புதன், 3 நவம்பர், 2010

மார்க்கத்தை கேலி செய்யும் ஷம்சுதீன் காசிமி

மார்க்கத்தை கேலிக்கூத்தாக்கி, கேள்வி கேட்பவரை கிறுக்கனாக்குவது தான் மார்க்க அறிஞரின் (?) செயலா?


நேற்றைய சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், சகோ. சம்சுதீன் காசிமி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

கேள்வியும், அவர் கூறிய பதிலும் (வேறு வார்த்தைகளில்) இங்கே தரப்படுகிறது.

கேள்வி : இரவு தொழுகை ஜமாத்தாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், இஷா தொழாமல் இருக்கும் நான், அதே ஜமாத்தில் கலந்து கொண்டு, இஷா தொழுவதாக நிய்யத் வைத்து இஷா தொழலாமா? அல்லாத தனியாக தொழுது விட்டு அந்த இரவு தொழுகை ஜமாத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

காசிமி பதில் :

""இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இமாம் ஷாபி அவர்கள் அந்த ஜமாத்தோடு சேர்ந்து இஷா தொழுவது கூடும் என்கிறார்கள். (அவர் அறிவிக்கும் ஒரு செய்தியை சொல்கிறார்). ஆனால், அபு ஹனீபா இமாம் அவர்களோ, இதை மறுக்கிறார்கள்!!""


இது தான் அவரது பதிலின் சாராம்சம். இவ்வளவு தான் அவர் அதற்கு பதிலாக கூறியது. (வார்த்தைகளில் கூடுதல் குறைவு இருக்கலாம்)நமது கேள்வி:

ஒருவர் மார்க்க சட்டத்தை அறிவதற்காக கேள்வி ஒன்றை தருகிறார்.

அதற்கு, ஒன்று, ரசூல் (ஸல௦ அவர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் அல்லது சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் கூற வேண்டும்.

அல்லது, மார்க்கத்தில் இது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை (மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை) என்று கூற வேண்டும்.

அல்லது, எனக்கு இது பற்றி தெரியாது, என்று கூற வேண்டும்.

ஆனால், மார்க்க அறிஞர் என்று தன்னை அறிவித்து கொள்ளும் ஒருவர், இவ்வாறு பதில் கூறுவது சரியா?
அவரது பதிலில் ரசூல் (ஸல்) அவர்களை பற்றி எதுவுமே கூறவில்லையே!!

ஒரு வாதத்திற்கு, இமாம்களையும் பின்பற்றலாம் என்று வைத்துக்கொண்டால் கூட, சகோ. கேட்ட கேள்விக்கு அவரது பதிலில் தெளிவான ஒரு அறிவிப்பு இருக்கிறதா?
ஷாபி இவ்வாறு கூடும் என்கிறார், ஹனீபா கூடாது என்கிறார். சரி.!

நாம் இப்போது எதை பின்பற்ற வேண்டும்? இதுவல்லவா அந்த சகோதரர் கேட்ட கேள்வி??

கேள்வி கேட்பவரை மடையனாக்கி, பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரையும் கிறுக்கனாக்குவது போல் பதில் சொல்லும் இவர் , மார்க்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் தகுதி படைத்தவரா என்று நமக்கு கேட்க தோன்றுகிறது!

அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக