தமிழகம் முழுவதும் ஒரே பெருநாள் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததற்குஎன்ன ஆதாரம்? தமிழகம் என்ற எல்லையை எந்த ஹதீஸின் அடிப்படையில்வகு த்தீர்கள்?
ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறை தகவலை கொண்டு தமிழகம் முழுவதும் பின்பற்றுவதற்கு என்ன ஹதீஸ் ஆதாரம் என்று கேட்கிறீர்கள்.
கேள்வி கேட்கும் போது, நான் முன்பே சொன்னது போல், அதே கேள்வியை உங்களிடமும் நான் திருப்பி கேட்பேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லும் இடத்தில் இருந்து கொண்டு அந்த கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது என்பதால்.
ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறை தகவலை வைத்து ஒரு மாவட்டம் அல்லது ஒரு சிறு ஊர் முழுவதும் பின்பற்றலாமா? ரியாத்தில் பிறை பார்க்கப்பட்டால் ஜித்தாவில் பின்பற்றலாமா?
உங்கள் பதில் ஆம், என்பது தான்.
இதற்கு என்ன ஹதீஸ் ஆதாரம்? நீங்களும் ஒப்புக்கொள்ள கூடிய, மாவட்டம் முழுமைக்கும் பின்பற்றலாம் என்று நம்பக்கூடிய ஒன்றை எந்த ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் செய்து வருகிறீர்களோ, அதே ஹதீஸ் ஆதாரம் தமிழகம் முழுவதும் பின்பற்றுவதற்கும் பொருந்தும்.
நீங்களே ஒன்றை பின்பற்றி செய்து கொண்டிருக்கும் போது, அது குறித்து என்னிடம் ஹதீஸ் ஆதாரம் கேட்க தேவையில்லை.
அந்த எல்லையை எவ்வாறு வகுத்தீர்கள் ,என்று நீங்கள் அடுத்து கேட்ப்பீர்கள்..
ஜித்தா முழுவதும் பின்பற்றலாம் என்று ஜித்தாவை ஒரு எல்லையாக எவ்வாறு வகுதீர்கள்? அதை எவ்வாறு வகுதீர்களோ, அதே போல் தமிழகம் என்ற எல்லையை நான் வகுக்கிறேன்.
மற்றொருவர் உலகம் முழுவதையும் ஒரு எல்லையாக வகுப்பாரே, அதை மட்டும் ஏன் தவறு என்று சொல்கிறீர்கள்? என்று நீங்கள் திருப்பி கேட்டால்,
அதே கேள்வியை உங்களிடமும் நான் திருப்பி கேட்ப்பேன்.
உங்கள் கொள்கைப்படி, ரியாத்தில் பார்த்தல் ஜித்தாவில் பின்பற்றலாம், ஆனால் தமிழகத்தில் பின்பற்றக்கூடாது.
ஏன்? அந்த எல்லையை ஜித்தாவோடு நிறுத்திக்கொண்டீர்கள்? தமிழகம் வரை இழுக்கலாமே, உலகம் முழுவதும் கொண்டு வரலாமே?
இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்களோ, அதுவே என்னை நோக்கி உங்களுக்கு எழும் கேள்விக்கும் பதிலாக அமையும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக