அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் !
அல்லாஹ் உண்மையாக அர்ஷில் அமர்ந்தான் என்பதை நல்லவர்களான முன்னோர்களில் (ஸஹாபாக்கள்) யாரும் மறுக்கவில்லை. இதன் மூலம் அர்ஷ் என்பது அல்லாஹ்வினுடைய படைப்புகளில் மிகப் பிரம்மாண்டமானது என்பது குறிப்பாகிறது. அவர்கள் (அல்லாஹ் எவ்விதத்தில்) அமர்ந்திருக்கிறான் என்பதை அறியவில்லை. ஏனெனில் அதனுடைய உண்மையான விதம் (குர்ஆனிலும், ஹதீஸிலும்) அறியப்படவில்லை. மாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ” (அல்லாஹ் அர்ஷில்) அமர்ந்தான் என்பது அறியப்பட்டதாகும். எவ்விதத்தில் என்பது அறியப்படாததாகும். விதத்தை பற்றி கேட்பது ”பித்அத்” ஆகும்.
(நூல் : தப்ஸீர் குர்துபி 7: 54 வசனத்தின் விரிவுரை)
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு !
அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்ற கருத்து அல்குர்ஆன் 75 : 22, 23 மற்றும் புகாரி 7439, 4581 மற்றும் பல ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவனது தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். இவ்வுலகில் யாரும் அவனுக்கு தோற்றம் கற்பிக்கக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் ”அவனைப் போல் எதுவும் இல்லை.” ”அவனுக்கு நிகராக யாருமில்லை”. இதுதான் உண்மையான இஸ்லாமியக் கொள்கையாகும். இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
அல்லாஹ்விற்கு கையும், முகமும், ஆன்மாவும் உள்ளது. தனக்கு முகம், கை, ஆன்மா இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது, (எப்படி என்று விளக்க முடியாகத வகையில்) விதமில்லாமல் அவனக்குரிய வர்ணைகளாகும். ” அல்லாஹ்வுடைய கை” என்பதற்கு ”அவனுடைய வல்லமை”. ”அவனுடைய அருள்” என்று கூறுவது கூடாது. ஏனெனில் இவ்வாறு விளக்கம் கொடுப்பது அவனுடைய வர்ணனைகளை அர்த்தமற்றதாக்குவதாகும். மேலும் இது கத்ரிய்யாக்கள், மற்றும் முஃதஸிலாக்களுடைய கூற்றாகும் என்று இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹனபி மத்ஹப் நூல் : ஷரஹ் ஃபிக்ஹýல் அக்பர் பக்கம் : 43, 44, 45)
தர்ஹா கட்டுவது கூடாது!
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!
கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காக செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்
(ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)
இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்!
மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)
அர்ஷின் தேவை அல்லாஹ்வுக்கு இல்லை:
பதிலளிநீக்குஅல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை மறுப்பது குர்ஆனை மறுக்கும் நிராகரிப்பில் முடியும். அதைப் போலவே அல்லாஹ் நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்(50:16) என்பதும், நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கின்றான் (57:4) என்பதும் குர் ஆன் கூறும் உண்மைகள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மறுப்பவர்கள் கூறுவது என்ன?
http://onameen.blogspot.com/2010/06/blog-post.html