புதன், 3 நவம்பர், 2010

ஹிஜ்ரா கமிட்டீயிடத்தில் சில கேள்விகள்..

பிறையில் குறையில்லை, கொள்கையிலேயே குறை !!
ஹதீசுடன் நேரடி மோதல்!


"இறை மறையின் குறையற்ற பிறை " என்ற நூல் சமீபத்தில் எனது கைகளில் கிடைத்தது.

அதை தொகுத்தது : ஹிஜ்ரா கமிட்டி, இந்தியா
இலவசமாய் வெளியிடுபவர்கள் : ஜமாஅத் அல் முஸ்லிமீன், நாகர்கோவில்.

அதில், பிறையை கண்ணால் பார்த்து தான் நோன்பை முடிவு செய்ய வேண்டுமென்பதில்லை, கணித்து தீர்மானிக்கலாம் என்ற கருத்துப்பட சில விளக்கங்களை கூறியிருக்கிறார்கள்.

அவர்களது நிலைபாட்டிற்கு அடிப்படையாய் அவர்கள் எடுத்து வைக்கும் ஒரு வழிமுறையையும் அதிலுள்ள அபத்தத்தையும் இங்கே குறிப்பிட வேண்டுமென்பதற்காக இதை எழுதுகிறேன்.

(ஏற்கனவே முடிவு செய்யப்பட) அந்த நாளான ரமலான் முதல் தேதி அன்று நாம் நோன்பு நோற்றவர்களாக மக்ரிப் நேரத்தை அடைவோம். அந்த தினத்தில் தான் ரமலான் மாதத்தின் முதல் தேதிக்கான பிறையை கண்ணால் பார்க்கலாம்!
பக்கம் : 10

அதாவது, நாம் ரமலான் மாதத்தை இன்றைய கிழமையில் துவக்கினால், இன்றைய தினம் நாம் நோன்பு வைத்து விட்டு, இன்றைய இரவில் நாம் பார்க்கும் பிறை தான் முதல் பிறை
பக்கம் : 11


இதன் மூலம், இவர்கள் சொல்ல வருவது, மாதம் இந்த கிழமையில் முடியும் என்பதை நாம் முன்னரே கணித்து முடிவு செய்து கொண்டு, அதனடிப்படையில் நோன்பை துவக்கி விட வேண்டும். அன்று மாலை, மக்ரிபுக்கு நாம் பிறை பார்க்க வேண்டுமாம்!! அது தான் நம் முன்பே துவக்கிய ராமலானுக்கான முதல் பிறையாம் !

பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், என்ற ரசூல் (ஸல்) அவர்களின் அறிவுரை ஒன்றிருக்க, அவ்வாறே அவர்கள் செய்திருக்கிறார்கள் என்ற சான்றும் இன்னொரு பக்கம் இருக்க, இவர்களது கூற்றை பாருங்கள்.இதை தொகுத்த ஹிஜ்ரா கமிட்டீயினரோ, இதை வெளியிட்ட ஜமாஅத் அல் முஸ்லிமீன் அமைப்பினரோ, இந்த குழுமத்தில் இருப்பார்களேயானால், இதற்குரிய விளக்கத்தை, குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தோடு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக