ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சூனியம் : விளக்கங்களும் மறுப்புகளும் தலைப்பு வாரியாக..


சூனியம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் நாம் தயாரித்த விளக்கங்கள், மறுப்புகள் போன்றவை இங்கே தலைப்பு வாரியாக, ஒரே பதிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

எதிர் கருத்துடையவர்கள் எழுப்பும் அநேக கேள்விகளுக்கு இங்கே, இறைவனுடைய கிருபையால் எனக்கு தெரிந்த விளக்கங்களை சொல்லியுள்ளேன்.
ஏதேனும் விளக்கங்கள் விடுபட்டிருந்தாலோ, நாம் சொல்லும் விளக்கங்களில் தவறுகள் இருந்தாலோ எனக்கு எழுதவும்.


சூனியம் - கேள்வியும் பதிலும் 

வாழ்க்கை நடைமுறைக்கு முரணான ஹதீஸ்
பேச்சிலும் சூனியம் - முரண்பாடா??சூனியம் - மற்றொரு ஆதாரம்
சூனியம் செய்தால் ஏன் தண்டனை?
ஷைத்தானின் தீண்டல் தான் சூனியமா ?
சலபுகளின் விவாத பல்டி"சூனியக்காரர்களின்" முரண்பாடு
ஷைத்தானின் ஆற்றல் - அளவுகோல் என்ன?
தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மறுக்க வேண்டுமா?தஜ்ஜால், ஈசா நபி அற்புதங்களும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களா??அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுமா?கேள்விக்கு பிறந்த ஞான சூனியங்கள்போகாத ஊருக்கு வழிநம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்களும் தவறு செய்வார்கள்சூனியம் ஹதீஸ் எந்த இறை வசனத்திற்கு முரண்?சூனியம் வைக்க சொல்லி கேட்கலாமா ?சூனியம் வைக்க சொல்லி கேட்கலாமா ? இப்ராஹிம் நபியின் வழிமுறைமூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா? ஜமாலி ஹசரத் VS சலபி ஹசரத்புஹாரியில் எல்லாம் சரியா?சூனியமும் மறைவான ஞானமும்


http://nashidahmed.blogspot.in/2013/08/blog-post_9.html


"மகத்தான" சிஹ்ர்


http://nashidahmed.blogspot.ae/2013/10/blog-post_9100.html


ஸலஃபிகளும் கெட்ட சகுனமும்


http://nashidahmed.blogspot.ae/2013/10/blog-post_3670.html

சூனியத்தை நம்பினால் சினிமா எடுக்கலாம்


http://nashidahmed.blogspot.ae/2013/10/blog-post_21.html

சலஃபிகளுக்கு மறுமையில் ஷைத்தான் கூறும் பதில்


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_8267.html

இவர்கள் மண்ணை தின்றார்களா? புல்லை தின்றார்களா??


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_7974.html

சூனியப் பிரியர்களுக்கு நெற்றியடி !


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_1600.html

முஃமினும் பிஸிஹ்ர் என்பதின் பொருள் என்ன?


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_8743.html

ஜமாலியும் இஸ்மாயில் சலஃபியும்


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_3126.html

இஸ்மாயில் ஸலபியின் பித்தலாட்டங்கள்


http://nashidahmed.blogspot.ae/2013/11/blog-post_9290.html

சூனியம் என்றால் சூனியம் தான்


http://nashidahmed.blogspot.ae/2013/10/blog-post_8451.html

சனி, 17 ஆகஸ்ட், 2013

சூனியம் வைக்க சொல்லி கேட்கலாமா ?


சூனியம் உண்டு என்று சொல்கிற உங்களால் எனக்கு சூனியம் வைக்க முடியுமா? என்று நாம் கேள்வி எழுப்புகிற போது சூனியம் என்பது பாவமான காரியம், ஆகவே அதை செய்து காட்டும் படி கேட்க கூடாது என்கிற ஒரு சமாளிப்பு பதிலை கூறி தப்பிக்கின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது ! குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் !

இப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பதை போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த அந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.

இதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் சொல்கிறான்

'அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (2:258)

சூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.
இவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் !

இதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் !

மேலும், இப்ராஹிம் நபி அவ்வாறு கேட்ட உடன், அதை செய்து காட்டி நிரூபிக்க வக்கற்ற அந்த எதிரிகள் வாயடைத்து போனதாக அல்லாஹ் அதே வசனத்தில் சொல்கிறான்.
அதாவது, இப்ராஹிம் நபி கேட்டதை போல அவர்கள் செய்து காட்டவில்லை என்பதால் அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்கிறான்.

அது போல, சூனியம் உண்மை என்று சொல்கிற நீ, அது போல் எனக்கு செய்து காட்டு என்று அவனை நோக்கி சொல்லப்படும் போது அதை செய்து காட்டாமல் சால்ஜாப்பு சொல்லி ஒடுவானேயானால் அவன் தான் அல்லாஹ் சொல்கிற பொய்யன், அவன் தான் நேர்வழி பெறாதவன், அவன் தான் வாயடைத்து போனவன் !

சத்தியம் செய்ய சொல்லி கேட்கலாமா ?


ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்கிற சந்தேகம் நமக்கு வருமானால், அவரிடம் அல்லாஹ்விடம் சத்தியமிட்டு சொல்ல சொல்லி கேட்கலாம். 
இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும் போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! ''இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அப்போது நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும். 5:106

அவ்விருவரும் (பொய் சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று ''எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். 5:107

சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி 5:108

கப்ர் ஸியாரத்தின் நோக்கம் என்ன ?ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். 

மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. நூல் : திர்மிதி (974)

ஆக, கப்ர் சியாரத் எதற்காக செய்யலாம் என்பதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டு விட்டது.

தர்காக்கள் கட்ட கூடாது, உயர்த்தப்பட்ட தர்காக்களை தரை மட்டம் ஆக்க வேண்டும் எனும் போது தர்காவிற்கு சியாரத் செல்லலாமா என்று கேட்பதோ, மரண சிந்தனை வர வேண்டும் என்பதற்காக தர்காவிற்கு செல்வதில் என்ன தவறு? என்று வறட்டு வாதம் புரிவதோ அர்த்தமற்றதாகி விடும் !

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1764)

முகநூல் பதிவுகள் : பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட பைஅத் என்ன?நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து

'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; 
திருட மாட்டோம்; 
விபச்சாரம் செய்ய மாட்டோம்; 
எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; 
நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; 
நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்' 

என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக!
அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (60:12)

முகநூல் பதிவுகள் : யுக முடிவு நாள் நெருங்கி விட்டதுகாலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள்போலாகும்.(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டியஅடையாளம். நூல் : திர்மிதீ 2254)

யுக முடிவு நாள்நெருங்கும் போதுவிபச்சாரமும், மதுவும்பெருகும் என்று நபிகள்நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80,

கொலைகள்அதிகரிப்பதும் யுக முடிவுநாளின் அடையாளம்என்று நபிகள் நாயகம்ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85,

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. நூல்கள் : நஸயி 682

தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டுசாப்பிடக் கூடியவர்கள்தோன்றும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

முகநூல் பதிவுகள் : ஒருமுகப்படுத்தும் இஸ்லாமிய வணக்க முறைகடவுளுக்கு உருவம் கற்பித்தால் தான் வணங்கும் போது மனம் ஒருமுகப்படும் என்று கூறுபவர்கள் ஏனோ கண்களை மூடித்தான் வணங்குகிறார்கள்.

அதே சமயம், கடவுளுக்கு நாமாக உருவம் கற்பிக்க கூடாது என்று சொல்கிற முஸ்லிம்கள், தொழும் போது கண்களை மூடுவது கிடையாது, மூட கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

உருவம் வேண்டும் என்று சொல்பவர்கள் கண்களை திறந்து வைத்திருப்பது தான் பகுத்தறிவு. ஆனால் அதற்கு மாற்றமாக அவர்களது செயல்பாடுகள்.
வெறும் கண்பார்வை கொண்டு மனதின் ஒருமுகம் தீர்மானிக்கப்படாது என்று சொல்கிற இஸ்லாத்தின் செயல்பாடு மற்றொரு புறம் !

வணக்கத்தின் போது கண்களை மூடிக்கொள்பவர்களை விட மூடாத முஸ்லிம்களின் மனமே அதிகம் ஒருமுகப்படுகிறது !

இணை வைப்பவர் பின்னின்று தொழலாம் என்பதற்கு இது ஆதாரமாகுமா ?
ஒருவர் பாவ சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பதற்கும் அதனால் இணை வைப்பவர் பின்னின்று தொழலாம் என்று சொல்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
சிலர், இதை ஒரு வாதமாக வைப்பது விநோதமாக உள்ளது.

இணை வைப்பவர் பின்னின்று தொழுதால் இணை வைப்பவருக்கு என்ன தண்டனை எல்லாம் மறுமையில் அல்லாஹ் விதியாக்கி வைத்திருக்கிறானோ அவை நமக்கும் கிடைக்கும் என்று சொல்லியிருந்தாலோ அல்லது இணை வைப்பவரை பின்பற்றி தொழுபவரும் இணை வைப்பவரே என்று மார்க்கத்தில் எங்கேனும் சொல்லப்பட்டிருந்தாலோ தான் இந்த வாதம் சரியாகும்.

இணை வைக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை நிர்வகிக்க கூடாது (9:17) என்பது அல்லாஹ் இட்டுள்ள கட்டளை. பள்ளிவாசலை நிர்வகித்தல் என்பதில் முதன்மையாக தொழுகைக்கு தலைமை தாங்குவது அடங்கும். அதை அவர் செய்யக்கூடாது என்றால் அப்படி செய்பவர் பின்னால் நாம் தொழக்கூடாது என்பது நேரடியாக புரிய வேண்டிய ஒன்று. அவ்வாறு தொழுதால், அந்த இணை வைக்கும் நபர் பள்ளிவாசலை நிர்வகிப்பதை நாம் அங்கீகரித்தோம் என்று ஆகி விடும்.

ஆக, அல்லாஹ் ஒன்றை சொன்னால் அதை அப்படியே கேட்டு செயல்பட வேண்டுமே தவிர அதில் குறுக்கு கேள்வி எழுப்ப கூடாது.

இணை வைப்பவர் பின்னால் தொழக்கூடாது என்று சொல்வது போல இணை வைப்பவரை திருமணம் செய்யக்கூடாது என்றும் மார்க்கம் கட்டளையிடுகிறது. அந்த பெண் இணை வைப்பவளாக இருந்தால் எனக்கென்ன? நான் தவ்ஹீத்வாதி, அவள் செய்யும் பாவம் என்னை கட்டுப்படுத்தாது, ஆகவே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுவதற்கும், மேலே இணை வைப்பவர் பின்னின்று தொழுவது பற்றிய குதர்க்கதிற்கும் அதிக வேறுபாடு இல்லை !

கணவன் - மனைவி இடையே எப்படி திருமணம் மூலம் உறவு உருவாகிறதோ அது போல் இமாம் - மஃமூம் இடையே தொழுகை மூலம் உறவு ஏற்படுகிறது. இணை வைப்பவர்களுடன் திருமண உறவே தடை எனும் போது தொழுகை திருமணத்தை விடவும் மகத்தான ஒரு அமல் !!!

சூனியமும் மறைவான ஞானமும்
சொர்க்கம், நரகம் போன்றவற்றை நம்புவது எப்படி மறைவான ஞானமோ அது போல சூனியம் செய்தல், கராமத் (அற்புதங்கள்) செய்தல் போன்றவையும் மறைவான ஞானமே ! 
ஏனெனில், ஒருவர் மீது எந்த சாதனமுமின்றி ஒன்றை ஒருவர் ஏவுகிறார் என்றால் அதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து ஏவுகிறார் என்று பொருளாகிறது. 

இங்கிருந்து கொண்டு லண்டனில் வசிக்கும் ஒருவரை நோக்கி சில கெடுதல்களை ஒருவர் ஏவுகிறார் என்றால், அதனால் அந்த மனிதருக்கு எந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதை இவர் அறிகிறார் என்று அர்த்தம். அத்தகைய ஆற்றல் மறைவான ஆற்றலே தவிர வேறில்லை.

இத்தகைய ஆற்றலை பற்றி அல்லாஹ் சொல்கிறான் என்று பாருங்கள்..

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் 'உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?' என்று கேட்பான். 'எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர்கள் கூறுவார்கள்.
5:109

நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 7:188

மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். 3:179

அதாவது, மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அதை எவருக்கேனும் அல்லாஹ் அறிய தருவான் என்றால் அது அவன் தேர்வு செய்த தூதர்களுக்கு தான்.
இதை 3:179 வசனம் நேரடி வாசகங்களை கொண்டு தெள்ளதெளிவாக கூறுகிறது.

ஆக இந்த அளவுகோலின் படியும் சூனியம் பொய் என்று நிரூபிக்கலாம் !

பேரழிவுகளிலிருந்து அல்லாஹ் ஏன் மக்களை காக்கவில்லை ?


பேரழிவுகள் வரும் போதெல்லாம் அல்லாஹ் காப்பாற்றுவான், எந்த சிரமமும் மனிதனுக்கு ஏற்படாமல் அவன் காப்பான், மனிதனுக்கு எந்த நட்டமும் இன்றி, லாபமும் மகிழ்ச்சியையும் மட்டுமே அவன் தருவான் என்று இருக்குமானால் இந்த உலகம் இயங்காது.. அப்படி ஒரு உலகத்தை இறைவன் படைக்கவும் தேவையில்லை..

உலகில் உள்ள அனைவரது சட்டை பையிலும் தலா ஆயிரம் ருபாய் பணம் என்றால், யாரும் எந்த தொழிலும் செய்ய மாட்டார்கள், எந்த புது கண்டுபிடிப்புகளும் வெளியாகாது, ஏனெனில், ஒருவரை ஒருவர் சார்ந்தது தான் இவ்வுலக வாழ்க்கை எனும் போது, அனைவரையும் போல நானும் சமமானவன் என்கிற எண்ணம் எனக்கு வரும் போது எந்த வேலையை நான் செய்தாலும் பிறருக்காக நான் செய்வதாகவே இருக்கும், அதை நான் விரும்ப மாட்டேன்.

நோய்கள் பெருகும் போது, நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கிறது. ஒருவனை ஏழையாகவும் ஒருவனை செல்வந்தனாகவும், ஒருவனை கண் பார்வை இல்லாதவனாகவும் இன்னொருவனை கண் மருத்துவராகவும், ஒருவனை வியாபாரியாகவும் இன்னொருவனை, பொருட்களை வாங்குபவனாகவும், என இவ்வாறு வேறுபாடுகளுடன் மனித குலத்தை படைத்தால் தான் உலகம் நீடித்து செல்லும் !

- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் உரையில், சகோ. பிஜேயின் விளக்கங்களை மையமாக வைத்து தொகுக்கப்பட்டது இது.
-------------------------------------------------------------------------------------------

பேரழிவுகளிலிருந்து அல்லாஹ் ஏன் மக்களை காக்கவில்லை என்கிற இது போன்ற அர்த்தமற்ற கேள்வியை கேட்கிறவர்கள், தன்னகத்தில் இறைவன் இருக்கிறான், மனிதனும் கடவுளும் ஒன்று தான் என்கிற கொள்கையில் இருக்கிறார்கள்.
கடவுளை தன்னகத்தே கொண்டவனுக்கு சுயமாக அந்த அழிவிலிருந்து தன்னை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை என்கிற கேள்வி தங்களை நோக்கி வரும் என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை.

முகநூல் பதிவுகள் : அந்த ஹதீஸ் பலகீனமானது தான்நாம் ஏற்கனவே நமது நூல்களிலும் விவாதங்களிலும் பதிந்து வந்த அஹ்மதில் இடம்பெறும் கீழ்காணும் ஹதீஸ் தற்போது அறிஞர்களின் ஆய்வு முடிவில் பலகீனமானது என்று தெரிய வந்துள்ளது.

"மூன்று நபர்கள் சொர்கம் புகமாட்டார்கள்.1 மது அருந்துபவன் 2 உறவுகளை துண்டிப்பவன் 3 சூனியத்தை உண்மை என நம்புவன்."
நூல் : அஹ்மத் ( 18748)

ஆகவே இந்த செய்தி நமது ஆக்கங்களிலும் வாதங்களிலும் இடம் பெறாது நீக்கப்படும். 

இந்த செய்தி பலகீனமானது என்றாலும் இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு செய்தி அதே அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும். ஆகவே சூனியத்தை உண்மை என்று நம்புவது நரகத்திற்கு கொண்டு செல்லும் காரியமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு வாதத்திற்கு இவ்விரண்டு செய்திகளுமே பலகீனம் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அடிப்படையான பல ஆதாரங்களை கொண்டு நாம் சூனியம் பொய் என்று ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.
இந்த ஹதீஸ்கள் யாவும் அடிப்படை ஆதாரங்களுடன் சேர்க்க வேண்டிய துணை ஆதாரங்கள் தான் !

இந்த ஹதீஸ்களை மறுப்பதன் மூலம் அப்போதும் சூனியத்தை உண்மை என நியாயப்படுத்தி விட முடியாது !!

முகநூல் பதிவுகள் : கேடு கெட்ட சூஃபிசம்
தனது ஷேக் என்ன சொன்னாலும் கண்ணை மூடி நம்ப வேண்டும் என்று, ஷேக்மார்களை இறை தன்மையுடன் பொருத்திப் பார்க்கிற பாழும் இணை வைப்பு கொள்கையை பரப்புகிறவன் தான் சுனஜன நம்புகிற "கல்விக்கடலாம்" கஸ்ஸாலி.

தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )

அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் .
இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் ,
தலைகீழாக நிற்றல் ,
முள்ளின் மீது அமர்தல் ,
நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது ஸூபித் துவத்தின் பொது விதி.
சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் .
அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது .
அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது,
அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

மக்கத்து காஃபிர்கள் - சுன்னத் (?) ஜமாஅத் : ஒரு ஒப்பீடு


""நாங்கள் என்ன அவ்லியாக்களை அழைத்தா பிரார்த்திக்கிறோம்? அவர்கள் எங்களுக்குச் சிபாரிசு செய்வார்கள் என்று தானே கூறுகிறோம்! நாமெல்லாம் பாவிகள்! அதனால் அல்லாஹ்வை நெருங்க முடியாது. அதனால் இவர்கள் மூலம் சீக்கிரம் நெருங்கி விடலாம்"" என்று பரேலவிகள் வாதிடுகின்றனர். 

இது இப்போது இவர்களாக சொல்கிற வாதமல்ல, ஏற்கனவே மக்கத்து முஷ்ரிக்குகள் வைத்த வாதம் தான் !!

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்).
அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

எதை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் தங்கள் அடிப்படை கொள்கையாக வைதுக்கொண்டிருந்தார்களோ, அதை நியாயப்படுத்தும் பொருட்டு என்ன தர்க்கங்களை எல்லாம் அவர்கள் செய்து வந்தார்களோ, அதே கொள்கையை, அதே வாதத்தை அச்சுபிசகாமல் பின்பற்றி வருபவர்கள் தான் இன்றைய பரேலவிகள்.

அதே சமயம், இந்த பரேலவிகளின் மனைவிமார்கள் பிரசவம், இன்னும் இது போன்ற கடுமையான நேரங்களில் "யா முஹய்யித்தீன்'' என்று தான் பிரார்த்திக்கின்றனர். ஆனால் மக்கத்து முஷ்ரிக்குகளோ "அல்லாஹ்வே'' என்று அழைத்துத் தான் பிரார்த்தித்தார்கள்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

இந்த வகையில் இன்றைய பரேலவிகளை விட அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் மேலானவர்களே !!

முகநூல் பதிவுகள் : நல்ல வேளை நபி காலத்தில் இவர்கள் இல்லைஇன்றைக்கும் மக்காவில் தெரியும் பிறை மதினாவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். மதினாவில் தெரியும் பிறை மக்காவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் இது தான் நிலைமை. 
அவர்கள் காலத்தில் இது தான் நிலைமை எனும்போது மதினாவில் இருந்த நபி அவர்கள் மக்காவில் நோன்பு துவங்கிய தினமே தமது நோன்பைத் துவங்குவதற்கு வாய்ப்பிருப்பது போலவே மறுநாள் துவங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.

நல்ல வேளை, அன்றைக்கு இந்த கணிப்பு கூட்டம் இல்லை, இருந்திருந்தால் லைலத்துல் கதர் இரவு என்பது ஒரு இரவா இரண்டு இரவா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு, நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று மார்தட்டியிருப்பார்கள் !

எது தீவிரவாதம்?
துப்பாக்கி ஏந்தி பிறரை கொலை செய்வது மட்டும் தீவிரவாதம் என்று எண்ணுகின்றனர். 
எதிலுமே நடுநிலை பேணாமல் தீவிர சிந்தனை, தீவிர கொள்கை தீவிர செயல்பாடுகள் என எண்ணங்களை தீவிரமாக கொள்ளுதலும் கூட தீவிரவாதமே !

அந்த வகையில், ஹிந்து மதம், கிருத்துவம் போன்றவற்றை விடவெல்லாம் அதிக நடுநிலை பேணக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.. செயல்களில் அமைதி காட்டும் மார்க்கமான இஸ்லாம், எண்ணங்களின் வாயிலாகவும் நடுநிலையையே போதிக்கிறது. இஸ்லாம் போதிக்கும் சித்தாந்தமானது, ஒருவனை எண்ணத்திலும் செயலிலும் நடுநிலையையும், சமசீர் சிந்தனையையும் வழங்கும் என்பதே உண்மை.

இறைவனை வணங்குவது என்கிற காரியத்திலும் கூட, நின்று வணங்க முடியவில்லை என்றால் அமர்ந்து வணங்கலாம், அதுவும் இயலாதா? படுத்துக்கொண்டே கூட வணங்கலாம். ரமலானில் நோன்பு வைக்க இயலாதா? வேறொரு நாளில் நோற்றுக்கொள்ளலாம், ஹஜ் செல்லவசதி இல்லையா? செல்ல வேண்டாம் என மார்க்க சட்ட திட்டங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் நடுநிலை !

இதற்கு முரணாக, இறைவனை வணங்குகிறோம் என்கிற பெயரில் தீமிதித்தல், உடம்புகளில் அடித்துக்கொள்ளுதல், அலகுகளால் நாக்கில் குத்திக்கொள்ளுதல் போன்றவற்றை போதிக்கும் மதங்கள் சிந்தனையால் தீவிரவாததையே போதிக்கிறது !!

நான் செய்யும் நன்மை, தீமையான காரியங்களுக்கு நானே பொறுப்பாளி, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க தேவையில்லை என்கிறது இஸ்லாம். இதுதான், அறிவுக்கும் உகந்தது, இது தான் நடுநிலையான சிந்தனையும் கூட..

இதற்கு முரணாக, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க வேண்டும் என்றோ, நான் செய்யும் பாவங்களை இன்னொருவர் சுமப்பார் என்பதோ தீவிரவாத சிந்தனையாகும்.

ஒருவர் ஒரு தவறு செய்தால், அவர் செய்த அளவுக்கே அவரை தண்டிக்க வேண்டும். இது தான் நடுநிலை, இது தான் சரியான சிந்தனை, இதை தான் இஸ்லாமும் போதிக்கிறது.

இதற்கு முரணாக, யார் என்ன தவறு செய்தாலும் அவரை மன்னிக்க தான் வேண்டும், ஒரு கன்னத்தில் அடித்தால் கூட மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று கூறுவதும் தீவிரவாத எண்ணமே !

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் உலகையே அழிப்போம் என்று முழங்கிய பாரதியார் ஒரு தீவிரவாதி தான்.

குடும்ப பிரச்சனைக்காக மதுரையையே எரித்ததாக சொல்லப்படுகிற கண்ணகி ஒரு தீவிரவாதியே, அதை புராணங்களில் எழுதி வைத்து சிறு பிள்ளைகளுக்கு போதித்து வரும் புராண பக்தர்கள் தீவிரவாத சிந்தனையுடையவர்களே !

எந்த மனிதர் மீதும் எந்த கொள்கையையும் திணிக்க கூடாது என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தை போதிப்பதில் கூட எவர் மீதும் நிர்பந்தமில்லை, விரும்பியவர் ஏற்கலாம் விரும்பாதவர் விட்டு விடலாம். இது தான் அறிவுக்கு பொருத்தமானதும், நடுநிலை சிந்தனையும் ஆகும்.

இதற்கு மாற்றமாக, பொய் சொல்லி மார்க்கத்தை போதிக்கலாம் என்று கூறியும், தந்திரங்களை அற்புதங்களாக காட்டி மக்களின் மூளையை மழுங்க செய்பவர்களும் தீவிரவாதிகளே !

மதசார்பற்ற கல்விகூடங்களிலும் மிஷனரிகளிலும் கூட மறைமுகமாக தங்கள் சித்தாந்தத்தை மக்களிடம், மாணவர்களிடம் திணிப்பவர்கள் கூட தீவிரவாதத்தை தான் மேற்கொள்கின்றனர்.

முத்தாய்ப்பாக, உலகை படைத்தது ஒரேயொரு கடவுள் தான் என்று நம்புவதே நடுநிலை, அது தான் அறிவுக்கும் உகந்தது, அது தான் இஸ்லாம் போதிப்பது.
அதற்கு மாற்றமாக, கடவுளே இல்லை என்று கூறி மூளையை மழுங்க செய்வதும், காண்பதெல்லாம் கடவுள் என கடவுளுக்குரிய இலக்கணங்களை மீறிய சிந்தனை என்பது தீவிரவாதமே !

இது குறித்து இன்ஷா அல்லாஹ் விரிவான ஆக்கம் ஒன்று வெளியாகும்.

புஹாரியில் எல்லாம் சரியா?


புஹாரியில் எந்த ஹதீசும் சரியானவை தான் என்று வாதிடுபவர்கள் புஹாரி இமாமை இறைவனுக்கு இணையாக, தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவராகவே கருதுகிறார்கள். புஹாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டதா? அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு விட வேண்டும் என்பவர்கள், மனிதர்கள் தவறிழைக்க கூடியவர்கள் தான் என்கிற இறை கட்டளையை மதிக்காதவர்கள் ஆவார்கள்.

குர் ஆனுக்கு முரணாக, நபி (ஸல்) அவர்களின் தகுதிக்கு தகாததாக ஒரு செய்தி புஹாரி நூலில் பதிவாகி இருந்தால், புஹாரி தவறிழைப்பாரா? என்று கேள்வியெழுப்புவதற்கு இவர்கள் காட்டும் கரிசனத்தில் கடுகளவு கூட, அல்லாஹ்வின் சிஃபத்தையும் நபியின் அந்தஸ்தையும் சிந்திப்பதற்கு காட்டுவது கிடையாது.

இதன் காரணமாக தான், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக புஹாரி இமாம் செய்தி ஒன்றை பதிந்த போது, நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? அது குர்ஆனுக்கு அழகானதா? அல்லாஹ்வின் வல்லமைக்கு ஏற்றதா? என்றெல்லாம் சிந்திப்பதை விட்டு விட்டு, புஹாரி இமாம் தவறிழைப்பாரா? என்கிற ஒற்றை கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.

இப்படி சிந்தனை மழுங்கிய இவர்களுக்காக புஹாரியில் உள்ள முரண்பட்ட அறிவிப்புகள் சில..

புஹாரி பாகம் 7, ஹதீஸ் 787 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக செய்தி உள்ளது. இதை அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி பாகம் 5, ஹதீஸ் 190 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

10 ஆண்டுகள் சரியா 13 ஆண்டுகள் சரியா என்கிற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. இரண்டில் எது சரி என்றாலும் இன்னொன்று தவறு என்று ஆகி விடுகிறதே, இதற்கு என்ன பதில்?
மனிதன் என்கிற முறையில் ஏற்பட்ட பிழை என்று இதை சொல்வார்களா? அல்லது புஹாரி இமாம் பொய் சொன்னார் என்று சொல்வார்களா?

சூனியத்தை பதிந்து விட்டதால் அவர் ஷிர்க் வைத்து விட்டாரா? என்று குட்டிக்கரணம் அடிப்பவர்கள், இதற்கு குட்டிக்கரணம் அடிக்கவில்லை என்றாலும் கூட, புஹாரி இமாம் பொய் சொல்லி விட்டார் என்று சொல்வார்களா?
அல்லது இதற்கு இவர்கள் சொல்லும் நியாயங்கள் சூனியத்தை பற்றிய ஹதீஸ் குறித்து நாம் சொல்வதோடு பொருந்தி போகுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இன்னும்,

சுலைமான் நபிக்கு 90 மனைவிமார்கள் இருந்ததாக பாகம் 8 ஹதீஸ் 634 இல் பதிவாகியுள்ளது. இதை அபு ஹுரைரா அறிவிக்கிறார்.

அதே சமயம், சுலைமான் நபிக்கு 9 ஹதீஸ் 561 இல் 60 மனைவிமார்கள் இருந்ததாக அதே அபு ஹுரைரா தான் கூறுகிறார்.

இங்கே இந்த முரண்பாடு ஏன் வந்தது? 90 தான் சரி என்றால் 60 என்று சொன்ன அபு ஹுரைரா பொய் சொல்கிறார் என்று இவர்கள் அறிவிப்பு செய்வார்களா? அல்லது முன்னுக்கு பின் முரணாக பேசக்கூடியவர் என்றாவது சொல்வார்களா?
முரண்பட்ட இரு செய்திகளை பதிவு செய்த புஹாரி இமாம் ஒரு குழப்பவாதி என்று இவர்கள் அறிவிப்பார்களா?

அவசர அவசரமாக இதை மறுப்பதற்கு மட்டும் இந்த ஞான சூனியங்கள் முனையுமானால், மறுப்பு சொல்கிற போது அந்த மறுப்பானது தரப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்த வேண்டும் என்கிற வகையில், இது போன்ற முரண்பாட்டு பட்டியல் இன்னும் நீளும், என்பதை இவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

தரமற்று போன "தக்லீத்" வாதம்
ஒருவர் ஒன்றை சொன்னால், அது அறிவுக்கு முரணாக இருப்பினும், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்திற்கு மாற்றமாக இருப்பினும், ஒருவர் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வாரானால் அப்போது அந்த நபரை அவர் தக்லீத் செய்கிறார் என்று பொருளாகும். 

இது தான் தக்லீதுக்கான அளவுகோலே தவிர, ஒருவரது பேச்சுக்களை, அறிவுரைகளை இன்னொருவர் தமது வாழ்நாளில் மறுத்ததே இல்லை என்பதால் அவர் மற்றவரை தக்லீத் செய்கிறார் என்று கூறுவது அறிவுக்கு பொருந்தாத வாதம். 
அப்படிபார்த்தால் அமெரிக்காவின் பில் கிளிண்டனை கூட ஒருவர் தக்லீத் செய்வதாக கூறலாம், கேட்டால் அவரது கொள்கை எதையாவது நீ மறுத்து பேசியிருக்கிறாயா ? என்று திருப்பி கேட்டு விடலாம். 

அயனாவரத்தில் டீக்கடை வைத்திருக்கும் சுப்ரமணியனை பற்றி இவர் எந்த குறையையுமே சொன்னது கிடையாது ஆகவே இவர் சுப்ரமணியனை தக்லீத் செய்கிறார் என்று ஃபத்வா கொடுத்து விடலாம் ! 

என்னே இவர்களது அறிவு !!

ஒவ்வொரு நபரின் சொல் செயலை எடுத்து வைத்துக்கொண்டு, இது தவறு, அது தவறு என்று என்று ஒருவர் தமது வாழ்நாளை ஒவ்வொரு மனிதனை பற்றியும் மறுப்பு சொல்வதற்காகவே ஒதுக்கினால் மட்டுமே, அவர் யாரையும் தக்லீத் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும். 

அப்படியும் எங்காவது ஒரு சிலரது கருத்துக்களை இவர் மறுத்து பேச தவறி விட்டார் என்றால், அந்த நபரை தக்லீத் செய்கிறார் என்று சொம்பை தூக்கும் இந்த அறிவிலி கூட்டம்.

தாங்கள் கொண்ட கொள்கைக்கு தங்களிடம் உருப்படியான ஆதாரங்கள் இல்லை, அதற்கு பதிலடியாக நாம் வைக்கும் சான்றுகளை தக்க காரணங்களை கூறி மறுப்பதற்கான திராணியும் இல்லை,
மூளையை கழற்றி காயபோட்டு விட்டு மேற்கண்டவாறு சொம்பு தூக்க மட்டும் இவர்கள் தயார் !

முகநூல் பதிவுகள் - அறிந்தோ அறியாமலோ தவ்ஹீத் ஜமாஅத்தே காரணம்தமிழக அளவில், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்கின்றவர்கள் கூட பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும், அனைத்து உரிமைகளை பெற்றும் வாழ்வதற்கு, இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் என்பது ஒரு ஆச்சர்ய விஷயம்.

மேடையேறி திட்டுகிறார்கள், நாம் மேடை போட்டால் அடிக்க வருகிறார்கள், காவல் துறையில் பொய் கேஸ் பதிவு செய்கிறார்கள், ஆனால் இவர்கள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலமே பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பதே வேடிக்கையான உண்மை !!

சில செய்திகளை சேகரிக்கும் போது மனதில் பட்ட கருத்து இது..!

அல்லாஹ் போதுமானவன் !

இரவு தொழுகை வீட்டில் தொழுவதே சிறந்தது


இரவு தொழுகையை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்கிற கட்டாயமில்லை, வீட்டிலும் தொழலாம் என்று புரிவதை விட பள்ளிவாசலில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் அதிக சிறப்புக்குரியது என்று புரிவது தான் சரியான புரிதல்.

பலர் இந்த உண்மையை அறியாத காரணத்தால், வீட்டில் பல வேலைகள் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு, அவசர அவசரமாக பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள், கேட்டால் நல்லதோர் ரமலானில் பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.

இதோ இவர்களுக்கான ஹதீஸ்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன்.
மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல்: புகாரி 731

கடமையான தொழுகை மட்டுமே பள்ளிவாசலில் தொழப்பட வேண்டியவை. அது தவிர மற்ற தொழுகைகள் வீடுகளில் தொழுவதே அதிக நன்மைகளை பெற்று தரும்.

இருப்பினும் வீட்டில் தொழலாம் என்று நினைத்து, அது பல்வேறு காரணங்களால் தொழப்படாமல் விடுபட்டு போவதை தவிர்க்க பள்ளிவாசலுக்கு செல்கிறோம் என்றால் அது தவறில்லை.

பலருக்கும் பள்ளிவாசல் சென்றால் தான் தஹஜ்ஜத் தொழுகை முறையாக நிறைவேறுகிறது என்பது உண்மை தான் !

முகநூல் பதிவுகள் : அறிவுக்கு பொருந்தா வாதம்


மக்ரிப் தொழுகை 3 ரக்காத் தொழுதோமா 4 ரக்காத் தொழுதோமா என்கிற குழப்பம் ஒருவருக்கு வருகிறது என்று வைப்போம். லுஹர் தொழுகை 4 தொழுதோமா 5 தொழுதோமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது என்று வைப்போம்.

இதை பார்க்கும் ஒரு பாமரன், ஒரு வக்து தொழுகை 2 ரக்காத், ஒரு வக்த் தொழுகை 4, ஒரு வக்த் தொழுகை 3 என வேறு வேறாக தொழுவதால் தானே இந்த குழப்பம் உங்களுக்கு ?

இதை சரி செய்ய எல்லா வக்துக்கும் சீராக 4 ரக்காத் என்று முடிவு செய்வது தான் சரி என்று அவன் சொன்னால் அது எப்படி மடத்தனமான வாதமோ

அது போல தான்

பிறை பார்த்து மாதங்களை தீர்மானம் செய்கையில் சில இடங்களில், சில ஊர்களில் குழப்பம் ஏற்படுவதால் விஞ்ஞான முறைப்படி உலகம் முழுவதும் சீராக கணியுங்கள் என்கிற சிலரது வாதமும் அமைந்துள்ளது.

ஆணும் பெண்ணும் சமமா?ஆணும் பெண்ணும் எல்லா விதத்திலும் சமம் என்கிற எண்ணம் பல குழப்பங்களுக்கும் காரணமாய் அமைகிறது.

பல விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமில்லை !!

அது தான் உலக நியதி. அது தான் இயற்கையான அமைப்பு. அது தான் இயற்கை மார்க்கம் இஸ்லாமும் சொல்வது.

மேலும், இதை புரிந்து கொண்டால் ஆணிடம் ஆணாதிக்கம் வெளிப்படாது என்பது மற்றுமொரு ஆச்சர்ய உண்மை. 
ஆணும் பெண்ணும் சமம் என்கிற வறட்டு சித்தாந்தம் போலிகளால் மொழியப்பட்டு வருவது ஆண்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாதது.

இந்த போலி தத்துவத்தை நம்புகிற பெண்கள், தங்கள் இயல்பையும் மீறி ஆண்களிட்டம் வலிமை காட்ட முற்படும் போது ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாது.
எனக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீ எனக்கு சமமாக பேசுகிறாயா? என்று பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது இதன் காரணமாகவே நடக்கிறது.

இதற்கு மாற்றமாக, ஆண்கள் பெண்களை நிர்வகிக்க கூடியவர்கள், பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள் என்கிற உண்மையை உண்மையாக சமூகத்தில் போதிக்கும் போது அதை பெண்கள் உள்வாங்கி அதற்கேற்றார்போல கணவன்மார்களிடம் நடக்கிறார்கள்,
ஆண்களும், தாம் நிர்வகிக்கிறோம் என்பதால் அவளை அனாவசியமாக அதிகாரம் செலுத்த கூடாது என்று எண்ணுகிறான்.

மனித இயல்பை சரியாய் புரிந்து சட்டம் இயற்ற இறைவனால் தான் முடியும் என்கிற வகையில் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவே சான்று பகர்கிறது !

இஸ்லாத்தில் பெண்கள், மற்ற சமூகத்து பெண்களை விடவெல்லாம் மிக கண்ணியமாக வாழ்வதற்கு இந்த தத்துவமே காரணம்.

மற்ற சித்தாந்தங்களை விடவும் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் குறைவு, இஸ்லாத்தில் வரதட்சணை கொடுமை குறைவு, இஸ்லாத்தில் விவாகரத்து குறைவு, இஸ்லாத்தில் சின்ன வீடு என்று ஏமாற்றுதல் குறைவு, இன்னும் ஏராளமான வகைகளில் இஸ்லாமிய பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று கண்ணியத்துடன் வாழ்கிறார்கள்.
மற்ற எந்த சித்தாந்தங்களிலும் பெண்களுக்கு இந்த கண்ணியம் இல்லை என்பதை இன்று உலகம் புரிய ஆரம்பிக்கிறது.. இதற்கு, ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற இவர்களது வறட்டு தத்துவமும் ஒரு காரணம்.

இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற போலி தத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்வதால் தான் இயல்பாய் தோன்றும் ஆணாதிக்கம் கூட சமூகத்தால் குறையாய் பார்க்கப்படுகிறது !

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

எது வரதட்சணை ?
"உங்க மகளுக்கு எவ்வளவு செய்றீங்க?"

இந்த கேள்வியை கேட்டு சலிப்படைந்த பெண்ணை பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

எனது மகளுக்கு எவ்வளவு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், நீங்கள் எதற்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று அந்த நொடி பெண்ணின் தகப்பனார் மனதினுள் எழும் யதார்த்தமான கேள்வி கூட, தங்கள் மகளின் நலன் கருதி மனதிற்குள்ளேயே சமாதியாக்கப்படும்.

100 சவரன் என்று இவர்கள் சொல்ல, அவ்வளவு தானா? என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க, மாப்பிள்ளைக்கு.... டொயோட்டா கார்... இன்ஷா அல்லாஹ்...... புக் பண்ணலாம் என்று பெண்ணின் தகப்பனார் மென்று விழுங்க, திருமண பேச்சுவார்த்தை இனிதே (?) நிறைவுறும்.

சில நாட்கள் கழித்து பெண்ணின் தாயாரிடம், என்ன? இப்பவே வரதட்சணை எல்லாம் பேசியாச்சு போல? என்ன நியாயம் இது? என்று உற்றார் கேட்கின்ற போது,

"இதை எப்படி வரதட்சணை என்பீர்கள்? எங்க மகளுக்கு நாங்க செய்றோம், இது தப்பா? தவ்ஹீத் தவ்ஹீத் னு சொல்லி எல்லாத்தையும் தப்பாவே பேசுறீங்களே?" என்று பொய் கோபத்தை காட்டுவதை தவிர வேறு வழி இல்லாது நிற்கும் அவர்களை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று குழம்பி போவோம் நாம்.

பெண்ணை பெற்றவர்கள் அவர்களாக விரும்பி தருவதை யாரும் வரதட்சணை என்று சொல்ல மாட்டார்கள்.
அதே சமயம், பெண்ணை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது தருவது தான் விரும்பி தருவது என்பது.
அவர்கள் எப்போது விரும்பி தர வேண்டும் என்பதை மூன்றாம் நபர் தான் தீர்மானிக்கிறார் என்றால் அது பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதாக ஆகாது. பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதற்கு இன்னொருவர் விரும்புகிறார் என்று தான் ஆகும் !

சுருக்கமாக கீழ்காணும் நான்கு காரணங்கள் இருந்தால் அது வரதட்சணை என்று முடிவு செய்யலாம்.

1. மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நேரடியாகவே கேட்பது.

2. இந்த குடும்பத்தில் திருமண உறவு வைத்துக்கொண்டால் நிறைய கிடைக்கும் என்று மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் எண்ணி அந்த அடிப்படையில் திருமணம் செய்வது..

3. நாம் இதை செய்யவில்லை என்றால் நமது மகள் அங்கே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாளோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது..

4. நாம் இதை செய்யவில்லை என்றால் இந்த சமுதாயத்தில் நமக்கான அங்கீகாரம்பறி போய் விடுமோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது.

மேற்கண்ட நான்கோ, நான்கில் ஒன்றோ இருந்தால் அது வரதட்சணை !!
மேற்கண்ட காரணங்கள் ஒன்று கூட இல்லையெனில், பெண் வீட்டார் 100 கோடியே கொடுத்தாலும் அது வரதட்சணை ஆகாது !!

மீலாது எப்போது தோன்றியது ?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, மீலாது விழா கொண்டாடவில்லை. 

அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)

ஆக இவ்விழா நபி காலத்தில் இல்லை என்பதற்கு, பலகீனமான செய்தி கூட இல்லை என்பதே ஆதாரமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, இது ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது.

முகநூல் பதிவுகள் : பிஜே புராணம்
தர்காவிற்கு செல்லுதல் பாவமான காரியம் என்று கப்ர் முட்டிகளிடம் சொன்னால் பிஜே ஒரு முட்டாள் என்று பதில் சொல்கிறார்கள்.

மவ்லூத் ஓதுவதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா என்று இணைவைப்பாளர்களிடம் கேட்டால் பிஜே ஒரு குழப்பவாதி என்கிறார்கள்.

சஹாபாக்களை பின்பற்றலாம் என்று சொல்வது வழிகேடில்லையா? என்று சலபிகளிடம் கேட்டால் பிஜே முர்தத் ஆகி விட்டார் என்கிறார்கள்.

சூனியத்தை நம்புவது இணை வைப்பு என்று சொன்னால் பிஜே ஒரு காபிர் என்று பதில் அளிக்கிறார்கள்.

முஹம்மது (சல்) தான் இறுதி நபி என்று காதியானிகளிடம் சொன்னால் அவர்களும் பிஜேவை ஏசுகிறார்கள்.

சூபிகளிடம் தரீக்காவிலுள்ள தவறுகளை எடுத்துரைத்தால் அவர்களும் பிஜெவையே வசை பாடுகிறார்கள்.

மத்ஹப் வாதிகளிடம் அதிலுள்ள ஆபாசங்களை விளக்கினால், தப்லீக் ஜமாஅத்தினரிடம் அவர்களது அபத்தமான கொள்கைகளுக்கு சான்று கேட்டால் அனைவருமே பிஜெவையே திட்டுகிறார்கள்.

கிறிஸ்தவர்களிடம் பைபிள் கடவுளின் வார்த்தையில்லை என்று நிரூபித்தாலும், நாத்திகர்களின் பகுத்தறிவு வேஷத்தை கலைத்தாலும், ஹிந்துக்களின் மூட நம்பிகைகளை படம் போட்டு காண்பித்தாலும் அனைவருமே ஓன்று திரள்வது பிஜேவை விமர்சிக்கத்தான்..

என்றால், ஒரு விஷயம் புலனாகிறது..

இஸ்லாத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிலும் கூட இரண்டே சித்தாந்தங்கள் தான் .உள்ளன.

ஒன்று, சான்றுகளுடனும் சிந்தனை செறிவுடனும் பேசும் ஏகத்துவ சித்தாந்தம் !

இன்னொன்று, நம்மை கேலி செய்வதையும் திட்டுவதையுமே குறிக்கோளாக கொண்ட மற்ற சித்தாந்தங்கள் !!

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா? (40:69)

முகநூல் பதிவுகள் - இஸ்லாத்தில் பெண்கள்அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கூறியவர்களெல்லாம் புரட்சி கவிஞர்களாக பாராட்டப்படும் இந்த சமூகத்திற்கு,

பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்ற இஸ்லாத்தை, 

பெண்கள் அவர்களுக்கென சம்பாத்தியம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கிற இஸ்லாத்தை, 

தாம் சம்பாதித்த சொத்துக்களை தாமே நிர்வகிக்கலாம் என்று அனுமதிக்கிற ஒரு இஸ்லாத்தை, 

கணவனை பிடிக்கவில்லை என்றால் தைரியமாக விவாகரத்து பெற்று கொள்ளும் முழு சுதந்திரத்தை தந்துள்ள இஸ்லாத்தை, 

அதற்கான காரணத்தை கூட சொல்ல தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ள இஸ்லாத்தை,

திருமணத்திற்கென பணம் காசுகளை ஆண்களிடம் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்று சட்டம் இயற்றியிருக்கிற இஸ்லாத்தை,

கணவன் தன்னை விவாகரத்து செய்தால் அதற்கான நஷ்டஈட்டை கூட சட்டப்படி பெற்றுக்கொள்ளும் உரிமையை தந்துள்ள இஸ்லாத்தை,

ஹிஜாப், இத்தா போன்ற சட்டங்கள் மூலம் பெண்களுக்குரிய சமூக பாதுகாப்பை வேறெந்த சித்தாந்தாமும் கற்பனை கூட செய்யாத காலகட்டத்தில், தெளிவான முறையில் வரையறுத்து தந்துள்ள இஸ்லாத்தை 

விமர்சனம் செய்யும் எந்த யோக்கியதையும் கிடையாது !


திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஜமாலி ஹசரத் VS சலபி ஹசரத்


ஜமாலி ஹசரத் : மக்களே.. நூறு ரூபா காணிக்கை, அப்புறம் கொப்பற தேங்கா எல்லாம் கொண்டுகிட்டு, எனது வயிற்று வலியை போக்குங்க அவ்லியானு அதோ அந்த தர்கால அடங்கியிருப்பவரு கிட்ட நாம கேட்டா நம்ம வயிற்று வலியை அவர் போக்குவார்.

பாமரர் : ஹசரத், ஹசரத்,அது எப்படி ஹசரத்? நேரடியா மருந்து மாத்திரை மூலம் போக்குவார் அப்படின்னு சொன்னா நம்ப முடியுது.., எந்த புற சாதனமும் இல்லாம எப்படி ஹசரத் அவர் குணமாக்குவார்? இது அல்லாஹ்வின் ஆற்றலல்லவா ஹசரத்? இப்படி நம்புவது ஷிர்க் இல்லையா ஹசரத்?

ஜமாலி ஹசரத் : தப்பு தப்பு.. அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குது அப்படினா சொல்றோம்?? அல்லாஹ் அந்த சக்தியை அவருக்கு வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் ஆற்றலால் அதை அவர் செய்கிறார். அப்படிதான் சொல்றோம்.
எத சொல்றதா இருந்தாலும், "அல்லாஹ் இந்த சக்திய அவருக்கு குடுத்திருக்கான்" அப்படிங்கற இந்த பிட்ட சேர்த்து விடு, எதுவுமே தப்பாகாது.. சரியா !

பாமரர் : சரிங்க ஹசரத்.. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். உங்க அறிவே அறிவு !

சலபி ஹசரத் : பக்தர்களா, இங்கிருந்துகிட்டே யார் வேணாலும் எங்கேயிக்கிருக்ககூடிய ஒருவனையும் என்ன வேணா செய்யலாம். கை காலை முடக்கலாம், பைத்தியமாக்கிடலாம்.. நமக்கு தேவை, அந்த ஆளோட முடி அல்லது நகம் மட்டும் தான் சரியா.. ?

பக்தன் : ஹசரத் ஹசரத், அதெப்படி முடியும் ஹசரத் ? இருந்த எடத்துலே இருந்துகிட்டே இன்னொருத்தனோட கையை முடக்குறது அல்லாஹ்வோட சக்தி இல்லையா ஹசரத் ?

சலபி ஹசரத் : பக்தா, அப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாதுப்பா.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குதுன்னா சொல்றோம்? அல்லாஹ் அந்த சக்திய கொடுப்பான் பக்தா..
அல்லாஹ் கொடுக்கும் போது அதை அவர் செய்வார்.
இப்படி போய் சொல்லு சரியா..
எப்பவுமே, இத அவருக்கு செய்ய முடியும் னு மொட்டையா சொல்லாத, அல்லாஹ் அந்த சக்திய அவருக்கு கொடுப்பான்னு ஒரு பிட்ட எப்போதும் சேர்த்துக்கோ சரியா??

பக்தன் : அட சூப்பர் ஹசரத்.. பிரமாதம் ! உங்கள் அறிவோ அறிவு.. இந்த ஒரு பாயிண்ட் போதும், ஒரு கை பாத்துடறோம் ..