புதன், 3 நவம்பர், 2010

கொள்கைப் பிடிப்பா? அப்படியென்றால்…?


Hyderali (1)இஸ்லாமிய அடிப்படையில் ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவில் பங்கேற்பதும், அவருக்காக பாவமன்னிப்பு தேடுவதும், அவர் முஸ்மாக இருக்கும்பட்சத்தில் மற்ற முஸ்ம்களின் மீது கடமையாக உள்ளது.

அதே நேரத்தில் ஒருவர் காஃபிராக மரணிப்பாரே ஆனால் அவருக்காக பாவமன்னிப்பு கேட்பது எந்த ஒரு முஸ்முக்கும் தகாது என்று இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

அரசியல் தலைவர்களாக இருக்கக்கூடியவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கென்று எந்த கொள்கை கோட்பாடுகளும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

ஜோதி பாசு என்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வாங்காளத்தின் முன்னாள் முதல்வர் இறந்ததற்கு பலதரப் பட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தார்கள். நமது தமிழகத்தில் சற்று வித்தியாசமாக ஜோதிபாசுவின் உருவப்படத்தை மாட்டி வைத்துக் கொண்டு அதற்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்ச தெரிவிப்பதாக அவரது உருவப்படம் முன்னால் நின்று பலர் படம் காட்டினார்கள்.

பகுத்தறிவுத் தத்துவத்தை போதிக்கும் ஸ்டான் உள்பட எந்த ஒரு அரசியல் தலைவரும் அஞ்ச செலுத்துகிறோம் என்ற பெயரில் இந்த உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவுகின்றோமே, நாம் மலர் தூவுவதை இந்த புகைப்படம் உணர்ந்து கொள்ளுமா என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல் இக்காரியத்தை செய்துள்ளனர்.

ஒருவர் இறந்துபோன நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்று அவரது பிரிவினால் ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னாலாவது அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதை செய்ய முடியவில்லை என்றால் ஏதாவது அறிக்கை விட்டு விட்டு போக வேண்டியதுதானே!

அதையும் விட்டு விட்டு இதுபோன்ற படத்திற்கு மலர் தூவி படம் காட்டும் வேலைகள், பத்திரிகைகளில் செய்தியாவதற்கும், நானும் ஒரு அரசியல் கட்சி வைத்து நடத்துகின்றேன் என்று அவ்வப்போது படம் காட்டுவதற்கும்தான் பயன்படும். இந்த உருவப்பட அஞ்ச விஷயத்தில் ஹைலைட் என்ன தெரியுமா?

நானும் ஒரு தவ்ஹீத்வாதிதான் என பீற்றிக் கொள்ளும் தமுமுகவின் பொதுச் செயலாளர் ஹைதர் அ அவர்களும் புகைப்படத்திற்கு அஞ்ச செலுத்துகின்றேன் என்ற பெயரில் அங்கு போய் படம் காட்டியதுதான். நான் ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாக கொண்டவன் என்று தம்பட்டம் அடிக்கும் ஹைதர் அஅவர்கள், அந்த உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப் போனது ஏன்?

அந்த ஜோதிபாசுவின் உருவப்படம் நமக்கு தமுமுகவின் பெருந்தலைவர்(?) ஹைதர் அ அஞ்ச செலுத்தினார் என்று அறிந்து கொள்ளும் என்பதற்காகவா? இந்தக் கேள்வியைத்தான் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல் லக்கூடிய பெரியார் பக்தர்களிடத்தில் நாம் கேட்டு வருகின்றோம்!

பெரியார் நினைவு தினத்தில் பெரியாருக்கு அஞ்ச செலுத்துகின்றோம் என்ற பெயரில் பெரியார் சிலைக்கு மலர் தூவி அஞ்ச செலுத்துகின்றீர்களே! நீங்கள் பெரியார் சிலைக்கு மலர் தூவி அஞ்ச செலுத்துவது பெரியாருக்குத் தெரியுமா? அந்த சிலைக்கு ஏதாவது சக்தியுள்ளதா? நீங்கள் செய்வதை அந்த சிலை அறியுமா? என்று நாம் கேட்ட கேள்விக்கு அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.

அவர்களை நோக்கி நாம் கேட்கும் கேள்வியை இப்போது முஸ்ம்கள் மட்டும் என்ன ஒழுங்கா? நாங்கள் பெரியார் சிலை என்றால், நீங்கள் ஜோதிபாசுவின் உருவப்படத்திற்கு அஞ்ச செலுத்துகிறீர்கள் என்று நாக்கைப் பிடுங்குவதுபோல நம்மிடம் கேட்டால் ஹைதர் அ என்ற இந்த தவ்ஹீத் வியாதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே அவர்களது தலைவர் திருவாவடுதுறை ஆதீனத்திடம் சென்று தேர்தல் வெற்றி பெற ஆசி வாங்கினார். அது குறித்து நாம் பல கேள்விகளை எழுப்பினோம். ஆசி வாங்கிவிட்டு ஆதீனம் வாழ்த்து வழங்கினார் என்று தங்களது இணைய தளத்தில் அறிவிப்பு போட்டார்கள்! ஆசி வழங்குவதற்கும், வாழ்த்து வழங்குவதற்கும் என்ன வித்தியாசம்?

அது வடமொழி சொல், இது தமிழ் மொழி சொல். இதுதானே வித்தியாசம்; அர்த்தம் ஒன்றுதானே என்று கேட்டோம். அவர்களிடத்தில் பதில் இல்லை. ஓட்டு போடுவதே தீண்டாமை என்று நினைக்கின்ற ஓட்டே போடாத ஒருவரிடத்தில் போய் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டோம். அதற்கும் பதில் இல்லை.

ஏன் ஆதீனத்திடம் ஆசி வாங்கினீர்கள் என்று கேள்வி கேட்டால், கேட்ட கேள்வியை விட்டுவிட்டு, “நான் ஏகத்துவத்தை உயிர் மூச்சாகக் கொண்டவன்…” என்று பதிலளித்தார் தமுமுக தலைவர். அதுபோல தற்போது நானும் ஒரு தவ்ஹீதுக்காரன்தான் என்று சொல்லக்கூடிய ஹைதர் அ அவர்களை நோக்கி கேள்வி கேட்டாலும் இதுபோன்றுதான் பதில் வரும்!

இல்லை நான் மலர் தூவவில்லை; ஜோதிபாசுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கவில்லை. அங்கு போய் நின்று விட்டுத்தான் வந்தேன் என்று மழுப்புவாரேயானால், அத்தகைய மார்க்கத்திற்கு முரணான சபைகளை, அதாவது அந்த புகைப்படத்திற்கு சக்தியுள்ளது என்றும், ஒரே நேரத்தில் ஜோதி பாசுக்கு அனைவரும் அஞ்ச செலுத்தும் விஷயமும் தெரியும் என்ற கருதப்படும் சபைக்கு இவர் படம் காட்டச் செல் வாரேயானால் யார் ஒரு தவறைச் செய்கிறாரே அந்த தவறை இறைவசனத்திற்கு ஏற்ப ஹைதர் அ அவர்களும் சமமான குற்றவாளிதான்.

உலக ஆதாயம் தேடுவதற்கும், பத்திரி கைகளில் தங்களது முகம் வெளி வருவதற்காகவும், ஏகத்துவக் கொள்கையையும், தங்களது ஈமானையும் அடகு வைக்க துணிந்த இவர்களைக் குறித்து இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இல்லையேல் தங்களது கொள்கை கோட்பாட்டையும், ஈமானையும் உலக ஆதாயத்திற்காக அடகு வைத்த இவர்கள் சமுதாயத்தையும் தங்களது சுய நலனுக்காக அடகு வைத்து விடுவார்கள் என்பதை சொல்க் கொள்கிறோம். கொள்கைப் பிடிப்பா? அப்படி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் இத்தகையவர்களை சமுதாய மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். அடையாளம் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக