புதன், 1 பிப்ரவரி, 2012

மமக என்கிற கொள்கை குன்று !!


தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் நடந்த "சின்னத்திரை" என்பவரது சிலை திறப்பு விழாவிற்காக போஸ்டர் அடித்து அனைவரையும் வரவேற்றது நமது மாமா கட்சியினர். !!!
இதன் மூலம், தங்களுக்கு கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது, உலக ஆதாயத்திற்காக நாங்கள் எத்தகைய மானங்கெட்ட செயலிலும் இறங்குவோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.

போஸ்டர் இணைக்கப்பட்டுள்ளது.


MMK vin latchanam.jpg

சொரணை கெட்டவர் எப்படி பேராசிரியர் ஆனார்?"பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால்... ஜவாஹிருல்லாஹ் பேட்டி " என்று பொடி வைதார்ப்போல் தலைப்பு வைத்திருந்தது இந்த வார கேடு கெட்ட நக்கீரன். ஜெயாவுக்கு அதி பயங்கரமாக எச்சரிக்கை ஏதும் விடுத்திருப்பார் என்று உள்ளே படித்துப்பார்த்தால், இவ்வாறு கூட்டணி வைத்தால் சமுதாய மக்களுக்கு பாதிப்பு, அது சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றெல்லாம் மிகவும் மென்மையாக சொல்லியுள்ளார், பேராசிரியர்.
பாஜக உடன் கூட்டணி வைத்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என்பதை கூட வெளிப்படையாக அறிவிக்க துப்பு கெட்டு நிற்கிறார் இவர். சூசகமாக சொல்கிறாராம்.. வெளிப்படையாக அறிவிப்பு செய்ய வேண்டிய இடத்தில் சூசகம் எதற்கு?

நங்கள் எப்போதும் அதிமுக உடன் கூட்டணி தான் என்று அத்வானி ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்று அறிவிப்பு செய்த போதே, கூட்டணியை விட்டு விலக முன்வராத இந்த மாமா கூட்டம், எப்படி எச்சரிக்கை எல்லாம் விடும்? என்து பாமரன் கூட கேட்கும் கேள்வி..
சொரணை கெட்டவர் கூட பேராசிரியர் ஆக முடியும் என்பதெல்லாம் பாமரனுக்கு எப்படி புரியும்?

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு
நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக ஏற்கனவே கிளப்பப்பட்ட அவதூறுகளுடன் மேலும் சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
இது சம்மந்தமாக முன்னர் எழுதப்பட்ட மறுப்பை இங்கு மீண்டும் அப்படியே வெளியிடுகிறேன்..

அஸ்ஸலாமு அலைக்கும்..

மார்க்கம் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து கடுகளவு சிந்தனையும் இந்த கூட்டத்தாருக்கு இல்லை என்பது இவர்கள் வாதம் மூலமும் தெளிவாகிறது.
ரசூலின் முடி விஷயத்திற்கு போவதற்கு முன்னால், ஆவேசப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு சில விஷயங்களை சொல்லியுள்ளனர் - அதை நேருக்கு நேராக, ஆதாரங்களுடன் கலந்துரையாட அழைத்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்கிற அளவிற்கு ஓடுவார்கள் என்பதை இங்கேயே பார்க்கலாம்.

தலை திறந்து தொழுவது ஹிந்துக்கள் வேலை என்று சொல்கின்றனர்.
தொழும் போது தலையை கட்டாயம் மறைத்து தான் இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள் என்றால் இது குறித்து நம்மோடு பேச தயாரா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று காட்ட தயாரா?
தலையை மறைப்பது சுன்னத என்பதை நிரூபிக்க தயாரா?
நபி (ஸல்) அவர்கள், தலையை திறந்து வைத்தும் கூட தொழுதுள்ளார்கள் என்பதை நாம் எடுத்துக்காட்டினால் அதை மறுக்க உங்களால் முடியுமா?
எதற்கும் வக்கற்று நின்று விட்டு, இத்தகைய வீராவேசம் மட்டும் எதற்கு?

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுவது ஹிந்துக்கள் வழிமுறை என்கிறார். அப்படி சொல்பவர்கள், உருவம் குறித்து நாம் சொல்லக்கூடிய ஆதாரங்களை மறுத்து நம்மோடு வாதிக்க தயாரா?
உருவம் குறித்து தனி தலைப்பில் பேச அழைத்தால் முன் வருவாரா அல்லது, ஏற்கனவே மவ்லூத் குறித்து நாம் அடுக்கடுக்காக கேள்விகள் வைத்த உடன் "இதோ பதில் தருவேன், ஆணித்தரமான பதில்கள் விரைவில்", என்றெல்லாம் மிகப்பபெரிய build -up களை கொடுத்து விட்டு கடைசியில் எதையும் தராமல் ஓடியதை போல ஒளித்து ஓடுவாரா?

அது போல, பன்றியின் இறைச்சி ஹராமா அல்லது பன்றியே ஹராமா என்பதை குறித்தும் நாம் சில ஆதாரங்களை தரும் போது மறுத்து பேச தயாரா என்பதை அறிவிக்கட்டும்..

வீர சவடால்கள் எதுவுமே, மறுத்து ஆதாரங்கள் தருகிற வரை தான், ஆதாரங்கள் வந்த பிறகு வீரமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை என்பது தான் இந்த கபுர் வணங்கிகளின் கொள்கை என்பது, இருபத்திஐந்து ஆண்டுகால ஏகத்துவ சரித்திரம் நமக்கு சாட்சி சொல்கிறது!


நபியின் தலை முடி விஷயத்திற்கு வருவோம்..

ஹதீஸ்களுக்குள் செல்வதற்கு முன்னால், ஒரு முடியை காட்டி இது நபியின் முடி என்று சொல்வதாக இருந்தால், இதை வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமா இல்லையா?
நபியின் முடியை முதலில் வைத்திருந்தவர் யார், அவருக்கு பின் அதை யார் பாதுகாத்து வந்தார்கள்? நபியின் காலத்திற்கு பிறகு வந்த நான்கு கலிபாக்கள் காலத்தில் இது பற்றிய குறிப்புகள் ஏதும் உண்டா?
நான்கு கலிபாக்கள் காலத்திற்கு பிறகு, இந்த முடியை யாருடைய பொறுப்பில் தந்து விட்டு சென்றார்கள்?
இன்றைய காலத்தில் யார், யாரிடமிருந்து பெற்றுள்ளார்கள்?
இதையெல்லாம் வரலாற்று சான்றுகளுடன் இவர்கள் நிரூபிக்க தயாரா? இயலாது.
ஏதோ, போகிற போக்கில், ஒரு முடியை எடுத்து கொண்டு இது நபியின் முடி என்று சொன்னால் அதை நம்பவும் ஒரு எருமை மாட்டு கூட்டம் உள்ளது என்று எண்ணிக்கொண்டு இத்தகைய புளுகுகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
செத்து போன பிணங்கள் நமது நோய்களை தீர்க்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கும் நம் சமூகத்து மக்களிடையே இத்தகைய வாதங்களை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதை இவர்கள் அறிந்துள்ளார்கள்..
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக ஒரு பொருளை பாதுகாப்பது என்பது சாதாரண காரியமல்ல, அதனுடைய நம்பகதன்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்காதவரை, இதை எவராலும் நம்ப இயலாது.

இன்னும் சொல்லப்போனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைஅத் செய்த இடம் என்று கூறி, ஒரு மரத்தின் அடியில் நின்று தொழ ஆரம்பித்தனர் நபியின் காலத்திற்கு பின்னுள்ள மக்கள்.
ஆனால், அதே இடத்தை குறித்து பேசும் போது, அது எந்த இடம் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று சஹாபக்க்களே சொல்வதாக புஹாரியில் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது நமக்கு எதை காட்டுகிறது?
ஒன்றை பாதுகாப்பது என்பது, அதனுடைய காரண காரியங்களுடன் செய்தாலே ஒழிய, அது சஹாபாக்கள் காலத்திலும், அதற்கு அடுத்த தலைமுறையினராலும் கூட சரியாக நினைவில் வைக்க முடியாது! இது மனித இயல்பு !

முடியை பாதுகாக்க சொல்வதாக வருகிற ஹதீஸ் குறித்து பார்ப்பதற்கு முன், ஒரு அடிப்படையான மார்க்க சட்டம் ஒன்றை சகோதரர்கள் அனைவரும் மனதினில் கொள்ள வேண்டும்.

புஹாரியில் பதிவாகியுள்ள, நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக சொல்லப்படும் ஹதீஸில், எந்த ஒரு அறிவிப்பு நபியிடம் இருந்து வந்ததாக நீங்கள் கேட்டாலும், அதை கேட்ட மாத்திரத்தில் உங்கள் மனமே அதை ஏற்றுக்கொள்ள , ஜீரணிக்க மறுக்கும் என்றால் அத்தகைய அறிவிப்புகளை விட்டும் நாம் தூரமானவன், அது பொய் செய்தி என்று நபி (ஸல்) அவர்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு இலக்கணம் சொல்கிறார்கள்.

இது தான் அடிப்படை!

நாம் எதை இஸ்லாம் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எந்த அநாச்சாரங்களில் இருந்தும், பித்அத்களில் இருந்தும், இணை வைப்பு காரியங்களில் இருந்தும் விடுபட்டு இந்த தூய மார்க்கத்தை நாம் பெற்றிருக்கிறோமோ , அத்தகைய மார்க்கத்தின் தூய தன்மைக்கே பங்கம் ஏற்படுகிற விதத்தில் ஒரு மார்க்க அறிவிப்பு , நபியின் பெயரால் சொல்லப்படுமேயானால், உண்மையில் அது நபி சொன்னது இல்லை, மாறாக அது எவனோ ஒரு பொய்யன் கட்டவிழ்த்த செய்தி! என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். இது நபியின் கட்டளை!!

இந்த அடிப்படையில், எந்த மார்க்கத்தை பெறுவதற்காக, சிலை வணக்கத்தையும் மனிதர்களை மகான்களாக போற்றும் இணை வைப்பு காரியங்களையும் விட்டு விட்டு அந்த உத்தம சஹாபாக்கள் வந்தார்களோ, அந்த மார்க்கத்தில் நபியின் தலை முடி பரக்கத் என்று நபியே சொல்வார்களா? அதை சேகரித்து வைத்துக்கொள்ள சொல்வார்களா?
இது பொய் !!

தான் வரும் போது, தமக்காக எழுந்து நிற்பதையே தடை செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

எகூதிகள், தங்களது தலைவரின் கால்களில் விழுவதை போல நாங்களும் உங்கள் கால்களில் விழலாமா என்று கேட்ட போது அதை மறுத்து, கடுமையாக கோபப்பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!

மனிதனை மனிதனாகவும், கடவுளை கடவுளாகவும் தரம் பிரித்து பார்க்க கூடிய அறிவை தந்து விட்டு சென்ற நபிகள் நாயகம், தமது தலை முடியை சேகரித்து வைத்துக்கொண்டால் பரக்கத் என்று சொல்வார்களா? என்று சிந்தித்தால், இது வடி கட்டிய பொய் செய்தி என்பது புரியும்.

இன்னும் சொல்லப்போனால், சஹாபாக்களில் சிலர், இது போன்ற காரியத்தில் ஈடுபட்டும் இருந்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. நபியின் எச்சிலில் பரக்கத் உள்ளது என்று எண்ணி, அதை கையால் எடுத்து முகத்தில் தடவிக்கொண்டுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம், இந்த கபுர் வணங்கிகள் எடுத்து காட்டி தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்த முயல்வார்களே தவிர, இந்த செயல் தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கண்டித்ததாக வரும் ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள்.

புஹாரியில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸில், இது போன்று நபியின் எச்சிலை முகத்தில் தடவி, அதை பரக்கத் என்று நபிய சஹாபாக்களை மிகவும் கடிந்து, இதனால் உங்களுக்கு எந்த பரக்கத்தும் கிடையாது, எனது சொல் படியும் நான் கட்டிய வழியின் படியும், உங்கள் அண்டை வீடுகளை பகைத்துக்கொள்ளாமலும், அமானிதங்களை பாதுகாப்பாக திருப்பிக்கொடுத்தும் வந்தால், அது தான் உங்களுக்கு பரக்கத்தை பெற்று தரும் என்று மிக தெளிவாக அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம்!

நபியின் தலைமுடி பரக்கத், அவர்களது வியர்வை பரகத் என்றெல்லாம் புளுகக்கூடியவர்கள், மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸை கண்டு கொள்ளவே மாட்டார்கள், அவர்கள் சபையில் இதை வைக்கவும் மாட்டார்கள்.

நபியின் தலையிருந்து எடுக்கப்பட்ட (குளிர்ச்சிக்காக) ரத்தத்தை ஒரு சஹாபி குடித்து விடுவார், இந்த சம்பவமும் நம் அனைவரும் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் தான்.
இதை பார்த்த நபி (ஸல்) அவர்கள், இப்படி செய்யாதே என்று கடிந்து கொள்வார்கள் - உன்னால் இந்த மக்களுக்கு கேடு, என்று கோபப்படுவார்கள் என்றெலாம் ஹதீஸில் பார்க்க முடிகிறது.

ஆக, தலைமுடியை பாதுகாத்து வைக்குமாறு நபியே சொன்னார்கள் என்று சொல்வது பல வகைகளில் இந்த மார்க்கத்தின் நெறிகளுக்கும், அடிப்படை கொள்கைகளுக்கும் முரணாக நிற்கிறது.

இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால், இன்றைக்கு சிலர், நபியின் முடியை வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு திரிகிறார்களே, அவர்கள் நபியின் முடி என்று காட்டும் முடி கருப்பாக உள்ளது.

ஆனால், சஹாபாக்கள் காலத்தில், நபியின் மரணத்திற்கு பிறகு, உம்மு சலமா (ரலி) போன்றோர் நபியின் முடி என்று சொல்லி சில முடிகளை பாதுகாத்து வைத்ததாகவும் ஹதீஸில் வருகிறது, ஆனால், அந்த முடி சிகப்பாக இருந்தது என்றும் அதே ஹதீஸ் சொல்கிறது!
இப்போது, இவர்கள் சொல்லும் முடி போலியானது என்பதை இதன் மூலமே நிரூபணம் ஆகி விட்டது, ஒன்று.
இரண்டாவது, அந்த ஹதீஸிலேயே இதற்கு மறுப்பும் உள்ளது. ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் தலை முடியையும் தாடியையும் அணு அணுவாக ஆராய்ந்து அறிவிக்கப்படுகிற ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன. அவை எல்லாவற்றிலும், நபி(ஸல்) அவர்களின் முடி கருப்பாக இருந்ததாக தான் உள்ளது!
ஒரு அறிவிப்பில், இருபது வெள்ளை முடிகள் இருந்ததாக வருகிறது.
இதனடிப்படையில் பார்த்தால் கூட, நபி (ஸல்) அவர்களுக்கு கருப்பு முடியும், ஒரு ஒரு சில வெள்ளை முடிகளும் தான் இருந்ததே தவிர, சிகப்பு முடிகள் இருக்கவில்லை!!

ஆக, எந்த வகையில் சிந்தித்தாலும், இது போன்ற செய்திகள் மிகவும் போலியானது , முழுக்க முழுக்க வயிற்றுப்பிழைப்புக்காக நடத்தப்படக்கூடிய நாடகம் என்பதில் எள்ளளவும் நாம் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

எவன் ஒருவன் என் மீது ஒன்றை இட்டுக்கட்டி சொல்கிறானோ, அவன் செல்லும் இடம் நரகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் பாதுக்காக்க வேண்டும்.

வஸ்ஸலாம்.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள்அஸ்ஸலாமு அலைக்கும்..

இறுதி நபித்துவத்தை மறுக்கின்ற கூட்டம் பரப்பி வந்த நோட்டீசுக்கு மறுப்பாக நாம் குர் ஆனிலிருந்தும் ஹதீசிலிருந்தும் எண்ணற்ற ஆதாரங்களை தந்திருந்தோம்.
பார்க்க : http://nashidahmed.blogspot.com/2012/02/blog-post.html

ஒரு சிலவற்றுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சில சப்பை கட்டுகள் வந்தனவே ஒழிய, அனைத்திற்கும் இந்த கூட்டத்தால் மறுப்பு சொல்ல இயலவில்லை.


இந்நிலையில், மிர்சா குலாம் தான் இறுதி நபி என்று வாதிடக்கூடியவர்களிடம் பல வருடங்களாக நாம் எழுப்பி வரும் கேள்விகளை இங்கு மீண்டும் பட்டியலிடுகிறோம்.
பல வருடங்களாக பதில் கிடைக்காமல் திண்டாடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு.. !


முதல் கேள்வி

ஹகீகத்துல் வஹீ என்கிற நூல், பக்கம் 317 இல், தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்ததாக சொல்கிறான் இந்த மிர்சா குலாம் என்பவன். அதில் பல எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் இருக்கின்றதே என்று கேட்ட பொது "வஹீ என்பது வேகமாக வருகிறது என்பதால் இலக்கண பிழை வருகிறது என்று சொன்னான்". அல்லாஹ், பிழையாக ஒரு மொழியை சொல்லுவான் என்று அல்லாஹ் மீது இட்டுக்கட்டிய ஒருவன் நபியா?


இரண்டாம் கேள்வி

நூருல் ஹக் இத்மாமுல் ஹுஜ்ஜா என்கிற நூல், பக்கம் 296 இல், ஈசா நபியின் கபுர் பாலஸ்தீனில் உள்ளது என்று சொன்ன இந்த மிர்சா குலாம், கிஸ்தி நூஹ், பக்கம் 25 இல், ஈசா நபியின் கபுர் காஷ்மீரில் உள்ளது என்று சொல்லியுள்ளான் .
இப்படி முரண்பட்டு பேசியவன் நபியா?
ஈசா நபி இன்னும் இறக்கவில்லை என்று குர் ஆனும் ஹதீசும் சொல்லும் போது, அதற்கு மாற்றமாக பேசியவன் நபியா?


மூன்றாம் கேள்வி

சரி, அது தான் இவனது கொள்கை என்றால், அதிலாவது உண்மையாளனாக இருக்க வேண்டுமல்லவா? ஆயினே கமாலாத் என்கிற நூல் பக்கம் 409 இல் , ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளான்.
இப்படி முரண்படக்கூடியவன், சிந்தனை தெளிவில்லாதவன் நபியா?

சரி இது ஒரு பக்கம் என்றால், அதே நூலில் பக்கம் 44 இல், ஈசா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் ஆகும் என்று தமக்கு தாமே இரண்டு முறை முரண்பட்டு பேசியுள்ளான்.
பைத்தியக்காரனை விடவும் அதிகமாக குழப்பிக்கொண்டிருக்கும் ஒருவன் நபியா?


நான்காம் கேள்வி

சுல்தான் முஹம்மது என்பவர் முகமதி பேகம் என்கிற பெண்ணை திருமணம் செய்தால், சுல்தான் முஹம்மது முப்பதே மாதங்களில் இறந்து போவார். அதன் பிறகு நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆயினே கமாலதே இஸ்லாம் என்கிற நூல் பக்கம் 325 இல் எழுதியுள்ளான்.
வேடிக்கையான விஷயம் - அந்த சுல்தான் முஹம்மத் இறப்பதற்கு முன் இந்த மிர்சா குலாமே இறந்து போனான்!! தான் கூறிய ஒன்று பொய்த்து போனால் அவன் நபியாக இருப்பானா?

இதில் உச்சகட்ட வேடிக்கை, இவ்வாறு நடக்காமல் போனால், நான் நபி இல்லை என்பதற்கு அதுவே ஆதாரம், என்று வேறு வாய் கொடுத்து மாட்டியுள்ளான் இந்த மிர்சா குலாம் (அதே நூல், அதே பக்கம்)


ஐந்தாம் கேள்வி

ஆயினே கமாலாதே இஸ்லாம் என்கிற நூல், பக்கம் 565 இல், எனக்குள் அல்லாஹ் நுழைந்து விட்டான், இப்போது நான் தான் அல்லாஹ், நான் தான் இந்த உலகை படைத்தேன், நான் தான் இந்த மனித குலத்தை படைத்தேன், என்று கூறி, தன்னையே கடவுள் என்று சொன்னவன் நபியா அல்லது ஷைத்தானா?


ஆறாம் கேள்வி

திர்யாகுல் குலூப் என்கிற நூல் பக்கம் 432 இல் , தன்னை யாராவது நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் முஸ்லிம் தான் என்று சொல்லியுள்ளான்.
இவன் உண்மையில் அல்லாஹ் அனுப்பிய தூதர் தான் என்றால், அல்லாஹ்வின் தூதரை ஏற்றுக்கொள்ளாதவன் எப்படி முஸ்லிமாக முடியும்? நபியை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் கூட அவன் முஸ்லிம் தான் என்கிற குர் ஆணுக்கே முரணான கருத்தை சொன்னவன் நபியா?
சரி இது தான் அவனது கொள்கை என்றால், ஹகீகத்துல் வஹீ, பக்கம் 167 இல், என்னை நபியாக ஏற்றுக்கொள்ளாதவன் காபிர் என்று சொல்லி, தனக்கு தானே முரண்பட்டு கொண்டுள்ளான இவன். இவன் எப்படி நபி ஆவான் ?


ஏழாம் கேள்வி

மூஸா நபி மரணிக்கவில்லை என்று அல்லாஹ்வே சொல்லியுள்ளான் என்று நூருல் ஹக், பக்கம் 68இல்சொல்லியுள்ளான் இந்த மிர்சா குலாம். அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு சொல்லியுள்ளான் என்பதை இன்றைய தேதி வரை எவராலும் எடுத்துக்காட்ட முடியவில்லை.
அல்லாஹ் மீதே இட்டுக்கட்டுபவன் நபியா காபிரா?எட்டாம் கேள்வி
மஸீஹ் வரக்கூடிய காலத்தில், "இவர் தான் அல்லாஹ்வின் கலீபா" என்று வானத்தில் இருந்து ஒரு சப்தம் வரும் என புஹாரியில் ஹதீஸ் இருப்பதாக ஷஹாததுல் குர் ஆன், பக்கம் 41 இல் சொல்லியுள்ளான் இந்த மிர்சா குலாம்.
புஹாரியில் இன்று வரை அத்தகைய ஹதீசை எவராலும் காண முடியவில்லை. இவ்வாறு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவன் நபியா?


ஒன்பதாம் கேள்வி
மஸீஹ் வரக்கூடிய காலத்தில் ப்ளேக் நோய் ஏற்ப்படும் என்று குரானிலே சொல்லப்பட்டிருப்பதாக கிஸ்தி நூஹ் என்கிற நூல், பக்கம் 9 இல் எழுதியுள்ளான் இவன். அவ்வாறு குர் ஆனில் எந்த வசனமும் இல்லாத நிலையில், இவன் ஒரு மோசடிப்பேர்வழியா நபியா?பத்தாம் கேள்வி


நீ என்னுடைய மகனின் அந்தஸ்தில் இருக்கிறாய் என்று அல்லாஹ்வே தம்மிடம் சொன்னதாக மிர்சா குலாம்,ஹகீகதுல் வஹீ பக்கம் 8 இல் சொல்லியுள்ளான்.
அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை என்று, தான் இறைவன் என்பதற்குரிய தகுதிகளில் ஒன்றாக அல்லாஹ் தன்னை குறித்து பெருமையாக சொல்லும் போது, நான் அல்லாஹ்வின் மகன் என்று ஒருவன் சொல்வது அல்லாஹ்வை இழிவுப்படுத்துகிறதா பெருமைப்படுத்துகிறதா?பதினொன்றாம் கேள்வி


கமர் என்கிற சொல், மூன்று நாட்களுக்கு பிறகுள்ள பிறையை தான் குறிக்கும், இதற்கு மாற்றமாக சொல்லக்கூடியவன் மடையன் என்று மிர்சா குலாம், நூருல் ஹக் பக்கம் 10 இல் சொல்லியுள்ளான்.
முதல் பிறைக்கு கூட கமர் என்கிற வார்த்தையை அல்லாஹ்வே சொல்லியுள்ளானே, அல்லாஹ் மடையனா? என்று கேட்டதற்கு இன்று வரை எவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அல்லாஹ்வையே மடையன் என்று சொல்பவன் அல்லாஹ்வின் தூதரா அல்லது அல்லாஹ்வின் எதிரியா?


பனிரெண்டாம் கேள்வி
கிஷ்தீ நூஹ் பக்கம் 68 இல், மரியமும் நானே, ஈசாவும் நானே என்று, உளறியிருக்கிறான் இவன். இத்தகைய உளறல் பேர்வழி எப்படி நபியாக இருக்க முடியும்?


இறுதி நபித்துவத்தை மறுப்போர் வெளியிட்ட நோட்டீசுக்கு பதில்


அஸ்ஸலாமு அலைக்கும்..

நோட்டீசில், இறுதியான நபி முஹம்மது (sal) தான் என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? என்று கேட்கப்பட்டுள்ளது..

ஆதாரங்களை குறித்துக்கொள்ளவும்..

திருக்குர் ஆன் 7 :158 - மனித குலம் முழுவதற்கும் நான் தான் தூதர் என்று முஹம்மது நபியை அல்லாஹ் சொல்ல சொல்கிறான்.

திருக்குர் ஆன் 25 :1 - அகிலத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த குர் ஆன் தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதமும் அந்தந்த சமுதாய மக்களுக்கு மட்டும் வழி காட்ட இறக்கியிருந்த அல்லாஹ், குர் ஆனை மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் தந்துள்ளதாக சொல்கிறான்.
ஆகவே, மிர்சா குலாம் என்பவனும் பொய்யன், அவன் வேதம் என்று கொண்டு வந்ததும் பொய் !!

திருக்குர் ஆன் 34 :28 - மனித குலம் அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காக முஹம்மத் நபியை அல்லாஹ் அனுப்பியதாக சொல்கிறான்.
அவர்களுக்கு முன் சென்ற எந்த நபியையும் மனித குலம் முழுமைக்காகவும் அல்லாஹ் அனுப்பவில்லை!முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களையும் ஒவ்வொரு சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பினான். முஹம்மது நபியை குறித்து சொல்லும் போது மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் அனுப்பினேன் , என்கிறான். மனித குலம் குலம் முழ்மைக்கும் நபியாக ஒருவரை அனுப்பி விட்ட பிறகு, இன்னொரு நபியை அல்லாஹ்வே அனுப்பினால், தனது வார்த்தைக்கு அல்லாஹ்வே முரண்பட்டு விட்டான் என்கிற பயங்கரமான கருத்து வந்து விடும். அத்தகைய பயங்கரத்தை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள் இந்த மிர்சா குலாம் அபிமானிகள்!


அடுத்து, ஹாத்தம் நபி குறித்து வரக்கூடிய ஹதீஸை வைத்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்கள்.,
(புஹாரி 3535 )
ஹதீஸை முழுமையாக படிக்காத, அரபி தெரியாத பாமரர்களை ஏமாற்றும் நோக்கில் நோட்டீஸ் வெளியிட்டாலும், ஹதீஸ் உண்மையில் சொல்வது என்ன என்பது விபரமுள்ளவர்கள் அறிகிறார்கள்.

ஹாத்தமு நபி என்றால் இவர்கள் சொல்வது போன்று சிறப்பு வாய்ந்த அர்த்தம் கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஹாத்தமு நபி என்பதற்கு இறுதி நபி என்கிற அர்த்தமும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது, எந்த அர்த்தம், இந்த context உடன் ஒதுப்போகுமோ, அந்த அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டும்!

context என்ன என்பதை அறிந்தால், இவர்கள் ஹதீஸை எந்த அளவிற்கு திரிக்கிறார்கள், தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகும்.

அந்த ஹதீஸில் என்ன வருகிறது தெரியுமா?

இந்த உலகில் தோன்றிய எல்லா நபிமார்கள் குறித்தும், என்னை குறித்தும் ஒரு உதாரணத்துடன் விளக்கவா? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு உதாரணம் சொல்கிறார்கள் - அது தான் இந்த புஹாரி 3535 ஹதீஸ்.

என்ன உதாரணம்?

அழகான ஒரு கட்டிடம் இருக்கிறது.. பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. ஆனால், ஒரே ஒரு இடத்தில் ஒரு செங்கல் வைப்பதற்கு மட்டும் சிறு இடம் ஓட்டையாக உள்ளது.
இப்போது, அந்த அழகான கட்டிடம் தான் எனக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும். ஒரு செங்கல் வைக்க இடமிருக்கிறது என்று சொன்னேனே, அந்த ஒரு செங்கல் தான் நான்!!!!!!!

சுபுஹானல்லாஹ் ! எவ்வளவு தெளிவான வார்த்தைகள்!!!! இதிலேயே நமக்கு புரிகிறது, முஹம்மது நபி தான் இறுதி நபி என்பது.

ஆனால், இதை சொல்லி விட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களே சொல்கிறார்கள் (அதே புஹாரி 3535 ஹதீஸ்), நான் தான் ஹாத்தம் நபி!!!!!!

இந்த இடத்தில் சிறப்பான நபி என்று அர்த்தம் வருமா இறுதி நபி என்று வருமா? என்பதை எந்த சிறு பிள்ளையிடம் கேட்டாலும் சொல்லும் !


அடுத்து, முஸ்லிம் 812 இல் பதிவான ஹதீஸ்..

(ஹதீஸின் கருத்து..)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், ஆறு விஷயங்களின் காரணமாக நான் மற்ற நபிமார்களில் இருந்து தனித்து விளங்குகிறேன்.

குறைந்த வார்த்தைகளைக்கொண்டு நிறைவாக பேசுவது, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது கூட எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தியது போன்று நான்கு சிறப்புகளை சொல்லி விட்டு ஐந்தாவதாக என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
நான் இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் நபி !!!!!!

ஆறாவதாக என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நான் முத்திரையிடப்பட்ட நபி !!!!

ஆக, உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இவர்கள் நபியாக இருப்பது என்பது, வேறெந்த நபிக்கும் கிடைக்காத சிறப்பு!!

அதோடு சேர்த்து தமக்கு அல்லாஹ் முத்திரை இட்டு விட்டான் என்று , அதை ஆறாவது சிறப்பாக கூறுகிறார்கள்.

இந்த முத்திரைக்கு கூட, context புரியாததால், சிலர் ""சிறப்பு"" என்று அர்த்தம் கொடுப்பார்கள். அது, எந்த அளவிற்கு தவறான அர்த்தம் என்பதை இந்த ஹதீஸை படிக்கும் எவருக்கும் புரிய முடியும்.

அல்லாஹ் என்னை சிறப்பாக்கி உள்ளான், அதுவே எனது சிறப்பு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது பொருளற்றதாகி விடுகிறது.

அல்லாஹ் என்ன இறுதி நபியாக்கி விட்டான், அதுவே எனது சிறப்பு என்று கூறுவது மிகவும் பொருத்தமாகி விடுகின்றது.
தவிர, ஐந்தாம் சிறப்புடன் இதை ஒப்பிட்டு பார்த்தாலும் , இறுதி நபித்துவத்தை தான் சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக விளங்கும் .


அடுத்து, புஹாரி 3249

(ஹதீஸின் கருத்து)

இஸ்ரவேல் சமுதாயத்தினரை பொறுத்தவரை, அவர்களிடையே தோன்றிய ஒரு நபி இறந்து விட்டால், உடனே வேறொரு நபி வந்து, அந்த இடத்தை நிரப்பி விடுவார், ஆனால், எனக்கு பின் வேறு நபி இல்லை, நான் தான் இறுதியாக இருக்கிறேன்.. சில கலிபாக்கள் மட்டும் வருவார்கள்!!


இவ்வளவு தெளிவான வாசகங்களை கொண்டு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் போது, இதற்க்கெல்லாம் எந்த பதிலையும் சொல்லாமல், எவனோ ஒரு பொய்யன் எழுதிய ஒரு புளுகு மூட்டையை வேதம் என்றும் அவனை நபி என்றும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது இந்த சமூகம்.

மிர்சா குலாம், எதை வேதம் என்று சொன்னானோ , அது எந்த அளவிற்கு பொய்களையும் புளுகுகளையும் கொண்டிருக்கிறது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் நம்மால் தர முடியும் !

மேலே உள்ள மிக தெளிவான குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு பதில் சொல்லாமல் வேறெந்த விளக்கமும் இவர்களது கொள்கையை நிறுவாது!!


வஸ்ஸலாம்