வெள்ளி, 31 டிசம்பர், 2010

சஹாபியின் அறிவுரையை கேளுங்கள்!!


ரசூல் (ஸல்) அவர்களையே பின்பற்ற வேண்டும், சஹாபாக்களை அல்ல ! சஹாபியின் அறிவுரையை கேளுங்கள்!!
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்..
மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.
சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)
இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.
ஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.
அதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள்? என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.
இவர்களது மௌனம், மறைமுகமாக, ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்கள் சிறந்தவர் என்பது போல இவர்கள் நம்புவதாக தான் நமக்கு தோன்றுகிறது, அது தான் உண்மையும் கூட!
இவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்! ) பதில் கூறியிருக்கிறார். இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது!

மத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம் கேட்டார். "அது அனுமதிக்கப்பட்டது தான்", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் பதில் தருகிறார்கள். அதற்கு அந்த சஹாபி, "உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே?", என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், ""என் தந்தை ஒன்றை தடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால் எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல்"", என்றார்கள் .
அதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர் அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள்.
(திர்மிதி 753 )


சகோதரர்களின் சிந்தனைக்காக இந்த இழை !

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?


இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே!

இது சரியா?..

நிரவி.அதீன்.பிரான்ஸ்.

பதில் :

இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழுவதையே மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்விக்குரிய பதிலை பார்க்க, இந்த லிங்கை பார்க்கவும்.

பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை, எனவே மார்க்கம் தடுக்காத ஒரு காரியத்தை நாம் தடுக்க முடியாது. பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.


அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் (1340)

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது தான் நபி
ழியாகும். தொழுகையை பிற்படுத்தித் தொழுவது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தத் தவறில் நாம் பங்கெடுத்துவிடக்கூடாது என்பதால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் தொழுகையை தாமதப்படுத்துதல் என்ற பித்அத்தை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றம் இல்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.

அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?


அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீது இருக்கின்றான்.

இதற்கான சில சான்றுகள் வருமாறு :
வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).


நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி ருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ர )
நூல் : முஸ்லிம் (836 )

கிரகணத்தை பார்க்காமல் கிரகண தொழுகை


கிரகணத்தை பார்க்காமல் கிரகண தொழுகை தொழும் போது பிறையை பார்க்காமல் மாதத்தை தீர்மானித்தால் என்ன தவறு?


"விஞ்ஞான பிறை", என்று சமூகத்தில் ஏற்பட்டு விட்ட குழப்பத்தை நியாயப்படுத்த அக்கொள்கையுடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுவும் ஒன்று..

இந்த வாதத்தில் உள்ள தவறுகளை அறிய இந்த உரையை கேட்கவும்..


http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kirkanathi_parkamal_kirakana_thozukai/

அயோத்தி தீர்ப்பை ஆதரிக்கும் (?!?) தமுமுக !!!
"'அந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.... ஆகவே, இப்போதைக்கு இந்த தீர்ப்பை ஏற்கிறோம்! ""

செப்டம்பர் 30 தேதியிட்ட, தமுமுக அதிகாரப்பூர்வ முத்திரையோடும் , அதன் தலைவரின் கையெழுத்தொடும் கூடிய கடிதத்தின் ஒரு பகுதி தான் மேலே தரப்பட்டுள்ளது.


முழு கடிதத்திற்கு இணைப்பைப்பார்க்கவும்.

(தீர்ப்பைக்குறித்து வேறு இடங்களில் விளக்கங்கள் பல அளித்து விட்ட பின்னரும் இக்கடிதத்தை இதுவரை இவர்கள் மறுக்கவில்லை!)


கிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு வரையுள்ள அரசு காலியிடங்களில், 3 .5 சதவீதம் இட ஒதிக்கீட்டினால், முஸ்லிம்களால் பொது பட்டியலில் போட்டியிட முடியாத சூழ்நிலை நிலவியது . அதாவது , இட ஒதிக்கீடு இல்லாமலிருந்திருந்தால் 4 அல்லது 5 சதவிகிதம் வரை ஒதிக்கீடு பெற வாய்ப்பிருந்த போதிலும் இட ஒதிக்கீடு என்ற பெயரில், தமிழக அரசு நம்மை 3 .5 சதவீதத்திற்குள் முடக்கப்பார்க்கிரார்கள் என்ற குற்ற சாட்டு நிலவியது.

(குற்றச்சாட்டு உண்மை என்ற போதிலும், பொதுப்பட்டியலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்து விட்ட நிலையில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது, என்பது தனி விஷயம்)


இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இட ஓதிக்கீட்டையே மறுத்து விட்ட சம்பவத்தை உதாரணமாக காட்டுகின்றனர் சிலர்.
கிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன? என்பதை அறிய, கீழே உள்ள உரையை கேட்கவும்..

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kirithava_idaothukidu_rathu/

மேக மூட்டத்தின் போது...

(பிஜே அவர்களின் "பிறை ஒரு ஆய்வு", நூலின் ஒரு பகுதி..)பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை இங்கே தனித்தனியாகத் தருகிறோம்.


"அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் "என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் :புகாரி 1909


பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1906


மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1907

நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு ஒவ்வொரு தனித்தனி நபரும் பிறை பார்க்க வேண்டும். ஓர் ஊரில் ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காவிட்டால் பார்த்தவர் நோன்பு வைக்க வேண்டும். பார்க்காதவர் நோன்பு நோற்கக் கூடாது என்று பொருள் கொள்ளக் கூடாது.
வார்த்தை அமைப்பு இவ்வாறு பொருள் கொள்ள இடமளித்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை இவ்வாறு பொருள் கொள்ளத் தடையாக நிற்கிறது.
கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் அவர்களது சாட்சியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்று மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தனி நபரும் பார்க்கத் தேவையில்லை. ஒரு பகுதியில் யாராவது ஓரிருவர் பார்த்து சாட்சியம் அளித்தால் அப்பகுதியிலுள்ள அனைவரும் பார்த்ததாகத் தான் பொருள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று எந்தப் பொருளில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது.

தனித்தனி நபர்கள் பார்க்க வேண்டியதில்லை என்றால் உலகத்துக்கே ஒருவர் பார்த்து அறிவிப்பது போதுமா?

ஊருக்கு ஊர் யாராவது பார்த்தால் போதுமா?

எவ்வாறு பொருள் கொள்வது? இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கொள்ளவும் இந்த வாசக அமைப்பு இடம் தருகிறது.

ஆனாலும் முதலாவது கருத்தைக் கொள்வதற்கு நமக்குத் தடை உள்ளது. உலகில் யாராவது பார்த்தால் போதும் என்றால் உலகமெங்கும் ஒரே நாளில் நோன்பு என்ற தத்துவம் நிலை பெறும். அதனால் மாதம் 28 நோன்பு வரக்கூடும். மேலும் நாம் இது வரை எடுத்துக் காட்டிய சான்றுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

ஆகவே ஒவ்வொரு பகுதியிலும் யாராவது பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.

மேலும் உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.
எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள் என்பதன் கருத்து இதுவாகத் தான் இருக்க முடியும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.

சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.
ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.

மேக மூட்டம் போன்ற புறக் காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.

பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது. (இவ்வாறு வாதிடக்கூடியவர்களின் வாதங்களைத் தனியாக நாம் அலசியுள்ளோம்.)


பெருநாள் தொழுகைதிடலில் தொழுகை

பெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத வேறு திடல்களில் தான் தொழ வேண்டும்.

பள்ளி வாசல்களில் தொழுவது அல்லாஹ்வின் ரசூல் காட்டி தராத பித்'அத்தான செயலாகும்

ரசூல் (ஸல்) அவர்கள் , எந்த ஒரு பெருநாளிலும் பள்ளி வாசலில் தொழவில்லை! திடலில் மட்டுமே தொழுதிருக்கிறார்கள்.

ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜ் பெருநாளிலும் முசல்லா என்னும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர்: அபூ சையித் அல் குத்ரி (ரலி)
புஹாரி 956


பள்ளி வாசலில் தொழாமல் திடலில் தொழுவதற்கான காரணம்


இரு பெருநாட்களிலும் வீட்டில் உள்ள மாதவிடாய் பெண்களையும் கன்னிப்பெண்களையும் திடலுக்கு அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழும் இடத்திற்கு சென்று அவர்கள் செய்யும் துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய் பெண்கள் விலகி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.
அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி)
புஹாரி 351


பெண்கள் கட்டாயம் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்

பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ள மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?", என்று கேட்டார். அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள், அவளுடைய தோழி, உபரியான ஆடையை இவளுக்கு அனையக்கொடுக்கட்டும், என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி)
புஹாரி 351

டாக்டரும் அவ்லியாவும் ஒன்றா?

இறந்து போனவர்களிடம் உதவி தேடலாம் என்கிற அப்பட்ட இணை வைப்பு கொள்கையை கொண்டவர்களை நோக்கி அதற்கான குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தை கேட்கும் போது, அதற்குரிய ஆதாரத்தை காட்டுவதற்கு பதில், கேட்பவரை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர்.

"நீங்களும் தானே மருத்துவரிடம் சென்று உதவி தேடுகிறீர்கள்? என் உயிரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கிறீர்கள் தானே ? உயிரை காப்பது அல்லாஹ் தானே? அப்படி இருக்கும்போது, நீங்கள் செய்வது இணை வைப்பு கொள்கை தானே? இறந்தவரிடம் கேட்பது இணை வைப்பென்றால் மருத்துவரிடம் கேட்பது இணை வைப்பு இல்லையா? ""

அர்த்தமற்ற இத்தகைய கேள்விக்கு என்ன விளக்கம்?

இந்த லிங்கை பார்வையிடவும்..


http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/docter_avliya/


"பாத்திஹா" உணவு ஹலாலா ??

வரதட்சணை திருமணங்கள், பெண் வீட்டு விருந்து ஆகியவை, அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் செயல்கள் என்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதில் வழங்கப்படும் உணவு ஹலாலானது தான் என்கிறீர்கள்.

ஆனால், பாத்திஹா, மவ்லூத் போன்றவையும் அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யும் செயல்கள் தானே, அதில் வழங்கப்படும் உணவு மட்டும் ஏன் ஹராம் என்கிறீர்கள்?

மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.

இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அதே நேரத்தில் இத்திருமண விருந்துக்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை திருமணம் நடத்தியவர்கள் கூட விளங்கிக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் திருமண விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறோம்.

அத்திருமணத்தில் தரப்படும் உணவு ஹராம் என்று நாம் கூறவில்லை. உணவே பரிமாராமல் மார்க்கத்திற்கு மாற்றமான திருமணம் நடந்தால் அப்போதும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றே கூறுவோம். ஏனென்றால் இவ்வாறு நாம் கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணம்.

வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!

திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்த காரணம் நமது வீட்டில் இருந்துகொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அத்திருமணத்தை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ''இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1495

தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

மவ்து, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்து ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்து ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் 'அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்ம்கள் என்ற பெயரில் அவ்யாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

வரதட்சனை திருமணத்தில் தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைக்கவுமில்லை. மற்ற உணவுகளைப் போன்று அதுவும் சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்று கூறுகிறோம்.


- onlinepj.com

அல்லாஹ்வுக்காக தர்மம் !தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல் குர்ஆன் 2:261.அல்லாஹ்வுக்காக!! என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,

1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.

தமிழக அரசு அங்கீகரித்த முஸ்லிம் பிரிவுகள்
அன்சர், தேக்காணி, லெப்பை (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட) , ஷேய்க் மற்றும் செய்யது ஆகிய ஐந்தும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவுகள் ஆகும்.

தமிழை தாய் மொழியை கொண்டவர்கள் லெப்பை எனதையும் (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட), உருதுவை தாய் மொழியாகக்கொண்டவர்கள் மற்ற இனங்களைக்கூறி வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது!
மேற்கூறிய எதையும் குறிப்பிடாமல் வெறுமனே "முஸ்லிம்" என்று மட்டும் கூறுவதால் இட ஓதிக்கீட்டுக்கான பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவில் (BCM) நம்மால் இடம்பெற இயலாது என்பதை கவனத்தில் கொள்க!

தமிழக இஸ்லாமிய இணையதளங்கள் - ஒரு அலசல்!!

onlinepj.com ஓர் அலசல்

நம்முடைய இணையதளம் குறித்தும் அதில் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பு குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா சிறப்புச் செய்தியை 21-8-2010 அன்று வெளியிட்டிருந்தது. நமது இணையதளம் குறித்து வெளியிட்ட செய்தியுடன் ஷம்சுத்தீன் காசிமியின் இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பைச் சமநிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் அது எழுதியிருந்தது. எனவே நமது இணையதளத்துக்கு நெருக்கமாக மக்காமஸ்ஜித்.காம் இருப்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி பல சகோதரர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

எனவே இது குறித்து ஆதாரத்துடன் கூடிய அலசலை இங்கே வெளியிடுகிறோம்.

உலகில் உள்ள அனைத்து இணையதளங்களையும் ஆய்வு செய்து அதற்கு மதிப்பீடு அளிக்கும் அலெக்ஸா நிறுவனத்தின் பார்வையில் ஆன்லைன்பீஜே.காம் மற்றும் சில இணைய தளங்களின் மதிப்பீட்டைப் பார்க்கலாம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளம் உலக இணைய தளங்களில் எட்டு லட்சத்தி ஆயிரத்தி அறுநூற்றி நாற்பத்தி எட்டாவது இடத்தில் உள்ளது. 8,01,648

இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் இந்த இணைய தளம் இரண்டு லட்சத்தி முப்பத்தி ஒன்றாயிரத்தி இரு நூற்றி நாற்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 231,244

ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்

ஜாக் என்ற இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான இந்த இணைய தளம் உலக இணைய தளங்களில் 49,63,634 நாற்பத்தி ஒன்பது லட்சத்தி அறுபத்தி மூன்றாயிரத்தி அறுநூற்று முப்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 49,63,634

அதாவது தமுமுகவை விட நாற்பத்தி ஒரு லட்சம் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் இதற்கு ரேங்க் எதுவும் இல்லை.

இஸ்லாம் கல்வி .காம்

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இஸ்லாம்கல்வி.காம் என்ற இணைய தளம் உலக அளவில் மூன்று லட்சத்தி முப்பத்தி ஏழாயிரத்தி இரு நூற்றி முப்பத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. 3,37,233

இந்தியாவில் இந்த இணைய தளம் ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்றி இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.58,323

மக்கா மஸ்ஜித். காம்

ஷம்சுத்தீன் காசிமியின் இணையதளம் உலக இணைய தளங்களில் ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்தி ஐநூற்றி நாற்பத்தி நான்காவது இடத்தில் இது உள்ளது. 9,85,544

இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் ஒருலட்சத்தி மூவாயிரத்தி எழுநூற்று அறுபதாவது இடத்தில் இது உள்ளது.1,03,760

ஆன்லைன்பீஜே.காம்

நமது இணைய தளம் உலக இணைய தளங்களில் ஒரு லட்சத்தி 31 ஆயிரத்தி 151 வது இடத்தில் உள்ளது. 131151

அதாவது உலக அளவில் மக்கா மஸ்ஜித் இணையதளம் நமது இணைய தளத்தை விட 854393 எட்டரை லட்சம் இடங்கள் பின் தங்கியுள்ளது.

அது போல் இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் 14691 பதினாங்காயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்றாவது இடத்தில் நமது இணைய தளம் உள்ளது. 14691

அதாவது இந்திய அளவில் நமது இணைய தளத்தை விட 89069 எண்பத்தி ஒன்பதாயிரம் இடங்கள் மக்காமஸ்ஜித் இணையதளம் பின் தங்கியுள்ளது. அதாவது ஆன்லைன்பீஜெ இணைய தளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத இடத்தில் தான் மக்கா மஸ்ஜித் இணைய தளம் உள்ளது.

மக்கா மஸ்ஜித் இணைய தளத்தை தினமும் 660 பேர் பார்க்கிறார்கள். நேரடி ஒளிபரப்பை சுமார் எழுபது பேர் தான் பார்க்கிறார்கள்.உலகம் முழுவதும் பல நாடுகளில் பார்க்கிறார்கள் என்று சம்சுத்தீன் காசிமி சொன்னது இதைத் தான். இதை அப்படியே நம்பி ஆராயாமல் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
என்னிடம் ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் கேட்டார். எல்லா ஆதாரங்களையும் எடுத்துக் கொடுத்தேன். அது போல் சம்சுத்தீன் காசிமியிடம் எந்த ஆதாரத்தையும் கேட்காமல் அவர் சொன்னதை அப்படியே நம்பி தவறான செய்தியை வெளியிட்டு தனது நம்பகத் தன்மையை டைம்ஸ் ஆப் இந்தியா குறைத்துக் கொண்டது

ஆனால் ஆனலைன் பீஜே இணைய தளத்தை தினமும் பார்ப்பவர்கள் (இந்த மாதம் மட்டும்) பற்றிய விபரம் வருமாறு


தினமும் ஐந்தாயிரம் பேர் சராசரியாக ஆன்லைன் பீஜே இணைய தளத்தைப் பார்க்கிறார்கள்

எனவே டைம்ஸ் ஆப் இந்தியா சம்சுத்தின் காசிமி சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளது. அது ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நம்முடைய மற்றொரு இணையதளமான tntj.net இணைய தளம் தரவரிசையில் ஆன்லைன் பீஜேக்கு நெருக்கமாக உள்ளது.

உலக அளவில் 1,37,816 ஒரு லட்சத்தி முப்பத்தி ஏழாயிரத்தி எண்ணூற்றி பதினாறாவது இடத்திலும் இந்திய அளவில்19852 பத்தொன்பதாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி இரண்டாவது இடத்திலும் உள்ளது.


இரண்டு இணைய தளங்களாக இல்லாமல் ஒரே இணைய தளமாக நம்முடைய இணைய தளம் இருந்திருந்தால் நம்முடைய இணைய இணைய தளம் உலக இணைய தளங்களில் எழுபத்தி ஐந்தாயிரமாவது இடத்தில் இருக்கும்.

எனவே டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒப்பீடு கேலிக்கூத்தானதாக அமைந்துள்ளது.

அப்பாஸ் வெப் மாஸ்டர் onlinepj.


சிராத்துல் முஸ்தக்கீம் என்பது என்ன?அது மறுமை நாளில் சொர்க்கம் - நரகம் இடையே காணப்படும் பாலம் என்று முஸ்லிம்கள் நம்புவது எந்த அளவிற்கு உண்மை?


பதில் :

பாலம் இருப்பது உண்மை ! ஆனால், அதற்கு பெயர் சிராத்துல் முஸ்தகீம் என்று குர் ஆன், ஹதீஸில் எங்கும் கூறப்படவில்லை !!

நேரான வழி என்பதே இதற்கு பொருள்.

விபரத்திற்கு இந்த வீடியோவை காணவும்..

முஸ்லிம்களுக்கு மட்டும் தான் ஸலாம் சொல்ல வேண்டுமா?


முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.
இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.
பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.
அரபி 25
'உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
திருக்குர்ஆன் 60:4
அரபி 26
'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்' என்று (இப்ராஹீம்) கூறினார்.


திருக்குர்ஆன் 19:47
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.
முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்'. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.
'உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு' என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.
ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.
மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.
அரபி 27
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது 'ஸலாம்' எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 25:63
அரபி 28
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். 'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
அரபி 29
'என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்' என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
திருக்குர்ஆன் 43:88,89
மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
அரபி 30
வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258
வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.
வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.
அரபி 31
யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927
யஹதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.


பராஅத்தும் மத்ஹபுகளும்நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய ஆட்சி தான் முஸ்லிம்களின் லட்சியமா?
கிலாஃபத் – உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கருத்து தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தையுடையவர்களின் வாதங்கள்:

கிலாஃபத் என்பது இல்லாமல் இஸ்லாம் என்பதே இல்லை. இந்த இலக்கைக் கொண்டு தான் நுபுவ்வத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்றதும் இதற்காகத் தான்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். அப்போது தான் மது விலக்கு போன்ற கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிந்தது. எனவே இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இஸ்லாம் முழுமையாக நடைமுறைக்கு வராது.


எதிர்காலத்தில் மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றும் போது இஸ்லாமிய ஆட்சிக்காக பைஅத் செய்ய வேண்டும். அந்த கிலாஃபத்தை உருவாக்க இப்போதே முயற்சி செய்வது நமது கடமையாகும். மஹ்தீ தொடர்பான நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும், 24:55 வசனமும் கிலாஃபத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.


இவ்வாறு இவர்கள் வாதிடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் செய்பவர்களிடம் பைஅத் பெறும் முறை உள்ளது.

இது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏகத்துவத்தில் கேள்வி பதில் பகுதியிலோ அல்லது தனிக் கட்டுரையாகவோ விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் – நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.

தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.


அல்குர்ஆன் 2:246, 247

நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.

அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன் என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர் என்றார். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.


அல்குர்ஆன் 12:55

எனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.


என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

அல்குர்ஆன் 21:25

எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.

அல்குர்ஆன் 5:99

தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?


அல்குர்ஆன் 16:35

இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது; இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

இவ்வளவு தெளிவாகத் திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம்.


அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 6:21

நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம்.


அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.


(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)

நூல்: புகாரி 3612, 3852

நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.


அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.


அல்குர்ஆன் 24:55

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்பதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் பெறப் போகும் வெற்றி குறித்து அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் போருக்கு அழைக்கும் போது நயவஞ்சகர்கள் புறக்கணிப்பது பற்றிய செய்தியைக் கூறி விட்டு, அதன் பிறகு தான் மேற்கண்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.


(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக!


அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

அல்குர்ஆன் 24:53, 54

24:55 வசனத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று ஒரு வாதத்திற்குக் கூறினாலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள எந்தச் சான்றும் இதில் இல்லை.


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்குப் பூமியில் அதிகாரம் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியை இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று மேற்கண்ட வசனம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை. மேலே எடுத்துக் காட்டியுள்ள புகாரி 3612 ஹதீஸ் இதைத் தான் கூறுகின்றது.


எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.


சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்?


இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.


நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.


மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றுவார்கள், இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்று முன்னறிவிப்புக்கள் இருப்பது உண்மை தான். ஆனால் மஹ்தீ (அலை) அவர்கள் தான் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் உருவாக்கி வைத்த அடித்தளத்தில் தான் மஹ்தீ (அலை) அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என்று கூறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டமாகும்.


இந்த வாதத்தை முன் வைக்கும் கூட்டத்தினர் பைஅத் பெறுவதை வலியுறுத்துகின்றனர். பைஅத் எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் இந்த பைஅத்திற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.


அல்குர்ஆன் 48:10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.


நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிலிரிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12)


இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.


இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அரிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.


இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.


எனவே நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவு படுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.

நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது, உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இதற்கு அனுமதி உண்டு.

இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.


இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர் களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு

எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்