புதன், 3 நவம்பர், 2010

மிர்சா குலாமின் உளறல்

யஃஜூஜ் , மஃஜூஜ் யார் ??

காதியானி மதத்தினர் பின்பற்றும் குலாம் அஹமத் காதியானி என்பவன் குர்ஆனுக்கு விசித்தரமான விளக்கங்கள்? கொடுப்பது உண்டு.
இறுதி நாளின் முடிவு சூரத்துல் பகராவில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும்

மஸீஹின் வருகை சூரத்துல் பகரா முன்னறிவிப்பு செய்திருக்கிறது என்றும் உளறியிருக்கிறான்.

அந்த வரிசையில்

குர்ஆனின் ஓரிடத்தில் யஃஜூஜ் , மஃஜூஜ் ஐ பற்றி சொல்­க்காட்டுகிறான். ஹதீஸ்களில் யஃஜூஜ் , மஃஜூஜ் என்றால் யார் அவர்கள், அவர்களுடைய குழப்பங்கள் இருக்கும் என்றெல்லாம் இடம் பெறுகின்றன.

ஆனால் ஹதீஸ்களில் இடம் பெற்ற விளக்கங்களை தூக்கிபோட்டு விட்டு தன்னுடைய சுய விளக்கத்தை கூறியிருக்கிறான் இந்த கோமாளி.

சிலர் சுய விளக்கம் கூறுவார்கள். அது குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் ஒத்ததாக இருக்கும். அறிவிற்கும் ஒத்ததாக இருக்கும்.

இவன் யஃஜூஜ் , மஃஜூஜ் க்கு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? யஃஜூஜ் , மஃஜூஜ் என்பவர்கள் இன்கிலி­ஸ் காரர்களும் ரஷ்யா காரர்களும் ஆவார்கள்.

இந்தக் கோமாளி மட்டும் இப்படி எழுதியிருந்தால் வழமையாக இவன் உளறியிருக்கிறான் என்று விட்டு விடலாம்.

ஆனால் நாங்கள் தான் மொத்த மொத்ம அறிவிற்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்­ கொள்ளும் காதியானி மதத்தினரும் தாங்கள் வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாவில் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.


- யூசுப் பைஜி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக