புதன், 3 நவம்பர், 2010

மத்ஹபின் பார்வையில் நேர்ச்சையும் மவ்லூதும் !!



அறிந்து கொள் பெரும்பாலான பாமரர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் நேர்ச்சையும், அவு­யாக்களுக்கு காணிக்கையாக அவர்களின் அடக்கஸ்தலங்களுக்கு காசுகளையும், மெழுவர்த்திகளையும், என்னெய் மற்றும் இது போன்றவைகளைக் கொண்டு செல்வதும் ஏகோபித்த முடிவுகளின் படி ஹராமாகும். ஏழைகளுக்கு தர்மம் செய்வதை நோக்கமாக கொண்டால் தவிர.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக்கம் 139


மேற்கண்ட காரியங்கள் கூடாததாகும் ஹராமானதாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரியங்கள் படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வதாக அமைந்துள்ளது. படைப்பினங்களுக்கு நேர்ச்சை செய்வது கூடாததாகும். ஏனெனில் நேர்ச்சை ஒரு வணக்கமாகும். எந்த வணக்கத்தையும் படைப்பினங்களுக்கு செய்யக்
கூடாது இது முதல் காரணமாகும். யாருக்காக நேர்ச்சை செய்வது நோச்சை செய்யப்படுகிறதோ அவர் உயிரற்ற சடலமாகும். உயிரற்ற சடலம் எதையும் சொந்தமாக்கி கொள்ள முடியாது. இது இரண்டாவது காரணம்.
உயிரற்ற சடலம் காரியங்களை செய்யும் என்று எண்ணினால் அவ்வாறு நம்புவது குப்பர் ஆகும்
.
அதே நூல் அதே பக்கம்.


படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வது ஹராம் என்பது அறிஞர்களின் ஒரு மித்த முடிவாகும் எனவே அது செல்லாது அதை நிறைவேற்றும் பொருப்புல் இல்லை. அது ஹராம் மற்றும் அது மாறாக லஞ்சமாகும்.
அதே நுல் அதே பக்கம்


அப்துல் காதிரிருக்காக பெண்கள் எண்னெய் நேர்ச்சை செய்கின்றனர். அது மினாராவில் விளக்கெரிக்கப்படுகிறது. இது போல் ஒரு பெயரில் அடக்கத்தலத்தில் மீது வினளக்கெரிய செய்வதற்காக என்னெய்யை நேர்சசை செய்தால் அதுவும் கூடாததாகும்.
அதே நுல் அதே பக்கம்


மவ்லீது ஓதுவதற்காக நேர்ச்சை செய்வது அதை விட அருவறுக்கத்தக்க காரியமாகும். குறிப்பாக ராகமும், விளையாட்டும் இதன் நன்மையை நபி ஸல் அவர்களுக்கு வாங்குவதாக நேர்ச்சை செய்வது மிகவும் அருவறுக்கத்தக்கதாகும்.
அதே நூல் அதே பக்கம்

மவ்லூத் ஓதலாம் என்பதற்கு ஆதாரம், குரான், சுன்னாவிலும் இல்லை, மத்ஹபிலும் இல்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக