புதன், 3 நவம்பர், 2010

பெண்களின் கடமை !

பெண்களே! நீங்கள் நல்லவர்களா ஆக வேண்டுமா? இஸ்லாம் கூறும் வழிமுறைகளை கடைபிடியங்கள்

உலகத்திலே சிறந்தது பெண்கள் தான்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ர­
நூல் : முஸ்­ம் 2911

நல்ல பெண்கள் யார்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
,,,,,,,,,,உங்களுக்கு சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள், ஆணுக்கு ஒழுக்கமுள்ள பெண்கள் தான் (பெரிய) பொக்கிஷமாக திகழ்கிறாள். அவன் பார்க்கும் போது அவள் மறைத்துக் கொள்வாள், அவன் கட்டளையிட்டால் அவள் கட்டுபடுவாள், அவன் (வீட்டில்) இல்லாத போது தனது மானத்தை பேணிக்கொள்வாள்.
அறிவிப்பவர் : உமர் ர­ அவர்கள்
நூல் : அபூ தாவூத் 1417
வீட்டில் கணவரில்லையென்றால் பிறருக்கு அனுமதி தர கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5195
குழைந்து பேசக்கூடாது

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள் (33:32)
வெளியே சுத்தக் கூடாது
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான் (33:33)
தனியாக பிராயணம் செய்ய கூடாது


இப்னுஅப்பாஸ்(ரலி)அவர்கள்கூறியதாவது:
”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள் புகாரி 3006
முக்காடுகளை போட வேண்டும்

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ....
24:31
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்த தில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்ரிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில் களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிரிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் : முஸ்­ம் : 4316
கணவன் வீட்டில் இருந்தால் அனுமதியுடன் நோன்பு வைக்க வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்க லாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 5195
குழந்தையை சரியான முறையில் வளர்க்க வேண்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஆணுக்கு ஒப்பாக வளர்க்க கூடாது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், ”அவர்க(üல் அலிக)ளை உங்கள் வீடுகüலிருந்து வெüயேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெüயேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெüயேற்றினார்கள்
புகாரி 5886
மனைவி படுக்கைக்கு வரவில்லையென்றால் சாபம் உண்டாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத் துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புகாரி 3237
அல்லாஹ் முடிவு செய்த விஷயத்தில் சுயவிருப்பம் நுழைக்க கூடாது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக