திங்கள், 17 நவம்பர், 2014

குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன ?

குர் ஆனை நபி (சல்) அவர்கள் மறக்கவே மாட்டார்கள் என்று 87:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு குர் ஆனின் பாதுகாப்புக்கு நபி மூலமாகவே அல்லாஹ் உத்திரவாதம் வழங்கி விட்ட பிறகு, நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பினால் குர் ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று அர்த்தமாகும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவது அவர்களது அறியாமையை காட்டுவதாக சிலர் வாதம் புரிகின்றனர்.

உண்மையில் இவர்கள் தான் குர் ஆனில் நுனிப்புல் மேய்ந்து அறியாமையில் திளைக்கிறார்கள்.

குர் ஆனை பாதுகாப்பது என்றால் என்ன என்பதையே இவர்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு மேற்கண்ட இவர்களது வாதம் சான்றாக இருக்கிறது.

குர் ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதனுடைய பொருள், பாதுகாப்பதற்குரிய எல்லா வழிகளையும் திறந்து வைத்து பாதுகாப்பான் என்பதாகும்.

பாதுகாப்புக்கு தடங்கல் ஏற்பபடுதவல்ல எல்லா புறக்காரணங்களையும் அப்புறப்படுத்தி, அதன் மூலம் பாதுகாப்பான் என்பது தான் அதன் அர்த்தம்.

நபிக்கு மறதி ஏற்படாமல் குர் ஆனை பாதுகாப்பது எப்படி அல்லாஹ் தந்த வாக்குறுதியோ அது போல நபிக்கு மறதி ஏற்பட்டு அதன் காரணமாக குர் ஆனில் விடுதல்கள் வந்திருக்கலாமோ? என்று எவரும் நினைக்கும் அளவுக்கு எந்த காரிணிகளும் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வதும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் ஒன்று தான் !

29 ;48 வசனத்தில், "இந்த தூதருக்கு எழுதவோ படிக்கவோ நாம் கற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக்கொடுதிருந்தால், இதை காரணம் காட்டியே இறை மறுப்பாளர்கள் இந்த வேதத்தின் மீது சந்தேகம் கொண்டிருப்பார்கள், என்று அல்லாஹ் சொல்வது, சூனியம் குறித்த இவர்களது அறியாமைக்கு பதிலாக அமைந்துள்ளது.

இது இறை வேதம் தான் என்று அல்லாஹ் பாதுகாக்க எண்ணினால், நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து , அதன் பிறகும் கூட வேதத்தை பாதுகாத்திருக்க முடியும்.

அல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் கூட உள்ளது !!

ஆனால், இது மனித கையாடலாக இருக்குமோ? என்கிற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனமாக இருக்கிறான் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

வேதத்தை பாதுகாக்கவும் செய்ய வேண்டும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடிய எல்லா வாசல்களை அடைக்கவும் செய்ய வேண்டும்.

இது தான் அல்லாஹ்வின் அளவுகோல் !

நபிக்கு குர்ஆன் மறக்காது என்று சொன்னால் மறப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இருக்காது என்று பொருள்.

இன்ன காரணத்தால் மறந்திருப்பார்களோ, இன்ன காரணத்தால் சொல்ல விட்டிருப்பார்களோ என்றெல்லாம் எவருமே எண்ணிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பான் என்று பொருள் !

புரிய வேண்டிய விதத்தில் புரியாததால் தான் இது போன்ற நுனிப்புல் கேள்விகள் !