செவ்வாய், 26 மார்ச், 2013

மரண தண்டனை சரியா? - விவாதம் : முழு தொகுப்பு


முகநூல் வழியாக இஸ்லாத்தை பல்வேறு வழிகளில் விமர்சித்து வரும் டாக்டர். ஜெயப்ரகாஷ் என்பவரை நாம் இது தொடர்பாக முழுமையான முறையில் விவாதம் செய்ய அழைப்பு விடுத்தோம். அவரோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை இந்த இணைப்பில் காணலாம். 


ஒரு சில தலைப்புகளில் பேச முடியாது என்று அவர் மறுத்து விட்ட நிலையில், அவர் முதலில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட தலைப்பான மரண தண்டனை சரியா? என்கிற விவாதம் துவக்கப்பட்டுள்ளது.

நம் தரப்பில் சகோ இம்ரான் ஷெரிப் அவர்கள் வாதங்கள் வைக்கிறார். எதிர் தரப்பில் டாக்டர். ஜெயப்ரகாஷ் எழுதுகிறார்.

இரு தரப்புக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் என்றும், ஒரு வாய்ப்பில் அதிகபட்சம் 75 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. Imran Sheriff  15 February 2013 16:23 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  

அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்லமாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானதுமக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானதுகுற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்துமரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால்அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில் அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவதுமரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானதுஅதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும்கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால் பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும்அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்றபாதுகாப்பற்ற அச்ச நிலைக்கு வழி வகுக்கும் 

உதாரனத்திற்க்கு டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள்,அந்த பெண் இரவில் தன் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்
 இந்த சம்பவத்தில் நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர்அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லைஅந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார்அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால்எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோகாட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி, "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?) வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும்,கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாகஇஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 
சரி இவ்வளவு வேண்டாம்தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல்அப்படி தானே?அதாவது பாதிக்கபட்டவன்பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான்இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் என கூறுவது எந்த பகுத்தறிவோ?
திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லைஅந்த பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளதுஇவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .
குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை இது அறிவு முதிர்ச்சியில்ல .
ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ, 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும்பயன்பெறவும்மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லைஅது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.
ஜெய பிரகாஷ்  17 february 2013


அன்பின் இம்ரான்

சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.
Imran Sheriff 18 February

அரசு தான் சட்டம் இயற்றும் நாடு சட்டம் இயற்றாது, இந்த உண்மை புரியாதவர்களிடம் எப்படி விவாதம் செய்வது என்பதாக சொல்லியுள்ளீர்கள்.
நாடு சட்டம் இயற்றாது, அரசு தான் சட்டத்தை இயற்றும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே . "மக்களை ஆட்சி செய்யும் நாடு" என்பது அரசை தான் குறிக்கும் என்பது இதை படிக்கும் எவருக்கும் விளங்கும், சராசரி பேச்சு வழக்கில் அது கூறப்பட்டது. அப்படி இருக்கையில் இதை காரணம் காட்டி விவாதத்தை தொடர்வதை கேள்விக்குறியாக்குவது என்ன நோக்கத்திற்காக என்பதை நீங்களே விளக்கவும். 

சட்டங்கள் மக்களை நல் வழிப்படுத்துவதற்காக அல்ல, என்றும் முதலில் சொல்லி, பிறகு சட்டங்கள் நல் வழிப்படுத்தும் என்று எனக்கு நானே முரண்படுவதாக கூறி அதில் ஆச்சர்யமும் அடைவதாக கூறியுள்ளீர்கள். நான் சொன்னதில் எந்த முரண்படும் இல்லை. ஒரு நாடு சட்டங்கள் வகுப்பதன் முதல் நோக்கம் மக்களை நல்ல மக்களாக மாற்றுவதற்காக அல்ல, மாறாக மக்களை பாதுகாக்கத்தான். மக்களை பாதுகாப்பதற்காகவும் நாட்டில் அமைதி நிலைபெறுவதற்காகவும் இயற்றப்படும் சட்டமானது, மக்களை நல்வழிப்படுத்தும். இது தான் நான் ஏற்கனவே சொன்ன கருத்து. இதில் நீங்கள் ஆச்சர்யம் கொள்ளத்தக்க முரண்பாடு ஏதும் இல்லை.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? - ஜெய பிரகாஷ் 

சட்டங்கள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் நாட்டில் குற்றங்கள் குறையும். இது அடிப்படையான சிந்தனையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளும் வாதம். கடுமையான சட்டங்கள் விதிக்கப்படாத நாடுகளில் நடக்கும் குற்றங்களை விட கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குற்றங்கள் குறைவு.
கருத்துக்கணிப்பின் படி கொலை , கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில் அமெரிக்க முதல் இடத்தில உள்ளது. நம் இந்தியா பத்தாவது இடத்தில உள்ளது. சவூதி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் 48, ஐம்பதாவது இடத்தில உள்ளது. (புள்ளிவிவரங்களை ஆதாரங்களுடன் கேட்டால் தரலாம் லிங்குகள் அனுப்ப கூடாது என்பதால் இங்கே தரவில்லை).மேலும் ஒவ்வொரு 100,000 பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற கணக்கை பார்க்கையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளின் ரேட் 15 க்கும் மேல். ஆப்ரிக்காவில் 17. ஆசியா கண்டத்தில் 3. ! ஆசிய கண்டத்தில் தான் இஸ்லாமிய சட்டங்களை உறுதியாக கடைபிடிக்கும் சவூதி, கத்தார், இரான் போன்ற நாடுகளும் இஸ்லாமிய சட்டதை அதிகமாக கடைபிடிக்கும் சிங்கபூர் போன்ற நாடுகளும் உள்ளன.

நாடுகள் வாரியாக எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 3.5 பேர், (ஒவ்வொரு 100,000) , அதுவே சவுதியில் 1, கத்தாரில் 0.8 என்கிற கணக்கில் உள்ளது என்றால், சட்டங்கள் கடுமையாக்கடுவது தான் குற்றங்கள் குறைவதற்கான ஒரே வழி என்பதை இதை விட எளிதாக புரிய முடியாது !

மனிதனின் பலகீனம் என்பது தவறிழைப்பது தான். தான் சார்ந்திருக்கும் மதத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள், சட்டங்களின் கடுமைக்கு பயந்து தவறில் இருந்து விலகி கொள்பவர்களும் இருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கடவில்லை என்றால், முதல் இரு தரப்பும் வழக்கம் போல் தவறிழைக்காமல் தான் இருப்பார்கள் ஆனால் மூன்றாவது தரப்பை தவறில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்பதற்கு நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டுமல்லவா? பகுத்தறிவுடன் சிந்திப்பது என்றால் இது தானே?? இதற்கு பகரமாக சிந்திப்பவர்கள் உணர்வு அடிப்படையில் சிந்திப்பவர்கள் என்று தானே பொருளாகும்?
சட்டத்திற்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பார்கள் என்பது தவறான வாதம் என்பதை அத்தகைய சட்டத்தை இயற்றி நிரூபித்து விட்டு தானே நீங்கள் சொல்ல வேண்டும்?? 
ஆறு முறை சைக்கிள் திருடியவன் ஆறாவது முறையாக கைது செய்யப்படுகிறான் என்கிற செய்திகள் தின செய்திகளில் வருகிறதே ஏன்?? ஒரு முறை திருடினால் கைகளை வெட்டும் சட்டம் என்றால் யாருமே திருட மாட்டார்களே?? தவறுகளை தடுப்பதற்குரிய சரியான முறையை கையாண்டு விட்டு தானே, குற்றங்கள் குறைந்ததா இல்லையா என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும்??? வேலியை அடைக்காமல் ஆடு புகுந்து விட்டதே என்று அழுவதில் என்ன பயன்?? 

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது குறைந்துள்ளதா? 

என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம், மேலே நான் சொன்னது நிரூபணம் ஆகிறது.

குண்டு வைத்தால் தடா போடா தூக்கு தண்டனையா??? நீங்கள் எந்த நாட்டை பற்றி கேட்கிறீர்கள்?? நம்ம இந்தியாவை பற்றியா???  சுதந்திர இந்தியாவில் இதுவரை (புள்ளி விவரங்களின் படி) கிட்டத்தட்ட ஐம்பது மிக பெரிய வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் எத்தனை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டன???  ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதா?? குஜராத் கலவரத்தை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?? கோத்ரா, சபர்மதி ரயிலை எரித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா??மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதா??? 
கடும் சட்டங்கள் என்பது வெறும் ஏட்டில் உள்ளதா அல்லது நடைமுறையில் உள்ளதா?? வெறும் ஏடுகளில் சட்டத்தை வைத்துக்கொண்டு குண்டு வெடிப்பு குறைந்துள்ளதா என்று அப்பாவித்தனமாக கேட்கிறீர்களே!!! குண்டு வைத்தால் தூக்கு தண்டனை என்று சட்டங்கள் இருந்தால் குண்டு வெடிப்பு குறையாது, அதை செயல்படுத்தினால் குறைந்து விடும். 
இஸ்லாமிய சட்டங்களை உள்ளடக்கிய நாடுகளில் இது போன்ற சட்டங்கள் உள்ளன, அவற்றை தக்க முறையில், எந்த பண பலத்திற்கும், அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல் பயன்படுத்துகிறார்கள் அதனால் குற்றங்கள் குறைவு. நம் நாட்டில், பணத்திற்காக சட்டங்கள் வளைகின்றன, அதிகார பலதிற்காக வளைகின்றன என்பது தெளிவாக தெரிகிற போது குற்றம் செய்கிற ஒருவன் ஏன் பயப்பட வேண்டும்??

ஒருவரை கொலை செய்ய எனக்கு ஒரு கோடி பணம் தருகிறார்கள் நான் கூலி படை உதவியுடன் காரியத்தை முடிக்கிறேன், மாட்டிக்கொண்டால் மிஞ்சிப்போனால் ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஜெயில் தண்டனை, அதற்குள் காசு கொடுத்து வெளியே வரலாம், என்கிற சிந்தனை எனக்கு ஏற்பட்டால், நான் கொலை செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?? அப்படியே உயர் நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுத்து விட்டால், உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு வெளியே வந்து விடலாம். அதுவும் இல்லை என்றால், ஜனாதிபதி பரிந்துரைப்பார் , வெளியே வந்து விடலாம் என்கிற பல அடுக்கு பாதுகாப்பை இந்தியா எனக்கு வழங்கியிருக்கும் போது கொலை செய்வதற்கோ கற்பழிப்பு செய்வதற்கோ நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிந்திக்கிற ஒரு சாதாரண மனிதனை உங்கள் சட்டம் என்றைக்கும் திருத்தாது.

இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

நிச்சயமாக நடப்பதில்லை. இதை அறிவதற்கு சில புள்ளிவிவரங்களை படித்தாலே போதும். இஸ்லாமிய சட்டம் பேணப்படும் நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் 2003 முதல் 2010 வரையிலான வருடங்களின் கணக்குப்படி வருடத்திற்கு சராசரியாக 59 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகின்றன. கூட்டிப்பார்க்கையில் இந்த எட்டு வருடங்களில் மொத்தம் நடந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 472 (500 என்று வைப்போம்.) நம் இந்தியாவின் கணக்கு என்ன தெரியுமா?? 1,41,713 - அதாவது, ஒரு வருடத்தின் சராசரி கிட்டத்தட்ட 20,000 !!

இஸ்லாமிய சட்டத்தை பேணாமல், தப்பி தவறி கடும் குற்றங்கள் விதிக்கப்பட்டு விட்டால் கூட, பண பலம், அரசியல் பலம், ஜனாதிபதி கருணை மனு போன்ற ஆயுதங்களின் மூலம் வெளி வரக்கொடிய ஓட்டைகள் மிகுந்த இந்திய நாட்டில் கடந்த எட்டு வருட கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் !! அதுவே, எதற்கும் வளைந்து கொடுக்காத இஸ்லாமிய சட்டங்களை பேணக்கூடிய சவுதியில் வெறும் 500. இந்த புள்ளிவிவரங்கள் நாமாக உருவாக்கியவை அல்ல, விகீபீடியாவில் நீங்கள் சென்றாலும் காணக்கூடிய உண்மைகள்.

75 வரிகளுக்குள் சுருக்க வேண்டும் என்பதால் உங்கள் முதல் பதிவில் நீங்கள் எழுதியுள்ள சில தவறான கருத்துக்களுக்கான மறுப்புரையை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்..
ஜெய பிரகாஷ் 20 february
அன்பின் இம்ரான்
எந்த நிபந்தனைகளும் இல்லாமல் உங்களின் பெரும்பாலான நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு (சகித்துக் கொண்டு) இந்த விவாத்த்துக்கு ஒப்புக் கொண்டுள்ளேன் என்பதை மறுபடியும் நினைவுபடுத்துகிறேன். அப்படி இருக்கையில் நான் விவாதத்தை தொடர்வதை கேள்விக்குள்ளாக்குகிறேன் என்பது உண்மையில் ஒரு விரும்பத்தகாத சூழல். உங்களின் புரிதலின்மை விவாதம் செய்யத்தடையாக இருக்கும் என்பதாலேயே அப்படி எழுதினேன் அன்பதை விளக்க வேண்டிய அளவுக்கு உங்கள் முதிர்ச்சியின்மை என்னை வருந்த வைக்கிறது. சில நாட்களுக்கு முன்னான விவாதங்களிலும் அப்படியே. உண்மையில் இதுமாதிரியான விவாதங்களுக்கு புகும் முன்பு உங்கள் மொழிவளம், அரசியல் நோக்கு, பரந்த பொது அறிவு இவற்றை இன்னும் சீர்படுத்திக்கொள்வது அவசியம். இதுவும் உங்கள் புரிதலுக்காகவே.

மறுபடியும் நாடு சட்டங்களை வகுக்கும் என்று எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு படிக்காத பாமரனிடம் காய்கறி வாங்க பேரம் பேசவில்லை. பொதுவில் ஒரு விவாதத்தில் உள்ளீர்கள். இங்கே பாமரத்தனமான மொழிகள் சோர்வைத்தரும். நாடு-அரசு-அரசாங்கம்-சட்டம் பற்றியான தெளிவான வரையறைகளை வேறு யாரிடமேனும் தெளிவாக கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். பொதுப்பார்வையை பல்வேறு அரசியல் போக்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வறட்டுத்தனமான மதவாதியாக எஞ்சி நிற்பீர்கள். உங்களைப்போன்ற இளைஞர்கள் அப்படியாக சுருங்கிப்போவது என்னைப்பொறுத்தவை தற்கொலைக்கு ஒப்பானது. மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு. சட்டம் மக்களை பாதுகாக்காது. சட்டம் இருப்பதால் திருட்டை தடுத்துவிட முடியாது. காவல்துறை சரியாக செயல்பட்டால் திருட்டைத்தடுக்கலாம். சட்டம் பின்புதான் வரும்.

இஸ்லாமிய நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு என்ற புள்ளிவிவரங்கள் மேலோட்டமானவை. உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிந்தால் எனக்கு மகிழ்ச்சி. அதாவது குற்றங்கள் குறைவது சமூகம் நாகரீகமாகிவிட்ட்தன் அடையாளம் அல்ல. குற்றங்களை செய்யும் மனப்பான்மை குறைய வேண்டும். உதாரனத்துக்கு சிக்னலில் சிவப்பு எரிந்தால் தாண்டக்கூடாது மீறினால் அபராதம் கிடைக்கும். பகலில் பெரும்பாலும் மீற மாட்டார்கள். போலீஸ் இருக்கும். இரவிலும் அதை மீறாமல் இருக்கும் மனப்பான்மையே நான் சொல்கிற சமூக நாகரீகம். இஸ்லாமிய நாடுகள் சட்ட்த்தின் கடுமையைக் காட்டி மக்களை குற்றம் செய்யாமல் தடுத்து வைத்துள்ளதே ஒழிய குற்றம் செய்யும் மனப்பான்மையை அல்ல. அதை எந்தக் காலத்திலும் யாராலும் தடுத்துவிட முடியாது. மனிதர்களும் அடிப்படையில் விலங்குகள் தான். இச்சை போட்டி பொறாமை ஒழிந்து போகாது.

ஒரு முறை திருடினால் கைகளை வெட்டும் சட்டம் என்றால் யாருமே திருட மாட்டார்களே?? என்று அங்கலாய்க்கும் இம்ரான் அரபு நாடுகளில் கையை வெட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். திருடுவதில்லையா? தண்டனைகள் தரவும் ஒரு பக்குவம் தேவை. இராக்கிய வீர்ர்களின் சடலங்கள் மேல் அமெரிக்க நாய்கள் சிறுநீர் கழிக்கும் போதும், இறந்த பெண்புலிகளை நிர்வாணப்படுத்தி இலங்கை ஓநாய்கள் ஒழுகும் போதும், நடுச்சாலையில் பொதுமக்கள் மத்தியில் ஒரு குற்றவாளி தூக்கிலிடப்படும் போதும், தாலிபான்களால் மக்களின் தலைகள் வெட்டுப்படும் போதும், பொதுமக்களால் கல்லால் அடித்து கொல்லப்படும் போதும் எனக்கு ஒரே விதமான அசூசையான அருவருப்பான கோபமே ஏற்படுகிறது. வேசியை அவளின் விருப்பமில்லாமல் உறவுகொள்வதைக் கூட நான் கொடூரம்-குற்றம் என்பேன். எனக்கு புள்ளிவிவரங்களின் மேல் ஆர்வம் இல்லை. என்றாலும் சும்மா தேடியபோது கற்பழிப்பு வழக்குகளில் தனிநபர் எண்ணிக்கையிலான டாப்50 வரிசையில் இந்தியா இல்லை; சவூதி எகிப்து பஹ்ரைன் முதலான மூன்று இஸ்லாம் நாடுகள் உள்ளன. மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ளாமல் நாட்டு அளவில் எடுக்கப்பட்ட புள்ளீ விவரத்தில் கூடமொத்த எண்ணிக்கையிலும் இந்தியாவைப் பின் தள்ளிவிட்டு ஆறு முஸ்லிம் நாடுகள் உள்ளன. கொடுமையின் உச்சமாக இண்டெர்னெட்டில் போர்னோகிராபி படங்களை வகை ரீதியாக பார்ப்பதில் அநேகமாக எல்லா வகையிலும் முதல் இட்த்தை பாகிஸ்தான் அல்லது சவூதி அரேபியா தட்டிச்செல்கிறது. கேளிக்கைகளை விலக்கச் சொல்லும் இஸ்லாம் இது மாதிரி இண்டெர்நெட்டில் பார்ப்பதை ஆதரிக்கிறதா? இதையெல்லாம் நான் அசிங்கப்படுத்த சொல்லவில்லை. தண்டனைகளின் கடுமை குற்றம் செய்யும் மனப்பாண்மையை குறைக்காது. இஸ்லாமிய சட்டங்கள் மக்களை நாகரீகப்படுத்தவில்லை. பயப்படுத்தியே வைத்திருக்கிறது. அல்லா ஏக இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளாதவரோடு போரிடுவதை வலியுரூத்தும் வேதமும், படைகளை வழிநட்த்தியவரை தூராக கொண்ட மதமும் பயப்படுத்தும் வித்த்தில் சட்டங்கள் அனுஷ்டித்த்தை நான் குறை சொல்லவில்லை. இப்படி 21ம் நூற்றாண்டில் அதை சரியென்று சொல்லும் நவீன முஸ்லீம்கள் தான் தவறான கருத்தை பரப்புகிறார்கள்.
குண்டு வைத்தால் தடா போடா தூக்கு தண்டனையா???
இதில் தாங்கள் சுட்டியதில் உள்ள குண்டுவெடிப்புகளில் கோவை மும்பை தொடர் குண்டு வெடிப்புகளையும் சேர்த்தாலும் உங்கள் வாதம் இப்படியே செல்லுமா? மேற்சொன்ன இரண்டிலும் எத்தனை பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்றார்கள்? ஏட்டளவில் உள்ள இந்தியாவில் சட்டம் எப்படி குற்றத்தை குறைக்கவில்லையோ அதே போல இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்படும் நாடுகளிலும் குற்றம் செய்யும் மனப்பான்மை குறையவில்லை. எண்ணிக்கைகள் வெறும் மாயை. மனத்தூய்மையே உண்மையான சாட்சி. ஒரு பெண்ணை ஒருவன் பார்த்தவுடன் கற்பழிக்க மனதுக்குள் வெறி கொள்ளுதலும், கற்பழிப்பில் ஈடுபடுவதும் சட்ட்த்தின் பால் வேண்டுமானால் வித்யாசப்படலாம். அறத்தின் பால் இரண்டும் ஒரே குற்றச்செயல் தான். டொமஸ்டிக் வயலன்ஸ் எனப்படும் வீட்டளவிலான வன்முறை அரபு நாடுகளில் தான் உலகளவில் அதிகம். பணிப்பெண்கள் அங்கே சகல வித்த்திலும் துன்புறுத்தப்படுகிறார்கள். மன தூய்மை வீட்டுக்கு வெளியே விடப்படும் செருப்பு போல அங்கே பின்பற்றப்படுகிறது.

கற்பழிப்பு குறித்த உங்கள் புள்ளிவிவரங்கள் குறித்து.
இந்த எண்களை கணக்கில் கொள்ளும் முன்பு இந்தியாவின் மக்கள் தொகையையும் ஒப்பிட்டு பார்த்து பேசுவது நலம். புள்ளிவிவரம் தந்த்து இம்ரான் என்பதால் நான் நம்புகிறேன். உங்கள் கணக்குப்படி நூற்றி முப்பது கோடி மக்களுக்கு 20000 என்பது 1.63விகிதம் என்ற அளவில் கற்பழிப்பு  இந்தியாவில் நடந்துள்ளது. சவூதியில்26,534,504 பேருக்கு 500 என்ற வகையில் 1.88 விகிதம் கற்பழிப்பு நடந்துள்ளது. குற்ற விகிதம் எங்கே அதிகம் நடந்துள்ளது? எங்கே மனமாசு அதிகம் உள்ளது? குற்றம் என்பது நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் நாடுகளில் தான் குற்ற சதவீதம் அதிகம் உள்ளது.

இம்ரான் என் இந்த வாய்ப்பில் முத்தாய்ப்பாக சொல்ல விரும்புவது இஸ்லாம் கடுமையான சட்டக்களின் மூலம் மக்களை நல்வழிக்கு வலிந்து திருப்புவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களை நாகரீகமற்ற விலங்குகளுக்கு இணையாக யோசிக்கவும் செயல்படவும் வைத்து விட்ட்து.
நான் கணக்கில் கொஞ்சம் சுமார்தான். கணக்கை சரிபார்த்து அவசியம் பதில் எழுதவும். தவிர்க்காமல்.
Imran Sheriff 26 February 


ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  உங்கள்  மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும்  நிலவட்டுமாக !

தங்களின் முந்தைய  பதிலின் ஆரம்பமே அபாண்டம் , நாம் இருவரும் ஒப்பு கொண்ட விவாத  நிபந்தனைகளில் எதிலும் " சகித்து கொண்டு " விவாதம் செய்யும் அளவிற்கு இதில் எந்த வித கடினமான நிபந்தனைகளும் நான் காணவில்லை , அப்படி இருந்தால் அதை முன்னரே கூறி இருத்தல் வேண்டும், இருவரும் ஒப்புக்கொண்ட பின் , நிபந்தனைகளை விமர்சிப்பது உசிதம் இல்லை .

//அரபு நாடுகளில் கையை வெட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். திருடுவதில்லையா?//

என்று எழுதி உள்ளீர்கள் , நான் எங்கும் இஸ்லாமிய சட்டம் பின்பற்றபட்டால் மக்கள் யாருமே திருடமாட்டார்கள் என்று கூறினேனா? திருட்டு அளவு பெருமளவிற்கு நிச்சயமாக குறையும் என்றே கூறினேன் இதற்கான புள்ளிவிவரத்தை  முந்தைய பதிப்பில் தெளிவாகவே பதிந்திருந்தேன், அதற்கு பொருத்தமில்லாமல் "புள்ளிவிவரங்கள் மேலோட்டமானவை." என்று கூறி  ஒரு 'கற்பனை ஆதாரத்தை' முன்வைத்துள்ளீர்கள். எண்ணிக்கைகள் வெறும் மாயை.” என்று கூறும் உங்கள் போக்கு என்னவென்பது ?

//இஸ்லாமிய நாடுகள் சட்டத்தின் கடுமையைக் காட்டி மக்களை குற்றம் செய்யாமல் தடுத்து வைத்துள்ளது // என்று தங்களின் முந்தைய பதிப்பில் நேர்மையுடன்  ஒப்புகொண்டமைக்கு நன்றி.

மேலும் நான்  எந்த இடத்திலும் மக்களை பண்படுத்த வெறுமெனே  சட்டங்கள் மாத்திரம் போதும் என்று கூறவே இல்லை , நான் இவ்வாறு கூறியதுபோல் தாங்களே  கற்பனை செய்து கொண்டு "குற்றங்களை செய்யும் மனப்பான்மை குறைய வேண்டும்." என்று கூறியுள்ளீர்கள், இதற்காக தான் இஸ்லாம் மனிதர்களுக்கு ஒழுக்க  மாண்புகளை போதித்துள்ளது,இந்த ஒழுக்க மாண்புகளை பின்பற்றாத மனிதர்களுக்காகவே சட்டங்களையும் வழங்கியுள்ளது. ஆக இஸ்லாம் இந்த இரண்டையும் இணைத்தே சட்டம் வழங்குகிறது   

இங்கு தலைப்பு இஸ்லாமிய சட்டமான மரணதண்டனை சரியானதா என்பதுதான் , அதை பற்றி பேசாமல் , குற்றம் செய்யும் மனப்பான்மை குறைய வேண்டும் என்று இருவருமே ஒப்புகொள்ளும் ஒரு வாதத்தை வைத்து தேவை இல்லாமல்  மிக நீண்ட விளக்கங்களை கொடுத்து வருகிறீர்கள் .

தலைப்பிற்குள்  நின்று விவாதிக்குமாறு நினைவுறுத்தி கொள்கிறேன் .

அடுத்த படியாக சம்மந்தா சம்மந்தம் இன்றி இராக் மற்றும் இலங்கையிலும்  அநீதியாக கொலைசெய்ய பட்ட , பாதிப்பிற்கு உள்ளான இவர்களை , கொலை , கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் புரியும் மனித மிருகங்கலுடன்  இணைத்து ஒரே விதமாக கூறி இருப்பது தங்களின்  முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது .

புள்ளி விவரங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டு தங்களுக்கு தாங்களே முரண்பட்டு தாங்களே  புள்ளி விவரங்களை வழங்கியுள்ளீர்கள்.. அதுவும் ஒரு தவறான புள்ளி விவரத்தை .

அடுத்ததாக இது வரை தாங்கள் பதில் அளிக்காத கேள்விகளின் பட்டியலை இங்கு தருகிறேன் , நீங்களே நினைவுரித்து கொள்ளுங்கள் :
மரண தண்டனை என்றில்லாமல் ஆயுள் தண்டனை , 6 மாத  சிறை தண்டனை என்பதையும் கூட ஒருவர் காட்டுமிராண்டி தனம் என்பார் , இதற்க்கு எப்படி  பதில் கூறுவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை .

மரண தண்டனை என்பது தேவையில்லை என்றால் ஆயுள் தண்டனை மட்டும் ஏன் தேவை என்று சொல்கிறீர்கள்?? இரண்டு வருட தண்டனை மட்டும் ஏன் வேண்டும் என்று சொல்கிறீர்கள்??
ஆறு மாத தண்டனை மட்டும் ஏன் வேண்டும் என்று சொல்கிறீர்கள்?? ஆயிரம் ருபாய் அபராதம் மட்டும் ஏன் வேண்டும் என்று சொல்கிறீர்கள்??
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி, "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" கேட்பீர்களா என்பதற்கு பதில் இல்லை.
மரண தண்டனை பெரிய மனித உரிமை மீறல் என்றால், மேலே உள்ளவை அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள மனித உரிமை மீறல் தானே?
பெரிய மனித உரிமை மீறலை தான் செய்ய கூடாது, சிறிய சிறிய மீரகளை செய்யலாம் என்பது உங்கள் நிலையா??
பெரிய காட்டு மிராண்டி செயலை செய்ய கூடாது, சிறிய சிறிய காணட்டு மிராண்டி செயல்கள் என்றால் செய்யலாம் என்பது தான் உங்கள் நிலையா?

 சரி இஸ்லாமிய சட்டத்தை குறை கூறினால் , அதை விட சிறந்த ஒரு சட்டத்தை கூறவேண்டும் அதற்க்கும் பதில் இல்லை.
 நாகரீக வளர்ச்சியும் , மன பக்குவமும் குற்ற செயல்கள் குறைய உதவலாம் ஆனால்  இது ஒவ்வரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியுமா ?ஆனால்  சட்டம் என்றால் அந்த கட்டுபாட்டுக்குள் அனைவரையும்  உள்ளடக்கும் .
குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளையும் களைகிறது  இஸ்லாம். அதனால் தான் இஸ்லாமிய சட்டம் சிறந்தது.
 இஸ்லாம் சொல்லும் சட்டமானது,ஏனைய  அனைத்து  மனித  சட்டங்களை ஒப்பிடுகையில் பெருமளவிற்கு  குற்றங்களை குறைக்க உதவுகிறது என்பது நிதர்சனம்  

ஆகவே  இஸ்லாமிய சட்டம் மனிதர்களை மனிதர்களாக இருக்கவும் , மனிதர்களை மனித மிருங்கங்களிடமிருந்து காப்பாற்றவும் செய்கிறது என்பது ஒரு எதார்த்தமான விஷயம் . ஜெய பிரகாஷ் 26 february


அன்பின் இம்ரான்

சகித்துக்கொண்டு என்பதை மட்டும் பார்த்து உணர்ச்சிவசப்பட வேண்டாம். உங்களிருவர் தரப்பில் இருந்து அதிக நிபந்தனைகள். பெரிதான மாற்றமில்லாமல் நான் ஏற்றுக்கொண்ட்தே நான் விவாத்த்தை தொடர எண்ணியதற்கு சாட்சி. உண்மையில் கருத்துக்களைப் பேசாமல் என் எழுத்துக்களுக்கு பொழிப்புரை தருமளவு நீங்கள் முதிர்வில்லாமல் இருப்பது இன்னும் விவாத்த்தை தொடர தடையேதான். என்றாலும் உங்கள் புரிதலுக்காக இன்னும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். ஒப்புக்கொண்ட பின் விலகிப்போகும் கோழைத்தனம் எனக்கில்லை. இன்னும் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். இந்த விவாத்த்தை ஒப்புக்கொண்ட்தே இம்ரான் என்ற தெரிந்தவருக்கான முகதாட்சன்யத்தில் தான். வேறு யாராவது டி.என்.டி.ஜே ஆள்களோ பிற மத அடிப்படை வாதிகளோ அழைத்தால் நான் பொருட்படுத்தி இருக்கப் போவதில்லை. மீண்டும் உங்கள் புரிதலுக்காக உங்கள் இருவரையும் நான் மேலே உள்ள வகையில் எண்ணிப்பார்க்கவில்லை. நீங்கள் உண்மையிலேயே அப்படி இருந்தாலும் இம்ரானுக்காகத்தான் இந்த விவாதமே ஒழிய எந்த ஒரு மத அடிப்படைவாதியையும் வாத்த்தால் வளைக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத்தெரியும். அது குடிகாரனிடம் பேசுவதைப்போல. முடியவே முடியாது.

பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்றீர்கள். பதில் சொல்லுமளவு அந்தக் கேள்விகளுக்கு தகுதி இல்லை என்பதாலேயே அவற்றை நான் விட்டு வைத்த்து. எனது பல கேள்விகளும் இன்னும் உங்களால் திறக்கப்படாமலேயே உள்ளன. பிறவற்றை விட கடந்த பதிவில் என் கடைசி பத்தி நம் விவாத்த்தின் மையக்கண்ணி. அதை தொட்டு பேசாமல் எந்தக் காரணத்துக்கேனும் நீங்கள் தவிர்த்தாலும் நாகரீகம் கருதி நானும் போகட்டும் என விடுகிறேன்.


இஸ்லாம் இந்த இரண்டையும் இணைத்தே சட்டம் வழங்குகிறது   
அப்படியெல்லாம் வழங்கி விடவில்லை. என் முந்தைய பதிவின் கற்பழிப்பு குறித்த கடைசி பத்தியை வசதியாக மறந்து விட்டால் மட்டுமே இப்படி கேட்கத்தோணும். உங்கள் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரம் உள்ளது போல எனது புள்ளிவிவரங்களுக்கும் உள்ளது. நான் புள்ளிவிவரங்களை நம்புவதில்லை. உங்கள் புரிதலுக்காக உதாரணம் காட்டவே அது., போக இஸ்லாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒழுக்கத்தை கொடுத்து விடுவதில்லை. ஒழுக்கமின்மை என்பது மனிதனின் அடிப்படை குணம். அதை எந்த மார்க்கமும் சரி செய்து விடாது. இஸ்லாம் சரி செய்யவில்லை என்பது கற்பழிப்பு குறித்த என் கடைசி பத்தி சொல்வது.

//இஸ்லாமிய நாடுகள் சட்டத்தின் கடுமையைக் காட்டி மக்களை குற்றம் செய்யாமல் தடுத்து வைத்துள்ளது // என்று தங்களின் முந்தைய பதிப்பில் நேர்மையுடன்  ஒப்புகொண்டமைக்கு நன்றி.
இதற்கு மகிழ்ச்சி கொள்ளத்தேவை இல்லை. உண்மையில் வெட்கப்பட வேண்டும். பயமுறுத்தி பள்ளிப்பிள்ளைகளை படிக்க வைப்பது போல வெறும் பயம் காட்டி குற்றத்தை குறைப்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டால் அது அசிங்கமே.

குற்றம் செய்யும் மனப்பான்மை குறைய வேண்டும் என்று இருவருமே ஒப்புகொள்ளும் ஒரு வாதத்தை வைத்து தேவை இல்லாமல்  மிக நீண்ட விளக்கங்களை கொடுத்து வருகிறீர்கள் .

குற்றம் செய்யும் மனப்பான்மை மனமாற்றத்தால்-நாகரீக வளர்ச்சியால் வர வேண்டும் என்று நான் சொல்கிறேன். பயத்தால் வர வேண்டும் என இம்ரானும் இஸ்லாமிய சட்டங்களும் சொல்லி வருகின்றன. இது நமக்குள்ள வேறுபாடு. இதற்கும் பொழிப்புரை கொடுப்பது உங்கள் புரிதலுக்குதான் அசிங்கம்.

அடுத்த படியாக சம்மந்தா சம்மந்தம் இன்றி இராக் மற்றும் இலங்கையிலும்  அநீதியாக கொலைசெய்ய  பட்ட பாதிப்பிற்கு உள்ளான இவர்களை கொலை கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் புரியும் மனித மிருகங்கலுடன்  இணைத்து ஒரே விதமாக கூறி இருப்பது தங்களின்  முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது .
இம்ரான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுமையாக என் ஒவ்வொரு வரிய்யும் விளக்கி விளக்கி சலிப்பே வந்து விட்ட்து. விவாதம் பண்ணலாம். தமிழ் தெரியாமல் விதண்டாவாதம் பண்ண வேண்டாம். என் முந்தைய எல்லா பதிவுகளிலும் தெளிவாக சொல்கிறேன். அரசால் ஒரு உயிர் கூட கொல்லப்படக்கூடாது என்பது மனிதாபிமான அடைப்படையிலான எனது விருப்பம். அதுவே அடிப்படை மனித நாகரீகம். நான் சொன்ன அனைத்து உதாரணங்களிலும் அரசு கொலைக்குற்றம் புரிந்துள்ளது. அதையே நான் சுட்டி பேசுகிறேன். இதைப்புரிந்து கொள்ள இப்படி ஒரு பொழிப்புரை கேட்கும் உங்களின் விவாத முதிர்ச்சியின்மையை நான் முக தாட்சன்யத்துக்காக மன்னிக்கலாம். ஒரு பொது வெளியில் இப்படியெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கேட்டுக்கொண்டிருந்தால் மிகவும் அசிங்கப்பட்டு போவீர்கள். உங்களுக்கு முறையான பயிற்சி இருக்கும் என்று தப்பாக நினைத்து விட்டேன். காயடிக்கப்பட்ட காளைகள் போல மதபோதனை மட்டுமே கேட்டு வளர்ந்துள்ளீர்கள் என்பது வருந்த்த்தக்க உண்மை. கொஞ்சம் மொழியறிவு அரசியல் அறிவு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளுங்கள். சமூக வாழ்வில் இதெல்லாம் தேறாமல் இருக்க முடியாது.

மரண தண்டனை பெரிய மனித உரிமை மீறல் என்றால்மேலே உள்ளவை அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள மனித உரிமை மீறல் தானே?
மரண தண்டனையை நான் மனித உரிமை மீறல் என்ற நிலையில் வைத்துப்பார்க்கவில்லை; மனித நேயத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். இதை இதே விவாத்தில் பலமுறை எடுத்து சொல்லியும் மீண்டும் மீண்டும் அதையே கேட்டால் மேலும் சொல்ல என்னிடம் வேறு எதுவும் இல்லை. சலிப்பே மிஞ்சுகிறது. நான் எழுதியதை யாரவாது தமிழறிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்து பதில் எழுதவும். நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். மனித உரிமை என்று இந்தியாவில் யார் பேசினாலும் அவர்கள் பிழைப்புவாதிகள் அந்த வார்த்தை கெட்டவார்த்தை. நான் அதில் இல்லை

இஸ்லாமிய சட்டம் ஒரு வரலற்றுக்காலத்துக்கு முந்தைய சட்டம். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது யூதர்களிடமும் இன்னுமுள்ள உலக பழங்குடிகள் அனேகம் சமூகத்திலும் உள்ள நடைமுறை. இதில் இஸ்லாமும் அடக்கம். இது நாகரீகமா? இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்த காலகட்டங்களில் இது போல நீதிமன்றம் சிறைச்சாலை கல்வி போன்ற ஒழுக்க பயில்முறைகள் தெளீவாக இல்லை. ஒரு போர்ப்படைத்தலைவரால் ஆயிரமாயிரமாண்டு களூக்கு முன்பு  நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களை இப்போதைய மக்களாட்சி காலத்திலும் ஒப்பும் என்பது குறைந்த பட்ச பகுத்தறீவுள்ள யாரும் ஒப்புக்கொள்ள முடியாத மூட நம்பிக்கை. எனக்கு மூட நம்பிக்கைகளீல் நம்பிக்கை இல்லை. இந்தியா ஒரு பன்மைத்தன்மை வாய்ந்த தொன்மையான நாடு. சமணர்கள் வைனவர்கள் என பல்லாயிரம் மக்கள் மத்த்தின் காரணமாக கழுவேற்றி கொல்லப்பட்ட தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நான் எழுதுகிறேன். தெளிவாக. அரசால் யாரும் கொல்லப்படக் கூடாது.

ஒரு ஆயுள் தண்டனையில் அந்த கொடூர குற்றவாளி திருந்தினால் அவனுக்கான வாழ்வை இந்த சமூகம் மன்னித்து வழங்குவதில் என்ன தப்பு? அஃப்சல் குரு தப்பு செய்யவில்லை; ரிசானா தப்பு செய்யவில்லை; பேரறிவாளன் தப்பு செய்யவில்லை என்று அவர்கள் துக்கிலிட்ட நாட்களுக்கு பின் ஆதாரப்புர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்த உயிர்களை உங்கள் சட்டம் கொண்டு வந்து விடுமா? குருதிப்பணம் உயிரிழப்பை ஈடு செய்யுமா? தனி மனிதன் கொலை செய்தால் தப்பு. அரசு கொலை செய்தால் அது அநீதி. மேலும் மரண தண்டனை ஒருமுறை நிறைவேற்றப் பட்டுவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாது. சட்ட அமைப்புகள் மனிதனால் நிர்வாகிக்கப்படும் வரை பிழைகள் இழைக்கக் கூடியவை என்பதால் குற்றமற்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

பிற்போக்கான இஸ்லாமிய சட்டங்களானலும் சரி பிற மக்களாட்சி சட்டங்களானலும் சரி மனிதர்களாலேயே நிர்மாணிக்கப்படுகிறது. ஒரு கஸாப் செய்த்தை போல ரிஸ்வானா செய்த்தை போல பிரபாகரன் செய்த்தை போல முஸ்லிம் சட்டக்காவலர்களும் தப்பு செய்யலாம். அல்லவைத்தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள் இந்த முஸ்லிம் சட்டக்காவலர்கள் தப்பே செய்யாத கடவுள் என்று சொல்லப்போகிறீர்களா?

காந்தியை கொன்றவனை தூக்கிலிட்டோம். கொஞ்ச நாள் கழித்து இந்திராவை சுட்டவர்களை தூக்கிலிட்டோம். ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கும் தூக்கு. இதனாலெல்லாம் குற்றம் குறையவில்லை. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்து ஐநூறு பேர்வரை தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் குற்றங்கள் தண்டனையால் குறையாது. நான் படித்திருக்கிறேன். தமக்கு துரோகம் இழைத்தவர்களையும் தூதட் நபி மன்னித்திருக்கிறார் என்று. அந்த நாகரீகம் அவர் பெயரைச் சொல்லி வாழ்பவர்களிடம் இல்லாமல் போனது எனக்கு ஒன்றும் வியப்பாக இல்லை. இது தான் மனித இயல்பு. உலகில் அதிகம் மரண தண்டனை வ்ழங்குவது சீனா, பின் ஈரான், அமேரிக்கா சவூதி என போகிறது. என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்கானாலும் சரி மனித்த்தன்மையற்ற அட்டூழியமான மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். மிக மேலாக இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் பொது இட்த்தில் அளிக்கப்படும் காட்டுமிராண்டித்தனம் மாற்றப்பட வேண்டும்.
Imran Sheriff 28 February 


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு நிலைக்கு மேல் தவறுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு போகும் போது வார்த்தைகளில் கண்ணியக்குறைவு ஏற்படும் என்பது நாங்கள் அறிந்ததே.குடிகாரன் பேச்சு, காயடிக்கப்பட்ட காளை போன்ற உங்களது உதாரணங்கள் உங்கள் தகுதியை நமக்கு காட்டுகிறது  என்றாலும் உங்கள் தகுதிக்கு நாம் கீழே இறங்கப்போவதில்லை.

முதிர்ச்சியுடன் சிந்திப்பதை பற்றி ஒரு கடவுள் நம்பிக்கையற்றவர்  பேசுவது வியப்பான ஒன்று.மனிதனின் அறிவை கொண்டு பகுத்தறியும் போது கடவுள் சித்தாந்தம் தான் அவனை முதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது, கடவுள் இல்லை என்று சொல்வதை விடவும் ஒரு முதிர்ச்சியின்மை உலகில் இல்லை என்கிற சாதாரண அடிப்படை அறிவை மத நம்பிக்கையாளர்களான நாங்கள் பெற்றுள்ளோம். ஒருவர் தான் பார்ப்பதை மட்டும் நம்புவேன் என்று சொல்வதற்கும், எனது அறிவுக்கு அது எட்டவில்லை என்பதால் நம்ப மாட்டேன் என்று சொல்வதற்கும் அவர் மனிதனின் முதிர்ச்சியை கொண்டிருக்க  வேண்டியதில்லை, ஆடு மாடுகளின் முதிர்ச்சி இருந்தாலே போதும். பார்ப்பதை வைத்து நம்பியதால் தான் குரங்கில் இருந்து நான் பிறந்தேன் என்கிற உலக மகா முதிர்ச்சியான சிந்தனைகள் எல்லாம் உருவாயின.
ஒரு மனிதனையும் குரங்கையும் பார்க்கிற ஒரு ஆடு அல்லது மாடு, இப்படி தான் சிந்திக்கும் எனும் போது அதே போல் நானும் சிந்திப்பேன் என்று சொல்வதற்கு என்ன முதிர்ச்சி தேவையோ அத்தகைய முதிர்ச்சி மதவாதிகளிடம் இல்லை தான்.
ஆனால் எத்தகைய முதிர்ச்சி இருக்கிறது தெரியுமா? உலகம் அழிகிற நாள் வரை, ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்கிற சட்டத்தை வழங்கும் முதிர்ச்சி உள்ளது.மனிதனின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரே புரிந்து வைக்கின்ற முதிர்ச்சி இறைவன் அருளால் மதவாதிகளுக்கு இருக்கிறது.

மரண தண்டனை தான் குற்றங்களை ஒழிக்கும் என்றால் அதற்கு இல்லை இல்லை, அது காட்டுமிராண்டி தனம் விலங்குகளின் குணம் என்று பேசுகிறீர்கள் சரி வேறு எது தான் குற்றங்களை குறைக்கும் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.நாகரீகத்தை வளர்க வேண்டும் என்கிற மேம்போக்கான பதிலை சொல்கிறீர்கள். நாகரீகம் வளர்ந்து தான் இருக்கிறது. பண்டைய ஹரப்பா காலத்திலா நாம் வாழ்கிறோம்? நாகரீகம் உச்சியில் இருக்கிற காலத்தில் நாம் நாம் வாழ்கிறோம். நாகரீகம் வளர்ந்ததோடு சேர்த்து குற்றங்களும் பெருகியது என்கிற சாதாரண உண்மை, உங்களை போன்ற முதிர்சியுடையவர்களால் (?) சிந்தனைக்கு எடுதுக்கொள்ளடவில்லை.
மரண தண்டனை காட்டு மிராண்டித்தனம் என்று சொல்வது போல, ஆயுள் தண்டனை கூட காட்டுமிராண்டி தனம் என்று ஒருவர் வாதிட்டால் அவருக்கு என்ன பதிலை சொல்வீர்கள்?? என்று கேட்டதற்கு இந்த நொடி வரை உங்களிடம் இருந்து வதில் வரவில்லை. அவனை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற சாத்வீகமன பதிலை திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். 
எனது முதல் பதிவிலேயே இதை குறிப்பிட்டிருந்தேன். ஆறு முறை சைக்கிள் திருடியவன் ஆறாவது முறையாக கைது என்கிற செய்தி சவூதி பத்திரிக்கையில் வரும் செய்தியல்ல நம் இந்திய பத்திரிக்கைகளில் வரக்கூடிய செய்திகள் தான்.ஆறு முறை திருடியும் அவன் திருந்தாது யார் குற்றம்? நாகரீகதின் குற்றமா? அல்லது அந்த சைக்கிளை பரி கொடுத்தவனின் குற்றமா? அல்லது நாகரீகம் வளர்ந்த பின்னரும் சட்டங்களில் கடுமை காட்டாமல், சைக்கில் திருடியதற்காக 50 ருபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவனை விடுதலை செய்கிற கேடு கேட்ட சட்டம் காரணமா?? எப்படி சிந்திப்பது முதிர்ச்சி?? 

// கொடுமையின் உச்சமாக இண்டெர்னெட்டில் போர்னோகிராபி படங்களை வகை ரீதியாக பார்ப்பதில் அநேகமாக எல்லா வகையிலும் முதல் இட்த்தை பாகிஸ்தான் அல்லது சவூதி அரேபியா தட்டிச்செல்கிறது.//

உங்கள் மூடத்தனம் தான் எத்துனை அழகு ! நான் இருப்பது சவுதியில் என்பது தாங்கள்  அறிந்ததே . இன்டர்நெட்டில் "செக்ஸ் " என்றோ  "போர்ன்" இது போன்ற வகையறாக்கள் கொண்ட சொற்களை டைப் செய்தாலே  உடன்  "Prohibited/banned" தடைசெய்யப்பட்டது என்று தான் வரும் ..  போர்னோகிராபி என்பது வன்மையாக  தடை செய்ய பட்டது. இதற்க்கு முற்றிலும் நேர் மாறாக நம் இந்தியாவில் செக்ஸ் / "போர்ன்" எவ்வளவு சாதரணமான, மிகவும் எளிதாக கிடைக்கபெறும் ஒரு விஷயம் என்பதை நான் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா ? இவ்விஷயங்களில் நம் நாட்டில் உள்ள வசதிகளை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் நான் நிச்சயம் சொல்ல வேணுமா ?

ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை என்றால் பேசாமல் இருப்பது கண்ணியம்     

கேடுகேட்ட  ஆண்டி- இஸ்லாமிக் இணையதளங்களிலிருந்து ,  தாங்கள் தகவல் சேகரிக்கும் திறன் மெய் சிலிர்க்க வைக்கிறது. சிறிதும் அடிபடையற்ற செய்திகளையெல்லாம் தாங்கள் வாதத்தில் வைப்பீர்கள் என்று நான் எண்ணவில்லை, ஆக அடுத்த முறை இவ்வாறன நகைச்சுவையான  கட்டுகதைகளை தவிர்ப்பது அவசியம். 

சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது குற்றங்கள் குறையும் என்பதற்கு சில புள்ளி விவரங்களை நாம் கட்டிய போது புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று முதிர்ச்சியுடன் (?) சொன்ன நீங்கள், உங்களுக்கு சாதகம் போல ஒரு புள்ளிவிவரம் கிடைத்ததும் அதை உங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டி உங்களது உலக மகா முதிர்ச்சியை வெளிக்காட்டிநீர்கள். கொலை சம்பவங்கள் நாடு வாரியாக (ஒவ்வொரு 100,000) பேருக்கு எத்தனை குற்றங்கள்  என்கிற புள்ளி விவரத்திற்கு பதில் சொல்லாத நீங்கள், கற்ழிப்பு சம்பவம் சவ்வுதியில் குறைவு இந்தியாவில் அதிகம் என்று நான் காட்டிய புல்லிவிவரதிற் புள்ளிவிவரத்திற்கு மட்டும், சவுதி மற்றும் இந்தியாவின் மக்கள் தொகையை வைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் .. இது சரியான கேள்வி போல உங்களுக்கு தோன்றுவதும் கூட உங்களிடம் இருக்கும் முதிர்ச்சியையே(?) காட்டுகிறது. 
காரணம், இந்தியாவில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையையும், அவற்றில் அதிகாரப்பூர்வமாக பதிவுக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகளையும் ஒப்பீடு செய்கிற போது, ஏராளமான குற்ற செயல்கள் கணக்கிற்கே வராமல் தான் இருக்கின்றன என்பது பொது ஆர்வலராக இருக்க கூடியவர்களுக்கு நன்கு தெரியும். இன்றும் கிராமப்புறங்களில் தினம் தோறும் பல கற்பழிப்புகள் நடக்கின்றன என்று மனித ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஒவ்வவொரு நாற்பது நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறது என்று புள்ளிவிவரம் சொல்கிறது.ஆனால் இவையெல்லாம் குற்ற செயல்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் உள்ளதா? இவை அனைத்தும் நாட்டு சட்டத்தின் வழக்கு பதிவுகள் செய்யப்பட்டவை தானா? என்று சிந்தித்து பார்க்கையில், பாதிக்கு பாதி சம்பவங்கள், வழக்கிற்கு கூட எடுக்கப்படுவதில்லை என்கிற உண்மை புரியும். ஆனால் சவூதி அரேபியாவின் நிலை இப்படியல்ல. அங்கே ஒரு குழந்தை பாலூட்டும் ஒரு வேலையாளால் கொல்லப்படுவது, உலகம் முழுவதும் பற்றி எரிகிற செய்தி ஆகிறது. ஒரு ATM வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தால் அது பெரும் குற்றமாக கருதப்பட்டு, அனைத்து ஊடகமும் பரப்புகிறது. ஆக, குற்ற செயல்களின் புள்ளி விவரங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் என்பது மேலே உள்ள அளவுகோலின் படி பார்க்கையில் வேறுபாடு விளங்கும். ஆனால் எனது ஆச்சர்யம் என்னவென்றால் இதற்கு வரிந்து கட்டிக்கொண்டு பதில் சொல்கிற நீங்கள், நாடுவாரியாக கொலை சம்பவங்கள் பதியபப்ட்டது குறித்த எனது புள்ளிவிவரதிற்கு மட்டும், புள்ளி வவரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிற முதிர்ச்சியான (?) பதிலை சொல்லி விடுகிறீர்கள் என்றால், இங்கே தோற்பது உங்கள் முதிர்ச்சியா அல்லது எங்கள் இஸ்லாமிய சட்டமா??

குற்றங்களை கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்க கூடாது, மென்மையாக புரிய வைத்து குற்றவாளியை திருத்த வேண்டும் என்று சொல்கிற நீங்கள், இதை செயல் வவடிவத்திலும் நிரூபித்திருக்க வேண்டும், அப்போது உங்கள் வாதத்திற்கு விலை இருந்திருக்கும். 


ஆசிட் வீச்சின் மூலம் தமிழகத்தில் பல பெண்களின் உயிர் சீரழிக்கப்படுகிறது. ஒரு சம்பவம் நடந்தது என்றால், அதன் தொடர்ச்சியாக பல சம்பவங்கள். போதாக்குறைக்கு, ஊடகங்களிலும், சினிமாவிலும் கூட இதே போன்ற காட்சிகள். விளைவு என்ன? தான் காதலிக்கும் பெண், தன்னை விட்டு இன்னொருவனை காதலித்து விட்டால், தனக்கு கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைக்கக்கூடாது என்று எண்ணுகிறான் இவன். தமிழகத்தில் சந்திரலேகா போன்றோர் மீது ஆசிட் வீசப்பட்டு பல வருடங்கள் ஆயின, அனாலும் வினோதினி முதல் திவ்யா வரை இந்த சம்பவங்கள் தொடர் கதையாக தான் உள்ளன.இதை எழுதிக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் கூட தமிழகத்தின் கிராமம் ஒன்றில் கணவன் மனைவி மீது ஆசிட் வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளான்.  இவனை எந்த மென்மையான சட்டத்தால் திருத்த முடியும் என்பதை நடைமுறையில் விளக்கி நிரூபித்து விட்டு இந்த வாதத்தை சொல்லியிருந்தால் நீங்கள் நடைமுறைக்கு உகந்து பேசுகிறீர்கள் என்று எடுதுக்கொண்டிருப்பேன். ஆனால், மென்மையான சட்டங்கள் மூலம் திருந்தாதது, கடுமையான சட்டங்கள் மூலம் திருந்தியது. 2008 ஆம் ஆண்டு ஹதராபாத்தில் மூண்டு மாணவிகள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார்கள். மாநிலமே குலுங்கிய அந்த சம்பவத்தில் காவல் துறையே என்கவுண்டர் மூலம் கொலையாளிகளை சுட்டுக்கொன்றது, இந்த நிமிடம் வரை ஆந்திராவில் ஆசிட் வீச்சுக்கள் நடப்பதாக நான் அறிந்தவரை செய்திகள் இல்லை.!!
குழந்தை கடத்தல் சமீபத்தில் சர்வ சாதாரணமாக நடைபெற்றன, நமது மாநிலத்தில். கடத்தப்பட்ட குழந்தைகள் தயவு தாட்சண்யமின்றி கொலையும் செய்யப்பட்டனர். தொடர் கதையாக நிகழ்ந்த இந்த சம்பவம், கோயம்புத்தூர் என்கவுண்டர் சம்பவத்துடன் முற்றுப்பெற்றது என்றால் குற்றங்கள் குறைப்பதற்கு எது சரியான வழி என்பதற்கு இவை நிதர்சனமான சான்றுகளாக உள்ளன. சட்டப்பூர்வமான தண்டனைகளையே நான் ஆதரிக்கிறேன்,, என்கவுண்டர் என்பது சட்ட பூர்வமான தண்டனை இல்லை என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை என்ற போதிலும் குற்றங்களை எத்தகைய தண்டனை குறைக்கிறது என்பதை விளக்குவதற்காக இவற்றை சுட்டிக்காட்டுகிறேன்.
மீண்டும் ஒரு முறை நினைவுறுத்துகிறேன் இஸ்லாமிய சட்டம் தான் மனிதகுலதிர்க்கான ஒரே சரியான தீர்வு.


ஜெய பிரகாஷ் 1st March

அன்பின் இம்ரான்
என்னைப்பற்றியும் என் எழுத்தின் கண்ணியம் பற்றியும் உங்கள் புரிதல் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மனித ஒழுக்கம்-விழுமியங்கள் பற்றிய மதிப்பீடுகள் தரம் தாழ்ந்து வருகின்றன என்பது கவலைக்குரிய உண்மை. இதைத்தவிரவும் இது சம்பந்தமாக வேறு எதையும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நிற்க.
மனிதனின் அறிவை கொண்டு பகுத்தறியும் போது கடவுள் சித்தாந்தம் தான் அவனை முதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறதுகடவுள் இல்லை என்று சொல்வதை விடவும் ஒரு முதிர்ச்சியின்மை உலகில் இல்லை
கடவுள் உண்டு-இல்லை என்பதான கற்பிதமான விவாதங்களில் எனக்கு நாட்டமில்லை என்று முன்னமே சொல்லி இருக்கிறேன். எனக்கு இதில் இரண்டிலும் நம்பிக்கை இல்லை. நான் யோசிப்பதும் பேசுவதும் மனிதகுலத்துக்காக. இங்கே பேசிக் கொண்டிருப்பதும் அதற்கே. மூளையின் செயல்பாடுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுகளின் துணை கொண்டு நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஓரளவு கற்றவன் என்ற முறையில் கடவுள் என்னும் கற்பிதம் மனித மூளையின் செயல்பாடே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. கடவுள் அந்த மலைக்கு அப்பால் இருக்கிறார் என்று தெளிவான உறுதியுடன் ஒருவன் நம்பி பயணம் மேற்கொண்டால் கண்டிப்பாக அவனுக்கு அவன் மூளை கடவுளைக் காட்டும். பேய் என்பதே இல்லை என்பவன் கண்ணுக்கு ஒருக்காலும் பேய்கள் புலப்படா. ஆனால் பேய் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவனுக்கு அவன் மூளை பேயைக் காட்டி விடும். அவன் பேயை பார்த்தேன் என்பது பொய்யல்ல. உண்மையில் நமக்கு காட்சிகள் கண்களில் தெரிவதில்லை. கண்கள் மூலமாக மூளையில் தான் காட்சிகள் துலக்கமாகின்றன. எனவே மூளை ஒரு முகமூடி. எதை மாட்டிக்கொண்டிடுக்கிறதே அதுவாகவே ஆகிவிடும். இதற்கு மேல் கடவுள் என்ற கற்பிதம் அவரவர் பலம் பலவீனம் பொறுத்து. கடவுள் உண்டு என்று சொல்பவரும் இல்லை என்று சொல்பவரும் பொய்யர்களே. இந்த இரண்டுக்கும் இடையில் இது மூளையின் விளையாட்டு என்று விளங்கிக்கொண்டவர்களே உண்மையான பகுத்தறிவு வாதிகள். அப்படியானவர்கள் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒன்றுதான். நான் அப்படியான ஒரு பகுத்தறிவாளன் என்று இங்கே சொல்லிக்கொள்கிறேன். இதை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. பலரும் இந்த நுணுக்கமான வேறுபாட்டை அறியாமல் முரண்பாடு என்று குழம்புகிறார்கள். உங்கள் பார்வை எப்படியாகினும் இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
பார்ப்பதை வைத்து நம்பியதால் தான் குரங்கில் இருந்து நான் பிறந்தேன் என்கிற உலக மகா முதிர்ச்சியான சிந்தனைகள் எல்லாம் உருவாயின.
டார்வின் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்லவில்லை. அப்படியான வதந்தியை நீங்கள் நம்புவது எனக்கு அசிங்கமாக உள்ளது. நாமும் ஒரு வகை குரங்கு-முன்னேறிய குரங்கு. அவ்வளவே. ஹோமோ என்ற ஜீனஸில் சேஃபியன்ஸ் என்ற நம் ஒரே ஒரு ஸ்பீசியஸ் தான் உள்ளது. பலரும் மேற்சொன்ன வதந்தியை வைத்தே வாதம் செய்வார்கள். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால் ஏன் குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே உள்ளன?. ஆக்வே நீங்கள் சொல்லும் வரி பொய். நம்ப வேண்டாம்.நாகரீகத்தை வளர்க வேண்டும் என்கிற மேம்போக்கான பதிலை சொல்கிறீர்கள்.
இதை எழுதும் முன்பு சிக்னலில் மஞ்சள் கோட்டை தாண்டுவது என்ற என் உதாரணத்தை படித்து விட்டிருந்தீர்களா? அப்படி இல்லையெனில் அதை மறுபடியும் படிக்கவும். அதுதான் இதற்கு பதில். அப்ப்டி படிக்காவிட்டால் வேறு எந்த பதிலை சொன்னாலும் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது.
மரண தண்டனை காட்டு மிராண்டித்தனம் என்று சொல்வது போலஆயுள் தண்டனை கூட காட்டுமிராண்டி தனம் என்று ஒருவர் வாதிட்டால் அவருக்கு என்ன பதிலை சொல்வீர்கள்? என்று கேட்டதற்கு இந்த நொடி வரை உங்களிடம் இருந்து வதில் வரவில்லை.?
ஒரு ஆயுள் தண்டனையில் அந்த கொடூர குற்றவாளி திருந்தினால் அவனுக்கான வாழ்வை இந்த சமூகம் மன்னித்து வழங்குவதில் என்ன தப்பு? அஃப்சல் குரு தப்பு செய்யவில்லை; ரிசானா தப்பு செய்யவில்லை; பேரறிவாளன் தப்பு செய்யவில்லை என்று அவர்கள் துக்கிலிட்ட நாட்களுக்கு பின் ஆதாரப்புர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்த உயிர்களை உங்கள் சட்டம் கொண்டு வந்து விடுமா? மேலும் மரண தண்டனை ஒருமுறை நிறைவேற்றப் பட்டுவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாது. சட்ட அமைப்புகள் மனிதனால் நிர்வாகிக்கப்படும் வரை பிழைகள் இழைக்கக் கூடியவை என்பதால் குற்றமற்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன
நீங்கள் முன்பு கேட்ட்தற்கு சென்ற மடலில் நான் எழுதிய மேற்கண்ட வரிகளுக்கு பின்னரும் இந்த கேள்வியை மறுபடியும் வைப்பது மறதியாக தெரியவில்லை. உங்கள் மனசாட்சியை ஒருமுறை எழுப்பிவிட்டு கேட்ட்து சரியா என்று யோசித்து கொள்ளவும்.
சைக்கில் திருடியதற்காக 50 ருபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவனை விடுதலை செய்கிற கேடு கேட்ட சட்டம் காரணமா?? எப்படி சிந்திப்பது முதிர்ச்சி?? 
ஐம்பது ரூபாய் லஞ்சத்துக்கு சட்டம் வளைவது தப்பு என்பதை நானும் மறுக்கவில்லை. குருதிப்பணம் கொடுத்தால் சட்டம் மன்னிக்கும் என்பது சரியா என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? சட்டம் என்பது சகலருக்கும் சகலை நிலைகளிலும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நெகிழ்ந்தால் அது சட்டமல்ல . சம்பிரதாயம். நான் முன்னமே எழுதியது. உங்களுக்கு சமாதானம் வரும் வரை ஒரு ஆயிரம் முறை இதை காப்பி பேஸ்ட் செய்து படித்துக்கொள்ளவும். என்ன கைய புடிச்சு இழுத்தியா என்று ஆரம்பித்தால் முடியவே முடியாது. மிகவும் வருந்துகிறேன்.
இஸ்லாமிய சட்டம் ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பார்க்கிறதா? ஒரே குற்றத்துக்கு தண்டனைகள் இருவருக்கும் சமமா? இது குறித்த உங்கள் பார்வைகளை பதி செய்யுங்கள். பிறகு என் கருத்துக்களை ஆதாரங்களுடன் நிறுவுகிறேன்.
நான் இருப்பது சவுதியில் இன்டர்நெட்டில் "செக்ஸ் " என்றோ "போர்ன்" இது போன்ற வகையறாக்கள் கொண்ட சொற்களை டைப் செய்தாலே  உடன்  "Prohibited/banned" தடைசெய்யப்பட்டது என்று தான் வரும் ..  போர்னோகிராபி என்பது வன்மையாக  தடை செய்ய பட்டது.
இது உங்கள் மாயை. அப்படி நினைத்துக்கொண்டால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. நான் வேலை செய்யும் இட்த்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட்டுள்ளது. அப்படி என்றால் இந்தியா முழுக்க தடை செய்துவிட்டார்கள் என்று நான் சொன்னால் எப்படி இருக்கும் இம்ரான்? பூனை கண்னை மூடிக்  கொண்டால் உலகம் இருண்டு விடாது. நான் சொன்ன புள்ளிவிவரமும் அதிகாரப்பூர்வமான ஆதாரம் தான். இன்னும் நம்பிக்கை இல்லாவிட்டால் சென்னை வரும்போது சொல்லுங்கள்; நேரடி ஆதாரமே கொடுக்கிறேன்.
ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை என்றால் பேசாமல் இருப்பது கண்ணியம்
உங்களுக்கும் இது பொருந்தும்.
 உடைந்த நாற்காலி காணும் கனவில் எல்லாரும் காலில்லாதவர்களே (அப்துல் ரஹ்மான் அல்லது மு மேத்தா)

ஆண்டி- இஸ்லாமிக் இணையதளங்களிலிருந்து
உண்மையைச் சொல்லும் எல்லா தளங்களும் அப்படியாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி முடிவு செய்துகொள்வது நகைச்சுவைவாழ்த்துகிறேன்.
உங்களுக்கு சாதகம் போல ஒரு புள்ளிவிவரம் கிடைத்ததும் அதை உங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டி உங்களது உலக மகா முதிர்ச்சியை வெளிக்காட்டிநீர்கள்.
இன்னமும் சொல்கிறேன். எனக்கு புள்ளிவிவரங்களின் மேல் நம்பிக்கை இல்லை. ஒருவன் துப்பாக்கியோடு சண்டைக்கு வரும்போது நான் குறைந்த பட்சம் ஒரு அரிவாளாவது வைத்திருக்க வேண்டாமா? அதுவும் இல்லாமல் வெறும் கையில் வந்தால் அதுதான் முதிர்ச்சியின்மை.
உங்களுக்கு முதிர்ச்சியில்லை என்பது அப்பட்டமான உண்மை. வயதை வைத்து சொல்லவில்லை. அது உங்களை நெருடுவதால் சகட்டுமேனிக்கு எனக்கு அதையே திருப்பி அடிப்பதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை. உங்கள் பார்வைக்கு நான் அப்படியே இருந்து விட்டு போகட்டும்.

கற்ழிப்பு சம்பவம் சவ்வுதியில் குறைவு இந்தியாவில் அதிகம் என்று நான் காட்டிய புல்லிவிவரதிற் புள்ளிவிவரத்திற்கு மட்டும்சவுதி மற்றும் இந்தியாவின் மக்கள் தொகையை வைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் 

நீங்கள் கொடுத்த புள்ளி விவரத்தில் இருந்து உங்கள் பேரறிவுக்கு புரியும் வகையில் விளக்கமாக நான் கேள்வி கேட்டிருக்கிறேன். அந்தக் கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள். நம் ஒட்டு மொத்த விவாத்தின் உண்மைப்பொருள் அங்கேதான் உள்ளது. அதை வசதியாக மறந்து விட்டு இப்படி எழுதுவது உங்கள் மனசாட்சிக்கு ஒப்பினால் நான் இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. அப்படி நான் விளக்கினால் என்னை விடவும் கேடு கெட்ட முட்டாள் எந்த உலகிலும் இருக்க முடியாது. இந்த விவாத்த்தின் மீதும் நமது உறவின் மீதும் கடுகளவேனும் உங்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் கீழ்வரும் என் கீழ்கண்ட முந்தைய வரிகள் குறித்த உங்கள் கருத்துக்களை அடுத்த மடலிலாவது பதியவும்
இம்ரான் என் இந்த வாய்ப்பில் முத்தாய்ப்பாக சொல்ல விரும்புவது இஸ்லாம் கடுமையான சட்டக்களின் மூலம் மக்களை நல்வழிக்கு வலிந்து திருப்புவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களை நாகரீகமற்ற விலங்குகளுக்கு இணையாக யோசிக்கவும் செயல்படவும் வைத்து விட்ட்து.

பாதிக்கு பாதி சம்பவங்கள்வழக்கிற்கு கூட எடுக்கப்படுவதில்லை என்கிற உண்மை புரியும். ஆனால் சவூதி அரேபியாவின் நிலை இப்படியல்ல.
சவூதியில் வேலை செய்யும் பிற ஆசிய முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பெண்களுக்கும் இந்த பதில் பொருந்துமா? அவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் இந்த வரம்பில் வருகின்றனவா? சவூதி யில் அந்தப் பெண்கள் கண்ணியமான வாழ்க்கை தான் வாழ்கிறார்களா? அரபிகளுக்கு உரிய உரிமைகள் அங்கு அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா? நீங்களே சொல்லுங்கள்; பின் நான் விரிவாக உங்களுக்கு சமாதானமாக தோன்றக்கூடிய அதியுயர் உண்மைத்தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அதிர்ச்சிக்கு தயாரகிக் கொண்டு நேர்மையுணர்ச்சியோடு மேற்கொண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.
புள்ளி வவரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிற முதிர்ச்சியான (?) பதிலை சொல்லி விடுகிறீர்கள் என்றால்இங்கே தோற்பது உங்கள் முதிர்ச்சியா அல்லது எங்கள் இஸ்லாமிய சட்டமா??
.............................................................................................................................................................................
.............................................................................................................................................................................
.............................................................................................................................................................................
மேல்கண்ட வரிகளில் உங்களுக்கு எது சமாதானமாகுமோ அந்த பதிலை போட்டுக்கொள்ளும் உரிமையை உங்களுக்கு விட்டுத்தருகிறேன். புள்ளி விவரம் பறீய என் பார்வையை விளக்கி விளக்கி அது ஓட்டையாக போய்விட்ட்து. உண்மையில் என்னால் திரும்ப திரும்ப ஒரே பதிலை எழுதுவது அசதியாக உள்ளது. ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பது சலிப்பாக் இல்லையா?

குற்றங்களை கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்க கூடாதுமென்மையாக புரிய வைத்து குற்றவாளியை திருத்த வேண்டும்
இப்படி நான் ஒரு போதும் சொல்லியதில்லை.
குற்றவாளியை திருத்துவது சட்ட்த்தின் சாதனை அல்ல. குற்றம் குறைவதான ஒரு சமூக அமைப்பை நிர்மானிப்பதே சட்டம் மற்றும் அரசின் கடமை. எந்த சமூகம் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறதோ அந்த சமூகத்தில் குற்றம் குறைவாக இருக்கும். இது வெறும் எண்ணிக்கையின் பாலான அனுமானம் அல்ல. எண்ணிக்கைகள் வெறும் மாயை. ஒரு ஊர் சுத்தமாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ள புள்ளிவிவரம் தேவை இல்லை. பார்வை போதும். சமூகத்தில் குற்றம் குறைந்துள்ளதா என்பதை அறிய மக்களின் மனோபாவத்தை கவனித்தாலே போதும்.

எந்த மென்மையான சட்டத்தால் திருத்த முடியும் என்பதை நடைமுறையில் விளக்கி நிரூபித்து விட்டு இந்த வாதத்தை சொல்லியிருந்தால் நீங்கள் நடைமுறைக்கு உகந்து பேசுகிறீர்கள் என்று எடுதுக்கொண்டிருப்பேன்.  
இது கலாச்சார நோய். இதை சட்டம் சரி செய்யவே முடியாது. ஆசிட் வீசினால் மரண தண்டனை என்றால் அவன் அரிவாளால் வெட்டுவான். அல்லது காறியாவது உமிழ்வான். எப்படியாகினும் அந்தப்பெண்ணின் மீதான அவன் வெறுப்பை காட்டுவதை எந்த சட்டமும் தடுத்து விட முடியாது. பெண் என்பவள் ஆணின் சொத்து என்கிற பழமைவாத ஆணாதிக்க சமூகம் மாறாத வரை கற்பழிப்புகள் ஆசிட் வீச்சுகள் எதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டுதான் வரும். வ்ழக்கம் போல ஒரு பொழிப்புரை. அதாவது சட்ட்த்தால் குற்றம் செய்யப்படும் விதம் மாறுமே ஒழிய குற்றம் செய்யும் மனப்பாண்மை ஒழியாது. ஒட்டுமொத்த சமூகமும் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது குற்றம் செய்யும் மனப்பான்மை குறையும்.

ஹதராபாத்தில் மூண்டு மாணவிகள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார்கள். மாநிலமே குலுங்கிய அந்த சம்பவத்தில் காவல் துறையே என்கவுண்டர் மூலம் கொலையாளிகளை சுட்டுக்கொன்றது,இந்த நிமிடம் வரை ஆந்திராவில் ஆசிட் வீச்சுக்கள் நடப்பதாக நான் அறிந்தவரை செய்திகள் இல்லை.!!
கோவையில் முஸ்கான் என்ற குழந்தையை கட்த்தி சீரழித்துக்கொன்ற மோகன்ராஜயும் தமிழ்நாட்டு போலீஸ் என்கவுண்டரில் கொன்றது. க்டந்த மாதம் தூத்துக்குடியில் ஒரு குழந்தை சீரழிக்கப்பட்டு புதரில் வீசி எறியப்பட்டாள். இதை இம்ரான் எப்படி ஒப்பிட்டு உண்மையை நிறுவுவார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். கட்ட ப்ஞ்சாயது செய்த அயோத்திகுப்பம் வீரமணி, வெங்கடேஷ் பண்னையார் போன்றோரை போலீஸ் சுட்ட்து. அதன் பின் கட்ட பஞ்சாயத்தே நடப்பதில்லையா?
சட்ட்த்தால் குற்றம் செய்யப்படும் விதம் மாறுமே ஒழிய குற்றம் செய்யும் மனப்பாண்மை ஒழியாது. ஒட்டுமொத்த சமூகமும் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது குற்றம் செய்யும் மனப்பான்மை குறையும்.
இஸ்லாமிய சட்டம் தான் மனிதகுலதிர்க்கான ஒரே சரியான தீர்வு.
இது ஒன்றுதான் தீர்வு; இது ஒன்றுதான் வழி என்பதெல்லாம் ஃபாஸிஸம்.
ஏக இறைவன் –அப்புறம் மேலே உள்ளது இவற்றால் தான் இஸ்லாம் ராணுவ மார்க்கம் என்கிறேன். ராணுவத்தில் கட்டளைகள் தான். அங்கே விளக்கங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இஸ்லாமிலும் அப்படியே. ஏக இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால் அவன் முஸ்லிமே அல்ல என்பது ராணுவமயமான வார்த்தை.
பிறருடைய நம்பிக்கையை மதிக்காத சமூகம் எப்படி நாகரீகமான சமுதாயம் ஆகும்? அதன் சட்டங்கள் எப்படி எல்லாருக்கும் பொது ஆகும்?
சவூதியில் நீங்கள் இந்துவாக இருந்து தப்பு செய்தால் இஸ்லாமிய சட்ட்த்தில் தண்டனை கொடுப்பார்களா? அப்படி கொடுத்தால் அவன் முஸ்லிமாகி விடுவானா?
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் செல்லுபடி ஆகுமா? நீங்கள் அரபு தேசத்தில் குடியுரிமை வாங்க முடியுமா? உங்கள் இஸ்லாமிய சகோதரத்துவம்-சமத்துவம் அதற்கு உதவுமா? இஸ்லாமிய சட்ட்த்தையும் இஸ்லாமையும் கடுமையாக பின்பற்றினால் பிறப்பால் இந்தியரான நீங்கள் சவூதி குடியுரிமை வாங்க முடியுமா?
Imran Sheriff 5th March


மரண தண்டனை வழங்காமல் அவர்களை மன்னித்தால் என்ன தப்பு? அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பானால் அவர்களது உயிரை மீட்டு வர முடியுமா? என்று கேட்கப்படுகிற உங்கள் கேள்வி மிக மிக பாமரத்தனமான ஒரு கேள்வி. எனது எந்த கேள்விக்கு பதிலே சொல்லாமல் நான்கு வாய்ப்புகளை கடந்து வந்துள்ளீர்களோ, அந்த கேள்விக்கு நீங்கள் சொல்லும் விடையே இதற்கும் விடையாகி விடும். ஒருவரை மன்னித்து விடுவதால் என்ன தப்பு? என்று தப்பு கணக்கு போட்டு பார்ப்பதற்கல்ல நாடும் சட்டமும் இருக்கின்றன. குற்றங்கள் குறையவும், குற்றம் செய்தவருக்கு தகுந்த தண்டனை அளிக்கவும் தான் சட்டம் உள்ளன. தகுந்த தண்டனை என்பது என்ன என்கிற வரைமுறையில் தான் நமக்கு தர்க்கமே தவிர தண்டனைகள் வேண்டுமா வேண்டாமா என்பதில் நமக்கு கருத்து வேற்றுமை இருப்பதாக நான் இதுவரை அறியவில்லை. ஒருவரை மன்னித்து விடுவது என்கிற பச்சோதாபம், மரண தண்டனை விஷயத்தில் மட்டும் எழுமானால், அது ஏன் ஆயுள் தண்டனைக்கு எழவில்லை? அது ஏன் ஐம்பதாயிரம் ருபாய் அபராதம் போன்ற தண்டனைகளில் எழவில்லை? மனித நேயத்தில் ஆர்வம் கொண்டவராக சொல்லிக்கொள்ளும் நீங்கள், ஒரு உயிரை பறிப்பது மட்டும் தான் மனித நேயத்திற்கு எதிரானது, அது அல்லாத எந்த காரியமும் மனித நேயத்திற்கு களங்கம் சுமதாதவை தான் என்று சொல்வதற்கு தயாரா??
ஒரு கொலை செய்தான் என்பதற்காக அவனை உடனடியாக மன்னித்து வீட்டுக்கு அனுப்பாமல், 15 வருடங்கள் அவனது இளமையை வீணாக்கும் பொருட்டு சிறை அறைகளில் அடைத்து வைப்பீர்களாம், அது மனித நேயமிக்க செயலாம், வேறு குற்றங்களுக்கு 2வருடம், 5 வருடம் என்றெல்லாம் தண்டனை வழங்குவீர்கலாம், அவை எல்லாம் மனித நேயத்திற்கு எதிரானது இல்லையாம், கொலை செய்தவனும் அது போல கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்லும் போது மட்டும் மனித நேயம் குறுக்கே வருகிறது என்றால் இங்கே நோய் என்பது மனித நேயத்தில் இல்லை. மாறாக உங்கள் உளங்களில் உள்ளன.
ஆயுள் தண்டனை 10 வருடங்களை ஒருவன் கழித்து விட்ட நிலையில் அதன் பிறகு அவன் நிரபராதி என்று தெரிய வருமானால், (இப்படி ஏராளமான சம்பவங்கள் நடந்தும் உள்ளன) அவன் சிறையில் செலவிட்ட 10 வருடங்களை யார் திருப்பி தருவார்கள்? இதற்கு என்ன பதில் உங்களிடம்? சட்டமும் நீதியும் இயன்றவரைக்கும் சரியான தீர்ப்பு அளிக்க வேண்டும், ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற சித்தாந்தத்தை ஆயுள் தண்டனை கைதிக்கு நீங்கள் பொருத்துவது போல மரண தண்டனை கைதிக்கு நான் பொருத்துவேன்.

அப்போதும் எனது கேள்விகள் மிச்சமாகி தொங்குகிறதே.. மரண தண்டனை மட்டும் தான் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது, அது அல்லாமல் வேறெந்த தண்டனை கொடுத்தாலும் அது மனித நேயத்திற்கு உட்பட்டது தான் என்பது எங்கேயுள்ள பகுத்தறிவு வாதம்? 
"கடவுள் உண்டு-இல்லை என்பதான கற்பிதமான விவாதங்களில் எனக்கு நாட்டமில்லை"
என்று வாக்கியம் அமைத்தால்  அதற்க்கு மேல் இதை பற்றி நீண்ட நெடிய விளக்கம் தரக்கூடாது ,அதற்க்கு மறுப்பு தரக்கூடாது , மறுப்பு என்ற பெயரில் ஒரு பத்தியையும்  எழுதுகிறீர்கள் , அனால் அந்த பத்தி ஆரம்பம் ஆவதே  ""கடவுள் உண்டு-இல்லை என்பதான கற்பிதமான விவாதங்களில் எனக்கு நாட்டமில்லை"" என்று தான் .நான் உங்களின் அந்த " சிந்தனை முதிர்ந்த(?) " விளக்கவுரைக்கு இங்கு பதில் தர விரும்பவில்லை , இதற்க்கு இங்கு பதில் அளித்து  விவாத தலைப்பிலிருந்து திசை மாற விரும்பவில்லை .தாங்கள் முன்வந்தால் நிச்சயம் கடவுள் உண்டு-இல்லை என்பதை பற்றி விவாதிக்கலாம். இல்லை அதில் எனக்கு நாட்டமில்லை என்றால்  அதை பற்றி ஒன்றுமே பேசாமல் இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவர் பொய்யர் இவர் பொய்யர் என கூறுவதே விவாத நயம் தான் .

பரிணாம வளர்ச்சி குறித்த விஷயத்திலும் மேற்கூறியதே   பொருந்தும்,தாங்கள் முன்வந்தால் நிச்சயம் இதை  பற்றியும்  விவாதிக்கலாம். விஞ்ஞானபூர்வமாக.!

 "சட்டம் என்பது சகலருக்கும் சகலை நிலைகளிலும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்."
அது தான் எந்த சட்டம் என்று கேட்கிறேன் ? இறுதிவரை நான்  கூறமாட்டேன்  என்கிறீர்கள், இதை கூறாமல் விவாதத்தையே முடிக்கவும் உள்ளீர்கள்.

குருதி பணத்தை ஒரு பணக்காறரால் வழங்கி தப்பித்து கொள்ள முடியும் என்றால் ஒரு ஏழைக்கு அரசாங்கமே அதை கொடுத்து அவரை விடுவிக்கவும் செய்கிறது. அதே சமயம், குருதி பணத்தை இன்று நம்மூர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தை வளைப்பதுடன் ஒப்பீடு செய்து எழுதியுள்ளீர்கள். 
இது தவறான ஒப்பீடாகும். குரிதிப்பணம் என்பது அதிகாரிகளோ, அரசாங்கமோ பெற்றுக்கொள்ளும் லஞ்சப்பணமல்ல. எந்த உயிரை அவன் கொன்றானோ அந்த உயிருக்கு உற்றார்கள், அந்த உயிரின் உறவுகள் கேட்பது தான் இந்த குருதிப்பணம். எனது கணவனை கொன்ற இவனுக்கு மரண தண்டனை கொடுங்கள் என்று மனைவி சொல்வதற்கும் அவளுக்கு அதிகாரம் உள்ளது, தண்டிக்க வேண்டாம், எனக்கு நஷ்ட ஈடு தர சொல்லுங்கள் போதும், என்று சொல்வதற்கும் அவளுக்கு உரிமை உள்ளது. பாதிக்கப்பட்டவன் கையில் உரிமையை விடுவது தான் சமசீரான உரிமை பங்கீடாக இருக்குமே தவிர, தனது மனைவியை ஒருவன் கதற கதற கற்பழிக்கிறான் என்றால் அந்த பாவியை நாங்கள் மன்னிக்கிறோம் என்று ஏசி அறையில் இருந்து கொண்டு ஜனாதிபதி தீர்பளிக்கிற கீழ்த்தரமான காரியம் இஸ்லாத்தில் இல்லை. எனது மனைவியை, எனது குழந்தையை கொன்றவனை மன்னிக்க நீ யாரடா?? இழந்தது நான், அதை நான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நீ அல்ல, என்று சொல்கிற உயரிய சித்தாந்தம் இஸ்லாம்.

நான் வேலை செய்யும் இட்த்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட்டுள்ளது. அப்படி என்றால் இந்தியா முழுக்க தடை செய்துவிட்டார்கள் என்று நான் சொன்னால் எப்படி இருக்கும் இம்ரான்?  
நான் வேலைசெய்யும் இடத்தை மாத்திரம் கணக்கில் எடுத்தா  சொன்னேன் ? சவுதி ,துபாய் போன்ற நாடுகளில் முழுமையாக ,முற்றிலுமாக போர்னோகிராபி தடை செய்யப்பட்டது தான். சவூதியில்  போர்ன் வெப் ்சைட்டுக்கள் ஓபன் செய்ய முடியாது , தடை செய்யப்பட்டது என்பதை அறியாமல் தாங்கள் அமைத்த வாக்கியங்களை படிக்க நகைப்பாகவே உள்ளது , இதற்கு தான் சொன்னேன் “ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை என்றால் பேசாமல் இருப்பது கண்ணியம். ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறுகிறீர்கள் (?) ,ஆதாரத்தை நேரில் எல்லாம் தரதேவையில்லை ,தங்களின் முந்தைய பதிவிலேயே எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதை குறிப்பிட்டிருக்கலாம் , இணையதள லிங்குகள் தான் அனுப்ப கூடாது , அதன் பெயர் குறிபிடுவதில் நாம் வரைமுறை வைத்துகொள்ளவில்லை.(எ .கா :  நான் விக்கிபீடியா என்று குறிபிட்டது போல )
அடுத்த பதிளிலாவது சவுதியில் போர்ன் பார்ப்பது தடை செய்ய பட்டது இல்லை என்பதின் ஆதாரத்தை சமர்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன் , கடைசிக்கு இணையதள பெயரை குறிப்பிடுங்கள். இத்துடன் ஒரு படத்தையும் இணைத்துள்ளேன்  காணவும் , இதை விட தங்களுக்கு இன்னும் எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை, இணைத்த அந்த போட்டோ சவுதியின் எந்த மூலையிலிருந்து போர்னை தேடினாலும் இவ்வாறு தான் காண்பிக்கும் , சென்சார்ஷிப் இன் சவுதி அரேபியா என்ற விக்கிபீடியா ஆக்கத்தையும்  படியுங்கள் .
"உண்மையைச் சொல்லும் எல்லா தளங்களும் அப்படியாக இருக்க வாய்ப்பில்லை." தாங்கள் முன்னரே அந்த தளங்களின் பெயர்களை குரிப்பிடிருந்தால் எனக்கு இம்முறை பதில் அளிக்க முடிந்திருக்கும். ஆயினும் நான் தேடிய வரை தாங்கள் கூறிய தகவல் விக்கீ இஸ்லாமிலிருந்தும் ஒப்டன் நெட் பீ சி என்ற இணையத்தளத்தில் ஷரைல் சிட்மன்  என்ற இஸ்ரேலை சேர்ந்த யூத பெண் எழுதிய ஆதாரமற்ற கட்டுகதையை  தவிர , உங்கள் கூற்றுக்கு ஆதாரமில்லை,  இவை ஆண்டி இஸ்லாமிக் இணையதளங்கள் தாம் ,இஸ்லாத்தை எந்தவித அடிப்படையுமில்லாமல் தவறாக விமர்சிப்பவர்கள் தாம் 
 " ஒரு ஊர் சுத்தமாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ள புள்ளிவிவரம் தேவை இல்லை. பார்வை போதும்"
இவ்வாறான பார்வைகளின்  அடிபடையில், பார்வைகளின் தொகுப்பே சரியான புள்ளிவிவரமாகும் , தாங்கள் புள்ளிவிவரங்கள் நேர்மையாக அலசபட்டிருப்பினும் அதை ஏற்று கொள்ளமாட்டேன் என்று கூறும் பகுத்தறிவுவாதி தான், ஒப்புகொள்கிறேன் 

நாகரீகம் , கலாச்சாரம்  இந்த இரண்டிலும் முதன்மையாக கருதபடுவது அமெரிக்கா, பாரிஸ் , பிரிட்டன் என்பன போன்ற மேலைநாடுகள்  தான் , உங்கள் வாதப்படி அங்கு தான் உலக நாடுகளில்  குற்றம் நடப்பது மிகவும் குறைவாக இருக்க வேண்டுமல்லவா  ? 

உங்கள் மொத்த விவாதத்தின் சாரம்சமே , “குற்றங்களை குறைக்க ஒரு சமூகம் நாகரீக வளர்ச்சி பெற வேண்டும்”

குற்றங்கள்  குறைய தனி மனிதன் மேன்படவேண்டும் , சமூகம் நாகரீகமடைய வேண்டும் என்பதை எவரும் மறுக்கமாட்டா. மக்கள் ‘அனைவரிடத்திலும்’  நாகரீகம் மேம்படுதல் என்பது  மிக நெடிய காலமெடுக்கும், இது நடைமுறைக்கு சாத்தியமுமில்லை.

 உங்கள் " சமூகம் நாகரீக வளர்ச்சி பெற வேண்டும் " என்ற  மாய  வாதத்தின் படி  இன்றைக்கு கற்பழித்தவனை , கொலை செய்தவனை , அல்லது முழு சமூகமும்  நாகரீகம் அடையும் (?) வரை அரங்கேறும் குற்றங்களை என்ன செய்யலாம் ? மன்னித்து விட்டு கொண்டே இருக்கவேண்டுமா ? அவ்வாறு செய்து வருவது எந்த வகையில் சமூகத்தை நாகரீகமடைய செய்யும் ?இல்லை என்ன  செய்யனும்?

கொலை , கற்ப்பழிப்பு  போன்ற மிருக செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என்று இஸ்லாம் கூறும் சட்டத்தை விமர்சித்தால் , மாற்று சட்டத்தை கூறவேண்டுமல்லவா ? அதை பற்றியே பேசமாட்டேன் என்கிறீர்கள். சமூகம் நாகரீகம் அடைய வேண்டும்தான், இஸ்லாம் அதற்க்கான பயிற்சியையும் ஒரு புறம் வழங்கி , சட்டத்தையும் வழங்குகிறது .

ஒரு பக்கம் சட்டம் தேவை என்கிறீர்கள் , ஆனால்  எந்த சட்டம் என்பதை கூறுவதில்லை.

நீங்கள் சொல்லும் நாகரீக வளர்ச்சியில் அனைத்து  மனிதர்களும் கட்டுப்படமாட்டார்கள் , அதில் கட்டுபடாத , மாற்றம் அடையாத மனித மிருகங்களை என்ன செய்வது என்பது தான் கேள்வி ? 

//ஏக இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால் அவன் முஸ்லிமே அல்ல என்பது ராணுவமயமான வார்த்தை.//

ஒரு பள்ளிக்கூடம் உள்ளது அங்கு பயிலும் மாணவரை இப்பள்ளியை சார்ந்தவர் என்றும் , அங்கு பயிலாத மற்ற மாணவர்கள் அந்த பள்ளியை சார்ந்தவரில்லை என்று கூறுவதில் என்ன தவறு ? என்ன ராணுவ வார்த்தை ? முஸ்லிம் இல்லை என்பதை முஸ்லிமில்லை  என்றுதானே  கூற முடியும்? வேறு எவ்வாறு கூறுவது ? முஸ்லிம் என்றா (?) உங்கள் சிந்தனை திறனை என்னவென்பது.

//பிறருடைய நம்பிக்கையை மதிக்காத சமூகம் எப்படி நாகரீகமான சமுதாயம் ஆகும்? அதன் சட்டங்கள் எப்படி எல்லாருக்கும் பொது ஆகும்? //

 இது யார் சொல்லி கொடுத்தார்கள் ? எதை வைத்து இதை கூறுகிறீர்கள் ? குர் ஆனை  முழுமையாக படித்துள்ளேன் என்று வேற கூறுகிறீர்கள் 
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக் கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! 
(திருக்குர்ஆன் 6:108) 
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை (திருக்குர்ஆன் 2;256)

"இவ்வுண்மை உங்கள் இறைவனிட மிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். (திருக்குர்ஆன் 19:29)
என்ற வசனங்களை எல்லாம் படிக்க வில்லையா ?

//சவூதியில் நீங்கள் இந்துவாக ருந்து தப்பு செய்தால் இஸ்லாமிய சட்ட்த்தில் தண்டனை கொடுப்பார்களா? அப்படி கொடுத்தால்அவன் முஸ்லிமாகி விடுவானா?///

இஸ்லாமிய சட்டத்தில் இந்து முஸ்லிம் என்ற எந்த  பாகுபாடும் தண்டனைகள் வழங்குவதில் இல்லை, குற்றம் நிரூபிக்கப்பட்டதா ? என்பது தான் ஒரே அளவுகோள்  யார்  தப்பு செய்தாலும் , தண்டனை வழங்குவதில் வழைவு நெழிவு இல்லை .

இஸ்லாமிய சட்டம் ஆண்களையும் பெண்களையும் சமமாக பாவிக்கிறதா? என்கிற உங்கள் கேள்விக்கு நபிகள் நாயகம் காலத்து சம்பவங்களே பதிலாகி விடும். பாத்திமா என்கிற ஒரு பெண்மணி திருட்டு குற்றத்திற்காக கைகள் வெட்டப்படும் குற்றத்திற்கு ஆளாகிறார். நீதிக்கும் நியாயத்திற்கும் உதாரணமாய் திகழும் நபிகள் நாயகம், எனது மகள் பாத்திமா திருடினாலும் இதே போன்ற தண்டனையை தான் வழங்குவேன் என்று கூறி இஸ்லாமிய சட்டம் என்பது ஆண் பெண் ,சொந்தம் பந்தம் என்கிற வேறுபாடுகளை காட்டாது என்பதை புரிய வைத்தார்கள். சிலர், மனைவியை கணவன் கொன்றாலோ, பிள்ளையை தகப்பன் கொன்றாலோ, அவருக்கு மரண தண்டனை கிடையாது என்று பேசி வருகின்றனர். அது இஸ்லாத்திற்கு எதிராக களங்கம் சுமத்துவதற்காக அவர்கள் அவிழ்த்து விடுகிற கட்டுக்கதை. இதை நேருக்கு நேராக நிரூபிக்குமாறு அவர்களுக்கு விவாத அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் வராமல் நழுவி வருகின்றனர். சட்டம் என்பது இஸ்லாத்தின் பார்வையில், உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் ஆண் பெண்,என்கிற பாகுபாட்டை காட்டாது.

//நீங்கள் அரபு தேசத்தில் குடியுரிமை வாங்க முடியுமா? உங்கள் இஸ்லாமிய சகோதரத்துவம்-சமத்துவம் அதற்கு உதவுமா? ///

நம்ம தலைப்பு என்ன , எதற்கு விவாதிக்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து , தலைப்பை தவிர மற்ற அனைத்தை பற்றியும் பேசி திசை திருப்புகிறீர்கள் .
இப்போ நான் அரபு தேசத்தில் குடிவுரிமை வாங்கினால் என்ன ? வாங்காவிட்டால் என்ன ? சவூதி  அரேபிய என்றால் "இஸ்லாம்" என்று அர்த்தமில்லை , அவர்கள் மறுக்க நான் முஸ்லிமல்லாமல் ஆவதற்கு . சவூதி என்பதும் மக்கள் வாழும் ஒரு நாடு அவ்வளவே . 

//இஸ்லாமிய சட்ட்த்தையும் இஸ்லாமையும் கடுமையாக பின்பற்றினால் பிறப்பால் இந்தியரான நீங்கள் சவூதி குடியுரிமை வாங்க முடியுமா?//

நான் பிறந்த நாடு இந்தியா , நான் இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன் , சவூதி  குடியுரிமை பற்றி இந்த தலைப்பில் ஏன் பேசுகிறீர்கள்(?) என்பதுதான் புரியவில்லை. இஸ்லாத்தில் சகோதரத்துவம் என்ற தனி தலைப்பில் பேசப்பட வேண்டியவை அவை .மேலும் இஸ்லாத்தை கடுமையாகவெல்லம் பின்பற்ற முடியாது ,இஸ்லாம் என்பது  எளிதான மார்க்கம் அதன் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு  மட்டும் இல்லை ,  முழு   மனித குலத்திற்கும்,  தீர்வே ,

குற்றங்களை கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்க கூடாது,சமூதாயம்     நாகரீகம் அடையும் வரை காத்திருக்க வேண்டும் என்ற  அறிவார்ந்த சித்தாந்தத்தை(?) தவிர   உங்கள் வரிகளில் வேறு எந்த  விஷயமுமில்லை எனபது எனக்கு வருத்தம் ,   இது வெறும் ஏட்டு  சுரக்காய்  வாதமாக தான் உள்ளது.  இன்றைக்கு   கற்பழிக்கபட்ட பெண்ணிற்கு , இன்றைக்கு தகப்பனை   இழந்த அந்த  சிறுவனுக்கு , மனைவிக்கு  எப்படி   நீதி  வழங்குவது? , என்ன செய்யலாம் என்றால்   சமுதாயம் நாகரீகம் அடைய வேண்டும்  என்கிறீர்கள் .. சரி  இப்போ  அந்த மிருக செயலில் ஈடுபட்ட  அந்த மிருகத்தை பிடித்தாச்சு  , இப்போ என்ன செய்யலாம் ?  அதை தான் இத்துணை நேரமாக சொல்வீர்கள்,சொல்வீர்கள், என்று பார்த்தல்  பதில் ஒன்றுமே இல்லை .

இஸ்லாமிய சட்டமானது பாதிக்கப்பட்டவனுக்கு முழு அதிகாரத்தையும் வழுங்குவது தான் அதன் மிகபெரிய நன்மை . பாதிப்பிற்கு ஆளான அந்த குடும்பம்   குற்றவாளிகளை  மர  தண்டனை விதிக்கவும் செய்யலாம் , குருதி பணம் வாங்கியோ  வாங்காமலோ மன்னிக்கவும் செய்யலாம் .. இத்தகைய சட்டம்  உலகத்தில் எந்த  சட்டத்திலும் இல்லை . 

 இஸ்லாமிய குற்றவியல்  சட்டம்தான்  , நடைமுறைக்கு உகந்ததும், நீதியானதும்  அறிவு பூர்வமானதுமாகும் என்பது இவ்விவாதம் மூலம்  ஆணித்தனமாக நிரூபணமாகியுள்ளது.
ஜெய பிரகாஷ் 8th March


அன்பின் இம்ரான்
முதலில் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு. இந்த விவாததின் மூலமாக சிலவற்றை நிறுவி விட்டதாக நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக. விவாதம் என்பது உங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை. பொதுவில் விவாதம் என்பது ஒரு தேர்வு அல்லஅனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் எழுப்பும் தர்க்கத்தின் பால் தத்தம் கருத்தை பதிவதே விவாதம் என்று பொதுவெளியில் சொல்வார்கள். இஸ்லாம் மட்டுமே சகலரோக நிவாரணி என்று சொல்பவர்களின் விவாத நடைமுறை எனக்கு தெரியாமல் இருப்பது என் தவறல்ல.
என்னைப்பொறுத்தவரை விவாதம் சண்டை அல்ல. ஜெயிப்பதற்கு. இந்த விவாத்தின் மூலம் எதையும் உங்களிடம் நிரூபிப்பதல்ல என் நோக்கம். நீங்கள் ஒரு மாய உலகில் உள்ளீர்கள். அதையும் தாண்டி பொதுவெளியில் நிறைய உள்ளன. கடிவாளம் போட்ட குதிரை போல இஸ்லாம் எல்லாவற்றையும் தீர்க்கும் என்னும் உங்களிடம் இஸ்லாமைத் தாண்டியும் முஸ்லீம்கள் தெரிந்து கொள்ள நிறைய உள்ளன என்று  என் எழுத்துக்கள் சொல்லியிருக்கும். இதை ஒப்புக்கொள்ள சங்கோஜம் இருந்தாலும் உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும் என்பது எனக்குத் தெரியும். வாழ்த்துக்க்ள்.
மரணதண்டனை வேண்டாம் என்றால் ஆயுள் தண்டனையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே என்பதை திரும்பத்திரும்ம்ப கேட்பதன் மூலம் நான் எழுதியதை நீங்கள் படிப்பதில்லை-அல்லது சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்பது அப்பட்டமாக தெரியவில்லை. தண்டனைகள் குறைய வேண்டும். தண்டனையே இல்லாமல் இருக்க முடியாது. எப்படிப்பட்ட தண்டனை என்பது தான் விவாதம். அப்படி இருக்க, முஹம்மது காலத்தில் அவர் படைத்தளபதியாகவும் எதிர்த்தவர்களை கொண்று குவிப்பவராகவும் இருந்த படியால் அத்தகைய சண்டைக் காலகட்ட்த்தில் நடுரோட்டில் தலையை வெட்டுவது திருடியவனுக்கு கையை வெட்டுவது என்பதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம். அதை நானும் விமர்சிக்கவில்லை. அது அந்தக் காலம். நீங்கள் இஸ்லாமிய சட்டப்படி எந்த உறுப்பின் மூலமாக ஒருவன் தப்பு செய்கிறானோ அதை வெட்டுவது சரி என்கிறீர்கள். அப்படியானால் மனதளவில் கெட்டுப்போனவனை எப்படி தண்டிப்பீர்கள்? மூளையை எடுத்து விடுவீர்களோ? எப்படியாயினும் கடுமையான தண்டனைகளை கொடுமையாக மனித்த்தன்மையற்ற முறையில் நிறைவேற்றுவது காட்டுமிராண்டித்தனமே.

இரண்டாம் அமர்வில் இம்ரான் கேட்ட்து:

மரண தண்டனை பெரிய மனித உரிமை மீறல் என்றால்மேலே உள்ளவை அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள மனித உரிமை மீறல் தானே?

மூன்றாம் அமர்வில் நான் சொன்னது:
மரண தண்டனையை நான் மனித உரிமை மீறல் என்ற நிலையில் வைத்துப்பார்க்கவில்லைமனித நேயத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். இதை இதே விவாத்தில் பலமுறை எடுத்து சொல்லியும் மீண்டும் மீண்டும் அதையே கேட்டால் மேலும் சொல்ல என்னிடம் வேறு எதுவும் இல்லை. சலிப்பே மிஞ்சுகிறது. நான் எழுதியதை யாரவாது தமிழறிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்து பதில் எழுதவும். நான் முன்னமே சொல்லி இருக்கிறேன்.

மூன்றாம் அமர்வில் நான் சொன்ன பதிலுக்கான கேள்வியை மறுபடி நான்காம் அமர்வில் இம்ரான் கேட்டபோது நான் சொன்ன பதில்; இப்போது இறுதி அமர்விலும் அதையே கேட்கிறீர்களே? அப்போதும் எனது கேள்விகள் மிச்சமாகி தொங்குகிறதே.. மரண தண்டனை மட்டும் தான் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது, அது அல்லாமல் வேறெந்த தண்டனை கொடுத்தாலும் அது மனித நேயத்திற்கு உட்பட்டது தான் என்பது எங்கேயுள்ள பகுத்தறிவு வாதம்? உங்கள் உள்ளத்தில் எங்கேனும் ஒரு ஓரத்தில் மனசாட்சி இருக்கும் பட்சத்தில் ஒரே கேள்விக்கு மூன்று முறை பதில் சொன்ன பின்னும் நான்காம் முறை கேட்கும் உங்கள் நோக்கத்தை நான் எப்படி புரிந்து கொள்வது என்று தனிப்பட்ட முறையில் எழுதவும். மிகவும் பின் தங்கி இருக்கிறீர்களா நாடகம் ஆடுகிறீர்களா என்பதை கட்டாயம் தெரியப்படுத்தவும். என் சுயமரியாதைக்கு இத்தனை பதில்களைச் சொன்னதை மாபெரும் இழுக்காக கருதுகிறேன். உங்கள் மனசாட்சி இதுகுறித்து துளியும் வருந்த வில்லையா? குறைந்த பட்சம் இஸ்லாத்துக்காவது மரியாதை செலுத்தவும்.
இதையே கேட்டு மரண தண்டனை காட்டு மிராண்டித்தனம் என்று சொல்வது போல, ஆயுள் தண்டனை கூட காட்டுமிராண்டி தனம் என்று ஒருவர் வாதிட்டால் அவருக்கு என்ன பதிலை சொல்வீர்கள்? என்று கேட்டதற்கு இந்த நொடி வரை உங்களிடம் இருந்து வதில் வரவில்லை.?
ஒரு ஆயுள் தண்டனையில் அந்த கொடூர குற்றவாளி திருந்தினால் அவனுக்கான வாழ்வை இந்த சமூகம் மன்னித்து வழங்குவதில் என்ன தப்புஅஃப்சல் குரு தப்பு செய்யவில்லைரிசானா தப்பு செய்யவில்லை;பேரறிவாளன் தப்பு செய்யவில்லை என்று அவர்கள் துக்கிலிட்ட நாட்களுக்கு பின் ஆதாரப்புர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்த உயிர்களை உங்கள் சட்டம் கொண்டு வந்து விடுமா? மேலும் மரண தண்டனை ஒருமுறை நிறைவேற்றப் பட்டுவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாது. சட்ட அமைப்புகள் மனிதனால் நிர்வாகிக்கப்படும் வரை பிழைகள் இழைக்கக் கூடியவை என்பதால் குற்றமற்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன
நீங்கள் முன்பு கேட்ட்தற்கு சென்ற மடலில் நான் எழுதிய மேற்கண்ட வரிகளுக்கு பின்னரும் இந்த கேள்வியை மறுபடியும் வைப்பது மறதியாக தெரியவில்லை. உங்கள் மனசாட்சியை ஒருமுறை எழுப்பிவிட்டு கேட்ட்து சரியா என்று யோசித்து கொள்ளவும்.
""கடவுள் உண்டு-இல்லை என்பதான கற்பிதமான விவாதங்களில் எனக்கு நாட்டமில்லை""என்று தான் .நான் உங்களின் அந்த சிந்தனை முதிர்ந்த(?) " விளக்கவுரைக்கு இங்கு பதில் தர விரும்பவில்லை , இதற்க்கு இங்கு பதில் அளித்து  விவாத தலைப்பிலிருந்து திசை மாற விரும்பவில்லை .
மனிதனின் அறிவை கொண்டு பகுத்தறியும் போது கடவுள் சித்தாந்தம் தான் அவனை முதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறதுகடவுள் இல்லை என்று சொல்வதை விடவும் ஒரு முதிர்ச்சியின்மை உலகில் இல்லை:

இது நான்காம் அமர்வில் இம்ரான் சொன்னது. விவாத்துக்கு ஒப்புக்கொண்ட போதே எனக்கு இதில் நாட்டம் இல்லை என்று நிராகரித்த ஒன்றை வம்படியாக நீங்கள் என்னிடம் முன்வைக்கும் போது எனக்கிருக்கும் குறைந்த பட்ச நாகரீகத்தில் உங்களுக்கு மரியாதை செய்யும் பட்சத்தில் எழுதிய இந்த வரிகளைக் கூட புரிந்த கொள்ள முடியாத உங்களின் நாகரீகம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள். கொஞ்சம் முன்னே என்ன சொன்னோம் என்பதை பார்த்து எழுதவும். எனக்குப் பிரச்சனையில்லை. வேறு யாரிடமாவது இப்படி பொய்யாய உரைக்கும் போது உங்களுக்கான மரியாதை கேள்விக்குள்ளாகும். 

அது தான் எந்த சட்டம் என்று கேட்கிறேன் ? இறுதிவரை நான்  கூறமாட்டேன்  என்கிறீர்கள்,இதை கூறாமல் விவாதத்தையே முடிக்கவும் உள்ளீர்கள்.

இது எதிர்பார்ப்பு. இருக்கும் எல்லா சட்டங்களும் இதை பூர்த்தி செய்து விடாது. இதை நோக்கி சட்டங்கள் பயணிக்க வேண்டும். வெறும் விவாத்த்துக்க்க சொல்லவில்லை. உங்கள் புரிதல் ஒற்றைத்தன்மையில் உள்ளது. இப்படியான புரிதலோடு பொதுவெளியில் நீங்கள் கருத்துப்பரிமாற்றம் செய்தால் உங்களின் அறியாமை சட்டென வெளிப்பட்டு விடும். விவாத்த்துக்காக அல்ல. தனிப்பட்ட காரணத்துக்காக உங்கள் மீதான அக்கறைகளின் பால எழுந்த வரிகள் இவை. உங்கள் நன்பரல்லாத யாராவது ஒரு பொது ஆளிடம் இந்த விவாதங்களை காட்டி கருத்து கேட்டால் நான் சொல்ல வருவதும் உங்கள் இருப்பு நிலையும் விளங்கும். நீங்கள் தெளிந்த தீவிரமான இஸ்லாமியவாதியாகவேனும் இருந்துகொள்ளுங்கள் தப்பில்லை. ஆனால் குறைந்த பட்சம் பொது அறிவு; கொஞ்சம் அறவுணர்ச்சி; கொஞ்சம் சகிப்புத்தன்மை; கொஞ்சம் விசாலமான பார்வை இதெல்லாம் பொதுவெளியில் இருப்பவர்கள் கைக்கொள்ள வேண்டியன. வாழ்த்துக்கள்.

ஐந்தாம் அமர்வில் இம்ரான் கேட்ட்து: எனது மனைவியை, எனது குழந்தையை கொன்றவனை மன்னிக்க நீ யாரடா??  இழந்தது நான், அதை நான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நீ அல்ல, என்று சொல்கிற உயரிய சித்தாந்தம் இஸ்லாம்.
நான் நான்காம் அமர்வில் சொன்னது:  சட்டம் என்பது சகலருக்கும் சகலை நிலைகளிலும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்அப்படி நெகிழ்ந்தால் அது சட்டமல்ல .சம்பிரதாயம்நான் முன்னமே எழுதியதுஉங்களுக்கு சமாதானம் வரும் வரை ஒரு ஆயிரம் முறை இதை காப்பி பேஸ்ட் செய்து படித்துக்கொள்ளவும். என்ன கைய புடிச்சு இழுத்தியா என்று ஆரம்பித்தால் முடியவே முடியாதுமிகவும் வருந்துகிறேன்.
மூன்றாம் அமர்வில் சொன்னது:  தனி மனிதன் கொலை செய்தால் தப்புஅரசு கொலை செய்தால் அது அநீதி.மேலும் மரண தண்டனை ஒருமுறை நிறைவேற்றப் பட்டுவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாதுசட்ட அமைப்புகள் மனிதனால் நிர்வாகிக்கப்படும் வரை பிழைகள் இழைக்கக் கூடியவை என்பதால் குற்றமற்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
பிற்போக்கான இஸ்லாமிய சட்டங்களானலும் சரி பிற மக்களாட்சி சட்டங்களானலும் சரி மனிதர்களாலேயே நிர்மாணிக்கப்படுகிறதுஒரு கஸாப் செய்த்தை போல ரிஸ்வானா செய்த்தை போல பிரபாகரன் செய்த்தை போல முஸ்லிம் சட்டக்காவலர்களும் தப்பு செய்யலாம்அல்லவைத்தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள் இந்த முஸ்லிம் சட்டக்காவலர்கள் தப்பே செய்யாத கடவுள் என்று சொல்லப்போகிறீர்களா?
அடுத்த பதிளிலாவது சவுதியில் போர்ன் பார்ப்பது தடை செய்ய பட்டது இல்லை என்பதின் ஆதாரத்தை சமர்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்
என்னிடம் இருக்கும் ஆதாரம் மெயிலில் அனுப்ப முடியாத அளவுக்கு பெரியது. அதை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள என் நாகரீகம் தடுக்கிறது. அதை சவுதிக்கு அனுப்பினால் செலவும் பிடிக்கும். மற்றபடி நான் எடுத்தாண்ட புள்ளிவிவரங்கள் பலதரப்பட்ட தளங்களில் பெறப்பட்டன. முஸ்லிம்களை அவமதிக்க அந்த புள்ளிவிவரங்களை நான் உபயோகிக்கவில்லை. வாத உதாரணத்துக்காக பயண்படுத்தப்பட்டவை. மீண்டும் சொல்வது இதுதான் புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. தடை செய்யப்பட்ட்தை பார்க்கவே முடியாது என்பது ஒப்புக்கொள்ளும் படி இல்லை. எத்தனை ஃபயர்வால்கள் இருந்தென்ன; ஹேக் செய்பவர்கள் இருக்கிறார்கள். அது போல ஒன்றைத்தடுத்து விட்ட்தாலேயே அதை இல்லாமல் செய்துவிட முடியாது. ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளாக கைகளை வெட்டும் இஸ்லாமிய முஸ்லிம் நாடுகளில் திருட்டு இல்லாமல் போய்விடவில்லை. அப்படித்தான் இதுவும். தடுத்து வைக்கப்பட்ட்து பீறிட்டு எழும். இது இயற்கை நியதி.இந்தப் புள்ளிவிவரங்களை நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சவூதியில் மற்ற அரபு நாடுகளீல் போர்னோகிராஃபி தடை செய்யப்பட்டிருந்தாலும் அது இல்லாமல் இல்லை.
நாகரீகம் கலாச்சாரம்  இந்த இரண்டிலும் முதன்மையாக கருதபடுவது அமெரிக்காபாரிஸ்பிரிட்டன் என்பன போன்ற மேலைநாடுகள்  தான் உங்கள் வாதப்படி அங்கு தான் உலக நாடுகளில்  குற்றம் நடப்பது மிகவும் குறைவாக இருக்க வேண்டுமல்லவா  ? 
சிரிப்புதான் வருகிறது. உலகின் மிகப்பழைமையான முதிர்ந்த நாகரீகம் ஈரான் ஈராக் அடங்கிய பகுதிதான். பின்னர்தான் கிரேக்கம் முதலியன். அதனால் தான் சமீபத்திய சண்டையில் அமேரிக்கர்கள் இராக்கின் அத்தனை மியூசியங்களையும் தகர்த்தார்கள். இழைகளையும் தழைகளையும் ஐரோப்பியர்கள் கட்டிக்கொண்டு அலைந்த நாட்களில் கிரேக்கம், பாரசீகத்திலும் அரபியேவிலும் இந்தியாவிலும் அறிவியல் கோலோச்சியது. இதை புரிந்து கொள்ளாமல் நீங்கள் இருப்பது வியப்பை அளிக்கிறது. அமெரிக்கா பிரிட்டனில் உள்ளதெல்லாம் காலத்தில் இளைய நாகரீகம். அவர்களை நான் விதந்தோதவில்லை. ஆனாலும் பகுத்து அறிவதில் அவர்கள் இப்போது முன்னே இருக்கிறார்கள்.  குற்றங்கள்  குறைய தனி மனிதன் மேன்படவேண்டும் சமூகம் நாகரீகமடைய வேண்டும் என்பதை எவரும் மறுக்கமாட்டா. மக்கள்அனைவரிடத்திலும்  நாகரீகம் மேம்படுதல் என்பது  மிக நெடிய காலமெடுக்கும், இது நடைமுறைக்கு சாத்தியமுமில்லை.இதை நானும் மறுக்கவில்லை. அது தான் இயல்பு.முன்பே இருமுறை சொன்னபடி மனிதனும் ஒரு விலங்கு. தவறு செய்வது அவன் இயல்பு. சமூகத்தில் வாழும் போது அந்த விலங்கு தவறு செய்தால் மொத்த சமூகமும் அவனைப்போல விலங்காக மாறி அவனை தண்டிப்பது தான் நாகரீகமற்ற செயல் என்கிறேன்.
அவ்வாறு செய்து வருவது எந்த வகையில் சமூகத்தை நாகரீகமடைய செய்யும் ?இல்லை என்ன  செய்யனும்?
தண்டனைகளே இல்லாமல் இருப்பது சட்டங்களே இல்லாமல் இருந்தால் தான் சாத்தியம். அப்படி இருக்க முடியாது. நாம் இப்படி பெருங்கூட்டமாக வாழ்வதே இயற்கை நியதிகளூக்கு மாறானது. மனிதன் தன்னை விலங்குகளில் இருந்து வேறுபடித்திக்கொள்ள செய்யும் முயற்சியே சமூக அமைப்பு. அதில் கூடுமான வரை தன்னியல்பை மறந்தாலொழிய இது சாத்தியமில்லை.
வாழைப்பழம் காசு கொடுத்து வாங்குகிறீர்கள். குரங்கு பறித்துக்கொண்டு ஓடுகிறது. மனிதன் என்ற விலங்கின் அறிவுப்பூர்வமான பார்வையில் குரங்கின் செயல் திருட்டு அல்லது வழிப்பறி. குரங்கின் பார்வையில் அது வேட்டை. இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. எல்லா உயிரிகளுக்கும் சொந்தமானது. சிந்தித்தல் என்ற ஒற்றை வித்யாசத்தில் மனிதன் தன்னை பிற விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக்கொள்ள போலித்தனமாக செய்து வருபவை தான் நாகரீகம். ஆகவே தவறே செய்யாமல் மனித சமூகத்தை யாரும் எதுவும் திருத்தி விடமுடியாது.
நாம் என்ன செய்யலாம் என்றால் குறைந்த பட்சம் மனிதனாக நடந்து கொண்டால் போதும். ஒரு பாம்பு தன்னை மிதித்தவனை கடிக்கும். இது விலங்கியல் உண்மை. இதையே மனிதனும் செய்தால்? திருடியவனை கையை வெட்டு என்பது மனித்த்தனம் அல்ல. விலங்கின் அடிப்படைக்குணம். திருடியவன் திருந்த வாய்ப்பாக அவன் சிறை தண்டனை அமைந்து அவன் மீண்டும் வாழ்ந்தால் மனிதனாகப்பட்டவன் மகிழ வேண்டும். நானும் படித்திருக்கிறேன். போரில் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த முஹம்மது தமக்கு துரோகம் செய்தவர்களைக் கூட மன்னித்துள்ளார். முஹம்மதுவின் மருமகன் செய்த்தாக ஒரு தகவல் படித்தேன். கடுமையான சண்டையில் ஒருவன் முஹம்மதுவின் மருமகன் மீது காறி உமிழ்ந்து விடுகிறான். போர்க்களத்தில் இது யாரும் எதிர்பாராத்து. யாருக்கென்றாலும் கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனாலும் அந்த ஞானி அவனை கொல்லாமல் விடுகிறார். சொல்லும் காரணம் “ நான் போர்தான் புரிகிறேன். ஆனாலும் இவன் எச்சிலை துப்பியதால் எனக்கு அதிகம் கோபம் வந்து விட்ட்து. கோபத்தில் அவனை கொல்ல என் மனம் ஒப்பவில்லை. சண்டையில் கொல்லவே விரும்புகிறேன் என்று. என்ன ஒரு நேர்மையுணர்ச்சி. ஒரு குழந்தை இறந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் அந்தக் குழந்தை இறந்த்தற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு அபலைப்பெண்ணை அத்தனை ஆண்டுகளும் வன்மம் குறைக்காமல் வைத்திருந்து நடுத்தெருவில் தலையை வெட்ட வைத்து ஒரு மனமும் ஆறுதல் அடைகிறது என்றால் அது எப்பேர்ப்பட்ட குரூர மனமாக இருக்கவேண்டும்? இந்தக் குரூரத்தை போற்றி வளர்க்கும் இஸ்லாமிய சட்ட்த்தை வன்மையாக கண்டிக்கிறேன். அது மனித்த்தன்மை அற்ற காட்டுமிராண்டித்த்னம் என்று ஆயிரம் முறை உறுதியாக பதிகிறேன்.
ஒரு பக்கம் சட்டம் தேவை என்கிறீர்கள் ஆனால்  எந்த சட்டம் என்பதை கூறுவதில்லை.கட்டுபடாத , மாற்றம் அடையாத மனித மிருகங்களை என்ன செய்வது என்பது தான் கேள்வி ? 
ரிசானா கட்டுப்படாத மாற்றம் அடையாத மிருகமா? அஃப்சல் குருவுக்கு அநீதியான தீர்ப்பை வழங்கிய இந்தியக்குடியரசின் சட்டமும் ரிசானாவுக்கு அநீதியை பரிசாக அளித்த இஸ்லாமிய சட்டமும் ஒரு சேர கண்டிக்கப்பட வேண்டியன. திருந்தவே முடியாதவனின் வாழும் உரிமையை நாம் பறிப்பதை விடவும் அவன் சிறையிலாவது வாழட்டுமே என்றுதான் சொல்கிறேன். ஒரு குடியரசில் சட்டம் சரியில்லை என்ற பட்சத்தில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய சட்டம் கண்ணுக்கு கண் என்பதை சரி என்றே அனைவரையும் சொல்ல வைக்கிறது.
பல்லாயிரம் குர்து மக்களைக் கொண்று குவித்த சதாம் பலகாலம் வாழ்ந்தார். இடி அமீன் என்ற மனித மிருகம் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக ராஜமரியாதையுடன் அரபு நாட்டில் உயிரோடு இருந்தார். அந்த மிருகத்தையும் இஸ்லாம் தான் காப்பாற்றியது. ரிசானவைக் கொன்றதும் அதே இஸ்லாம் தான். என்ன ஒரு முரண்?
குற்றம் குறைவதான ஒரு சமூக அமைப்பை நிர்மானிப்பதே சட்டம் மற்றும் அரசின் கடமை.

//ஏக இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால் அவன் முஸ்லிமே அல்ல என்பது ராணுவமயமான வார்த்தை.
இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அடிப்ப்டை மனித சுதந்தரத்துக்கு எதிரானது. கோயிலுக்கே போகாமல் சாமி சிலையைக் கும்பிடாமல் கூட ஒருவன் இந்துவாக இருந்து விட முடியும். இதை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் ராணுவத்துக்கே உரியன. இஸ்லாம் ராணுவத்தால் பரப்ப்ப்பட்டு யுத்த்த்தால் நிர்ணயிக்கப்பட்ட மதம். இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது?


என்ற வசனங்களை எல்லாம் படிக்க வில்லையா ?
அதே குரானில் அல்லாவை ஏற்காதவர்களை அழித்துவிடு என்று போதிக்கும் வரிகளும் உள்ளதை இம்ரானும் நாஷித்தும் படித்தார்களா இல்லை படிக்காத்து போல இருக்கிறார்களா? முஹம்மது எதற்காக யுத்தம் செய்தார் என்பதை என் வார்த்தைகளில் சொல்ல வைப்பதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? அதை நான் எடுத்துக்காட்ட விரும்பவில்லை. உங்கள் மனசாட்சிக்கான வேலையாக அதை நான் உங்களுக்கு விட்டு வைக்கிறேன்.

 குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்பது தான் ஒரே அளவுகோள்  யார்  தப்பு செய்தாலும் ,தண்டனை வழங்குவதில் வழைவு நெழிவு இல்லை .
தண்டனை வழங்குவதில் வழைவு நெழிவு வேண்டாம். ஆனால் அந்த சட்டங்கள் மக்களால் இயற்றப்பட்ட்து அல்ல. ஒரு மத்தின் ஆட்களால் எழுதப்பட்ட்து. இந்துவான நான் அல்லாவை ஆண்டவனாக ஏற்காத போது முஹம்மதை தூதராக ஏற்காத போது, குரானை புனிதமாக ஏற்காத போது அதன் சட்ட்ம் மட்டும் என்னை எப்படி தண்டிக்கலாம்?
சட்டம் என்பது இஸ்லாத்தின் பார்வையில், உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் ஆண் பெண்,என்கிற பாகுபாட்டை காட்டாது.
மற்றதெல்லாம் பரவாயில்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்று நீங்கள் சொல்வது ஒன்று மனமறிந்த பொய்யாக இருக்க வேண்டும். அல்லது உங்களுக்கு இஸ்லாமிய சட்டங்களில் பரிச்சயம் இல்லாமல் இருக்க வேண்டும். எது சரி என்பதை நீங்களே தீர்மானிக்கவும்.
இப்போ நான் அரபு தேசத்தில் குடிவுரிமை வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன 
தலைப்பை ஒட்டிய கேள்விதான் அது. இந்தியனாக இருக்க விரும்புபவர் இந்திய சட்ட்த்தை மதிப்பவராக இருக்க வேண்டும். எப்படி இஸ்லாமிய நாட்டில் தப்பு செய்தால் அந்த சட்டம் வேலை செய்கிறதோ அப்படி இந்தியாவில் இருப்பவர்களுக்கு சரியான சட்டம் இந்திய சட்டம்தான். இஸ்லாமிய சட்டம் அல்ல.
நான் சொல்ல வருவது. அனைத்து இஸ்லாமியர்களும் சம்ம் என்றால் நீங்கள் ஏன் அரபு நாட்டில் சொத்தோ குடியுரிமயோ வாங்க அனுமதி மறூக்கப்படுகிறீர்கள்? அரபியாக பிறந்தால் தான் அரபு நாஅட்டில் வாழ முடியும் என்பது இஸ்லாமிய சட்ட்தின் குறுகல்வாத சமத்துவமற்ற தன்மைக்கு சான்று.

குற்றங்களை கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்க கூடாது,சமூதாயம்     நாகரீகம் அடையும் வரை காத்திருக்க வேண்டும்

உங்கள் புரிதலின் தரம் இவ்வளவே என்கிற போது நான் மேலும் என்ன சொல்ல?. தண்டனைகள் இல்லாமல் இருக்க முடியாது. அவை மனித்த்தன்மையாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய சட்டமானது பாதிக்கப்பட்டவனுக்கு முழு அதிகாரத்தையும் வழுங்குவது தான் அதன் மிகபெரிய நன்மை .
இதே கருத்துக்கு முதல் அமர்வில் நான் சொன்னது: குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.
இரண்டாம் அமர்வில் சொன்னது: இஸ்லாம் கடுமையான சட்டக்களின் மூலம் மக்களை நல்வழிக்கு வலிந்து திருப்புவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களை நாகரீகமற்ற விலங்குகளுக்கு இணையாக யோசிக்கவும் செயல்படவும் வைத்து விட்ட்து.
இதன் பின்னும் ஐந்தாம் அமர்விலும் அதையே சொன்னால் எப்படி? இது தான் இஸ்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுத்த நேர்மையா?
இஸ்லாமிய சட்டம் தான் மனிதகுலதிர்க்கான ஒரே சரியான தீர்வு.
நான்காம் அமர்விலேயே சொல்லிமுடித்த்து.
இது ஒன்றுதான் தீர்வுஇது ஒன்றுதான் வழி என்பதெல்லாம் ஃபாஸிஸம்.அடிப்படைவாதம்.

உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பலமுறை திரும்ம திரும்ப சொன்னாலும் உங்கள் காதில் ஏறப்போவது இல்லை. ஆனால் எல்லா மனிதனுக்கும் கொஞ்சமாவது மனசாட்சி உயிரோடு இருக்கும். அந்த தைரியமான நம்பிக்கையில் தான் இதையெல்லாம் எழுதினேன். இனியும் உங்களுக்கு எழுத தயாராக உள்ளேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டலும் உங்கள் மனசாட்சி சொல்லி விடும். இஸ்லாமைத்தாண்டியும் ஒரு உலகமுண்டு. அதை நீங்கள் கண்ட டைய என் வாழ்த்துக்கள். விரைவில் இந்த விவாத்த்தை தொகுத்து என் பிளாகில் போட உள்ளேன். மறுபடி மற்றைய விவாத்தில் சந்திப்போம். வாழ்த்துக்கள்.

         ---------------------------------------------------------------------------------------------------------------------------