புதன், 3 நவம்பர், 2010

இறந்தவர்களுக்காக நாம் செய்ய வேண்டியவை

1 . இறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை, பாவமன்னிப்பு கேட்கலாம்

அவர்களுக்குப் பின்வந்தோர் ” எங்கள் இறைவா! எங்களையும் நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதராகளையும் மண்ணிப்பாயாக!
அல்குர்ஆன் (59 : 10)

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று விசயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகின்றன அவைகள்
1 . நிறந்தர தர்மம்
2 . பயன்தரும் கல்வி
3 . அவறுக்காக துஆ செய்யும் நல்ல குழந்தை
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் :
நூல் : முஸ­ம்

2 . தர்மம் செய்தல்

ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் திடீரென இறந்து விட்டார் அவர்கள் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படி சொல்­யிருப்பார் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! கிடைக்கும் என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூற்கள் : புகாரி முஸ்­ம்

3 . இஸலாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் நேர்ச்சை வைத்து அதை நிரைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிரைவேற்றலாம்

ஸஃது பின் உபாதா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது அனால் அதை நிரைவேற்றாமல் இறந்து விட்டார் நான் என்ன செய்யலாம்? என்று மார்க்க தீர்ப்பு கேட்டார்கள் அதை நிரைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ (ர­)
நூல் : புகாரி

4 . மரணித்தவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிரைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அவரின் பொறுப்பாளர் அதை நிரைவேற்றுவார்

ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை வைத்தார் ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார் அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிரைவேற்றுவாயா? என்று கேட்டார்கள் அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னால் அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்த வாக்கை நிரைவேற்று கொடுத்த வாக்கை நிரைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ (ர­)
நூல் : புகாரி

5 . நோன்பு கடமையாகி அதை நிரைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோர்க்க நேர்ச்சை வைத்து அதை நிரைவேற்றாமல் இறந்து விட்டால் அவர்சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பை நோர்ப்பார்

நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோர்ப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி முஸ்­ம்

6 . இறந்தவர் கடனாளியாக இருந்து அவர் எந்த சொத்து இல்லாத ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிரைவேற்ற வேண்டும்

ஒரு ஜனாஸா தொழுவிப்பதர்க்காக கொண்டுவரப்பட்டது அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு கடன் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள் இல்லை என்று சஹாபாக்கள் பதில்கூறினார்கள் அவருக்காக தொழுவிக்கப்பட்டதன் பின் இன்னொரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது இவருக்கு கடன் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள் ஆம் என சஹாபாக்கள் பதிலளித்தார்கள் அப்படி என்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுவித்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது அபூ கதாதா (ர­) அவர்கள் அக்கடனை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதன் பிறகுதான் நபி (ஸல) அவர்கள் அம்மனிதருக்கு தொழுவைத்தார்கள்
அநிவிப்பவர் : சாலாமா (ர­)
‘ நூல் : புகாரி
நாம் சொன்ன இவ்விஷயங்களைத் தவிர இறந்தவருக்கு செய்ய வேண்டிய வேறு எந்த விஷயமும் இல்லை. இதைத்தவிர இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பரதாயங்கள் அல்லாஹ்வால் நிறாகரிக்கப்படும்

எனவே மறுமையை நம்பக்கூடிய முஃமின்களுக்கு இதுவே போதுமான போதனையாகும் இதை உணர்ந்து வாழ்க்கையில் அமுல்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக