வியாழன், 4 நவம்பர், 2010

வைகோவை கண்டிப்பது எதற்காக?


வைகோவிற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் கண்டனங்கள் தெரிவித்திருப்பதற்கான காரணம் என்ன? அவர் என்ன செய்தார்??

அஸ்ஸலாமு அலைக்கும். அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது இடது சாரிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். அது ஒரு இயக்கத்தின் செயல்பாடு. அது அவசியமான ஒரு போராட்டம் தான். ஆனால் இடது சாரிகளுக்கு அறிவுரை கூறியும் ஒபாமாவை புகழ்ந்தும் ஒபாமாவை வரவேற்க இடது சாரிகளை வலியுறுத்தியும் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவர் கைக்கூலி என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவின் ஆசைப்படி ராஜேவைக் கொன்றதும், அமெரிக்காவுக்கு சாதகமாக நாட்டை வழிண்டத்த மன் மோகன் சிங்கை திணித்ததும் உலகம் அறிந்த உண்மை. எனவே தான் வைகோ துணிவாக இப்படி அறிக்கை விடுகிறார். அமெரிக்காவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டால் முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியாக வேண்டும். அதனால் தான் அமெரிக்காவின் கைக்க்கூலி வைகோவை கண்டிக்கிறோம் என்று நாடெங்கும் சுவரொட்டிகளை தவ்ஹீத் ஜமாஅத் ஒட்டியுள்ளது


- PJ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக