்கே பாருங்கள் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றார்கள். ஒத்த கொள்கையுடையவர்கள் என்பதால் விடுகின்றார்களோ? 

மேலும் கப்ர் வணங்கி என்று மீண்டும் இந்த Shaju2k5@gmail.com ற்கு சொந்தக்காரர் கூறுகின்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, கப்ரை வணங்குகின்றார்கள் என்று கூற தயாரா?



Nashid Ahmed

குழுமத்தில் கூற வேண்டியதை என்னிடம் கூறி எந்த நன்மையும் இல்லை. உங்கள் ஆதங்கத்தை குழுமத்திற்கு தெரியப்படுத்துங்கள்.
கபுரை வணங்குவதை ஆணையிட்டு கூற சொல்கிறீர்கள். 
இறைவன்  மீதாணையாக அவர்கள் கபுரை வணங்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறே நான் நம்புகிறேன். நாம் நம்பாததை பிறரிடம் சொல்வதில்லை!.



This is Truth

நீங்கள் அப்படி நம்புவது மார்க்கமாகாது. இட்டுக்கட்டி கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்துள்ளீர்கள்.
இப்படி கடிதம் எழுதி இருக்கின்றீரே, இதே விஷயங்களை உங்களை குற்றம் சாட்டுகின்றேன்.

அவதூறு, ஆதாரமற்ற அவதூறு, இட்டுக்கட்டு முழுவதும் உங்களிடம் தான் உள்ளது.

கப்ரு வணங்கி என்று கூறி உள்ளீர். இதற்கு முன் உங்களுடைய முகவரியை சுட்டி காட்டி சகோதரர் அப்துஸ் ஸலாம் இப்ராஹீம் என்பவர் கப்ர் ஜியாரத் தான் செய்கின்றோம். அது நபி வழி. தர்கா கட்டுவதற்கும் ஆதாரம் தந்து பேசினார். அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்கவில்லை. வணங்கவும் தேவை இல்லை. இப்படி மூமினீன் வார்த்தையில் வரவே வராது என்று விளக்கம் கூறினாரே. அதற்க்கு பதில் சொல்ல முடியாமல், மீண்டும் இட்டுக்கட்டி, கப்ரு வணங்கி என்று கூறியுள்ளீர், அல்லாஹ்விடம் பதில் சொல்ல ரெடியா? அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.


Nashid Ahmed

கபுரில் செத்து கிடப்பவர்களிடம்  துஆ செய்யலாம் என்று கூறி வரும் ஜமாலி இணை வைக்கிறார் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
அவர் கபுரை வணங்க தான் செய்கிறார் என்பது இதன் மூலம் தான் எனக்கு  உறுதியாகிறதே தவிர, நீங்கள் கூறும் தர்கா கட்டுதல், கபுறு சியாரத்  போன்றவைகள் இதற்கு அடுத்த நிலை.
முக்கிய விஷயத்தை குறித்து கேட்டால், அதற்கடுத்த விஷயத்தை பற்றி பேசுகிறீர்கள் .  

உங்களால் நம்மோடு தொடர்ந்து பேச முடியும் என்றால், அவதூறை யார் சொல்கிறார் என்பதை முடிவு செய்யலாம்.. 



This is Truth

இணை வைக்கின்றார் என்ற உங்கள் குற்றச்சாட்டு வேறு, வணங்குதல் என்பது வேறு. வணக்கம் அல்லாஹ்விற்கு மட்டும் என்று தான் ஜமாலி கூறுகின்றார். அதற்க்கு மாற்றமாக, இல்லை அவர் வணங்க தான் செய்கின்றார் என்று நீங்கள் கூஉவது. எப்பிடி ஏற்றுக்கொள்ள முடியும். அவருடைய உள்ளத்தை நீங்கள் புகுந்து பார்த்து வந்தீரா? கப்ரை யாரும் வணங்க வில்லை. வணங்க தேவையும் இல்லை. அல்லாஹ்விற்கு மட்டும் தான் வணக்கம் என்று சென்னையில் நடந்த இரண்டாவது விவாதத்திலும் கூறினாரே ஜமாலி. இருந்தும் ஏன் இட்டுக்கட்டுகின்ரீர். உங்களுடைய நம்பிக்கை படி பேச கூடாது. குர்'ஆன் ஹதீஸ் முறையில் தான் பேசவேண்டும். ஜியாரத் அதற்கு அடுத்த நிலை என்று கூறுகின்றீர். அது எப்பிடி அடுத்த நிலையாகும். சொல்லப்போனால் உங்களுடைய வணக்கம் என்ற வார்த்தை தான் அடுத்த நிலைக்கு வரும்.

காரணம் முதலில் செல்லும் போதே அஸ்ஸாலாமு அலைக்கும் என்று கூறியவாறு சென்றால், அங்கே ஜியாரத் ஆரம்பமாகி விடுகின்றதே. அதனால் ஆரம்பமே ஜியாரத் தானே தவிர, அது இரண்டாம் நிலை அல்ல. முக்கிய விஷயம் என்ன? வணக்கம் அங்கே எங்கே நடைபெறுகின்றது. ஏன் அவதூறை பரப்புகின்றிர்.  உங்களோடு விவாதிக்க தயார். ஆனால் உங்கள் நம்பிக்கை வைத்து அல்ல. எது எதார்த்தமோ அதன் படி விவாதிக்க தயார். நான் இப்படி தான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றால் அது உங்கள் நம்பிக்கை, இட்டுக்கட்டு தானே தவிர, விவாதமாகாது.


Nashid Ahmed

""இறந்தவர்கள் செவி எற்பார்கள்  என்பதும், எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்று,  பிரித்தறிந்து , அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால் இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இறந்தவர்களிடம் உதவி தேடலாம், என்பது சுன்னத் ஜமாத்தின் (ஜமாலியின்) நிலைபாடு"".

என்று நான் கூறுகிறேன். 

இதை நீங்கள் மறுக்கிறீர்களா ஒப்புக்கொள்கிறீர்களா?

ஒரே வரியில் பதில் அளியுங்கள்.

உங்களுக்கு தொடர முடிந்தால் தொடரலாம். . 
ஏதோ, இவர்கள் கேள்விகளாக கேட்டு அடுக்கிக்கொண்டு சென்றதைப்போலவும், அதற்கு  நாம் தான் எந்த பதிலையும் இதுவரை தராமல் நழுவி வருவதைப்போலவும் மிக துணிச்சலாக எழுதியிருக்கிறார். 

இவரது துணிச்சலை பாராட்டும் விதமாகவும் , இணை வைப்பவர் யார்?, கபுரை வணங்குவதன்  மூலமாக இஸ்லாத்தை விட்டே வெளியேறும் மாபாதக செயலை எங்கனம் இவர்கள் அரங்கேற்றுகின்றனர் என்பதைக்குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளும் பொருட்டு நாம் இவரை நோக்கி, இவரே விரும்பியதன் பெயரில் ஒரு கேள்வியை முந்தைய மெயிலில் கேட்டிருக்கிறோம்.  
அதற்குரிய பதிலை இவர் தரட்டும் பார்க்கலாம். 

"this is truth " என்ற பெயரில் அனாச்சாரங்களையும் அவதூறுகளையும் இன்னும் பல கழிசடைத்தனங்களையும்  பரப்பி வரும் இவரது சாயம் இன்ஷா அல்லாஹ் வெளுக்கும். \


This is Truth

நீங்கள் விவாதிப்பதாக இருந்தால், ONE to ONE சிறந்ததாக இருக்கும். அதை விடுத்து இப்படி ஒருவர் எழுதியிருக்கின்றார். பொய்யர், கழிசடை என்றால், மரியாதை இருக்காது என்று நீங்கள் சார்ந்த அமைப்புகளின் குழுமத்தில் பதிவு செய்வது தவறு. இப்படி பேசுவது இஸ்லாமிய பண்பும் அல்ல. இஸ்லாம் கண்ணியமான மார்க்கம். கண்ணியத்தோடு விவாதியுங்கள். பல பேருக்கு அனுப்பி வைக்கின்றீர்கள். இது என்ன PUBLIC விவாதமா? அதை சொல்லுங்க, Yahoo Chat Room இல் வைத்து public ஆக செய்யலாம். அதை விடுத்து  எனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையை ஏன் போதுவாக்குகின்ரீர். அதற்கு ஆயிஷா என்ற முகவரிக்கு சொந்தக்காரர் வக்காலத்து வேறு. விவாதம் நடப்பதும் நடக்காததும் உங்கள் முடிவில் தான் உள்ளது.

விவாதமே ஆரம்பிக்கும் முன்னாள் பொய்யர் என்று என்னை சொன்னதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். அடக்கி வாசியுங்கள். இல்லை என்றால் கருத்து பரிமாற்றம் நடைபெறாமல் போவதற்கு ஒரு Chance உள்ளது. இப்படி கூறுவதால் ஏதோ, பயந்து விட்டேன் என்று எண்ணி விடாதீர்கள். விவாதத்திற்கு வாபஸ் வாங்கி விட்டேன் என்று நினைத்து விடாதீர்கள். இப்படி தான் நீங்கள் பிரச்சாரம் செய்வீர்கள். உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் JAQH பள்ளியில் செய்த அட்டூழியங்கள் எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் விவாதம் செய்யும் போது ஒரு ஒழுங்கு வேண்டும் என்று நாவடக்கி பேசுகின்றேன். அப்படி பேச இஷ்டம் இருந்தால் பேசுங்கள். இல்லை என்றால் உங்கள் அமைப்பிற்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள். என்னிடம் விவாதிக்க தேவை இல்லை.




Nashid Ahmed

அஸ்ஸலாமு அலைக்கும்..

பல பேருக்கு அனுப்பி வைக்கின்றீர்கள். இது என்ன PUBLIC விவாதமா? எனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையை ஏன் போதுவாக்குகின்ரீர்

எனக்கும் உங்களுக்கும் எந்த சொந்த பிரச்னையும் கிடையாது. ஏதோ சொந்த, கொடுக்கல் வாங்கல்களை பற்றி நாம் வாதிப்பதை போல் பேசுகிறீர்கள்.
இது பொது பிரச்சனை !. மார்க்கப்பிரச்சனை  !!
அதை குழுமத்திலும், உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அனைவர் மத்தியிலும் தான் வாதிக்க வேண்டும்.
உண்மை தன் பக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர் மத்தியில் வாதிப்பதற்கும் தயங்க தேவையில்லை!

நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, என்று நீங்கள் தான் துவங்கினீர்கள். நீங்கள் யாருக்கெல்லாம் cc வைத்து அந்த மெயிலை அனுப்பினீர்களோ, அதே cc யுடன் வாதங்களை தொடரலாம்.

ஜமாலியின் கொள்கை என்று நான் ஒரு கருத்தை கூறினேன். அந்த கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா?  இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள். வேறு திசை திருப்பல்கள் வேண்டாம்.
நீங்கள் இதை ஏற்பதாக இருந்தால் மட்டுமே வாதம் அவசியம். மறுப்பதாக இருந்தால் நம் இருவர் கருத்தும் ஒன்றே!



This is Truth

எப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர். நான் cc போட்டு துவங்க வில்லை. அதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்தது. உங்களுக்கு Reply அனுப்பும் போது அதப்படியே வந்தது. இது தான் உண்மை. நான் நீங்கள் CC அனுப்பிய group ல் உறுப்பினராக கூட இல்லை. அதனால் என்னுடைய தகவல் அங்கே பரிமாறப்படவில்லை. CC பிரச்சனையும் உங்களால் ஆரம்பித்தது தான்.

மார்க்கப் பிரச்சனையை என்றால் பொது விவாதம் சரி தான். அதற்க்கு என்று ஒரு முறை இருக்கின்றது. நானும் நீங்கள் அனுப்பும் group ல் சேர்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். இது தான் விவாதிக்கும் முறை. அதனால் இது முறை இல்லா விவாதம் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போது, வேறு ஒரு கேள்வி கேட்கின்றீர். நான் கேட்டது, நீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களா?  இல்லையா? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமா? இதற்கு பதில் சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும்.

அதை விடுத்து உங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டே இருக்க முடியாது. நான் விவாதிக்க தயங்க வில்லை. அதை நீங்கள் வேறு இழைகளில் விமர்சனமாக வேறு வைக்கின்றீர். இப்படி செய்யலாமா என்று தான் கேட்கின்றேன். அதற்க்கு ஆயிஷா என்ற பெயர் உடையவர் வக்காலத்து வேறு. இது தான் கூடாது. one to one. விவாதம் என்றால் விவாதம் முடிந்த பிறகு தான் விமர்சனம் வேண்டும். நானும் விமர்சனம் செய்யலாம். உங்கள் தலைவர் களியக்காவிளையிலேயே இந்த விவாதத்தில் அப்பட்டமாக தோற்று விட்டாரே, அதனால் தானே விதண்டா வாதம் உண்மை பதில் என்று மக்களை Convince பண்ணினார் என்று கருத்தை பதிவு செய்யலாமா? இல்லை நீங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறுவதால் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறலாமா? அப்படி விமர்சனம் செய்யலாமா? இது எப்பிடி முறை இல்லையோ, அப்படி நீங்கள் செய்தது முறை இல்லை. அதை ஒப்புக்கொள்ளுங்கள், சுத்தி வலைக்காதீர்கள்.

பயம் யாருக்கும் கிடையாது. நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் அனுமதித்த ஜியாரத்தை கப்ரு வணங்கி என்று கொச்சை படுத்தும் நீங்களே பயப்படைல்லை, வெக்கப்படவில்லை. நான் எதற்கு பயப்பட வேண்டும். நீங்கள் செல்லும் முறை சரி இல்லை. ஒரு வரி பதில் கேட்கின்றீர். அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையா. நீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லை. ஒரு வார்த்தை போதும். ஆம் அல்லது இல்லை.

இதை விடுத்து நீங்கள் சொல்லுங்கள் என்று ஏன் என்னை கேட்டுக்கொண்டு இருக்கின்றீர். நான் முதலில் வைத்தது கோரிக்கை தான், அதை ஒத்துக்கொண்டீர்களா, இல்லையா, இல்லை கப்ரு வணங்கி தான் கூறுவீர்களா? சொல்லுங்கள், அதற்கேற்றாற்போல் விவாதிக்கலாம். அது தெரியாமல் எப்பிடி உங்களோடு விவாதம் செய்வது. உங்கள் கொள்கை எப்பிடியோ அதன் படி தான் விவாதம் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இனி விவாதம் செய்வதாக இருந்தால் CC யோ அல்லாஹ்விற்கு பயந்து அவன் மீது சத்தியமிட்டு BCC யோ இருக்கக்கூடாது என்று இருந்தால் மட்டுமே விவாதம் தொடர முடியும். காரணம், நடுவில் பிரச்சனையை செய்வதற்கு இரு தரப்பிலும் ஆயிஷா என்ற முகவரி உடையவர் போன்றவர்கள் இருப்பார்கள்.


Nashid Ahmed

அஸ்ஸலாமு அலைக்கும்.. 

எப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர். நான் cc போட்டு துவங்க வில்லை. அதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்தது. உங்களுக்கு Reply அனுப்பும் போது அதப்படியே வந்தது


நான் cc வைத்து உங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. நான் எழுதியதும் பேசியதும் வேறு நபர்களிடம், வேறு தலைப்புகளில்.
இடையில் நுழைந்து , நான் உங்கள்  கேள்விக்கு பதில் அனுப்பவில்லை என்று நீங்கள் தான் நம்மிடையே உள்ள வாதத்தை துவக்கினீர்கள்.
நீங்கள் ஒன்றை துவக்கும் போது, அதே cc க்கு  தான் நானும் பதில் அனுப்ப முடியும்.


உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். இது தான் விவாதிக்கும் முறை

உங்களுக்கு தெரிந்த எண்ணிக்கை எத்தனை என்பதை சொல்லுங்கள். நானும் எனது லிஸ்டை தருகிறேன்.
குழுமங்கள் தேவையில்லை என்றால் வேண்டாம்.
என் தரப்பில், குறைந்தது 50 பேருடைய லிஸ்டை  தருகிறேன். நீங்கள் அதற்காவது தயாரா?




ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போது, வேறு ஒரு கேள்வி கேட்கின்றீர். நான் கேட்டது, நீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களா?  இல்லையா? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமா? இதற்கு பதில் சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும். 

ஜமாலியின் நிலைபாடை தான் இணை வைப்பு என்று நான் கூறுகிறேன். எந்த கருத்தை வைத்து அவரை இணை வைப்பு, கபுர் வணங்கி என்று நான் சொல்கிறேனோ, அந்த கருத்தை தான் உங்களிடம் வைத்தேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல், ஏதோ நான் பதில் சொல்லாததை போல் பேசுகிறீர்கள். .

மீண்டும் அந்த கருத்து..


""இறந்தவர்கள் செவி எற்பார்கள்  என்பதும், எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்று,  பிரித்தறிந்து , அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால் இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இறந்தவர்களிடம் உதவி தேடலாம், என்பது சுன்னத் ஜமாத்தின் (ஜமாலியின்) நிலைபாடு"".
என்று நான் கூறுகிறேன்.  இந்த நிலைபாட்டில் அவர் இருப்பதன் மூலம், அவர் இணை வைக்கிறார், அவர் தன்னை கபுர் வணங்கி என்று பிரகடனப்படுத்துகிறார்,  என்பது எனது குற்றச்சாட்டு.
ஜமாலியின் இந்த நிலைபாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா? என்று நான் கேட்டேன்.
ஆம், இல்லை, இரண்டே  வார்த்தை தான் இதற்கு பதில். 



ஒரு வரி பதில் கேட்கின்றீர். அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையா. நீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லை. ஒரு வார்த்தை போதும். ஆம் அல்லது இல்லை.

எந்த கருத்தை சொல்லி, அவர் கபுர் வணங்கி என்று நான்  குற்றம் சுமதுகிறேனோ, அந்த கருத்தை கண்டுகொள்ளாமல், அவர் கபுர் வணங்கி என்பதை வாபஸ் வாங்குங்கள் என்கிறீர்கள். வேடிக்கை தான்!
மேலே நான் குறிப்பிட்ட நிலைபாட்டை ஜமாலி கொண்டிருப்பதன் மூலம் தான் அவர் இணை வைக்கிறார், அல்லாஹ்வை வணங்குவதற்கு பதில் செத்து போன பிணங்களை வணங்குகிறார் என்று நான் பகிரங்கமாக, வெளிப்படையாக, எவருக்கும் அஞ்சாமல் தான் இப்போதும் கூறுகிறேன்.


ஜமாலியின் நிலைபாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அந்த நிலைப்பாடு உங்களுக்கு உடன்பாடில்லையா?
அந்த நிலைபாட்டை கொண்டிருந்தாலும் அதனால் கபுர் வணங்கி ஆகா மாட்டாரா?
எதையாவது சொல்லி தானே நம்மிடம் கேள்வி கேட்க வேண்டும்?

நான் ஒரு விமர்சனத்தை , காரண காரியத்துடன் சேர்த்து தான் வைக்கிறேன்.
உங்கள் கடமை, அந்த காரண காரியம் சரி அல்லது தவறு என்று உங்கள் பக்க விளக்கத்தை தர வேண்டும்.
உங்களுக்கு அந்த நிலைபாட்டில் உடன்பாடில்லை என்றால், நீங்கள் ஜமாலி போல் கபுர் வணங்கி  ஆக மாட்டீர்கள். அவர் நிலைபாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், நீங்களும் கபுர் வணங்கி  தான்.
இதுவே எனது தெளிவான நிலை.

அதே நேரம், அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பதை சொல்லாமல், இறைநேசரை அழைத்தால் கபுர் வணங்கியா ? என்று என்னிடம் கேள்வி கேட்க கூடாது.
முதலில் ஜமாலியின் கொள்கை குறித்து உங்கள் நிலையை சொல்லுங்கள். அதன் பிறகு, நீங்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கலாம்.

உங்கள் நிலை என்ன என்பதையே அறியாமல் நான் உங்களோடு வாதித்து பயன் இல்லை.


Nashid Ahmed

அஸ்ஸலாமு அலைக்கும்..
குழும உறுப்பினர்கள் மற்றும் இதர cc மற்றும் bcc யில் உள்ள  சகோதரர்களின் கவனத்திற்கு..

புதிய, பழைய குழுமங்கள் வாயிலாகவும், புதிதாக துவங்கப்பட்ட பெயரில்லா புல்லுருவிகள்  மூலமாகவும், என்னையும், தவ்ஹீத் ஜமாத்தையும்  விமர்சித்து பல ஆக்கங்கள் வெளியாகி வருகின்றன.

அவசியமில்லாத வீண் விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்போரும் கூட, எனது கட்டுரைகளும் எழுத்துக்களும் தான் தங்களுக்கு அவசியமில்லாததாக தோன்றுவதாகவும், ஆகவே தங்களுக்கு இனிமேல் எந்த ஆக்கங்களையும் அனுப்பக்கூடாது என்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர்.


இரண்டு செய்திகளை அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் என்னை குறித்தோ, அல்லது தவ்ஹீத் குறித்தோ விமர்சனங்களை, பலருக்கும் cc வைத்து ஒருவர் எனது மெயிலுக்கு அனுப்பினால், அதே cc யுடன் சேர்த்து அவருக்கு என் தரப்பில் இருந்து பதில் மெயில் அனுப்பப்படும். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
இது அல்லாமல், எனது புதிய ஆக்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவை யாருக்கெல்லாம் அவசியமில்லை என்று கருதுகிறீர்களோ,அவர்கள் என்னை தொடர்பு  கொண்டு தங்கள் முகவரியை எனது லிஸ்டில் இருந்து நீக்கி விட கோரலாம். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், எனது cc யிலும் bcc யிலும் இனி இருக்க மாட்டார்கள்.

இரண்டாவது, என்னை குறித்தோ, ஏகத்துவக்கொள்கை  குறித்தோ, தவ்ஹீத் ஜமாஅத் குறித்தோ விமர்சனங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பக்கூடியவர்களுக்கு நான் சொல்லும் செய்தி..

எந்த விஷயத்திற்கு உங்களிடம் ஆதாரம் இல்லையோ, அல்லது நீங்கள் எடுத்து வைக்கும் எந்த விமர்சனம் குறித்து நான் ஆதாரம் கேட்கும் போது அதை உங்களால் தர இயலாதோ, அது போன்ற விமர்சனங்கள் எனது மின்னஞ்சலுக்கு வரக்கூடாது.
நான் ஆதாரம் கேட்டு அதை அடுத்த பதிலில் நீங்கள் தரவில்லை எனில், தொடர்ந்து உங்களுடன் நான் உரையாட மாட்டேன்.
இந்த இழையில் என்னோடு பேசி வரும் நபராகட்டும், வேறு வேறு இழைகளில் அவதூறுக்கட்டுரைகளை  பரப்பி வருபவராகட்டும், அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலே உள்ள இரு விஷயங்களையும் முக்கியமானது எனக்கருதி, இங்கே பதிவு செய்துக்கொள்கிறேன்.


"this is truth " என்று கூறும் சகோதரரின்  கவனத்திற்கு..

நேரமின்மையால் என் கேள்விக்கு பதில் தர இயலாமல் போயிருந்தால் பிரச்சனை இல்லை. அது அல்லாமல், மௌனம் சாதிப்பது, உங்கள் கொள்கையில் உங்களுக்கே உறுதிப்பாடு இல்லை என்ற கருத்தையே தரும். .

நான் இன்னும் வாதங்களுக்குள்ளே கூட செல்லவில்லை.
திருவாளர் ஜமாலி இவ்வாறு ஒரு நிலைபாடை கொண்டிருக்கிறார்.
அவரது நிலைபாடை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா?, என்ற மிக சாதாரண கேள்வி ஒன்றை தான் கேட்டிருக்கிறேன்.

அவசர அவசரமாக, என்னை நோக்கி, "எதற்கும் நீங்கள்  பதில் தரவில்லை, பதில் தர தயாரா?",  என்று  சவால் விட்டு விட்டு, இப்போது, விவாதத்திற்குள்ளே கூட செல்லாமல், ஜமாலி குறித்த உங்கள் அடிப்படை நிலை குறித்து கேள்வி கேட்டால் அதையே நீங்கள் இன்னும் தர மறுப்பதை நான் எவ்வாறு எடுத்துக்கொள்வது?


இதன் பிறகு சம்மந்தப்பட்டவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.