செவ்வாய், 23 நவம்பர், 2010

மேல் சபை வாக்காளார் பட்டியலில் சேர மீண்டும் அழைப்பு கடைசி தேதி – டிசம்பர் – 7தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்களாம். எனவே இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லீம் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.

இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் நம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள்.

குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்தலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.

மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக