புதன், 3 நவம்பர், 2010

தூங்கும் ஒழுங்குகள்



1. ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள்

1. நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல் ஹீவல்லாஹீ அஹது, குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உட­ல் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள்.பிறகு தமது உட­ன் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள்.இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் .
அறிவிப்பவர் ஆயிஷா (ர­) நூல் புகாரி (5017)

( 2 ) தஸ்பீஹ் செய்தல்

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது அல்லாஹீ அக்பர் அல்லாஹீ மிகப் பெரியவன் என்று முப்பத்து நான்கு முறையும் அல்ஹமது ­ல்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே என்று முப்பத்து மூன்று முறையும் சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத் தூய்மையானவன் என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள் ,
அறிவிப்பவர் ( அ­ ) நூல் புகாரி ( 3113 )

( 3 ) வலது புறமாக கன்னத்தில் கை வைத்துப் படுத்து பின் வரும் சூராக்களை ஓத வேண்டும்

நபி ( ஸல் ) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக் கீழே வைத்து அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் ஹீதைஃபா ( ர­ ) நூல் திர்மிதி ( 6314 )
பொருள்:
அல்லாஹ்வே உன்னுடைய பெயரைக் கொண்டே நான் மரணிக்கச் செய்கிறேன் உயிர் பெறவும் செய்கிறேன்
.
(4) ஒழு செய்ய வேண்டும்
பர்ரா பின் ஆஸிப் ( ர­ ) அறிவிக்கிறார்கள்
நபி ( ஸல் ) அவர்கள் எனக்குக் கூறினார்கள் நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள் . பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள் .



மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து நாம் பெற வேண்டிய விஷயங்கள்

( 1 ) தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள் .
1 . சூரத்துல் இஹ்லாஸ் 2 . சூரத்துல் ஃபலக் 3 . சூரத்துன் னாஸ் 4 . ஆயத்துல் குர்ஸீ 5 . அல்பகராவின் இறுதி இருவசனங்கள்
( 2 ) முதல் மூன்று சூராக்களை ஓத வேண்டிய முறையைத் தெரிந்த கொள்ள வேண்டும் .
( 3 ) அல்லாஹீ அக்பர் அல்ஹம்து ­ல்லாஹ் சுப்ஹானல்லாஹ் என்ற தஸ்பீஹாத்துகளை முறையே 34 33 33 தடவைகள் கூறவேண்டும் .
( 4 ) படுக்க ஆரம்பிக்கும் பொழுது வலது புறமாக கன்னத்தில் கைவைத்து தூங்க வேண்டும் .
பிறகு நமக்கு தோதுவான முறைப்படி தூங்கிக் கொள்ளலாம் .
( 5 ) படுத்தபின் ஓதவேண்டிய துஆக்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் .

(5 ) தூங்கும் போது தவிர்க்க வேண்டியவை

குப்புறப் படுப்பது கூடாது


நபி ( ஸல் ) அவர்கள் தன்னுடைய வயிற்றின் மீது ( குப்புறப் ) படுத்திருந்து ஒரு மனிதனைக் கண்டார்கள் . அப்போது இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று கூறினார்கள் .
அறிவிப்பவர் அபூஹீரைரா ( ர­ ) நூல் திர்மிதி ( 2692 )

கால்மீது கால் வைத்து தூங்குதல்


ஒருவர் மல்லாக்க படுத்துக் கொண்டு கால் மீது கால்வைத்து ( ஆடை விலகும் வண்ணம் ) தூங்கு வதை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்தார்கள் .
அறிவிப்பவர் ஜாபிர் ( ர­ ) நூல் முஸ்­ம் ( 3918 )
நபி ( ஸல் ) அவர்கள் பள்ளிவாச­ல் மல்லாக்க படுத்தவர்களாக கால்மீது கால்வைத்து தூங்குவதைப் பார்த்தார்கள் . நூல் முஸ்­ம் ( 3921 )

மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து நாம் விளங்க வேண்டிய விஷயங்கள்


( 1 ) குப்புறப் படுப்பது கூடாது . அது அல்லாஹ் வெறுக்கக்கூடிய படுக்கையாகும் .
( 2 ) விலகக்கூடிய ஆடை அணிந்திருந்தால் கால் மீது கால் வைத்து மல்லாக்கப் படுக்கக்கூடாது.
நபி ( ஸல் ) அவர்கள் மல்லாக்கப் படுத்திருந்து ஆடைவிலகாத நிலையில் ஆகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ,

(6 ). தூங்கும் போது நல்ல, கெட்ட கனவுகள் கண்டால் பேணவேண்டியவை

ஹதீஸ் 1
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் நல்ல மனிதன் நல்ல ( உண்மையான ) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் .அறிவிப்பவர் அனஸ் ( ர­ ) நூல் புகாரீ ( 6983 )

ஹதீஸ் 2
நபி ( ஸல் ) அவர்கள் நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும் . ஆகவே உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறவரிடமும் தெரிவிக்க வேண்டாம் . மேலும் அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்தக் கனவின் தீமையி­ருந்தும் ஷைத்தானின் தீமையி­ருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி ( தமது இடப்பக்கத்தில் ) மூன்று முறை துப்பட்டும் . அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் . அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒரு போதும் ஏற்படுத்த முடியாது . அறிவிப்பவர் அபூகதாதா ( ர­ )
நூல் புகாரி‎ ( 7044 )


ஹதீஸ் 3
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தாம் வெறுக்கக்கூடிய கனவைக் கண்டால் எழுந்து தொழட்டும் . அறிவிப்பவர் ஜாபிர் ( ர­ ) நூல் முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
( 1 ) நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும் . அது நபித்துவத்தில் 46 ல் ஒரு பங்காகும் .
( 2 ) நல்ல கனவு கண்டால் பேணவேண்டியவை
1. அதற்காக அல்ஹம்து ­ல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும் ,
2. நமக்கு விருப்பமானவர்களைத் தவிர வேறு யாரிடமும் அந்தக் கனவைக் கூறக் கூடாது .
( 3 ) கெட்ட கனவு கண்டால் பேணவேண்டியவை
1. இடது புறம் மூன்று முறைத் துப்ப வேண்டும் .

2. மூன்று முறை அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் . அல்லது எழுந்து தொழவேண்டும் .

3. படுத்திருந்த புறத்திற்கு மாற்றமாக மாறிப்படுக்க வேண்டும் .

(7 ) தூக்கத்தி­ருந்து கண்விழிக்கும் போது பேண வேண்டியவை


தூ‎ங்கி எழுந்த பின் ஓத வேண்டிய துஆ

நபி ( ஸல் ) அவர்கள் தூக்கத்தி­ருந்து எழும் போது அல்ஹம்து ­ல்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வ இலைஹின் னுஷீர் என்று கூறுவார்கள் .
அறிவிப்பாள்ர் ஹ‚தைஃபா ( ரலீ ) நூல் புகாரி ( 3295 )

உளூச்செய்யும் முன் கைகளைக் கழுவுதல்

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் விழித்தெழுவாரானால் அவர் தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தமது கையை நுழைப்பதற்கு முன்னால் கழுவிக் கொள்ட்டும் . ஏனென்றால் உங்களில் எவரும் ( இரவு தூங்கும் போது ) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியன்ôட்டான் .
அறி‎விப்பவர் அபூஹ‚ரைரா ( ர­ ) நூல் புகாரி ( 162 )

பல் துலக்குதல்


ஆயிஷா ( ர­ ) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ( ஸல் ) அவர்களுக்கு உளூச் செய்யும் தண்ணீரும் பல் துலக்கும் குச்சியும் வைக்கப்படும் . அவர்கள் இரவில் ( தூக்கத்தி­ருந்து ) எழும்போது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவார்கள் . பிறகு பல் துலக்குவார்கள். நூல் அபூதாவூது ( 51 )

மூக்கைச் சீண்டுதல்


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் தூக்கத்தி­ருந்து உளூச் செய்தால் மூன்று முறை ( நீர் செலுத்தி ) நனகு மூக்கைச் சிந்தி தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள் . ஏனெனில் ( தூங்கும் போது ) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் . அறிவிப்பவர் அபூஹ‚ரைரா ( ர­ ) நூல் புகாரி ( 3295 )

மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
( 1 ) தூங்கி எழுந்த பின் ஓதவேண்டிய துஹவை தெரிந்து கொள்ள வேண்டும் .
( 2 ) தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவிய பிறகுதான் பாத்திரத்திற்குள் கைகளை விட வேண்டும் .
( 3 ) தூங்கி எழுந்தவுடன் பல்துலக்க வேண்டும் .
( 4 ) தூங்கி எழுந்து உளூச் செய்யும் போது மூக்கை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக