புதன், 3 நவம்பர், 2010

கொலையை நியாயப்படுத்தும் பைபிள்!

குழந்தைக் கொலையை நியாயப்படுத்தும் பைபிள்!


இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும் உபதேசம் பாருங்கள்.

உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 137:9)

அக்கிரமத்துக்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அக்கிரமம் இழைத்தவர்களைத் தண்டித்தால் நியாயம். அவர்களின் குழந்தைகளையும் பிடித்து பாறை மேல் மோதி அடித்து கொடுமையாக கொலை செய்யும் வன்செயலை பைபிள் போதிக்கிறதே? இது பயங்கரவாதம் இல்லையா?

பச்சிளம் குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் நரவேட்டையாடக் கட்டளையிடும் பயங்கரவாதத்தின் மொத்த உருவம் பைபிள், இவ்வுலகைப் படைத்துப் பரிபாலித்து வரும் படைத்தவனின் வேதம் ஆகுமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!

பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் இன்னும் தோண்டப்படும்...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக