புதன், 3 நவம்பர், 2010

ஜமாத்துல் முஸ்­லிமீன் கூட்டத்தினர் யார்?


உலகில் பல்வேறு அமைப்புகள் இஸ்லாம் என்கிற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இஸ்லாமியர்களை வழிகெடுத்துக் கெடுத்துக் கொண்டு இயங்கிவருகிறது.

அதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் ஜமாத்துல் முஸ்லீமீன் என்ற வழிகெட்ட அமைப்பும் அடங்கும்.

இவர்கள் தங்களுக்கு ஜமாத்துல் முஸ்லீமீன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் முழுக்க முழுக்க கவாரிஜின்களின் கொள்கைகளை கொண்டவர்கள்.


இந்த அமைப்பின் தலைவர்கள்:


ஷைக் இஸ்மாயில் அலீ. இவர் ஜாமிஆ அஸ்ஹர் பல்கலைகழகத்தி­ருந்து படித்து வந்தவர். ஷைக் அப்துல் பத்தாஹ் இஸ்மாயீல் என்பவர்கள்.
ஷீக்ரி அஹ்மத் முஸ்தபா என்பவர்.


இவர்களின் கொள்கைகள் :


1. இஸ்லாமிய ஆட்சி. ‘

2. கலீபாக்களை நியமிப்பது கட்டாயம்.

3. இவர்களின் ஜமாத்தில் சாராதவர்கள் அனைவரும் காபிர்கள்.


4. (ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டவர்கள் காபிர்கள்) அல்லாஹ்வின் வேதத்தின் படி தீர்ப்பளிக்க வேண்டும்.


5. இன்னும் இமாம்களின் கருத்துக்கள், அவர்களின் ஏகோபித்த முடிவுகள், ஸஹாபாக்களின் இஜ்மா இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் முஷ்ரிக்.

6. ஹிஜ்ரி 4 ம் நூற்றாண்டிற்குப்பிறகு வந்த அனைவரும காபிர்கள். (ஒரு புறம் அவர்களை காபிர்களாக்கிவிட்டு அவர்கள் அறிவித்த செய்த மட்டும் ஏற்றுக்கொள்வார்கள்)

7. ஸஹாபாக்களின் கருத்துக்கள், அவர்களின் செயல்கள் ஆதாரமாக அமையாது. அது நான்கு கலீபாக்களின் கருத்தாக இருந்தாலும் சரியே.

8. ஜீம்ஆத் தொழுகைகள், ஜமாத் தொழுகைகளை முஸ்லி­ம்களின் பள்ளிவாசல்களில் தொழக்கூடாது.

அவைகள் மஸ்ஜிதுன்னபி ஆக இருந்தாலும் மஸ்ஜிது ஹரமாக இருந்தாலும் மஸ்ஜிது அக்ஸாவாக இருந்தாலும் அவர்களைச் சார்ந்த இமாமாக இருந்தால் மட்டும் தொழுது கொள்வார்கள். இல்லையெனில் தொழமாட்டார்கள்.


9. இந்த ஜமாத்தின் தலைவர் ஷீக்ரி முஸ்தபா என்பவரை எதிர்பார்க்கப்பட்ட மஹதி என்று அழைக்கிறார்கள்.

இந்த கொள்கைகள் பரவிய இடங்கள் :


மிஸ்ர், யமன், ஜோர்டான், மற்ற அரபிய தீபகர்பங்கள். இநத சிந்தனையின் தாகங்கள் பாகிஸ்தான், இலங்கை, இந்தியாவிலும் கூட ஆங்காங்கே அரசலும் புரசலுமாக பரவியிருக்கிறது.

ஆதாரங்கள் :


முஹம்மத் ஷீக்ரி எழுதிய நூற்கள் இவர்களின் ஜமாத்தின் கொள்களாக இருப்பதால் அவர் எழுதிய நூற்களையே ஆதாரமாக கொண்டிருக்கிறோம்.


- kadayanalluraqsha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக