புதன், 3 நவம்பர், 2010

ஷிர்க் - வகைகளும் விளைவுகளும் - part 2

இணை வைப்பின் வகைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்
Part 2


தர்ஹா வழிபாடு


இறந்து போன நல்லடியார்களிடம் முஸ்லி­ம்கள் சிலர் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர்.


அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்என்று அவர் கூறினார். ”அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதை யையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போதுஅல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்எனக் கூறினார். (அல்குர்ஆன் 2:259)


இவ்வசனத்தில் மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.


ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் அவரால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள், எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.


மேலும் இவர் நல்லடியார் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத் தான் இருப்பார் கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.


இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்


உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர் களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன் 27:80)


பிரார்த்தனைக்கு பதிலளிக்க மாட்டார்கள்


பின்வரும் வசனங்கள் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் செவியேற்க மாட்டார்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:13,14)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)


கப்ரை கட்டுவது, பூசுவது கூடாது!


நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (­)
நூல்: முஸ்லி­ம் (1610)


உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குதல்


அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் :
­(­) அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லி­ம் (1609)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (­)
நூல் : அஹ்மது : (22834)


அல்லாஹ்வின் சாபம்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூத, கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(­)
நூல் : புகாரீ (1330)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.
அறிவிப்பவர் : ஸ்ரீன்துப் (­)
நூல் : முஸ்லி­ம் (827)


படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்


அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைதா(­)
நூல் அஹ்மத் (1599)

தொடரும், இன்ஷாஅல்லாஹ்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக