வியாழன், 11 நவம்பர், 2010

அரபா தினம் தெரிந்தும் மறுப்பது மனமுரண்டில்லையா?


அஸ்ஸலாமு அலைக்கும்..
15 அன்று அரபா தினம் என்பது, அதற்கு அடுத்த தினம் ஹஜ்ஜ் பெருநாள் என்பதும் நம் அனைவருக்குமே தெளிவாக தெரிந்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே 18 அன்று பெருநாள் என அறிவிப்பது மனமுரண்டாக செய்யும் செயலை தவிர வேறு என்ன?



வ அலைக்குமுஸ்ஸலாம்.

வேண்டுமென்றே மனமுரண்டாக நாம் செய்வதால் நமக்கு எந்த நன்மையையும்இல்லை.
நமது செயல்கள் அனைத்திற்குமே நபிகளார் தான் முன்னோடி. அவர்கள்எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று பார்த்து செய்வதால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும். அவர்கள் செய்யாதை ஒன்றை நாம் செய்தால் அது தான்மனமுரண்டு, என்பதை சகோதரர் முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளவும்.
ஹஜ்ஜ் பெருநாளுக்கென்று ஒரு விதமாகவும், நோன்பு பெருநாளுக்கென்று இன்னொரு விதமாகவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிறையை தீர்மானிக்கவில்லை. மாறாக, இரண்டிற்குமே பிறையை பார்க்குமாறு தான் கற்று தந்திருக்கிறார்கள்.
நோன்பு பெருநாள் சமயத்தில், இதை தெளிவாக புரிந்து கொள்ளும் நாம், ஹஜ்ஜ் பெருநாள் என்று வரும்போது மட்டும் தடம் புரண்டு விடுவதை பலரிடம் நாம் காண்பதுண்டு என்பதால், இரு பெருநாட்களிலும் அளவுகோலில் வேறுபாடு இல்லை என்பதை இங்கே முதலில் சுட்டிக்காட்டுகிறேன்.
அதெப்படி? அரபா தினம் அன்று நோன்பு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அரபாவில் ஹாஜிகள் கூடுவதை நாம் நமது கண்ணால் காண்கிறோம். இரந்தும், நோன்பு வைக்க மறுப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்ற சந்தேகம் தவ்ஹீத்வாதிகளிடமே இன்று பரவலாக நிலவுகிறது.

நாம் கவனிக்க தவறிய விஷயம் என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை வெறும் வாயளவில் மட்டும் சொல்லி தந்து விட்டு செல்லவில்லை. மாறாக, அதை செய்தும் காட்டியிருக்கிறார்கள்.
நாம் கேட்பது என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள், பத்து வருடங்கள் மதினாவில் வாழ்ந்து வந்தார்களே, அந்த பத்து வருடங்களில் அவர்களது அரபா தினங்களை, அவர்களது ஹஜ்ஜ் பெருநாட்களை எவ்வாறு தீர்மானித்தார்கள்?

இன்று நாம் இந்தியாவில் இருந்து கொண்டு அரபா தினத்தை அடைவதும், அன்று ரசூல் (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்து அரபா தினத்தை அடைந்ததும் ஒன்று தானே!

இன்று, நாம் இதை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு ரசூல் (ஸல்) அவர்களது மதினா வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் நம்மால் ஆதாரம் பெற முடியாதா?

மதினாவில் இருந்த ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை பார்த்து தான் நோன்பு பெருநாளையும், ஹஜ்ஜ் பெருநாளையும் வைக்க சொன்னார்கள். அது மதினாவிலிருக்கும் பிறை தானே தவிர மக்காவில் அது எந்த பிறை என்று ரசூல் (ஸல்) அவர்கள் பார்க்கவில்லை, பார்க்க சொல்லவில்லை. பார்க்கதாக ஆதாரமும் இல்லை.


அவர்கள் , மதினாவிலிருக்கும் போது , மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்யாத போது, இந்தியாவில் இருக்கும் நாம் மட்டும் மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டுமா?

ரசூல் (ஸல்) அவர்களே இது குறித்து அலட்டிக்கொள்ளாத போது, நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

உண்மையில் மதினாவில் ரசூல் (ஸல்) அவர்கள் இருந்த சமயம், மதினாவில் ஒரு பிறையும் மக்காவில் வேறு பிறையுமாக இருந்திருந்தால் அதை அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டு விட்டான் எனும்போது, ரசூல் (ஸல்) அவர்களுக்கு கிடைக்காத பிறையை நாம் அடைய முயற்சிப்பது ஏன்?


மதினாவிலிருக்கும் ரசூல் மக்காவின் பிறையை அறிய முயற்சிக்கவில்லை என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே மேலே உள்ள விளக்கம் தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீங்கள் எழுதுவீர்கலேன்றால், இது குறித்து மேலும் பல குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு, விளக்கம் தரப்படும், இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக