தாயத்து, தாவிஸ் அணிதல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ர)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்கமாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்றமாட்டான்.
அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர்(ர)
நூல் அஹ்மத் (16763)
இம்ரான் பின் ஹுஸைன்(ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இதை கழற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தைத்தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெறமாட்டாய். என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (19149)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பயிடுதல்
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வயச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பயிடுபவரையும் அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனையும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான். அடையாளக்கல்லை மாற்றுபவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாப்(ர)
நூல் : முஸ்ம் (3657)
நேர்ச்சை செய்தல்
யார் அல்லாஹ்வுக்கு வழிபடும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அவர் (அதனை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடட்டும். யார் அவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ (அவர் அதை நிறைவேற்றி) நிறைவேற்றி அவனுக்கு மாறு செய்யவேண்டாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர)
நூல் : புகாரீ (6696)
வரம்பு மீறிப் புகழ்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்,
அறிவிப்பவர் : உமர் (ர)
நூல் : புகாரீ (3445)
இன்று முஸ்ம்கள் பரவலாக ஓதக்கூடிய சுப்ஹான மவ்து, முகைதீன் மவ்து, புர்தா, சாகுல் ஹமீது மவ்து போன்ற எந்த மவ்தாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய அந்தஸ்திற்கு வரம்பு மீறிப் புகழ்ந்து வரிகள் அதில் நிறைந்துள்ளன.
ஜோசியம் பார்த்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர)
நூல் : அஹ்மத் (9171)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர் ஸஃபிய்யா
நூல் : முஸ்ம் (4137)
பரவலாக முஸ்ம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொற்றுநோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர)
நூல் : புகாரீ (5757)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது(ர)
நூல் : அபூதாவூத் (3411)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ர)
நூல் : அஹ்மத் (6748)
இன்றைக்கு அதிகமான முஸ்ம்கள் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கின்றனர்.
அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கெட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்
சூனியம் செய்தல்
அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 2:102)
சூனியம் என்ற வித்தை மூலம் பார தூரமானக் காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
இருப்பதை இல்லாமல் ஆக்கவோ; இல்லாததை உருவாக்கவோ; ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண் களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)
இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
”இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது (அல்குர்ஆன் 20:66)
இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடிய வில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர் களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
இதிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
நூல் : அஹ்மத் (18748)
அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)
அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ர)
நூல் : புகாரீ (2679)
முகஸ்துதி (பிறருக்கு காட்டுவதற்காக செய்தல்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (22528)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல் : அஹ்மத் (16517)
காலத்தைத் திட்டுதல்
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதில் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ர)
நூல் : புகாரீ (4826)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக