வியாழன், 7 ஏப்ரல், 2011

நாங்கள் மானமிழந்த கதை !


இட ஒதிக்கீடு கோரிக்கையும் இன உணர்வு நாடகமும்
நாங்கள் மானமிழந்த கதை சுருக்கம் ..!



அஸ்ஸலாமு அலைக்கும்..

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய கட்சி எது என்பதை பொறுத்து முஸ்லிம்களின் வாக்குகள் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடனும் வீரியத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். தேர்தலில் போட்டியிட்டு தமக்காக எந்த சீட்டும் பெறுவதில்லை என்பதை தன் அடிப்படை கொள்கையாகவே கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் பின்னால் மக்கள் அணியணியாக திரண்டு வந்ததை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சமூகம் கவனித்து வருகிறது.
சமுதாய மக்களிடையே விழிப்புணர்வும் செயல்திறனும் அதிகரித்திருப்பதற்கு இது போன்ற சமூக மாற்றங்கள் ஒரு அத்தாட்சியாகவும் உள்ளன.

இதை கண்டு பொறுக்க இயலாத தமுமுகவினர், இந்த சமுதாயத்தை தன் பக்கம் இழுத்துக்கொள்ள பல வகையான முயற்சிகளை செய்து பார்த்தாலும் எந்த முயற்சிக்கும் அவர்களுக்கு அல்லாஹ் பலன் அளிக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
ஒரு காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்ட இந்த இயக்கம், தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைத்திருக்கும் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு கொதிப்படைந்து , நேரடி அரசியலில் பங்கு கொண்டு அதன் மூலம் மக்களை கவர்ந்து தன் பக்கம் இழுதுக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டனர்.

தங்களின் சுய லாபத்திற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும், புகழ் அடைவதற்காகவும், அரசியல் அதிகாரத்தை பெற்று சமூகத்தை சுரண்டிப்பிழைப்பதற்காகவும் அரசியல் களம் கண்டுள்ளனர் இந்த தமுமுகவினர்.
ஏற்கனவே இறைவன் மீது ஆணையாக அரசியலில் நுழைவதில்லை என்று இந்த சமுதாயத்திடம் சத்தியம் செய்ததையும், இன்று அந்த சத்தியத்தை அவர்களே மீறி, தாங்கள் எந்த கொள்கையும் அற்றவர்கள் என்பதை தாங்களே நிரூபித்துக்கொண்டனர் என்பதையும் பல முறை நாம் விரிவாக விளக்கியுள்ளோம்.
அது ஒரு பக்கம் இருக்க, தாங்கள் எந்த நோக்கத்திற்காக அரசியலில் நுழைந்தோமோ, அந்த நோக்கத்தை வெளிக்காட்டினால் இந்த சமூகம் காறித்துப்பும் என்பதால், நாங்களும் சமுதாய போராளிகள் தான் என்ற நாடகத்தை அரங்கேற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலின் போதும் சமுதாய கோரிக்கை ஒன்றை முன்வைத்து போராடுவதை போன்று இந்த கும்பலும் போராட்டங்களை அறிவிக்க துவங்கியது.

கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக அளவில் முஸ்லிம்களுக்கான தனி இட ஓதிக்கீட்டுக்கான அவசியத்தை தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரங்கள் வாயிலாக அனைத்து மக்களும் மிக துல்லியமாக விளங்கிக்கொண்டனர்.
2006 இல் ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் முன்னால் இட ஒதிக்கீட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, அதை நிறைவேற்றி தருபவர்களுக்கே முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு, என்ற உறுதியான நிலையை உருவாக்கி, மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையை தமிழக முஸ்லிம்களை நோக்கி திருப்பியதில் தவ்ஹீத் ஜமாஅத் தனது பங்களிப்பை வெகு சிறப்பாக செய்திருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய விழிப்புணர்வை கண்டு கொண்ட இந்த தமுமுகவினர், இதே போன்ற ஆயுதத்தை நாமும் கையில் எடுத்தால் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், இதன் மூலம் அரசியல் பிரவேசத்திற்கு தேவையான மக்கள் செல்வாக்கையும் மிக எளிதாக சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசையில் தங்கள் இயக்கம் சார்பாக இட ஒதிக்கீடு கோஷங்களை செய்ய துவங்கினர்.

தேர்தலில் போட்டியிடாதவர்கள் போராட்டத்திற்கு அழைத்தால் மக்கள் வருவார்கள், தேர்தலில் போட்டியிட்டு தங்களுக்காக சீட்டு பெறும் நோக்கில் செயல்படுபவர்களின் பின்னால் மக்கள் அணி திரள மாட்டார்கள் என்ற சாதாரண உண்மையை கூட விளங்காத இவர்கள், தங்கள் நோக்கம் நிறைவேறி விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தனர்.
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை கூட மறந்து, இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் விதமாக அல்லாஹ் இவர்களை அன்றே சந்தி சிரிக்க வைத்தான்.

இட ஒதிக்கீட்டை தருபவர்களுக்கு தான் ஓட்டு, அதை தராமல் ஏமாற்றும் எந்த கட்சியானாலும் தயவு தாட்சணியமற்ற எதிர்ப்பு என்ற மிக உறுதியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்த வேளையில், தாங்கள் அப்போது சார்ந்துள்ள திமுகவின் தயவை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தாங்கள் நடத்திய இட ஓதிக்கீட்டு போராட்டத்தை கூட மென்மையாக்கி கொண்டனர் இந்த தமுமுகவினர்.

மாநில அரசுக்கு இட ஒதிக்கீடு வழங்குகின்ற அதிகாரமே இல்லை என்று கூறி, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை எதிர்த்து தமிழகத்தில் போராட துப்பில்லாமல் டில்லி சென்றனர் இந்த கும்பல்.
இந்த சமுதாயம் அன்றே இவர்களை அடையாளம் கண்டு கொண்டது !

இருந்தாலும், பேராசையும் பணத்தாசையும் ஒருவனுக்கு வந்து விட்டால், அவன் எந்த இழி நிலைக்கும் செல்வான் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் என்பதற்காக இந்த கும்பலின் பச்சோந்தித்தனத்தை அன்று முதல் இன்றைய தேதி வரை அல்லாஹ் நமக்கு அம்பலப்படுத்தி தந்து கொண்டே இருக்கிறான் என்பது தான் வேடிக்கை!

இட ஒதிக்கீட்டை வழங்குகின்ற அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என்றார்கள்.
கருணாநிதியை அவராகவே இட ஒதிக்கீட்டை வழங்க வைத்து , இட ஒதிக்கீட்டை வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு உள்ளது என்றும், இந்த போலிகள் கூறுவது தான் பொய் எனவும் அல்லாஹ் உடனடியாக நிறைவேற்றிக்காட்டினான்.

அடுத்ததாக, இந்த அளவிற்கு போராடி கிடைத்த இட ஓதிக்கீட்டில் குளறுபடி என்று மக்கள் மீண்டும் வெம்ப துவங்க, இட ஒதிக்கீடு என்றால் இப்படி தான், இது ஒரு "சைக்கிள்" , ரோஸ்டர் முறையில் பல வருடங்கள் கழித்து தான் மக்களுக்கு கிடைக்கும் என்று மீண்டும் கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து தங்கள் அரசிய சுயநலத்தை வெளிப்படுத்தியது இந்த கூட்டம்.

உண்மையில், இது ரோஸ்டர் முறையோ, 'cyclic ' முறையோ அல்ல, இது நிர்வாக குறையால் தான் ஏற்படுகிறது என்று அன்றே தவ்ஹீத் ஜமாத மக்களிடையே பிரசாரம் செய்து, இதற்காகவும் பல போராட்டங்களை நடத்தியது.
முடிவு என்ன? அல்லாஹ் இந்த செயலிலும் அந்த கும்பலுக்கு செருப்படி கொடுத்தான்.
மக்களின் முழு வீச்சான போராட்டங்களை கண்டு கொண்ட முதல்வர், இது ரோஸ்டரும் இல்லை சர்கிளும் இல்லை, இது அதிகாரிகள் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் என்றும், உடனடியாக இது சரி செய்யப்படும் என்று தன் வாயாலேயே உறுதி கொடுத்தார்.
எவருக்காக இந்த கும்பல் வக்காலத்து வாங்கியதோ, அவரே இந்த கும்பலுக்கு மூக்குடைப்பு கொடுத்தார் எனும் போது, இதை விடவும் சமுதாயத்தில் அவமானப்பட்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது .

தங்களின் நோக்கம் பதவியும் பணமும் தான் என்றாலும், அந்த நோக்கத்தை வெளிக்காட்டாமல் அரசியல் செய்ய இவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் இறைவனால் கேவலப்படுதப்பட்டன!

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது.
தொடர்ந்து அவமானப்பட்டதால் , இனியும் கருணாநிதியிடம் இருந்து வந்தால் தங்களுக்கு போதிய மதிப்பும் அந்தஸ்தும் , தேவையான பணமும் கிடைக்காது என்று எண்ணிய இவர்கள், அவரை விட்டு விலகி தனியாக தேர்தலை சந்தித்து ஓட்டு பொறுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றைய தேதி வரை கலைஞரை புகழ்ந்து வந்தவர்கள், திடீரென அவை விட்டு விலகுகிறார்களே என்று மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இவர்கள் இன்னொரு பொய்யை சொன்னார்கள்.
கலைஞர் பாராளுமன்றத்திற்கு எங்களுக்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதிக்கீடு செய்துள்ளார். அது எங்களுக்கு போதுமானதாக இல்லை, ஆகவே நாங்கள் அவரை விட்டு விலகுகிறோம், என்றனர்.
2006 இல் இட ஓதிக்கீட்டுக்காக போராட்டங்கள் பல செய்த நிலையில் , அதை நிறைவேற்றி தந்த கலைஞருக்கு நன்றி செய்யும் முகமாக பாராளமன்ற தேர்தலில் கலைஞருக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்த நிலையில், தங்களுக்கும் இட ஓதிக்கீட்டு போராட்டங்களுக்கும் துளி கூட சம்மந்தமில்லை என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் முகமாக, தங்களின் சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்தனர் இந்த தமுமுகவினர்.

மக்களை ஏமாற்றி நயவஞ்சக செயலில் ஈடுபடுகிற எவரையும் அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு அந்த தேர்தலின் முடிவே பாடமாக அமைந்தது!
ஆம்!, அந்த தேர்தலில் தனியாக, சிறு சிறு சில்லறை கட்சிகளின் ஆதரவோடு பதவி ஆசையை நிறைவேற்றுவதற்காக போட்டியிட்டவர்கள், தாங்கள் செலுத்திய முன்பணத்தை கூட திரும்ப பெற திராணியற்று டெபாசிட் இழந்தனர்!!
உண்மையில் அவர்கள் இழந்தது டெபாசிட்டா? இல்லை!! தங்களின் மானம் தான் அன்று அவர்களால் இழக்கப்பட்டது !!!!


ஒரு முமின் ஒரு முறை தவறு செய்வான். பின்னர் திருந்திக்கொள்வான். அது முமினின் பண்பு தான், எங்களின் பண்பல்ல என்பதை வெளிக்காட்டும் முகமாக, இதோ, இந்த வருடத்தின் சட்ட மன்ற தேர்தலில் அவர்கள் மீண்டும் படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அது சரி, மானம் உள்ளவர்களுக்கு தானே அவமானம் என்ற ஒன்று ஏற்படும், அவர்கள் தான் அனைத்தையும் அன்றே இழந்து விட்டார்களே, இனியும் அவர்களுக்கு மானம் போய் விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது தான்!


இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரையிலும், தவ்ஹீத் ஜமாஅத் அதே சமுதாய அக்கறையை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

கலைஞர் முன்பு தந்துள்ள இட ஓதிக்கீட்டுக்கான நன்றியை முந்தைய பாராளமன்ற தேர்தலிலேயே காட்டி விட்ட நாம், இப்போது அடுத்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.
கிடைத்த இட ஓதிக்கீட்டின் அளவு போதுமானதாக இல்லை. நம் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் 3 .5 % என்பது மிக குறைவான அளவு என்பதால், இதை மேலும் அதிகரித்து தருபவர்களுக்கு இந்த முறை முஸ்லிம்கள் வாக்களிக்கலாம் என்ற முடிவை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து, அதையே கோரிக்கையாக கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வைத்தது!

வழக்கம் போல, இந்த மானமிழந்த தமுமுகவினர், அவர்கள் பங்குக்கு வேறு கோரிக்கை ஒன்றை வைத்தனர். தங்களுக்கென்று அதிகமாக சீட்டையும் நோட்டையும் யார் தருகிறாரோ, அவர்களுக்கு ஆதரவு என்பது அந்த கோரிக்கை.
இட ஓதிக்கீட்டின் அளவு மிகக்குறைவு எனவும், கிடைத்த ஒதிக்கீடு கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலைப்படாமல்
தங்களுக்கு சீட்டு தான் முக்கியம் என்று போராடியது இந்த மானங்கெட்ட கூட்டம்!

இவர்கள் மானத்தின் லட்சணத்தை அறிந்து கொண்ட கருணாநிதி, முஸ்லிம் சமுதாய மக்களின் மத்தியில் கூட இந்த கும்பல் ஒரு கேலிப்பொருளாக, மானமிழந்த பேடிகளாக காட்சி தருகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களால் திமுகவிற்கு துளியும் நன்மை இல்லை என்பதால் அவர்களை துரத்தியடித்தார்.
தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதிக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தார். ஆணையம் அமைத்தார். இருக்கின்ற இட ஒதிக்கீடு இனி இந்த ஆணையத்தின் மூலம் முறையாக செயல்படுத்தப்படும் என்று சட்டமியற்றினார்.
அடுத்து ஆட்சிக்கு வந்தால், இதே இட ஒதிக்கீட்டை இன்னும் அதிகமாகி தருவேன் என்று தன் தேர்தலில் அறிக்கையில் வாக்களித்தார்.

தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை முறையாக செயல்படுத்தி பெயர் வாங்கிய கருணாநிதி அடுத்த முறையும் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திமுகவிற்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜெயலலிதாவோ, வழக்கம் போல, தனது காவி சிந்தனை வெளிக்காட்டும் விதத்தில் இட ஒதிக்கீடு குறித்த எந்த வாக்குறுதியும் அளிக்காமல் முஸ்லிம்களை வஞ்சித்தார்.
கடந்த 2006 இல், தோல்வி பயத்தின் காரணமாக, வேறு வழியின்றி முஸ்லிம் வாக்குகளையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இட ஓதிக்கீட்டுக்கான ஆணையத்தை அமைத்த ஜெயலலிதா, இன்று தமக்கென்று பலமான கூட்டணி அமைந்து விட்டது என்பதால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணினார்.
இந்த மானகெட்ட கூட்டத்திற்கு அதை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லையே! கலைஞர் சீட்டு தராமல் துரத்தி விட்டதால் இன்று ஜெயலலிதாவின் பக்கம் சாய்த்துள்ளனர்.
அவர் இட ஓதிக்கீட்டுகான எந்த வாக்குறுதியும் தரவில்லை என்றாலும் , அதை பற்றி துளி கூட கவலையில்லாமல் தங்கள் சுய நலனை மையப்படுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
இட ஒதிக்கீடு குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை நோக்கி இந்த இடத்தில் சமுதாயம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறது.

ஏற்கனவே பல முறை மானகெட்ட நீங்கள், கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி தந்த ஒரு சீட்டு (அதாவது ஆறு சட்டமன்ற தொகுதி) போதுமானதில்லை, நாங்கள் எங்களின் மானத்தை காத்தாக வேண்டும் என்று அறிவித்தீர்களே, இன்று இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிடம் மூன்று சீட்டை மட்டும் பெற்று மானம் காத்த லட்சணத்தை கொஞ்சம் விளக்குங்களேன் என்று மக்கள் கேட்கின்றனர்.
வழக்கம் போல, மானமாவது மண்ணாங்கட்டியாவது .. காசே தான் கடவுளடா என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டு வீர நடை போடுகின்ற இவர்கள், இட ஒதிக்கீடு கோரிக்கை நாடகங்கள் இனி பயன் தராது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், நாங்கள் முஸ்லிம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இட ஒதிக்கீடு கோரிக்கையை வைக்ககூடிய தார்மீக உரிமையை இழந்த இவர்கள், இப்போது இந்த இன உணர்வை தூண்டுவதிலாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பத்து இடங்களிலும், சுயேட்சையாக முப்பது, நாற்பது இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த மானமிழந்த கூட்டம் முன்வைக்கும் இன உணர்வு நாடகம் உண்மை என்றால், மேலே குறிப்பிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இவர்கள் தங்களை ஆதரவை முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.
"கட்சி வேறுபாடு பாராமல், நாங்கள் இதோ, முஸ்லிமுக்கு ஆதரவளிக்கிறோம், அதே போன்று நீங்களும் ஆதரவளியுங்கள், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கு வாக்களியுங்கள்", என்று இவர்கள் சொல்லியிருந்தால், இந்த விஷயத்திலாவது இவர்கள் நேர்மையுடன் நடக்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.
நேர்மைக்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்று கூறும் வகையில், மற்ற மற்ற தொகுதிகளில் முஸ்லிமை எதிர்த்து காபிரை ஆதரிக்கும் இவர்கள், தங்கள் தொகுதியில் மட்டும் முஸ்லிம் என்ற முறையில் தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது இன உணர்வா அல்லது நயவஞ்சகத்தனமா? என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை.


அடி மேல் அடி வாங்கி இனியும் இழப்பதற்கு கொஞ்ச நஞ்ச மானம் கூட இல்லை என்ற நிலையில் அல்லாஹ் இவர்களை புறந்தள்ளி விட்ட நிலையில், "நாங்கள் முஸ்லிம்கள்" என்று கோரிக்கை வைப்பதை, எந்த ஒரு முஸ்லிமும் காறி உமிழாத குறையாக வெறுப்பார்கள் என்பது, மானமிழந்த இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

அனைவரையும் முட்டாளாக்கிய ஹிஜ்ரா கூட்டத்தார் !!

அஸ்ஸலாமு அலைக்கும்..

நேரடி விவாதத்திற்கு வர இயலாது , எழுத்து விவாதத்திற்கு தயார் என்று இப்போது அடுத்த சவடாலை விடுத்திருக்கும் ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியினர், நம்மோடு நடந்த எழுத்து விவாதத்தின் போது, கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழன்று ஓடுவதற்கு "பிஜே உடன் விவாதிக்க போகிறோம்", இனிமேல் நாஷிதின் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டோம்", நாஷிதொடு எழுத்து விவாதத்தை தொடர மாட்டோம், என்று சப்பைக்காரணம் சொன்னார்கள் என்று முந்தைய பதிப்பில் குறிப்பிட்டிருந்தோம்.

அதோடு, நாம் எழுத்து விவாதத்தை மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று இறுதியாக ஒரு அழைப்பை கொடுத்த பின்னரும் கூட, ஒளித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்..



இவற்றுக்கான ஆதாரங்களை இங்கு தருகிறோம்.. (மாதம், தேதி ஆகிய விபரத்துடன்..)


நாஷித் - ஜனவரி 18 , 2011

அன்பு சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு..

இதுவரை நிகழ்ந்த விவாதத்தின் போது, பல பல கேள்விகளையும் ஹதீஸ்களையும் நான் முன்வைத்த போதும் கூட, நான் மெயில்களை பிரிக்கிறேன் என்றும், முழு ஹதீஸ்களையும் பதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்து, அதை சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்று கூறி வந்தீர்கள்.

ஆதாரங்கள் சொன்ன பிறகும் கூட, வேறு வேறு காரணங்களை கூறி பதில் சொல்வதை விட்டும் தவிர்ப்பதை தானே இவர் நோக்கமாக கொண்டிருக்கிறார் என்ற வகையில், ஒரு கட்டத்தில், உங்களுடனான விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நான் நினைத்தேன்.

ஆனால், இதன் காரணமாக, அந்த ஹதீஸ்களுக்கு நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள், நான் சொல்லும் ஆதாரங்கள் எனது கொள்கைக்கு எவ்வாறு முரணாக இருக்கிறது என்பதை நானும் பிறரும் அறிய ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என்ற கவலையும் இன்னொரு பக்கம் உள்ளது.

இறைவனை முன்னிறுத்தி மட்டுமே நான் இதுவரை விவாதம் செய்து வந்ததால், எனது கருத்தில் தவறு இருக்கிறதா? என்பதை இதுவரை என்னால் அறிய முடியாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது.

இதை மனதில் கொண்டு உங்களுக்கு நான் மீண்டும் ஒரு அழைப்பை இறுதியாக கொடுக்கிறேன்..

பிறை குறித்த விவாதத்தை மீண்டும் செய்வோம், வாருங்கள்..

(முழு மெயிலையும் படிக்க இங்கே சொடுக்கவும்..) ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு




இதற்கு ஹிஜ்ரா கமிட்டியினர் (ஏர்வாடி சிராஜ்) தந்த பதில்களை பாருங்கள்..


இவரிடம் நேரத்தை வீணடிப்பதை விட இவர் எல்லாவகையிலும் ஏற்றுக்கொண்ட சகோதரர் பி.ஜே வுடன் நாம் விவாத ஒப்பந்தம் செய்ய நாம் முடிவெடுத்துவிட்டதால், இவரின் அனைத்து உளறல் கேள்விகளுக்கும் பி.ஜேயுடனான விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்படும் என்பதை குழும சகோதரர்களுக்கு நான் இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


அதே போல் பிறையில் நாஷித்தின் தகிடுதத்தங்கள் அனைத்தும் பி.ஜே வுடன் ஆன விவாத்தில் தோலுரித்துக் காட்டப்படும் இன்ஷாஅல்லாஹ் சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011

நான் மேற்கண்ட முடிவை அறிவித்த பின், அவர் அனுப்பிய கடைசி பதிவு நாஷித் அவர்களின் காலம் கடந்த முடிவை அறிவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.

சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011



மேலும் இவருடன் நாம் இதற்குபின் புது ஒப்பந்தம் செய்து அதன் பின் விவாதம் செய்து முடித்துவிட்டு, நான் சகோதரர் பி.ஜே யுடன் செய்யப்போனால் அது சகோதரர் பி.ஜேயுடன் நான் செய்யவேண்டிய விவாதத்தை நானே காலம் கடத்துவதாகவே மக்கள் கருதிவிடுவார்கள்.

சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


அதிகமான மக்கள் தற்போதே நாம் சகோதரர் பி.ஜே விவாத அழைப்பை ஏற்காமல் காலம் கடத்திவருவதாக நம்மீது குற்றச்சாட்டையும் பதிந்துள்ளார்கள் என்பதையும் இத்தருணத்தில் பதிந்து கொள்கின்றோம்.

சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011

நான் இதுவரை இவருடன் விவாதம் செய்ததால், என்னுடைய நேரத்தை சகோதரர் பி.ஜே உடனான விவாத ஒப்பந்தத்திற்கான முன்னேற்பாடுகளுக்கு கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


எனவே குழும சகோதரர்கள் அனைவரும் சகோதரர் பி.ஜே யுடன் நான் செய்யப்போகும் விவாத ஒப்பந்தம் நேர்மையான முறையில் நடைபெறுவதற்காகவும், மக்கள் குழம்பியுள்ள பிறை பிரச்சினையில் அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவித்துள்ளபடி நாம் அனைவரும் ஏற்று செயல்படுவதற்காகவும் பிரார்த்திக்கவும்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


மேலும் பி.ஜே அவர்களுடன் நாம் ஏற்படுத்தப்போகும் விவாத ஒப்பந்தத்திற்கான அனைத்து நிகழ்வுகளும் குழும சகோதரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாகவே இருக்கும் என்பதை தாங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


எனவே அவரும் சகோதரர் பி.ஜே யுடனான நமது விவாதத்தை கண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


எனவே நாஷித் காலம் கடந்து திருந்தி, புதிய ஒப்பந்தத்திற்கு அழைத்துள்ளார் என்பதால் தற்போது எந்த உதவியும் என்னால் அவருக்கு செய்யமுடியாமல் உள்ளது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011


மீண்டும் நாஷித் அவர்கள் திருந்தவில்லை நான் திருந்தவும் மாட்டேன் என்று சொல்கின்றார் என்பதை நாம் அவருடை பதிவுகளில் இருந்து புரிய முடிகின்றது. எனவே அவரின் தவறுகளை இன்ஷாஅல்லாஹ் பட்டியலிடும் வரை காத்திருக்கட்டும்.

மேலும் சகோதரர் பி.ஜே யுடன் ஆன விவாத ஒப்பந்தம் சம்மந்தமாக முடிவு எடுக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளில் நான் இருப்பதால், அந்த ஒப்பந்தம் முடிந்தபின் நாஷித் முபாஹலாவிற்கு அழைத்தது, விவாதத்தை முடித்து கொண்டதாக அறிவித்தது போன்றவற்றை இருட்டிப்பு செய்து மீண்டும் மக்களை எவ்வாறு குழப்புகின்றார் என்பதை புரிய வைப்போம் இன்ஷாஅல்லாஹ்

சிராஜ் ஏர்வாடி : 20 Jan , 2011



எழுத்து விவாதத்திற்கு இவர்களை நாம் அழைத்த போது, அதற்குரிய பதிலை சொல்லாமலும், முன்பே நாம் கேட்டிருந்த கேள்விகள் எதற்கும் முறையான பதிலை சொல்லாமலும் நழுவி விட்டு, பிஜே உடன் நேரடியாக விவாதம் செய்ய முடிவெடுத்து விட்டோம், என்று அதை ஒரு காரணமாக, ஒரு கேடையமாக பயன்படுத்தி எழுத்து விவாதத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள் என்பதை மேலே ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளோம்..

சரி, ஒரு வேளை உண்மையில் பிஜே உடன் விவாதம் செய்வார்கள் போலும்.. .. அதையாவது எதிர்ப்பார்ப்போம், என்று நினைத்த நம் அனைவரையும் முட்டாளாக்கும் விதமாக அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த அறிவிப்பு இதோ..



நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்
ஹிஜ்ரா கமிட்டி - மார்ச் 29 , 2011


இன்னும் ஒரு படி மேலே சென்று, இன்று அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பை பாருங்கள்..


நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும்
ஹிஜ்ரா கமிட்டி - ஏப்ரல் 1


ஏப்ரல் 1 அன்று நம் அனைவரையும் முட்டாளாக்கி விட்டனர்...!!

ஏப்ரல் ஒன்றாம் நாளை முட்டாள்கள் தினமாக கொண்டாடுவது என்பது மேற்கத்திய கலாசாரம், அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை யாராவது இவர்களுக்கு புரிய வைத்தால் நல்லது..!

வஸ்ஸலாம்..

கீழே விழுந்தாலும் மீசையில்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

பிறையை கண்ணால் பார்க்க தேவையில்லை, முன்கூட்டியே கணித்து காலண்டர் அடித்துக்கொள்ளலாம் என்ற அபத்தமான கொள்கையை மக்களிடையே பரப்பி வந்த ஹிஜ்ரா கமிட்டி என்ற ஒரு கூட்டம் , சில மாதங்களுக்கு முன்னர் இது சம்மந்தமாக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை நேரடி விவாதத்திற்கு அழைத்தது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவர்களின் அழைப்பை ஏற்று, நேரடியாக தலைப்பையும், ஒப்பந்த தேதியையும் குறிப்பிட்டு தலைமைக்கு எழுதுங்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், இன்றைய தினம் வரை அதற்குரிய வேலையில் இறங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி கூட்டம்.

இதனிடையே, தொடர்ந்து இவர்களது கொள்கை எந்த அளவிற்கு அடிப்படையற்ற , குர் ஆன் ஹதீசுடன் மோதக்கூடிய வகையில் உள்ளன என்பதை பல சந்தர்ப்பங்களில் மக்களிடம் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டன என்பதும் அனைவரும் அறிந்ததே.. நேரடி விவாதத்திற்கு இவர்கள் தயாராகிற போது, அத்தனை அபத்தங்களும் அவர்கள் முன்னிலையில் தோலுரித்துகாட்டப்படும் நிலையில் தயாராக இருந்தன.

இந்நிலையில், இவற்றை அறிந்து கதிகலங்கியதாலோ என்னவோ, இறுதியாக இவர்கள் விடுத்த அறிக்கையில், "தாங்கள் நேரடி விவாதத்திற்கு தவறுதலாக பிஜேவை அழைத்து விட்டோம் எனவும், தாங்கள் நேரடி விவாதத்திற்கு தயாரில்லை" என்பதையும் மிக வெளிப்படையாக, எந்த வெட்கமும் இன்றி மார்ச் 29 அன்று அறிவித்தனர்.

அது குறித்து விளக்கமாக அறிய இங்கே சொடுக்கவும்..
http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/vivathika_thayarillayam/


இவர்களுடைய வெட்கமற்ற செயல் இவ்வாறு விளக்கப்பட்ட நிலையில், ""கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டுகிறதா பாருங்கள் !"", என்று ரீதியில், இவர்கள் இன்னும் மின்னஞ்சல் மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், சமுதாயத்தில் இதை விடவும் அவமானப்பட்டவர்கள் யாராக இருக்க முடியும்?

இதன் பிறகு இவர்கள் எழுதியுள்ளதை பாருங்கள்..

நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும்
- ஹிஜ்ரா கமிட்டி - ஏப்ரல் 1st


நேரடி விவாதத்திற்கு நீ அழைத்தாயே, இன்று அந்த அழைப்பை நீயே வாபஸ் பெற்றுக்கொண்டு ஓடுகிறாயே ?, என்று கேட்டால் இவர்கள் கேட்பது.. , ""நேரடி விவாதத்தில் வராமல் தானே ஓடினோம், எழுத்து விவாதத்திலிருந்து நாங்கள் ஓடினோமா??""""

அட வெட்கங்கெட்டவர்களா! சமாளிப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அதற்காக, இந்த அளவிற்கா???? சுபுஹானல்லாஹ்!!

சரி, எழுத்து விவாதத்திலிருந்து இவர்கள் ஓடவில்லையா? அதிலிருந்தும் ஓடினார்கள்..!!! தொடர்ச்சியாக நம்முடன் மின்னஞ்சல் மூலமாக எழுத்து விவாதத்தில் ஈடுபட்டு, இறுதியில் நாம் முன்வைத்த எந்த ஒரு கேள்விக்கும் பதிலை சொல்லாமல் ஓடிய இவர்கள், அப்போது ஓடியதற்கு கூறிய காரணாம் - "நாங்கள் பிஜெவுடன் நேரடி விவாதத்திற்கு தயாராகி விட்டோம், இதோ ஒப்பந்தம் போட போகிறோம், ஆகவே இனி, நாஷித் போன்றோருடன் விவாதிக்க மாட்டோம்", என்பதாகும்.

முதலில் இருந்து எழுத்து விவாதத்தை மீண்டும் துவங்கலாம், அதற்குரிய ஒப்பந்தத்தை நாம் இருவருமே போட்டுக்கொள்ளலாம், என்று நான் மீண்டும் கேட்டுக்கொண்டு, எப்படியாவாது இவர்கள் நம் கேள்விகளுக்கு பதிலை சொல்லி விட்டால் போதும் என்ற நப்பாசையில் மீண்டுமொரு முறை எழுத்து விவாதத்திற்கு அழைத்தேன். பார்க்க : ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு
அதற்கும் மசியாமல், ""நாங்கள் பிஜே உடன் நேரடி விவாதத்திற்கு போக போகிறோம், இதோ போய் விட்டோம், இதோ நாளைக்கே அறிவிப்பு வந்தாலும் வரும், அடுத்த வாரமே ஒப்பந்தம்"", என்ற ரீதியில் "பில்ட்-அப் " கொடுத்து ஓட்டம் எடுத்தனர், என்பதையெல்லாம் இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமானது.

அவர்களே விடுத்த சவடாலான நேரடி விவாதத்திற்கு இப்போது தயாரில்லை என்றும் அறிவித்து, எழுத்து விவாதத்திலும் வராமல் ஓட்டமெடுத்து விட்டு, இப்போது வாய் கிழிய பேசுவது யார்? என்பது, அவர்களே சொல்லியுள்ளது போல சிந்தனைவாதிகளுக்கு போக போக அல்ல, இப்போதே தெரிந்து விட்டது..


சுய மரியாதை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த உயரிய பண்பு.. அதில் கடுகளவை கூட கொண்டிராமல் செயல்பட்டு வரும் இவர்களை போன்றோரை நாம் என்னவென்று சொல்ல?

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியையும், கொள்கை உறுதியையும் தர வேண்டும்..



அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته





fromHCI
toanaithuthowheethsagotharargal@googlegroups.com,
muslimmails@googlegroups.com
ccNashid Ahmed ,
Noushath Ali Muhammed
date1 April 2011 14:06
subjectRe: ATS அறிந்து கொள்ளுங்கள் : இவர்கள் தான் ஹிஜ்ரா கமிட்டியினர் !!!!!
mailed-bygmail.com
Signed bygmail.com

hide details 14:06 (37 minutes ago)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................

அன்பான குழும சகோதர சகோதரிகளே!

நேயர் நாஷித்தின் பேசியும், எழுத்து பூர்வமான விவாதத்திற்கு பி.ஜே யை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை போலும்,

அல்லது, நேயர் நாஷித் தீவிரமாக யோசித்து எழுத்துமூல இணையத்தள விவாத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டால், பி.ஜே அவர்களுக்கு பேச்சுகலையில் மக்களை குழப்புவது போன்று எழுத்தில் குழப்ப முடியாது என்பதை புரிந்து கொண்டு திசைதிருப்ப முயற்சிக்கின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.

யாராவது ஒரு இழையில் ஒரு கருத்தை கொண்டு விவாத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை யாரும் முழுமையாக அவர்களே சிந்தித்து புரிந்து கொள்ள கூடாது என்பதற்காக உடனடியாக தனிஇழையில் ஒரு தலைப்பிட்டு எழுத ஆரம்பித்து பேசுவார். அதைத்தான் இப்போதும் செய்துள்ளார். அது நேயர் நாஷிதிற்கு கைவந்த கலைதான்.

எனவே அவர் கூறியவார்த்தையின் அடிப்படையில் தான் நாம் கீழே அவருக்கும் குழுமத்திற்கும் எழுதியிருந்தோம்.

நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும். இல்லையேல் அவர் கீழ்கண்ட வாறு எழுதியதை பொய்யாகத்தான் எழுதினேன் என ஒப்புக்கொள்ளட்டும்.

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.............
இணையத்தளத்தில் செய்திகளை படித்து சிந்திக்கும் அன்பான சகோதர சகோதரிகளே!
நாஷித் கூறுவது போல் கூறிவிட்டால் அது நேர்மையாக இருக்கும் என சொல்லியுள்ளார்.
//நேரடி விவாதத்திற்கு எங்களால் வர இயலாது, நாங்கள் தெரியாமல் பிஜேவை அழைத்து விட்டோம், என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு, இணையத்தின் மூலம் விவாதிக்க அழைப்பு விடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும்.//Nashid Ahmed
எனவே நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.
எனவே நமது பகிரங்க விவாதத்தை இணையத்தில் எழுத்து மூலமாக வைத்துக்கொள்வோம்.
அதற்கான சட்டதிட்டங்களை இரு தரப்பும் சேர்ந்து எழுதியபின் அதை சரிபார்த்து இருதரப்பும் ஒப்புக்கொண்டு விவாதத்தை ஆரம்பிக்கலாம்.
எனவே எழுத்து மூலமான சட்டதிட்டங்களை பி.ஜே முதலில் எழுதி அனுப்பினால் அதுவே சரியாக இருந்தால் அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதத்தை ஆரம்பித்துவிடலாம்.
எனவே நேயர் நாஷித் அகமது அவர்கள் இப்போதாவது எழுத்து மூலமான விவாத்திற்கு பி.ஜேயுடன் பேசி நேர்மையாக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவாரா அல்லது ஓடி ஒழிந்து கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.//HCI

எழுத்து மூலமாக விவாதிப்போம் என்று கூறுவது ஓடி ஒழிவதா? கழுத்தை கொடுத்தாலும் எழுத்தை கொடுக்காதே என்பார்கள். நாங்களோ எழுத்தை கொடுக்க தயாராக உள்ளோம் என கூறிய பிறகும் நேயர் நாஷித் நாங்கள் ஓடி ஒழிவது போல் திரித்து எழுதியுள்ளார். எனவே யார் ஓடி ஒழியப்பார்க்கிறார்கள் என்பது சிந்தனைவாதிகளுக்கு போகப் போகப் புரியும்.

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி