புதன், 3 நவம்பர், 2010

மவ்லிதை எழுதியவர் யார்?

(தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து..)




சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக