புதன், 3 நவம்பர், 2010

ஹஜ்ஜ் பெருநாள் பிறையை எப்படி தீர்மானிப்பது?

ஹஜ்ஜ் பெருநாள் பிறையை எப்படி தீர்மானிப்பது?

மதினாவில் வாழ்ந்த ரசூல் (ஸல்) அவர்கள், மக்காவில் ஹஜ்ஜ் எந்த நாள் என்பதை அறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் இதை செய்யலாம், ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்ற வாதமும் தவறு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜ் பெருநாள் என்பது துல ஹஜ்ஜ் மாதம் பத்தாம் நாளாகும்.
மாதத்தின் முதல் பிறை மக்கா நகரில் என்றைக்கு தெரிந்தது என்பதை அறிய ரசூல் (ஸல்) அவர்களுக்கு பத்து நாட்கள் அவகாசம் இருந்தது.
இந்த அவகாசத்தில், ஒரு மனிதரை மதினாவிலிருந்து மக்காவுக்கு அனுப்பி அங்கு என்றைக்கு அரபா தினம், என்றைக்கு பெருநாள் என்பதை அறிந்து வர ஏவியிருக்கலாம்.
உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே நாளில் தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது உண்மை என்றிருந்தால் அதை ரசூல் (ஸல்) அவர்கள் செய்ய தவறியிருப்பார்களா? என்று நாம் சிந்தித்தால், பிறை பார்ப்பது என்பது தத்தமது ஊரை சார்ந்த விஷயம் என்பதையும், அதற்காக ரசூல் (ஸல்) அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதையும் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக