புதன், 3 நவம்பர், 2010

பிறை பார்த்தல்

பிறை பார்ப்பதை பொறுத்தவரை, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஏற்ப்பட்ட சில புதிய கருத்துக்களின் காரணத்தால் தான் சமுதாயம் இவ்வாறு குழம்பிக்கிடக்கிறது.
குழப்பங்கள் ஏற்படுமாயின், ரசூல் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அதே போல் நாமும் செயல்படுவது அனைத்து வகையிலும் நமது ஈமானுக்கு பாதுகாப்பானது.
உலகத்தில் ஒரு இடத்தில் தோன்றிய பிறை தகவலை ஒரே இரவில் உலகம் முழுவதற்கும் எடுத்து செல்லும் அளவிற்கு சாதனங்கள் நபி காலத்தில் இல்லை.
அடுத்த வருடத்தில் எந்த கிழமையில், எந்த தேதியில், எந்த, ஊர், எந்த நேரத்தில் முதல் பிறை தோன்றும் என்ற தொலை நோக்குப்பார்வையை ரசூல்(ஸல்) அவர்கள் கொண்டிருக்கவில்லை.
அவர்களது வசதிற்கு ஏற்ப, தத்தமது ஊர்களில் பார்த்து முடிவு செய்யும் வாய்ப்பு ஒன்று தான் ரசூல்(ஸல்) அவர்களுக்கும் சஹாபாக்களுக்கும் இருந்திருக்கின்றது.
இதையே நாமும் செய்வது தவறா? என்பது என்னுடைய அடிப்படை கேள்வி.
நான் குர் ஆன், ஹதீசுக்குள் செல்லவில்லை. (சென்றாலும், அவரவர் ஊர்களில் பார்த்து முடிவு செய்யும் தீர்மானம் தான் மேலோங்கும்)
அவரவர் ஊர்களில் பிறை பார்த்து தான் ரசூல்(ஸல்) அவர்கள், நோன்பு, பெருநாட்களை முடிவு செய்தார்கள். இதையே நாமும் முடிவு செய்தால், இந்த முடிவானது, குரான், ஹதீஸுக்கும் மோதவில்லை, ரசூல் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றியதை போலும் ஆகி விட்டது எனும்போது, இது தானே சிறந்த வழி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக