வெள்ளி, 24 ஜூன், 2011

ஜாக்கின் இரட்டை நிலைஅரசியலே எங்களுக்கு ஆகாது, அது ஷிர்க் என்று சொல்லிக்கொள்ளும் ஜாக் இயக்கத்தினர், மேலப்பாளையத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? 2006 ஆம் மேலப்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளராக மைதீன்கான் நிறுத்தப்படுகிறார். ஆனால் அரசியலே இணைவைப்பு என்று சொன்ன ஜாக் கூட்டத்தினர், அவரை எதிர்த்து, அவர்களின் பிரதான அபிமானியான பசுலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என, நடுரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டு பித்தலாட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.


அதற்கான ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது

2006 ஆம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த நேரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அதிமுகவை ஆதரித்தது. இந்த நிலையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் ஜூமுஆ உரை நிகழ்த்திய ஜாக்ஸ்சின் துணை தலைவர் செய்யது அலி பைஜி,டிஎன்டிஜேவை மிக மோசமாக விமர்சனம் செய்தார். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர், கொடி பிடிக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பின்னால் செல்கிறார்கள், தவ்ஹீதை விட்டு விட்டு ஷிர்க்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். நம் ஜாக் அமைப்பினர் இது போன்ற எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது, பிரச்சாரம் செய்யக்கூடாது, அரசியல் என்ற நவீன இணைவைப்பிலிருந்தும், இதுபோன்ற வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார்.


அந்த ஜூமுஆவில் கலந்து கொண்ட டிஎன்டிஜே சகோதரர் ஒருவர், ஜூமுஆ முடிந்த பின் அவரிடம், மேலப்பாளையத்தில் திமுக வேட்டபாளராக பஸ்லுல் இலாஹியை நிறுத்தக் கோரி ஜாக்ஸ் நடத்திய போராட்டத்தின் பத்திரிகை செய்தியை அவரிடம் காண்பித்து, அரசியலே ஷிர்க் என்று சொல்கிறீர்களே! அப்படியானால் இது என்ன? என்று கேட்க, அதற்கு எவ்விதமான பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் செய்யது அலி.


டிஎன்டிஜே, ஆதரவு பிரச்சாரம் மட்டும் தான் செய்யும், ஆனால் ஜாக் அரசியலில் போட்டியிட தங்கள் அபிமானியையே வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று போராட்டமே நடத்துகின்றர்.


தமுமுக தோற்கடித்த முஸ்லிம் வேட்பாளர்கள்

முஸ்லிம் பிரதினுத்துவம் வேண்டும் எனவும், தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம்களை பெருவாரியாக வெற்றி பெற செய்துள்ளோம் என்றும், முஸ்லிம்களின் மானத்தை காக்க வந்து விட்டோம் எனவும் மார் தட்டிக்கொள்ளும் இந்த கும்பல், தங்களின் சுயநலம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் வகையில், இவர்கள் களத்தில் இறங்கி தோற்கடித்த முஸ்லிம் வேட்ப்பாளர்களின் பட்டியலை இங்கு தருவது உபயோகமாக இருக்கும்.1. அப்துல் பாசித் - முஸ்லிம் லீக் - வாணியம்பாடி - (வெற்றி பெற்றவர்: சம்பத் குமார்)

2. ஷேக் தாவூத் - முஸ்லிம் லீக் - நாகப்பட்டினம் - (வெற்றி பெற்றவர் : ஜெயபால்)

3. அல்தாப் ஹுசைன் - முஸ்லிம் லீக் - துறைமுகம் - (வெற்றி பெற்றவர்: பழ. கருப்பையா)

4. ஹசன் முகமது அலி ஜின்னா - திமுக- ஆயிரம் விளக்கு - (வெற்றி பெற்றவர்: வளர்மதி)

5. உபையதுல்லா - திமுக - தஞ்சாவூர் - (வெற்றி பெற்றவர்: எம். ரங்கசாமி)

6. கௌஸ் பாஷா - திமுக - மதுரை மத்திய தொகுதி - (வெற்றி பெற்றவர்: சுந்தர் ராஜன் )

7. சையது - காங்கிரஸ் - கிருஷ்ணகிரி - (வெற்றி பெற்றவர்:முனுசாமி)

8. முஹம்மத் யூசுப் - வி.சி - உளுந்தூர்பேட்டை - (வெற்றி பெற்றவர்: குமரகுரு)
மார்க்கதோடு விளையாடும் மோசடி பேர்வழிகள்
மார்க்கதோடு விளையாடும் மோசடி பேர்வழிகள்
குர் ஆன், சுன்னா மட்டும் என இருந்தால் ஒரு காலமும் நம்மால் அமல் செய்ய இயலாது - ஆகவே மத்ஹபை பின்பற்றுங்கள்
- ஷம்சுதின் காசிமி