சனி, 6 நவம்பர், 2010

ஸூபித்துவம் என்றால் என்ன ?…


ஸூபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரைவிலக்கணத்தை ஸூபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை . எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
ஸூபித்துவம் என்பது ‘இஸ்லாமியப் போர்வையில் உருவாக்கப்பட்ட யூத .கிருஷ்த்தவ, கிரேக்கம் போன்ற மாற்று மத தத்துவங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தார்த்தங்களை அடிப்படையாக வைத்து துறவரம் பூண்டு ஆத்மீகவழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கொள்கைக்கே ஸூபித்துவம் எனப்படும்’ இதன் வழி நடப்பவர்கள் ஸூபிகள் என அழைக்கப்படுவார்கள்.
எனவே பாமர மக்கள் நம்புவதைப் போன்று உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி ஆத்மீகப் பாதையின் பக்கம் அழைக்கும் ஒரு அமைப்பே ஸூபித்துவம், ஸூபிகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசச் செல்வர்கள் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான மூடத்தனமான கருத்தாகும் . ஸூபித்துவம் பற்றி எடுத்துக் கூறிய தமிழ் நூல்கள் கூட இவர்களின் யதார்த்த நிலை பற்றிப் பெரிதாக ஆராயாது இதைப் பற்றி நல்லபிப்பிராயம் தெரிவித்திருப்பதன் விளைவே இந்த இறை மறுப்புச் சித்தாந்தம் இன்று பாமர மக்கள் மத்தியில் பரவி நன்மதிப்பைப் பெற்றுள்ளது . எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கும் நபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . மாறாக நபியவர்கள் கூறியது போல் சீரிய நபி வழியை விட்டும் நெறி தவறிய வழிகெட்ட கூட்டங்களில் மிகமிக வழிகெட்ட கூட்டத்தினரே இந்த ஸூபித்துவவாதிகள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் .


சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

  • ஷரீஅத் – (மார்க்கம் .)
  • தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  • ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் )
  • மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )

இவை குறித்து விளக்கமாக அடுத்தடுத்து அறியலாம், இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக