வியாழன், 25 அக்டோபர், 2012

ஜம்மு கசர் - எதிர் வாதங்களும் பதில்களும்




பயணம் என்றால் என்ன?



பயணம் என்று பேச்சு வழக்கிலும் நடைமுறையிலும் நாம் சொல்வது என்பது ஒரு புள்ளியிலிருந்து துவங்கி மீண்டும் அதே புள்ளியை அடைவதாகும்.

உதாரணத்திற்கு A என்கிற இடத்தில நான் இருக்கிறேன் என்றால், அங்கிருந்து புறப்பட்டு B சென்று விட்டால் எனது பயணம் முடிவடைந்து விடாது. மீண்டும் B யில் இருந்து A வந்து சேருகிற வரை அது பயணம் தான். 
அதாவது, A  யில் துவங்கி மீண்டும் A விற்கே வந்தடையும் முழு சுற்று தான் பயணம் என்பது. நடைமுறையிலும் இதை நாம் ஒப்புக்கொள்ள தான் செய்கிறோம் நமது வீட்டில் இருந்து வெளியூர் பயணம் செல்கிறோம் என்றால் அந்த வெளியூரை சென்றடைந்ததும் நமது பயணம் முடிந்து விட்டது என்று யாரும் சொல்ல மாட்டோம், அப்போதும் பயணத்தில் இருக்கிறேன் என்று தான் சொல்வோம்.
எப்போது வெளியூரிலிருந்து மீண்டும் வீடு வந்து சேர்கிறோமோ அப்போது தான் அந்த பயணம் நிறைவு பெறுகிறது.
இந்த அடிப்படையை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.



பயணியாக இருப்பவர் கட்டாயம் ஜம்மு கஸர் செய்ய வேண்டுமா?




அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், சுருக்கி தொழுவது என்பது மார்க்கம் கட்டாயப்படுத்திய காரியமல்ல. அதை சலுகையாக தான் இஸ்லாம் சொல்கிறது. சலுகைகளை பயன்படுத்துவது போல பயன்படுத்தாமலும் இருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக்  அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள பற்சக் என்பது மூன்று மைல்களை குறிக்கும். மூன்று பர்சக்  என்பது ஒன்பது மைல்கள் அல்லது சுமார் 25கிமீ.
அந்த அடிப்படையில், 25 கிமீ அளவிற்கு பயணம் செய்யக்கூடிய ஒருவர் சுருக்கி தொழலாம் என்றாலும் அது கட்டாயமல்ல என்பதற்கு பின்வரும் ஹதீஸ்  உள்ளது.


நான் மதினாவிலிருந்து மக்கா நோக்கி நபி (ஸல்) அவர்களுடன் உம்ரா புறப்பட்டேன். மக்காவை அடைந்ததும், அல்லாஹ்வின் தூதரே எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் காசர் செய்கிறீர்கள், நான் முழுமையாக தொழுகிறேன் நீங்கள் நோன்பு நோர்க்கவில்லை நான் நோன்பு நோர்க்கிறேன்  என்று கேட்ட பொது ஆயிஷாவே சரியாக செய்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னை குறை காணவில்லை .நசாயி 1439


இந்த ஹதீஸின் அடிப்படையில் பயணத்தில் இருந் ஆயிஷா (ரலி அவர்கள் நோன்பு நோற்றும் , தொழுகைகளை முழுமையாக தொழுதும் வந்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆக, பயணியாக இருப்பவர் ஜம்மு கஸர் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். 



எவ்வளவு தூரம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்?


நபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக்  அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116

என்கிற ஹதீஸின் அடிப்படையில், நமது சொந்த ஊரை விட்டு 25கிமீ தூரம் நாம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்.

எனினும், இதிலும் கூட விதிவிலக்குகள் உள்ளன.

லுகர் தொழுகையை தனியாக நான்கு ரக்காதுகள் தொழுது விட்டு அதன் பிறகு பயணம் புறப்பட்டால் அசரை மட்டும் தனியாக கசர் செய்வதற்கும் நபியிடத்தில் ஆதாரம் உள்ளது - பார்க்க புஹாரி 1089

அதாவது, சுருக்கி தொழுவதாக இருந்தால் (கசர்) கட்டாயம் இரண்டு தொழுகைகளை சேர்க்கவும் வேண்டும் (ஜம்மு) என்பது கிடையாது. தனியாக ஒரே ஒரு தொழுகையை கூட சுருக்கி தொழலாம்.


அது போல, இரண்டு தொழுகைகளை   சேர்த்து தொழவும் போதுமான ஆதாரம் உள்ளன. அசர் தொழுகையை லுகர் நேரத்திலும், லுகர் தொழுகையை அசர் நேரத்திலும், அது போல மக்ரிபை இஷாவிலும் இஷாவை மக்ரிப் நேரத்திலும் தொழுவதற்கு  நபி (ஸல்) அவர்களிடத்தில் வழிகாட்டுதல் உள்ளன.
பார்க்க புஹாரி 1111, 1091 முஸ்லிம் 2268, 1142


இன்னும் சொல்லப்போனால் பயணம் செய்யாமல் ஊரிலேயே இருக்கின்ற தருணத்தில் கூட மிக அவசியமான கட்டங்களில் ஜம்மு செய்வதற்கு ஆதாரம் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் லுஹரையும் அசரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள், மக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்.அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை  ஏன் இப்படி செய்தார்கள் என்று நான் இப்னு அப்பாசிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், இந்த சமுதாயத்திற்கு சிரமம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான், என்று பதிலளித்தார்கள். 
முஸ்லிம் 1272

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், பயணம் மேற்க்கொள்ளாமல்  உள்ளூரிலேயே இருக்கின்ற ஒருவர், தமக்கு சிரமம் ஏற்படும் நிலையை தவிர்ப்பதற்காக ஜம்மு செய்து கொள்ளலாம் !



எவ்வளவு நாட்கள் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்?



ஜம்மு கஸர் சட்டத்தை பொறுத்தவரை அதற்கான தூரம் சொல்லப்பட்டு விட்டதை போல அதற்கான கால அளவை மார்க்கம் நிர்ணயிக்கவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் என்று எந்த ஹதீசையும் நம்மால் பார்க்க முடியவில்லை. எத்தனை  நாட்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொள்வது என்பதை அவரவர் தீர்மானிக்கலாம். 
ஹதீஸ்களை தேடிப்பார்தவரை, பயணிக்கான அளவுகோல்களை அறிய முடிகிறது, பயணிக்கான தூரம் என்ன என்பதை அறிய முடிகிறது, ஆனால் அதற்க்கான கால கட்டத்தை அறிய முடியவில்லை என்பது தான் உண்மை.
இதை மறுப்பதற்கு எதிர் கருத்துடையவர்கள் சில ஆதாரங்களையும் வாதங்களையும் வைக்கின்றனர் அவை ஏற்புடையது  தானா என்பதை பார்ப்போம்.

எப்போதெல்லாம் பயணத்தில் இருக்கிறோமோ அப்போது தான் ஜம்மு கஸர் செய்ய வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர் 

இது தவறான வாதம் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்களே விளக்கி விடுகின்றன என்றாலும், பயணம் முடிந்து ஊர் திரும்பாமல் இருப்பது வரையும் கூட ஜம்மு கஸர் செய்யலாம்.

இதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம் 

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் தங்கினார்கள் அந்நாட்களில் கஸர் செய்தார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி). நூல் புஹாரி 1080

மேற்கண்ட ஹதீஸில் கவனிக்க வேண்டிய வாசகம் "தங்கினார்கள்" என்பதாகும். அதாவது, பயணத்தில் இருக்கின்ற அந்த நேரத்தில் மட்டும் தான் ஜம்மு கஸர் சலுகை உண்டு என்று புரிய கூடாது மாறாக, பயணம் முடிந்து வேறொரு ஊரை சென்று அடைந்தாலும் , மீண்டும் சொந்த ஊர் திரும்புகிற வரை கஸர் செய்யலாம். !!
முன்னுரையில் பயணம் என்றால் என்ன என்பதை விளக்கியது இந்த ஹதீசுடன் பொருந்திப்போவதை காணலாம் !

ஆக, பயணம் என்பது பேருந்திலோ ரயிலிலோ விமானத்திலோ பயணம் செய்கிற அந்த நேரத்தை மட்டும் தான் குறிக்கும் என்கிற வாதம் தவறு, அதோடு, அந்த நேரத்தில் தான் ஜம்மு கஸர் செய்யலாம் என்கிற கருத்தும் தவறு !. ஊரிலிருந்து பயணமாகி வேறொரு ஊரை அடைந்து அந்த ஊரில் தங்கி இருந்த போது நபி (ஸல்) அவர்கள் ஜம்மு கஸர் தான் செய்தார்கள் என்பதே இதற்கு போதுமான சான்று !


குறுகிய கால கட்டத்தில் பயணம் மேற்கொண்டால் ஜம்மு கஸர் செய்யலாம், அதிக நாட்கள் தங்கியிருந்தால் ஜம்மு கஸர் செய்ய கூடாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இதுவும் ஆதாரமற்ற வாதமாகும் ! இவர்கள் சொல்கிற ""குறுகிய காலம்", "அதிகமான காலம்" என்பதற்கெல்லாம் என்ன அளவுகோல்?? இவர்களது மனோ இச்சை தான் அளவுகோல் !! ஒருவரது அளவுகோலின் படி இரண்டு நாள் தான் குறுகிய களம் என்பார் இன்னொருவர் ஒரு மாதத்தை குறுகிய காலகட்டம் என்பார்.  ஆக, சுய இச்சைகளை சட்டமாக்க முயலாமல் மார்க்கம் எதை அளவுகோலாக எடுத்துக்கொள்ள சொல்கிறதோ அதை எடுத்துக்கொள்வது தான் ஈமானிற்கு பாதுகாப்பானது. 

பயணம் என்பது எவ்வளவு தூரத்திற்கு என்பதை நிர்ணயித்த மார்க்கம், ஜம்மு கஸர் தொழுகைகளை எப்படி தொழ வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தந்த மார்க்கம், பயணம் என்றால் எது முதல் எது வரை என்பதையும் விளக்கி விட்ட மார்க்கம், எத்தனை நாட்களுக்கு இப்படி செய்யலாம் என்கிற நிர்ணயம் எதையும் செய்யவில்லை என்றால் இதனுடைய பொருள், எத்தனை நாட்கள் ஆனால் பயணம் நிறைவேறுமோ அத்தனை நாட்கள் என்பது தான் !!!
இதை சிந்தித்து புரிய வேண்டிய நிலையில் நாம் தான் இருக்கிறோம். பயணியாக அதிக நாட்கள் நாம் இருப்போமேயானால், நமக்கு சிரமமில்லை என்றால் முழுமையாகவும் தொழலாம், சுருக்கியும் தொழலாம். இரண்டிற்கும் அனுமதி உள்ளது என்பது தான் அணைத்து ஹதீஸ்களையும் உள்ளடக்கி புரிய வேண்டிய சட்டமாக உள்ளது.

உள்ளூர்களில் ஓரிரு நாட்கள் சென்று விட்டு திரும்புவதை பயணம் எனலாம், வெளிநாட்டில் வருடக்கணக்கில் இருப்பதை எப்படி பயணம் என்று சொல்வது? என்கிற கேள்வியை அடுத்து கேட்க்கின்றனர்.
வெளிநாடுகளில் தான்  வீட்டில் உள்ளதை போன்றே சொகுசாக எந்த சிரமமும் இன்றி தானே இருக்கிறோம், அவர்கள் எப்படி ஜம்மு கஸர் செய்யலாம்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுவும் மனோ இச்சையை அடிப்படையாக கொண்ட கேள்வி தான். ஏற்கனவே நாம் விளக்கி விட்டதை போல, நாட்களின் எண்ணிக்கை பயணத்தை முடிவு செய்யாது, அந்த சுற்று முடிவடைந்து விட்டதா இல்லையா என்பது தான் அதை தீர்மானிக்கும் என்கிற வகையில், நமது ஊரையும் வீடு வாசல் குடும்பத்தையும் விட்டு வெளியூரோ வெளிநாடோ சென்று விட்ட ஒருவர், வேலையை எவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு ஊருக்கு திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்கிற நிய்யத்துடன் செல்பவர் என்றால் அந்த நிய்யத் நிறைவேறுகிற வரை அவர் பயணி தான் !! 
இந்த அளவுகோலின் படி நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்று அந்த இரவே திரும்புவராக இருந்தால் அவரும் பயணி தான், அதே நாகர்கோவிலில் இருந்து அபுதாபி சென்று ஒரு வருடம் கழித்து திரும்புபவராக இருந்தால் அவரும் பயணி தான் !

இதை ஏற்றுக்கொள்ள நம் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட, மார்க்க அடிப்படையில் இதை தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை!
இறுதியாக மார்க்க ஆதாரம் தான் முக்கியமே தவிர, நம் மனம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல !

வெளிநாடுகளில் சொகுசாக தானே இருக்கிறோம், நாம் எப்படி கசர் செய்யலாம் என்று கேட்கின்றனர்.


பூமியில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களை தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையை சுருக்கிகொள்வது உங்கள் மீது குற்றமில்லை (4:101) என்று தானே அல்லாஹ் சொல்கிறான், இப்போது அந்த நிலை இல்லையே என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு ஏற்ப்பட்ட வியப்பு எனக்கும் ஏற்ப்பட்டது, எனவே இது பற்றி நபி (ஸல் அவர்களிடம் கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள கொடையாகும்,அந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்கள் 
முஸ்லிம் 1222 

வசதிக்குறைவோ, அச்ச நிலையோ தொழுகையை சுருக்குவதற்கான காரணம் அல்ல !!! எந்த காரணமும் இல்லாமல் இருந்தாலும் பயணிகள் தொழுகையை சுருக்கலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாக உள்ளது !


இது தான் இவர்களது வாதம் என்றால், ஜம்மு கசர் சட்டம் என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே செய்யாது என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். காரணம் சொகுசு என்கிற நிலையில் சிந்திப்போமேயானால் அந்த கால ஒட்டக பயணத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது இன்று சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதும் சொகுசு தான், பேருந்து பயணமும் சொகுசு தான், ரயிலும் சொகுசு தான், விமானமும் சொகுசு தான். அப்படியானால் பயணிக்கான இந்த சலுகை அந்த காலத்திற்கு மட்டும் உரியது இந்த காலத்திற்கு இது பொருந்தாது என்கிற வாதத்தை தான் இவர்கள் வைக்க வேண்டும். ! ஜம்மு கசர் தொழுகை என்பதே இந்த காலத்திற்கு தேவையில்லை என்கிற முடிவை தான் இவர்கள் அறிவிக்க வேண்டும். அதை செய்வார்களா என்றால் மாட்டார்கள். இவர்கள் விரும்பினால் அதை சொகுசு என்பார்களாம், இவர்கள் விரும்பினால் சிரமம் என்பார்களாம்., சொகுசையும் சிரமத்தையும் அவரவர் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மூன்றாம் நபர் தீர்மானிக்க முடியாது என்பதை இவர்கள் புரிய மறுப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது !

இன்னும் சொல்லப்போனால் பயணம் என்பது ஒரு வேதனை எனவும், பயணத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படும் எனவும் ஹதீஸ்கள் இருக்கின்றன என்றால் இவர்களது வாதத்தின் படி இவற்றையும் அந்த காலத்திற்கு மட்டும் உரியது, இப்போது பொருந்தாது என்று கூறி புறக்கணித்து விடலாம். 
காரணம், அந்த காலத்தில் தான் பயணம் என்பது மிகபெரிய வேதனை. நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய பிரயத்தனம். உணவு தட்டுப்பாடு, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத தருணங்கள் எதிரிகளின் அச்சுறுத்தல், தொலை தொடர்பு வசதிகள் இல்லா நிலை என, பயணம் என்பது அந்த காலத்தில் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை !! அந்த நிலையில் தான் மேற்கண்ட ஹதீஸ்கள் இறங்குகின்றன. அந்த நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இன்று நாம் சாதாரண சைக்கிள் அல்லது மாட்டு வண்டியில் பயணம் செய்தால் கூட இது ஒரு சொகுசு பயணம் தான் !!! 
அந்த வகையில், பயணம் என்பது ஒரு வேதனை, பயணிகள் துஆ கேட்டால் அல்லாஹ் செவி சாய்ப்பான் என்கிற ஹதீஸ்கள் எல்லாம் இப்போது பொருந்தாது என்று இவர்கள் அறிவிப்பார்களா?

சரி, அப்படியானால் இந்த ஹதீஸ்கள் இந்த காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது?? அது தான் இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பதற்கு ஆதாரமாய் உள்ளது.
வேதனை என்பது கால கட்டத்திற்கு மாறுகிற ஒரு விஷயம். சஹாபாக்கள் காலத்தில் வேதனை என்று எதை அறிந்திருந்தார்களோ அது அடுத்த தலைமுறைக்கு இருக்காது அதற்கு பகரம் வேறொரு விஷயம் வேதனை என்கிற பொருளில் பார்க்கப்படும் இது யதார்த்தம் ! எல்லா அர்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரு வாசகம் தான் பயணம் ஒரு வேதனை என்பது. இந்த காலத்தில் கூட, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் குடும்பத்தை விட்டு, சொந்த ஊரையும் அங்குள்ள சந்தோஷங்களையும் விட்டு அல்லல் படுகின்றனர். 
இன்னும் சொல்லபோனால் ஒரு கோடீஸ்வரன் கூட, விமானம் ஆறு மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டால் விமான நிலையத்தின் இருக்கைகளில் படுத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும். அது அவரை பொறுத்தவரை வேதனை தான். அந்த நேரத்தில் அவனது உடமைகளையும் பாஸ்ப்போர்ட் போன்ற ஆவணங்களையும் அவன் தான் பாதுகாக்க வேண்டும். அதுவும் ஒரு வேதனை தான்.
இது போன்ற வேதனை பயணம் அல்லாத நேரங்களில் அவனுக்கு இருக்காது. ஆகவே பயணமும் அதிலுள்ள வேதனையும் காலத்திற்கும் வேறுபாடும் என்றாலும் வேதனை என்பது இல்லாமல் போய் விடாது !



பயணம் என்றால் A வில் துவங்கி B யில் கட்டாயம் நிறைவேற வேண்டும் என்கிற சட்டம் இல்லையே.. A வில் துவங்கி B க்கு மட்டும் சென்று மீண்டும் A விற்கு திரும்பவில்லை என்றால் அது பயணம் ஆகாதா? என்றும் சிலர் வாதம் வைக்கிறார்கள் .


பயணம் என்றால் எங்கிருந்து துவங்குகிறோமோ அங்கேயே நிறைவேற வேண்டும் என்பது பொதுவான விதி. பொதுவான விதியை பற்றி பேசுகிற சமயத்தில் அதற்கு விதிவிலக்குகளை சுட்டிக்காட்ட கூடாது என்பது சாதாரண சிந்தனையுள்ளவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஓன்று.

எனது சொந்த ஊராக நான் சென்னையை கருதி எனது குடும்பத்தையும் எனது வாழ்வாதாரத்தையும் அங்கேயே நிலை பெற செய்துள்ளேன் என்றால், வேறு ஏதேனும் தேவைக்காக நான் மதுரை வரை சென்றால், மீண்டும் மதுரையில் இருந்து சென்னை திரும்புவது வரை பயணம் தானே? ஏனெனில், எனது நோக்கவும் சிந்தனையும், சென்னை தான் எனது ஊர் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கும் !
ஏனெனில் எனது குடும்பமும் எனது வாழ்வாதாரமும் சென்னையை மையப்படுத்தி தான் உள்ளது. இதில் எப்போது விதிவிலக்கு வரும்? எனது பிறந்த ஊர் சென்னையாக இருந்தாலும் எனது குடும்பம் சென்னையில் வசித்தாலும், அந்த ஊர் இனி எனக்கு தேவையில்லை, என்று கூறி எனது பூர்வீகத்தையே மதுரைக்கு மாற்றி கொள்கிறேன் என்று சொன்னால் அப்போது அது ஒரு வழி பயணம் தான் !!

சில சகோதரர்களே சொன்னது போல, கன்னியா குமரி பூர்விகமாக இருந்தால் கூட, மும்பைக்கு எனது குடும்பம் சகிதமும், எல்லா தேவைகள் நிமித்தமும் மாற்றம் பெற்று விடுவேன் என்றால் மும்பை தான் எனது சொந்த ஊர். அதை நான், எனது மனது தான் தீர்மானிக்க வேண்டும். 

வேலையில் ஒரு வார விடுப்பு கிடைத்தால் கூட நான் பிறந்த ஊருக்கு செல்ல மாட்டேன் காரணம், பிறந்ததை தவிர வேறெந்த பந்தத்தையும் இப்போது அந்த ஊருடன் நான் வைத்துக்கொள்ளவில்லை. எனது அணைத்து தேவைகளையும் மும்பையிக்கே மாற்றிக்கொண்டேன்,  மன ரீதியாகவும் செயல்பாடுகள் ரீதியாகவும் !!!




சுருக்கமாக, 

  • ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு நாம் வசிக்கும் ஊரை விட்டு வேறொரு ஊருக்கு சென்றால் அந்த நோக்கம் நிறைவேறி நாம் ஊர் திரும்புகிற வரை நாம் உலக வழக்கிலும் பயணி தான். இஸ்லாத்தின் பார்வையிலும்  நாம் பயணி தான். 
  • பயணம் என்பது ஒரு இடத்தில துவங்கி அதே இடத்தில முடிப்பதாகும்.
  • இதற்கு ஆதாரமாக 19 நாட்கள் வெளியூரில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் 19 நாட்களுமே பயணிக்குரிய சட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.
  • அந்த 19 நாட்களும் அவர்கள் பயணம் செய்துக்கொண்டிருக்கவில்லை ஆனால் ""பயணத்தில்"" இருந்தார்கள் !!!
  • ஆக, பயணம் செய்து முடித்தாலும் மீண்டும் ஊர் திரும்புகிற வரை பயணி தான் !
  • அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கும் ஆகவே தான் அப்படி தொழுதிருப்பார்கள் என்று இவர்கள் வாதம் வைத்தால் அந்த வாதமும் ஆதாரமற்ற வாதமாக தான் இருக்கும் காரணம் சிரமமாக இருந்தது என்று ஹதீஸில் இல்லை. 
  • ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டால் கூட, இத்தகைய சலுகை என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது என்று தான் இவர்கள் கூற வேண்டும், காரணம், இன்றைக்கு எதுவுமே சிரமமில்லை !

அல்லாஹ் அறிந்தவன் !





















வெள்ளி, 19 அக்டோபர், 2012

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு ஏற்றதா?




மார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத கிறிஸ்தவ வழிமுறை. அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம் அதன் வழி தோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.
பிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள் அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரிதிருப்பார்கள்.

இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் இரண்டு காரணங்களால் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு. 

ஒன்று , அது ஒரு மூட நம்பிக்கை. நீ இன்று பிறந்ததால் உனக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அறிவுக்கு பொருத்தமான எந்த வாதமும் இல்லை ! அவர் பிறந்து முப்பது வருடங்கள் ஆகியிருக்கும். அவர் பிறந்த அந்த குறிப்பிட்ட நாளில் வாழ்த்து சொன்னால் தான் அதில் அர்த்தம் இருக்கிறதே தவிர, இதன் பிறகு இந்த தேதி இதற்கு பிறகு இந்த மாதம் என்று நாமே ஒரு காலண்டரை அமைத்து வைத்துக்கொண்டு, இதோ நீ பிறந்த தேதி மீண்டும் வந்து விட்டது, ஆகவே உனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஒரு மூட நம்பிக்கை அல்லாமல் வேறென்ன??

தேதியும் மாதமும் ஒத்து போய் இருப்பதால் வாழ்த்து சொல்கிறோம் என்று சொல்பவர்கள் வருடம் ஒத்து போகவில்லை என்பதை சிந்திக்கவில்லை ! 
வருடம் ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தேதியும் மாதமும் ஒத்து போய் விட்டதல்லவா, ஆகவே கொண்டாடலாம் என்று சொல்பவர்கள், வருடத்தை விட்டு விட்டு மாதத்தையும் தேதியையும் வைத்து பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்,  மாதத்தை விட்டு விட்டு, ஒவ்வொரு மாதமும் ஒத்துப்போக கூடிய  தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவார்களா? அல்லது, தேதியும் மாதமும் ஒத்து போக வேண்டும் என்பது போல பிறந்த கிழமையும் ஒத்து போக வேண்டும் என்பதற்காக வாரா வாரம் கொண்டாடுவார்களா?
இதிலெல்லாம் அறிவுடன் செயல்படுவார்களாம்  !, இப்படி கொண்டாடுவதெல்லாம் மூட நம்பிக்கையாம் !!!! என்னே இவர்களது அறிவு.


பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்பதற்கான அடுத்த காரணம், அது ஒரு போலி கொண்டாட்டம். வாழ்த்துக்கள் என்றோ happy birthday என்றோ சொல்வதில் யாருமே உண்மையாக இருக்கவில்லை. 
காரணம், ஒரு குழந்தை பிறந்த அந்த ஒரு நாள் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியே தவிர, அதன் பிறகு வரக்கூடிய எந்த பிறந்த நாளும் சம்மந்தப்பட்டவனுக்கு மகிழ்ச்சியை தராது என்பது தான் யதார்த்தம் ! 
நாற்ப்பது வயதில் இருந்து நாற்ப்பது ஒன்றாவது பிறந்த நாளை ஒருவன் அடைகிறான் என்றால் ஒரு வயது அவனுக்கு அதிகமாகியுள்ளது என்று பொருள். 
வயது அதிகமாவதை எந்த மனிதனும் கவலையோடு தான் எதிர் கொள்வானே தவிர, வயது அதிகரிப்பது உலகில் எந்த மனிதனுக்கும் ஆனந்தத்தை தராது. மேலும், ஒரு வருடம் அதிகமாகியுள்ளது என்றால் மரணம் இன்னும் அருகில் வந்து விட்டது என்கிற சாதாரண உண்மையும் இதில் அடங்கி உள்ளது. உலகில் வாழக்கூடிய எவருமே மரணத்தை விரும்புபவர்களும் அல்லர் !
ஆக, எந்த வகையிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றேயல்ல !!
சிந்திக்கிற அறிவு பெறாத மிருகங்கள் இது போன்ற மூட நம்பிக்கையில் இல்லை, சிந்திக்கிற அறிவு பெற்ற மனிதன் மூட நம்பிக்கையில் இருக்கிறான் !!






இன்றைய தவ்ஹீத்வாதியை பற்றி நபி


இன்றைய தவ்ஹீத்வாதிகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றே உரைத்துள்ளார்கள் . மாஷா அல்லாஹ், கச்சிதமான பொருத்தம் !!


அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (உண்மை)இஸ்லாம் (ஆரம்பத்தில்) புதுமையாக தான் அனைவருக்கும் தோன்றியது. இவ்வாறு துவங்கியது போலவே (பிற்காலத்திலும் உண்மை) இஸ்லாம் மீண்டும் மக்களுக்கு புதிதாக வரும். அப்போது (இஸ்லாத்தை சொல்கிற) அந்த புதுமைவாதிகளுக்கு நற்செய்தி சொல்லுங்கள் !
அறிவிப்பவர் - அபு (ஹுரைரா ரலி)
நூல் - முஸ்லிம் 408 



அல்ஹம்துலில்லாஹ் !!!!!!!!!


கமாலுதீன் மதனியிடம் நடித்தது சரியா?



களியக்காவிளை விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேசுவதற்கு குறிப்பு தாருங்கள் என்று ஜாக்கின் கமாலுதீன் மதனியிடம் சுன்னத்(?) ஜமாத்தினரை போல் பொய்யாக பேசி நடித்தது மார்க்க அடிப்படையில் சரியா? என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.


அல்லாஹ்வின் தூதர் தம்முடன் உபை பின் கப் (ரலி அவர்கள் வர, இப்னு சய்யாதை நோக்கி நடந்தார்கள் இப்னு சய்யாத், பேரீச்சம் மாற தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவனை கண்ட பிறகு, (தான் வருவது அவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக) பேரீச்சம் மரத்தின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். அவன் ஏதோ போர்வையை போர்த்திக்கொண்டு வாயில் எதையோ முணுமுணு த்தவாறு  படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவனுடன் இருந்த அவனது தாய் நபி (ஸல்) அவர்களை கண்டு கொண்டார். உடனே இப்னு சய்யாதை நோக்கி "இதோ முஹமமத்" என்றாள் . உடனே படுத்திருந்த இப்னு சய்யாத் குதித்தெழுந்து விட்டான்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நான் வருவதை தெரிவிக்காமல் அவனை அப்படியே அவள் விட்டிருந்தால் உண்மைகளை வெளிப்படையாக அவன் பேசியிருப்பான் என்று கூறினார்கள் 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி 3033


மேற்கண்ட ஹதீஸ், ஒரு நபரை பற்றியோ ஒற்று குழுவை பற்றியோ உண்மையான செய்தியை அறிந்து கொள்ள உளவாக மறைந்திருந்து செயல்படலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் காபிர்களிடம் உண்மையை அறிவதற்காக தாமும் இஸ்லாத்தின் எதிரி போல காட்டிக்கொள்ளலாமா? என்று ஒரு சஹாபி அனுமதி கேட்ட பொது நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள் என்று புஹாரி 4037 ஹதீஸில் ஆதாரம் உள்ளது 

இந்த அடிப்படையில் எதிரிகளை வீழ்த்துவதற்காக மற்றும் அவர்களிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக மறைந்து செயல்பட நபி (ஸல்) அவர்களிடத்தில் முன் மாதிரி உள்ளது.


ஜாக் இயக்கம் செய்தது ஏகத்துவத்திற்கு எதிரான ஒரு காரியம். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான காரியங்களை  செய்துள்ள இவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர, தாங்கள் சுன்னத் (?) ஜமாத்தினர் தான் என்று சொல்லி நடித்ததில் எந்த தவறுமில்லை ! அது தான் நபி வழி !!!!!






ஜும்மா உரைக்கு மிம்பர் கட்டாயமா?



ஜும்மா  உரையின் போது மிம்பர் கட்டாயமில்லை. 

நபி (ஸல்) அவர்கள் ஜும்மா உரையின் போது ஒரு பேரீச்சம் மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரி பெண்மணி "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) அமைந்து தரலாமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் செய்து தாருங்கள்." என்று பதிலளித்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு அந்த பெண்மணி மிம்பர் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.
புஹாரி 3584


மேற்கண்ட ஹதீஸின் மூலம், ஜும்மாவின் போது மிம்பர் என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒரு காரியமல்ல , அது ஒரு கூடுதல் வசதிக்காக செய்து கொண்டது தான் என்பதை அறியலாம்.

மேலும், இன்று நாம் எதை மிம்பர் என்று விளங்கி வைத்துள்ளோமோ, எதை பயன்படுத்துகிறோமோ, அது போன்ற மிம்பரை நபி அவர்கள் பயன்படுத்தவில்லை. நபி அவர்கள் தொழுகை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு செயல் முறை பயிற்சி கொடுத்தது மிம்பரில் நின்று தொழுது காட்டி தான். இதற்கு வேறு ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

இன்று நாம் பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது.
ஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம். 
உயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றல் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா  உரை நிகழ்த்தலாம் !!




வியாழன், 18 அக்டோபர், 2012

மார்க்கத்தில் ஹலால் - ஹராம்





மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்று சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள்
  • உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா, அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது. இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.

உதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும். அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது. அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதன் ஏழாம் பிறை அன்று நான்கு ரக்கத்துகள் கூடுதலாக தொழ வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவரிடம், இதை அனுமதிக்கும் சட்டம் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு தடை எதுவும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க கூடாது. காரணம், ரஜப் மாதம் ஏழாம் நாள் தொழ கூடாது என்று எந்த ஹதீசும் இருக்காது ! தொழ வேண்டும் என்றால் தொழுங்கள் என்று இருக்கும். தொழ கூடாது என்றால் எதுவுமே சொல்லப்பட்டிருக்காது. எதுவுமே சொல்லப்படவில்லை என்றால் அதை மார்க்கம் என்கிற பெயரில் செய்ய கூடாது என்பது பொருள்.
மார்க்க விஷயங்களை மேலே உள்ளது போல புரியாமல் நேர் முரணாக புரிவதால்  இன்று நம் சமூகத்தில் பல பித்அத்கள் புகுந்துள்ளன. மார்க்கம் என்கிற பெயரில் எதையாவது செய்ய வேண்டியது, கேட்டால்  இப்படி செய்யக்கூடாது என்று இஸ்லாம் தடுத்துள்ளதா என்று கேட்க வேண்டியது. இது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம் !


அதே போல, உலக விஷயங்களை பொறுத்தவரை அப்படியே மாற்றி சிந்திக்க வேண்டும்.
அதாவது, ஒன்று கூடுமா கூடாதா என்பதை தீர்மானிக்க குர் ஆன் ஹதீஸில் அனுமதி இருக்கிறதா என்று தேடாமல், இதற்கு தடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்

உதாரணமாக விமானத்தில் பயணம் செய்யலாமா, மார்க்க அடிப்படையில் விளக்கவும், என்று ஒருவர் கேள்வி கேட்டால், விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று அனுமதியளிக்கிற வகையில் குர் ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்க கூடாது, 
மாறாக, விமானத்தில் பயணம் செய்வது ஹராம் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று மட்டும் தேட வேண்டும். எங்குமே ஹராம் என்று சொல்லப்படவில்லை என்றால் விமானத்தில் பறக்கலாம், தவறில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

இது தான் மார்க்கத்தின் ஹராம் ஹலால்களை அளக்கும் முறை !

இது படிப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதை கூட சரியாக புரியாத பல சகோதரர்கள் இருக்கின்றனர். பித் அத்கள் களையப்பட வேண்டுமானால் இந்த அடிப்படையை மனதில் உறுதியாக்கி கொள்ள வேண்டும் !!
அல்லாஹ் அருள் செய்யட்டும் !!!








வெள்ளி, 12 அக்டோபர், 2012

சஹாபியின் அறிவுரையையாவது கேளுங்கள்




அஸ்ஸலாமு அலைக்கும்..

மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.

சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது.

இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)

இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.

ஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.
அதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள்? என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.
இவர்களது இந்த மௌனம், ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்களை சிறந்தவாரகவும் மேலானவராகவும் இவர்கள் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி விடுகிறது. 

இவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்! ) பதில் கூறியிருக்கிறார். 

இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது!

தமத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம்கேட்டார். "அது அனுமதிக்கப்பட்டது தான்", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்பதில் தருகிறார்கள். 
அதற்கு அந்த சஹாபி, "உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே?", என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், ""என் தந்தை ஒன்றைதடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால்எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்)அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல்"",என்றார்கள் .
அதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர்அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள். (திர்மிதி 753 )




சனி, 6 அக்டோபர், 2012

மூளை வரண்டது யாருக்கு??






அஸ்ஸலாமு அலைக்கும்..

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.. இது பற்றி சகோ. பிஜே எழுதிய ஆக்கம் ஒன்றுக்கு (பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/) பிஜேவிற்கு மூளை வரண்டது என்கிற தலைப்பில் 
மறுப்பு ஆக்கம் ஒன்றை தயார் செய்து பரப்பியது இந்த குழப்பவாதி கூட்டத்தினர். 

கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது  கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

என்று துவங்கியுள்ளனர். . ஹிஜ்ரா கமிற்றியினர் தன்னை போன்று தான் இருப்பார்கள் என்று சகோ. பிஜே மட்டுமல்ல, மானமுள்ள எந்த மனிதனும் நினைக்க மாட்டான். ஆறறிவு படைத்த, வெட்கமும் மானமும் சிறிதேனும் பெற்றுள்ள எவருமே ஹிஜ்ரா கமிட்டியை போல தான் தானும் இருக்கிறோம் என்றோ தன்னை போலதான் ஹிஜ்ரா கமிற்றியினர் இருக்கிறார்கள் என்றோ கனவிலும் எண்ண மாட்டான். அது தமக்கு அசிங்கம் என்பதை அனைவருமே அறிந்து தான் வைத்துள்ளனர்.

இந்த ஹிஜ்ரா கமிற்றி விவாத பூச்சாண்டி காட்டி, எதிர் பாரா விதமாக தங்கள் விவாத அழைப்பை பிஜே ஏற்றுக்கொண்ட உடன் செய்வதறியாது திகைத்தும்,அதற்கு முன், நேரடி விவாதம், நேரடி விவாதம், இதோ வந்து விட்டோம், பிஜே பதில் சொல்வது ஒன்று தான்   பாக்கி என்கிற அளவிற்கு பீலா விட்டவர்கள், பிஜே விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு, எழுத்து விவாதத்திற்கு தான் அழைத்தோம், நீங்கள் ஒரு ஆறு மாத காலம் எழுதிக்கொண்டே இருங்கள், நாங்கள் ஒரு ஆறு மதம் நான்கைந்து நூற்களை வெளியிடுகிறோம், அதற்கு மறுப்பு நூல், இதற்கு மறுப்பு நூல் என்று எழுதி தள்ளுவோம், இறுதியில் யார் சொல்வது சரி என்பதை மக்கள் புரிவார்கள் என்கிற உலக மகா அறிவார்ந்த சித்தாந்தத்தை முன் வைத்தார்கள். இவர்களது அறிவு திறனையும் கூர்மையான சிந்தனையையும் கண்டு அப்போதே இங்குள்ள பல சகோதரர்கள் வியந்து பாராட்டினர். நோபல் பரிசுக்கு ஏன் இன்னும் இவர்களை பரிந்துரைக்கவில்லை என்று பலரும் கேட்கிற அளவிற்கு இந்த அந்தர் பல்டியின் மூலம் இவர்களது புகழ் தெரு முனைகளிலும் எதிரொலித்தது.

கடந்த காலங்கள் பலருக்கும் மறந்திருக்கும் என்பதால், இவர்களை பற்றியும், இவர்கள் அடித்துள்ள அந்தர் பல்டிகளை பற்றியும், நோபல் பரிசுக்கு இவர்களை பரிந்துரைக்கும் அளவிற்கு இவர்கள் செய்த அறிவார்ந்த சாதனைகளை பற்றியும் கீழே உள்ள சுட்டிகளில் நினைவூட்டுகிறோம். ஒவ்வொரு ஆக்கமாக படித்து, இவர்களிடம் விவாதம் என்றில்லை, சாதாரணமாக பேசுவதற்காவது இவர்கள் தகுதி படைத்தவர்கள் தானா? என்பதை சிந்தியுங்கள்.

ஹிஜ்ரா கமிட்டியின் அந்தர் பல்டி 

பிஜேயுடன் நேரடி விவாதம் செய்ய போகிறோம் என்று கூறி நம்முடனான எழுத்து விவாதத்தை தொடராமல் தப்பி ஓடி விட்டு இறுதியில் பிஜெயுடனும் நேரடி விவாதம் செய்யாமல் அங்கேயும் நழுவி ஓடிய ஹிஜ்ர கமிட்டியினரின் மெய் சிலிர்க்கும் சாகசங்களை நாள், தேதி, ஆதாரத்துடன் காண.. 






விவாதத்தை கண்டு அரண்டு போய் இருந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்த்தீர்களா என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் விட்ட பீலாவை பற்றி அறிய கீழே விழுந்தாலும் மீசையில்...

எழுத்து விவாத சவடாலும் நாறி போய் விட்ட நிலையில், சில உப்பு சப்பில்லாத கேள்விகளை நோட்டீஸ் என்கிற பெயரில் இவர்கள் ஊர் ஊராக பரப்பதுவங்கினர்.
நம் தரப்பில் அதற்கும் தெளிவான மறுப்புகள் தரப்பட்டன .. அதை காண 


முன்னர் நம்முடன் இவர்கள் பிறை விஷயத்தில் செய்த விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த கேள்விகள் இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்கள் என்கிற பட்டியலை ஏற்கனவே தொகுத்து வைத்திருந்தோம்.
அதை காண 




நாம் முன்வைத்த பிறை குறித்த ஆதாரங்களை காண பிறை : ஒன்பது ஆதாரங்கள்

பிறை குறித்த இவர்களது வாதங்கள் எந்த அளவிற்கு கூறு கெட்டத்தனமாகவும் சிந்தனை மழுங்கலாகவும் உள்ளன என்பதையும் பற்றி விரிவாக அறிய 



ஹிஜ்ரா கமிட்டி என்கிற அதிமேதாவி கூட்டம் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டதை  பற்றி அறிய 





எழுத்து விவாதத்தின் போது இவர்கள் முழுக்க முழுக்க பொய்களை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்கான காண  பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

எவ்வளவு தான் முரண்பட்டு பேசினாலும், எத்தனை கேள்விகளுக்கு தான் பதில் சொல்லாமல் நழுவினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்ய அழைக்கிற போது குட்டு வெளிப்பட தான் செய்யும். அதற்கு சான்றுகளை காண..


இவரை அறிந்து கொள்ளுங்கள்

சரி, அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, விவாதம் என்றாலே அது முகத்தோடு முகம் காணும் நேரடி விவாதம் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள் என்றிருக்கும் போது, இந்த ஹிஜ்ரா கமிட்டே மட்டும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களே என்று அதற்க்கான காரணத்தை சிந்திக்கையில் சில உண்மை காரணங்கள் கிடைக்க துவங்கின..

இதை படிக்கவும்.. ஏர்வாடி சிராஜும் எழுத்து விவாதமும்

ஆக, உண்மைக்கும் இவர்களுக்கும் வெகு தொலைவு என்பதை கடுகளவு சந்தேகமும் எவர் மனதிலும் எழாத வண்ணம் மேலே உள்ள ஆக்கங்கள் உறுதி செய்கிறது.

இப்படி பட்ட அதிமேதாவிகள் தான் சகோ. பிஜேவை மீண்டும் எழுத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களாம். வெட்கம் என்பது சிறிதளவாவது இருந்தால் இவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கொஞ்ச நஞ்சமும் சிந்திக்க வேண்டும்.

சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட  இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள்வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும்தனது கோரசிந்தனையின்  உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும்  முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். 
என்று சொல்கின்றனர். அடுக்கு மொழியில் எதையாவது சொன்னால் கை தட்டி விசில் அடிப்பதற்கு பொது மக்கள் இவர்களை போல கூத்தாடிகள் அல்ல.
எதை சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை இவர்களிடம் எதிர் பார்க்க கூடாதது தான்!


அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி  இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. 

இன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்,  நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும்,  குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபுபேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லைசுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லைஅவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான்அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம்(குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான்என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. 
தஹஜ்ஜத் வேளையில் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்பதை தவிர வேறு பொருள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவான ஒன்று. அது போல, "நிச்சயமாக" என்கிற வாசகம் அரபு பேச்சு வழக்கு தான். சகோ. பிஜே மொழியாக்கம் செய்ததில் நிச்சயமாக என்பதை விட்டு விட்டதை போல எல்லா மொழிப்பெயர்ப்பாளர்களும் பல வசனங்களில் நிச்சயமாக என்பதற்கு மொழியாக்கம் செய்யவில்லை. பிஜேவை பற்றி மட்டும் பேசுகிறவர் திராணி உள்ளவராக இருந்தால் அனைத்துமே தவறு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? 
சொர்க்கம் அழிந்து விடும் என்பதையோ, தாவூது நபி பற்றியோ எதை சொல்வதாக இருந்தாலும் அப்படி இல்லை என்பதை ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். ஆதாரத்திற்கும் இவர்களுக்கும் இடையில் தான் ஏணி வைக்க வேண்டுமே.. அப்போதும் எட்டுமா என்பது சந்தேகமே !!

விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் 

சாதாரண பாமரர்களுடன் எழுத்து விவாதம் செய்வதற்குள் விழி பிதுங்கி ஓட்டம் எடுத்த வெட்கமில்லா கூட்டம், தவ்ஹீத் ஆலிம்களுடன் விவாதித்து வெற்றி பெற்றார்கள் என்று வெட்கமே இல்லாமல் அறிவிப்பு செய்கின்றனர். தமக்கு கேவலத்தை தந்த விவாதத்தையும் ஒருவர் மறைக்கலாம், என்பது போல, எந்த உப்பு சப்பும் அற்ற , உளறல்களையே வாதங்களாக வைத்திருந்த ஒருவரருடன் செய்த விவாதத்தை அதன் காரணமாகவும் மறைக்கலாம். இரண்டில் எது என்பது விபரமுள்ளவர்களுக்கு தெரியும்.

மேலும், 2000  ஆம் ஆண்டில் நடந்த விவாதத்தின் போது இவர்கள் பிஜேவிடம் ஜெயித்தார்களாம். வேடிக்கை என்ன தெரியுமா? அன்றைக்கு இவர்கள் இருந்த கொள்கை பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற கொள்கையில்.
இப்போதோ அது தவறு , கணிக்க தான் வேண்டும் என்று தாவிக்கொண்டவர்கள் !!.
அதாவது, இன்றைய நிலையில் இவர்களது பார்வையில் பிறையை கண்ணால் காண்பது தவறு !
ஆனால் அந்த தவறான வாதத்தை விவாதத்தின் போது எடுத்து வைத்து பிஜேவிடம் ஜெயித்து விட்டார்களாம். எப்படி வேடிக்கை !! ஆக, இவர்களது கொள்கை என்பது பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதல்ல, பிஜேவை வெற்றி கொண்டோமா இல்லையா என்பது தான்.

பிஜே எங்களிடம் தோற்றார் என்று சொல்ல வேண்டுமா? தர்க்க போவது தான் சரி என்று நாங்கள் பேசினோம், கூடாது என்று பிஜே பேசி எங்களுடன் தோற்று விட்டார் என்று கூட பேசுவார்கள் போலும். அட வெட்கமில்லாதவர்களே !!!! இப்படியுமா ஒரு அற்ப சந்தோஷம்?
அந்த விவாதம் ஆரம்ப கால தவ்ஹீத் அகோதரர்கள் அனைவருக்கும் இன்னமும் நினைவிலுள்ள ஒன்று. விஞ்ஞான கணிப்பின் பக்கமும் உலகப்பிறை என்கிற தவறான சித்தாந்தத்தின் பக்கமும் செல்லவிருந்த பெருவாரியான மக்களை தடுத்தி நிறுத்திய விவாதம் அது ! சிந்திப்பவர்கள் இதை புரிந்தே தான் உள்ளார்கள் !!


அல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களைவேதங்களை,ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை

அல்லாஹ்வுக்கு பலகீனம் உண்டு என்று பிஜே சொன்னதாக மறைமுகமாக சொல்கின்றனர். பிஜே உண்மையில் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? அவர் பேசிய வாசகம் என்ன? என்பதை ஆதாரத்துடன் தருமாறு கேட்டால் தருவதற்கு முதுகெலும்பு இருக்குமா இவர்களுக்கு? சிறு பிள்ளையும் சொல்லும், இருக்காது என்று !
மேலும், ஜகாத் குறித்த விவாதத்தில்  இவர்களது இயக்க தலைவர்கள் பம்மிக்கொண்டு மேடையில் ஒளிந்துக்கொண்டிருக்க, யாரென்றே அறியப்படாத ஒரு அப்பாவியை விவாதிக்குமாறு மேடையேற்றி இவர்கள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.

இப்போது இங்குள்ள விஷயம், நாளின் துவக்கம் பஜர் தான் என்று பிஜே சொல்லி விட்டாராம். அட என்ன ஆச்சர்யம், பிஜே ஒப்புக்கொண்டு விட்டாரா? இவர்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பிஜே ஏற்றுக்கொண்டு விட்டாரா? பரவாயில்லையே..
என்று நாமும் எட்டிப்பார்த்தால், 
லுகர், அசர், மக்ரிப், இஷா என்று சொல்லி விட்டு மறுநாள் பஜர் என்று பிஜே சொல்லி விட்டாராம்.

இது தான் பிஜே இவர்களது உலக மகா கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டதற்கு இவர்கள் காட்டும் மேதாவித்தனமான ஆதாரம்.

அட ஞான சூனியங்களே..
கூறு கெட்டவர்கள் இப்படி சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக, ""மறுநாள்"" என்பதை பிஜேவே மாற்றியும் விட்டார். ஒரு இரவை கடந்து பகல் வரும் போது அதை மறுநாள் என்று சொல்லும் வழமை நம்மிடம் உள்ளது. அந்த வழமைக்கு ஏற்ற வகையில் பிஜே சொன்னது தான் மறுநாள் பஜர் என்பதே தவிர, ஹதீஸில் மறுநாள் பஜர் என்று இல்லை.

ஆனால், நாளின் துவக்கம் பஜர் இல்லை, அது மக்ரிப் தான் என்பதற்கு பிஜே அடுக்கடுக்காக பல சான்றுகளை தந்திருந்தாரே, பதில் என்று சொல்வதாக இருந்தால் அவற்றுக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இதை பார்க்கவும்.  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/361/
இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/nalin_armbam_ethu/
இதையும் பார்க்கவும் http://nashidahmed.blogspot.com/2012/08/blog-post_9.html

இவைகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா இந்த மேதாவிக்கூட்டத்திடம்? இல்லை !!

ஆக, ஆதாரங்கள் எங்கெல்லாம் காட்டப்படுகிறதோ, அதன் பக்கம் தலை வைத்து கூட படுக்க துணியாதவர்கள், பேசும் போதும் எழுதும் போதும் ஏதாவது தவறுதலாக சொல்லப்படுமே அதை மட்டும் பற்றிப்பிடித்து , ஹே ! பார்த்தியா நீயும் ஒதுக்கிட்டே.. என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறது !

மறுநாள் பஜர் என்று பிஜே சொன்னது நடைமுறையில் இரவுக்கு பின் வரக்கூடிய விடியலை மறுநாள் என்று சொல்வது தான் வழக்கம் என்பதால் தான். இதை வைத்து ஒரு குழப்பம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதால் அந்த வாசகமும் கூட தற்போது நீக்கப்பட்டு விட்டது.
மறுநாள் என்பது ஹதீஸில் இல்லாத வாசகம் தான் என்பதால் அதை நீக்குவது தான் சரியும் கூட.

ஆக, இவை அனைத்துமே இவர்களது சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்கு உதவும் என்பதை தவிர, இது போன்றவைகள் இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்துவதற்கோ இவர்களை அறிவாளிகளாக காட்டுவதற்கோ என்றைக்கும் உதவாது !

சமுதாயம் இது போன்ற கூறு கெட்ட கூட்டத்தாரை அறிந்து வைத்து, இவர்களது வாடை கூட அடிக்கா வண்ணம் நம்மையும் நம் சுற்றத்தையும் காக்க வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக..

வஸ்ஸலாம்.