புதன், 3 நவம்பர், 2010

ஜாக் செய்து வருவது சரியா?


ஜாக் செய்து வருவது சரியா?







நாகர்கோவில் நகரில், சுன்னத் (?) ஜமாத்தினரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக பணி செய்பவர், சகோ. ஷைக்.
இரவு தொழுகை, இருபது ரக்காதுகளை இமாமத் செய்து தொழுகை நடத்துபவர்.
தஸ்பீஹ் தொழுகையை ஆதரித்து பயான் செய்பவர்.

இவ்வாறு பகிரங்க ஏகத்துவத்திற்கு எதிரான செயலை செய்து வரக்கூடியவர், கோட்டாரில், ஜாக் அமைப்பினருக்கு சொந்தமான பிர்தௌசியா மதரசாவில் ஆசிரியராகவும் பணிபுரிகிறார் என்பது தான் வேடிக்கை !!

ஜாக் மாநில தலைமையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மதரசா இது என்ற வகையில், தலைமைக்கு தெரியாமல், இவர் பணி அமர்த்தப்பட வாய்ப்பே இல்லை .

ஏகத்துவத்திற்கு எதிரான பிரசாரத்தை செய்யக்கூடியவர், ஏகத்துவ அமைப்பு என்று சொல்லிக்கொள்பவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மதரசா ஒன்றில் எவ்வாறு வேலை செய்கிறார்?
அதை அனுமதிப்பது எந்த வகையில் சரி? என்பதை இந்த ஜமாஅத் நமக்கு விளக்கியாக வேண்டும்.

குழுமத்தில் ஜாக் ஆதரவு சகோதரர்கள், அதன் நிர்வாகிகள் எவரேனும் இருப்பீர்களேயானால், உங்களது சிந்தனைக்கும், தலைமைக்கு நீங்கள் இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவும் இதை எழுதுகிறோம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக