செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சூனியம் : அரங்கம் அதிரும் ஐந்து காட்சிகள்



காட்சி 1 :  இருக்கு ஆனா இல்ல..

ஏகத்துவவாதி : சூனியம் என்பதே பொய், அதால எதையும் செய்ய முடியாது

சலஃபி : இல்ல, சூனியம்னு ஒரு வித்தை இருக்கு, அதால அற்புதங்கள செய்ய முடியும்.

ஏகத்துவவாதி : அப்படியா? அப்படின்னா எனக்கு செஞ்சு காட்டு பாப்போம்

சலஃபி : செஞ்சு காட்டுன்னெல்லாம் கேக்கக் கூடாது. அல்லாஹ் இருக்கான்னு சொன்னா கண்ணால காட்டுன்னா கேப்போம்?

ஏகத்துவவாதி : அல்லாஹ் இருக்கான்னா, அவன காட்டுனா தான் நம்புவேன்னு சொல்ல தேவையில்ல.. அவன பாக்காமலேயே அவன் இருக்கிறதா ஒரு முஸ்லிம் புரிஞ்சு தான் வெச்சிருக்கான்.
அல்லாஹ்வ பாக்காமலேயே நம்புறது எப்படின்னு குர் ஆன் நமக்கு பல இடங்கள்ல சொல்லி தருது.

ஆனா ஒரு செயலுக்கு அற்புத சக்தி இருக்குன்னு சொன்னா அத பாக்காம எப்படி புரிஞ்சுக்குறது? 
பாக்காமலேயே புரிகிற விதமா சூனியத்துல என்ன இருக்கு? அதயாவது சொல்லு.

சலஃபி :  அல்லாஹ் சொல்லிட்டான்னா நம்பிட வேண்டியது தான். செஞ்சு காட்டினாத்தான் நம்புவேன்னு சொல்றது குஃப்ரான பேச்சு.

ஏகத்துவவாதி : அப்படியா? அப்படின்னா, நபி (சல்) அவர்கள், சிலைகளை எனக்கெதிரா சூழ்ச்சி செய்ய வை பாப்போம்னு சொன்னதும் குஃப்ரான பேச்சு தானா?
சிலைக்கு சக்தி இருந்தா எனக்கெதிரா சூழ்ச்சி செய்யுன்னு இப்ராஹிம் நபி கேட்டதும் குஃப்ர் தானா?

சலஃபி : அது வந்து.... அது..... (அய்யோ ஒண்ணும் மண்டைல வர மாட்டேங்குதே)
ஆஹ்.... சூனியத்த செய்தா காஃபிராகி விடுவான். ஆகவே செய்து காட்டக் கூடாது (ஹப்பாடா தப்பிச்சேன்..)

ஏகத்துவவாதி : சூனியத்த செஞ்சா காஃபிராகி விடுவான்னு அல்லாஹ் எங்க சொல்றான்?

சலஃபி : இதோ 2:102 வசனத்துல சொல்றானே..

ஏகத்துவவாதி : அது சூனியத்த பத்தியே பேசல.. சரி அப்படியே வெச்சுக்குவோம். அங்கே சூனியத்த செய்தா காஃபிராகி விடுவான்னு இருக்கா அல்லது சூனியத்த கற்றுக் கொண்டா காஃபிர்ன்னு இருக்கா?

சலஃபி : கற்றுக் கொண்டா காஃபிருன்னு இருக்கு.

ஏகத்துவவாதி : நா ஒண்ணும் உன்ன கத்துக்க சொல்லலையே.. ஏற்கனவே கத்துகிட்டிருந்தா தானே செய்ய முடியும்? அப்படி ஏற்கனவே கத்து காஃபிராகி போயிருப்பானே அந்த காஃபிர் எனக்கு வந்து அத செஞ்சு காட்டட்டும்னு தானே கேக்குறேன்?
நீ காட்டின வசனப்படியே செய்யப்போறவன் ஏற்கனவே காஃபிராக ஆனவன் தானே ?

சலஃபி : (இதுவும் போச்சா..) இல்ல இல்ல.. அதெல்லாம் முடியாது, சூனியம் செய்றது குஃப்ர்.. சூனியம் செய்றது குஃப்ர்.

ஏகத்துவவாதி : சரி சரி அழுவாத.. தண்ணிய குடி..



காட்சி 2 : ஆகாசத்துல கோட்ட‌


சலஃபி : ஒரு வேள பிஜெ தற்கொலை செஞ்சுகிட்டா சூனியத்த நம்புவீங்களா?

ஏகத்துவவாதி : நடக்காத விஷயங்கள பத்தி இப்படி கேட்பதே குஃப்ரான பேச்சு.
கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல. பிஜெ தற்கொலை பண்ணிக்க மாட்டார்ங்கிறது 100 சதவிகிதம் உண்மை !

சலஃபி : அப்படின்னா உங்களுக்கு பயம், எங்க சூனியத்த நம்ப வேண்டி வந்துருமோன்னு.. அதான் இப்படி சமாளிக்கிறீங்க..

ஏகத்துவவாதி : உனக்கு நேரம் போகாம கற்பனை பண்ணிகிட்டு உளற்ரதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னா சமாளிக்கிறேன்னு அர்த்தமா?
அப்படின்னா இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லு.
ஒரு வேள இன்னைக்கி சாயத்திரம் ஈஸா நபி வானத்துல இருந்து இறங்கி வந்து நான் தான் கடவுள்னு சொன்னா கிறிஸ்த்தவம் உண்மைன்னு நீ ஒத்துக்குவியா?

சலஃபி : அது..... அது எப்படி...

ஏகத்துவவாதி : என்னய்யா தந்தியடிக்கிற.. போய் பிள்ளைங்கள படிக்க வை போ..

சரி, அப்படின்னா நீ என்ன சொல்ல வற்ர? பிஜெ தற்கொலை செய்யவும் வாய்ப்பிருக்குங்கிறியா?

சலஃபி : அல்லாஹ் நாடுனா நடக்காதா?

ஏகத்துவவாதி : அல்லாஹ்வின் அர்ஷை இங்கே கொண்டு வருகிறேன்னு சொல்லி ஒருத்தன் சூனியம் செய்றான், அவன் செய்ற சூனியம் வெற்றி பெறுமா?

சலஃபி : அதெப்படி அர்ஷை கொண்டு வர முடியும்?

ஏகத்துவவாதி : ஏன்? அல்லாஹ் நாடுனா அர்ஷ் இங்க வராதா??

சலஃபி : ??? (என்னாயா எப்படி கொண்டு போனாலும் கோல் போடுறான்)



காட்சி 3 : ஆதாரமா? அதெல்லாம் கேக்கப்படாது


ஏகத்துவவாதி : சூனியத்தால கை காலையெல்லாம் முடக்கலாமா? ஒருவரது உயிரை கூட எடுக்கலாமா?

சலஃபி : ஆமா

ஏகத்துவவாதி : என்ன ஆதாரம்?

சலஃபி : அல்லாஹ் குர் ஆனுல கணவன் மனைவி பிரிக்கலாங்கிறான், மூசா நபி காலத்துல பிர் அவ்ன் கூட்டம் கயிற பாம்பா மாத்துனாயிங்க, அப்புறம் புஹாரியில நபிக்கு மனக்குழப்பம் உண்டாக்கப்பட்டுத்துன்னு வருது....

ஏகத்துவவாதி : சரி, நான் கை கால முடக்க ஆதாரம் கேட்டேன்.. அதுக்கு காட்டு..

சலஃபி : அது வந்து..... வந்து.. அது.. (என்ன இவ்வளவு ஜெர்க் ஆகுது..)

அது.. அப்படியான கலை முன்னாடி இருந்துச்சு, ஆனா இப்போ இல்ல.. !
(எப்படி தப்பிச்சேன் ! )


ஏகத்துவவாதி : சரி, அப்படியான கலை முன்னாடி இருந்துச்சுங்கிறதுக்கு என்ன ஆதாரம்?


சலஃபி : அதான் கணவன் மனைவிய பிரிக்கிறது, மூசா நபி வரலாறு எல்லாம் சொல்றேனே..

ஏகத்துவவாதி : அட வெளெக்கெண்ணெ.. அத தானய்யா அப்போல இருந்து சொல்ற.. கை கால முடக்குற கலை அந்த காலத்துல இருந்துச்சுங்கிறதுக்கு ஆதாரத்த காட்டு..

சலஃபி : அது வந்து.....

ஏகத்துவவாதி : சரி அது போகட்டும்.. இப்போ அழிஞ்சு போச்சுங்கிறியே.. அதுக்காவது ஆதாரத்த காட்டுவியா இல்ல அதுவும் காத்துல கோட்ட கட்டுறது தானா?

சலஃபி : என்ன பெரிய அறிவாளித்தனமா பேசுறே? சூனியம் இப்போ இல்லைல்ல..? அப்போ அழிஞ்சு போச்சுன்னு தானே அர்த்தம்?

ஏகத்துவவாதி : அப்போ ஒரு விஷயம் இப்போ இல்லைன்னா அது அழிஞ்சு போச்சுன்னு தான் எடுத்துக்கணுமா?

எரும மாடு இப்போ வானத்துல பறக்காது தானே? அப்போ, இந்த கலை ஒரு காலத்துல எல்லா எரும மாட்டுக்கும் இருந்துச்சு, இப்போ அது அழிஞ்சு போச்சுன்னு சொல்லிக்கலாமா?

சலஃபி : (என்னயா இப்படி குண்டக்கா மண்டக்கானு கேகுறான்..)

இருய்யா ..கொஞ்சம் டயம் குடுய்யா யோசிக்கறேன்..

ஏகத்துவவாதி : சரி இதுக்கு யோசிக்கிறது இருக்கட்டும்..

நீ தான் எல்லாத்துக்கும் அல்லாஹ் நாடுனா நடக்கும், அல்லாஹ் நாடுனா நடக்கும்ன்னு சொல்லிட்டு திரியிறியே.. அழிஞ்சு போன சூனியத்தை மீண்டும் உயிர்ப்பிச்சு அதன் மூலம் அற்புத நிகழ அல்லாஹ்வுக்கு நாட முடியாதா?
அப்படி மட்டும் அல்லாஹ் நாட மாட்டான்னு ஏன் சொல்றீங்க?
இல்லாத சூனியத்தின் மூலமா செய்றதுக்கு அல்லாஹ்வால முடியாதுன்னு நம்புற பலகீனமான ஈமான தான் இவ்வளவு நாளா வெச்சிருந்தீங்களா?

சலஃபி : ( இவனுங்ககிட்ட வாய் குடுத்து ஒழுங்கா வீடு போய் சேர்ந்த மாதிரி தான்)



காட்சி 4  : புஹாரின்னா எங்களுக்கு அல்லாஹ்வாக்கும்

புஹாரி ஹதீஸ்ல சூனியம் இருக்குன்னு சொல்லப்பட்டிருக்கு. நாங்க முஸ்லிம், அதனால நாங்க புஹாரி, முஸ்லிம் ஹதீஸ நம்புறோம். நீங்கல்லாம் காஃபிர்.. அதான் ஹதீஸ மறுக்குறீங்க..

ஏகத்துவவாதி : ஹதீஸ் கிதாபுல ஒண்ணு சொல்லப்பட்டிருந்தாலே அது சரின்னு ஆயிடாது.

சலஃபி : எல்லா ஹதீஸயும் நாங்க சொல்லல.. புஹாரி, முஸ்லிம் மாதிரி ஹதீஸ்ல இருக்குற எந்த ஹதீஸையும் மறுக்கக் கூடாது.. மறுப்பவன் காஃபிர்.

ஏகத்துவவாதி : அப்படியா.. அப்படின்னா தஜ்ஜாலுக்கு எந்த கண் ஊனம்னு நீ சொல்லு பாப்போம்..

சலஃபி : ஒரு கண் ஊனம்னு வருது

ஏகத்துவவாதி : ஒரு கண் ஊனம்னு வந்தா ஒண்ணு வலது கண்ணா இருக்கும் அல்லது இடது கண்ணா இருக்கும், சரி தானே?

சலஃபி : ஆமா

ஏகத்துவவாதி : முஸ்லிம் ல ஒரு இடத்துல வலது கண்ணு ஊனம்னு ஹதீஸ் இருக்கு, இன்னொரு இடத்துல இடது கண்ணுன்னு இருக்கு.. ஒண்ணு சரின்னா இன்னொண்டு தப்புன்னு தான் அர்த்தம்.
முஸ்லிம் ஹதீஸ எப்படி தப்புன்னு சொல்றதுன்னு சொல்லி இரண்டையும் ஏத்துப்போமா??

சலஃபி : ??

ஏகத்துவவாதி : மக்காவில ரசூலுல்லாஹ் வாழ்ந்தது 10 வர்ஷம்னு ஒரு இடத்துல  புஹாரி பதிவு செஞ்சிருக்காரு.. இன்னொரு இடத்துல 13னு சொல்றாரு.. இரண்டுல ஒண்ணு சரி, ஒண்ணு சரின்னா இன்னொண்ணு தவறு !
புஹாரிலயும் தவறான ஹதீஸ் இருக்கத்தான் செய்யுது 

சலஃபி : சரி, அதெல்லாம் போகட்டும்.. இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்

சூனியம் உண்மைன்னு நம்புறது ஷிர்குன்னு சொன்னா புஹாரி இமாம் அத பதிவு செஞ்சிருக்காங்களே, அவங்க அத உண்மைன்னு நம்பாமலா பதிவு செஞ்சிருப்பாங்க? அப்படின்னா புஹாரி இமாம் முஷ்ரிக்கா?

ஏகத்துவவாதி : சகுனம் என்பது கிடையாதுன்னு ரசூலுல்லாஹ் சொன்னதா ஒரு ஹதீஸ புஹாரி இமாம் பதிவு செஞ்சிருக்காரு.. அதே புஹாரி இமாம் இன்னொரு இடத்துல சகுனம் இருக்குன்னும் பதிவு செஞ்சிருக்காரு..
சகுனத்த நம்புறது ஷிர்க்.
அப்படியிருக்கும் போது இத நம்பாமலா புஹாரி இமாம் பதிவு செஞ்சிருப்பாரு?
அப்போ சகுனத்த நம்புன புஹாரி இமாம் முஷ்ரிக்குன்னு நீ சொல்லுவியா?

சலஃபி : ??????

சரி, என்னதான் இருந்தாலும், அறிவிப்பாளர் வரிசைப்படி அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தானே, அதை மறுத்தா எப்படி உங்கள நாங்க முஸ்லிம்னுக்கு சொல்லுவோம்?

ஏகத்துவவாதி :

அப்படியா அப்படின்னா, அதிகமான பேருக்கு முரணா குறைவான நபர்கள் ஒரு செய்திய அறிவிச்சா, அவங்க பலமான அறிவிப்பாளர்களா இருந்தாலும் அத ஏத்துக்க கூடாதுன்னு ஹதீஸ் உசூலுல்ல ஒரு விதி இருக்கே, அது பத்தி எதாவது உனக்கு தெரியுமா? அதுக்கு ஷாத் வகைன்னு சொல்லுவாய்ங்க..

சலஃபி : ??


காட்சி 5 : மறுபடியும் மொதல்ல இருந்தா?????


சலஃபி : எல்லாம் கிடக்கட்டும்.. மணிகண்டன் என்பவன் ஒரு போலி சூனியக்காரன். அவனுக்கும் பிஜெவுக்கு ஏதோ ரகசிய ஒப்பந்தம் நடந்திருக்கு.. 
அதனால இதுல அவன் தோக்குறது ஒண்ணும் ஆச்சர்யமில்ல‌

ஏகத்துவவாதி : 

சரி அவன் போலின்னே வெச்சுகுவோம்.. நீ தான் மூச்சுக்கு முன்னூறு வாட்டி அல்லாஹ் நாடுனா சூனியம் ஜெயிக்கும், அல்லாஹ் நாடுனா சூனியம் ஜெயிக்கும்னு சொல்லிட்டு திரியுறியே.. அல்லாஹ் நாடுனா போலி சூனியக்காரனால ஜெயிக்க முடியாதா என்ன?
அப்படி மட்டும் ஏன் நம்ப மாட்டேங்குற? உன் ஈமானோட லட்சணம் இது தானா?

சலஃபி : ??

ஏகத்துவவாதி : அது போகட்டும், அவன் போலின்னு நீ சொன்னா, அப்போ நிஜ சூனியக்காரன் ஒருத்தன நீ கூட்டிகிட்டு வாயேன்..
நீ ஒருத்தன கூட்டிகிட்டும் வர மாட்டே.. தானா வந்த ஒருத்தன போலின்னு வேற‌ சொல்லுவே..

ஒண்ணு நீ செய்.. அல்லது செய்றவன வேடிக்கையாவது பாரு..

ஆட்டோட "......."யும் வேணும், ஆட வெட்டவும் கூடாதுன்னா எப்படி??


சலஃபி : இல்ல.. சூனியம் செய்றது குஃப்ர்..நாங்க செய்ய மாட்டோம்..


அடேய் மறுபடியும் முதல்ல இருந்தா???  இப்படி எத்தன பேருடா கெளம்பியிருக்கீங்க?


                   (சலஃபு கூடாரம் காலியாகிறது.. காட்சிகளும் நிறைவடைகின்றன‌)

                                                              --முற்றும்--