புதன், 10 நவம்பர், 2010

உளறலுக்கு பதில்

""தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக பிஜெ ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்ன?""

என்ற ஒரு கிறுக்குத்தனத்தை கேள்வியாக வடித்துள்ளார், செங்கிஸ்கான் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய லீக் தலைவர் திரு பஷீர் அஹமத் அவர்களிடம் போஸ்டர் குறித்துவிளக்கம் கேட்ட போது, அதற்கும் அவருக்கும் சம்மந்தமில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாகவே நான் அறிந்துளேன்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறில்லை என்றாலும், அவதூறான போஸ்டர் ஒன்றைஒரு கும்பல் ஒட்டியுள்ளது, ஒரு இயக்கத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின்காரணமாக, அதை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்குவோம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதை போன்று சிலபொய்களையும், அவதூறுகளையும் போஸ்டரில் உமிழ்ந்து விட்ட கும்பல் சமூகவிரோத கும்பல் தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பிரதமரை சந்திக்க செல்லும் போது இவர் சமூக விரோதி என்பது பிஜேக்குதெரியாதா என்ற ஒரு அற்புத (?) கேள்வியை எழுப்பியுள்ளார்.

2008 வரை, உம்மை கூட சமூக விரோதி என்று பிஜே க்கு தெரியாமல் தானேப்பா இருந்தது?


ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பிறகு, ஒருவரையோ, ஒரு இயக்கத்தையோ பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளதால், இதற்கு முன்பு நீர் அவரோடு செர்ந்திருக்கவில்லையா ? என்ற கேள்வி முதலில் முட்டாள்தனமாக உமக்கு தோன்றவில்லையா? அல்லது இந்த கேள்வி தான் உமக்கு பொருந்துமா?

தேச துரோகி, சமூக விரோதி, முஸ்லிம் சமுதாயத்தின் முதல் எதிரி என்று நீரும் உமது தலைவரும் முன்பு தமுமுக குறித்து முழக்கமிட்டீர்களே, அந்த முஸ்லிம் இன துரோகிகளுடன் ஒரே மேடையில், தரிசனம் தரும் கீழ்தர செயலை நீர்செய்து கொண்டிருக்கும் போது, இது போன்று பிஜே நோக்கி கேள்வி எழுப்ப முதலில் அடிப்படை தகுதியாவது உமக்கு இருக்கிறதா?

வறட்டு வாதங்கள் புரிந்து காழ்ப்புணர்ச்சியை கொட்டிதீர்க்காமல், உங்கள் இயக்க வேலைகளை, இறைவனுக்கு பயந்து செய்து கொண்டிருங்கள் . அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும்..
அல்லாஹ் போதுமானவன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக