அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே ஷியா எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ‘ஷீஅத்து அலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘ஷியா’ என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
பிரதான பிரிவுகள்:
ஷியா இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான பிரிவுகள்....
1. அஸ்ஸபயிய்யா
இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர்
2. அஸ்ஸைதிய்யா
அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
3. அல்கைஸானிய்யா
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் ‘தவ்வாபீன்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
4. அர்ராபிழா
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
5. அல்குராபிய்யா (காகம்):
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
6. அன்னமிரிய்யா:
முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
7. முஹம்மதிய்யா:
அலி → ஹுஸைன் → அப்துல்லாஹ் → முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை ‘அந்நப்ஸ் அஸ்ஸகிய்யா’ பரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும் தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி அவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
8. அல் – இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா:
இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
- KADAYANALLURAQSHA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக