புதன், 3 நவம்பர், 2010

ஏன் அழுறீங்க ஜமாலி சாஹிப் ?

ஜமாலி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறார்…..

சு.ஜ- (சு.ஜ. என்றால் சுன்னது ஜமாஅத் உறுப்பினர் என்று அர்த்தம்) ஏன் அலூறீங்க ஜமாலி சாஹிப்?

ஜமாலி: வீணா போய் விவாதத்துக்கு சவால் விட்டு இப்பிடி வாங்கிக்கட்டிக்கொண்டோனே…. ஹய்யோ இப்பிடி அவமானப்படுத்திட்டான்களே…ஊ..ஓ..

சு.ஜ.- சரி விடுங்க சாப் இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டதுதானே, என்ன இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அவமானமாப்போச்சு.. என்ன பண்றது. இதுக்கெல்லாம் கலங்கினா எப்பிடி, நம்மள அப்துல காதர் ஜெய்லானி காப்பாத்துவார்,

ஜமாலி: முதல்ல மெதுவாத்தான் ஆரம்பிச்சாங்க, ஆனால் நம்ம வீடியோவ போட்டு நமக்கே ஆப்பு அடிப்பானுகன்னு நெனக்கிலையே, அடுத்த ஜும்மாவுலையே இனிமே வீடியோ எடுக்கறதே ஹராம்னு பத்வா கொடுக்கணும்,

சு.ஜ- ஐயோ அதுக்கு ஆதாரம் கேட்டாங்கன்னா..?!

ஜமாலி: யாராவது ரஹ்மதுல்லாஹி அலைகி சொன்னாங்கன்னு சொல்லிட வேண்டியதுதான் இல்லேன்னா, ரசூலுல்லா கூறியுள்ளார்கள் என்று சொல்லிட வேண்டியதுதான்,

சு.ஜ.- எடுத்துக்காட்ட சொன்னா?

ஜமாலி: நான் எல்லாம் விவாதத்துலையே போய் ”மிருகத்துடன் புனர்ந்தவனுக்கு தண்டனை இல்லன்னு” ரசூலுல்லாஹ் சொன்னாங்கன்னு திர்மிதில இருக்குன்னு அடிச்சு விட்ட ஆளு, எடுத்துக்காட்ட சொல்லி கேட்டும் எடுத்துக்காட்டல, அதையே யோசிக்காத நம்ம ஆளுங்க, இதையா யோசிக்கபோரானுங்க ?

சு.ஜ.- அதுவும் சரிதான், ஆமா மதுஹப்ல இருந்து அவ்ளோ ஆபாசங்கள அள்ளிப்போட்டான்களே ஏன் ஒன்னக்கூட நீங்க கண்டுக்கல? அதுல ரொம்ப அவமானமாப்போச்சே வழக்கம்போல ஏதாவது உளறியாவது இருக்கலாமே

ஜமாலி- அது கூட்டத்துல ஒருத்தன் என்னைப்பார்த்து சொன்னான், ”டேய் இந்தாளு எவ்வளவு அவமானப்பட்டாலும் தாங்குறான்யா, இவன் ரொம்ப நல்லவேன்னு” சொல்லிட்டான்..(ஓ ஓஒ ஊ ..ஓ கூட்டமே சேர்ந்து அழுவுது)

சு.ஜ.-களியக்காவிளையில் செஞ்ச மாதிரி கிதாப வாசிச்சு காட்டி கிதாப தாங்கன்னு கேட்டு கடைசி வரைக்கும் திறந்தே பார்க்காம இருந்திருக்கலாமே?

ஜமாலி- எத்தனை நாளைக்கித்தான் ஒரே மாதிரி ஏமாத்துறது, அதுபோக இந்த முறை அந்த மாதிரி படத்த ஓட்ட முடியல ஏன்னா கிதாப மூலத்தோட படம் போட்டு காட்டிட்டாணுக, நானும் எவ்வளவு நேரத்துக்குதான் கண்டுக்காத மாதிரியே நடிக்கிறது, கடைசியா ஒரு ஹதீசக்கூட இட்டுக்கட்டிப் பார்த்தேன், அதையும் கண்டுபுடிச்சிட்டாங்க அந்த வஹாபிக்கூட்டம்

சு.ஜ.- சரி விடுங்க இன்னும் கொஞ்சம் விவாதம் மிச்சமிருக்கே எப்பிடி சமாளிக்கப் போறீங்க..?

ஜமாலி- அதான் நான் கண்டுபுடிச்ச பயங்கரமான பிழைகள் இருக்கே நசாயிய நசயின்னு போட்டது ஏன்? அப்படின்னு கேட்டுக்குட்டே இருப்பேன்,

சு.ஜ.- அதுக்குத்தான் பதில் சொல்லிட்டாங்களே, மறுபடியுமா?

ஜமாலி- அதெல்லாம் நம்ம ஆளுங்க மறந்துடுவாங்கய்யா, நம்ம கேட்டுகிட்டே இருப்போம், அத உட்டா நமக்கு வேற வழியும் இல்ல..

சு.ஜ.- நம்ம ஆளுங்கல்ல கொஞ்சம் மூளை இருக்குற யாராவது யோசிக்க ஆரம்பிச்சுட்டா?

ஜமாலி: விடுவேனா நான் உடனே ஒரு கூட்டத்த போட்டு சுன்னத் ஜாமத் மாபெரும் வெற்றி! மீண்டும் வெற்றி! அப்பிடி ஏதாவது டயலாக்க விட்டு இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹுவை காபிர் என்கிறான் இந்த வஹாபி, பிர்அவ்ன் ரஹ்மாதுல்லாஹி அலைஹியை காபிர் என்று சொல்லிவிட்டான்னு கூவினா சரியாப்போயிடும் அதுக்கப்புறம் யோசிக்கவே மாட்டானுக,

சு.ஜ.- அதுசரி அதத்தான் கடந்த காலங்களிலும் நாம செஞ்சோம், களியக்காவிளையிலும்அந்த மாதிரி ஒரு மாநாடு போட்டு கன்னாபின்னான்னு திட்டிப்புட்டோமுள்ள, இந்த முறையும் அதே மாதிரி செஞ்சிடலாம்..ஆமா ஒரு சந்தேகம் பிர்அவ்ன் காபிர்னு குரான்ல ஆல்லாஹ்வே சொல்றானே..?

ஜமாலி- நமக்கு அதுவா முக்கியம் அதுக்கு இப்னு அரபி (ரலி) குடுத்திருக்கும் விளக்கம்தான் முக்கியம், அல்லாஹ் இப்பிடித்தான் ஏதாவது சொல்லுவான், அத விளங்கும் அளவுக்கு நமக்கு மூளையேது,நமக்கு முக்கியம் இமாம்கள் கொடுக்கும் விளக்கம்தான் முக்கியம், நம்ம அதுக்குத்தான் வக்காலத்து வாங்கணும் அது ஏறுக்கு மாறாக இருந்தாலும் சரிதான்,

சு.ஜ.- சரி சரி விவாதம் ஆரம்பிச்சிருச்சு,போய் ஏதாவது பேசுங்க

ஜமாலி- அப்பிடியா இதோ வந்துட்டேன்….அன்பானவர்களே, தொடையை காட்டச்சொல்கிரார்கள் இவர்கள், இரண்டு குடும்பம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் என்கிறார்கள், நசாயியை நசயி என்கிறார்கள், ஆபாசத்தை தூண்டுகிறார்கள்……………………………………………………………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக