புதன், 3 நவம்பர், 2010

தப்லீக் தா'லிம் அபத்தங்கள்

நோன்பு மற்றும் தொழுகை குறித்து தப்லீக் ஜமாத்தினரின் "தப்லீக் தா'லிம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அபத்தங்களில் சில ...

மவ்லானா ஷாஹ் அப்துர்ரஹீம் சாஹிப் (நூல் ஆசிரியர்களில் ஒருவர்) அவர்கள் ரமலான் மாதம் இரவு பகல் முழுவதுமே குர் ஆன் ஒதுபவராகவே இருந்தார்கள். கடிதம் எழுத மாட்டார்கள், அன்பர்களை சந்திக்கவும் அவர் விரும்பவில்லை, தேநீர் தருவதற்காக தனது பணியாளர் தன் அறைக்கு வந்து செல்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது !!
ரமளானின் சிறப்பு : பக்கம் 17

நோன்பு திறக்கும் போது வயிறு புடைக்க உண்ணக்கூடாது. இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகிறது.
ரமளானின் சிறப்புகள் : பக்கம் 62

சஹார் நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகிறது.
ரமளானின் சிறப்புகள் : பக்கம் 64


தொழுகையை மறதியான நிலையில் தொழுவது ஜுரத்தால் பீடிக்கப்பட்டவன் உளறுவது போன்றதாகும்.
தொழுகையின் சிறப்புகள் : பக்கம் 149


லைலதுல கதர் இரவு எந்த இரவு என்பதில் ஐம்பது கருத்துக்கள் உள்ளன. அந்த இரவை ஞானாங்களின் தலைவர் முஹைதீன் இப்னு அரபி, ஷா'அபான் மாதத்திலேயே இரண்டு முறை கண்டார்.
ரமளானின் சிறப்பு : பக்கம் 395

லைலதுல் கதர் இரவில் ஈசா (அலை) அவர்கள் மலக்குகளுடன் இறங்குகிறான் .
ரமளானின் சிறப்புகள் : பக்கம் 376


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக