சனி, 1 மார்ச், 2014

நடுநிலை என்பது நயவஞ்சகம்


நடுநிலை பற்றி பல பதிவுகள் முகனூல் முழுக்க..

நாமும் ஒரு சிறு அலசலை மேற்கொள்ளலாமே என்று எண்ணி இந்த பதிவு..

நடுநிலைவாதிகளில் மூன்று வகையினர் உள்ளதாக அறிய முடிகிறது.

எந்த இயக்கத்திலும் என்னை இணைத்துக் கொள்வேன் என்கிற நடுநிலை ஒரு வகை.

எந்த இயக்கமும் தேவையில்லை என்று கூறுகிற நடுநிலை இன்னொரு வகை.

தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ளவே தயங்குகிற நடுநிலை மற்றுமொரு வகை. மேலே உள்ள இரு வகையினரில் கணிசமானோர் இந்த பிரிவில் தான் உள்ளனர்.

சிந்தித்துப் பார்க்கையில், எல்லா இயக்கத்திலுமுள்ள நல்லதை எடுத்துக் கொள்வேன் என எல்லாவற்றையும் ஏற்பதாய் சொல்கிற எவருமே எல்லா இயக்கங்களின் தீமையை தடுப்பது கிடையாது.
தீமையை தடுக்க சொல்லி இஸ்லாம் இட்ட கட்டளையை பேணாத இது போன்ற நடுநிலைவாதிகளால் சமூகத்திற்கு எந்த பயனிமிருக்காது.

இயக்கமாய் செயல்படுவதே கூடாது எனவும், எந்த இயக்கமானாலும் அது தவறு தான் என்றும் சொல்கிற மறு முனையிலுள்ளவர்கள் எவரும் உருப்படியாய் எந்த நன்மையையும் செய்ததும் கிடையாது.

தன்னை நடுநிலையாளனாய் காட்டிக் கொள்ளவே தயங்குகிற, அல்லது பதுங்குகிற கூட்டம் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

இஸ்லாத்தை அழித்து ஒழிப்பதற்கு கங்கணம் கட்டித் திரிந்த மக்கத்து காஃபிர்களை தெளிவாக அடையாளம் கண்டதோடு அவர்களை துணிவுடன் எதிர் கொள்ளவும் செய்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.

ஆனால், தம்மோடு இணைந்து வியாபாரத்திலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு, தங்களை முழுக்க முழுக்க நல்லவர்கள் போலவே அடையாளப்படுத்திக் கொண்ட நய வஞ்சகர்களை நபி (ஸல்) அவர்களால் (அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தது வரை) அறிந்து கொள்ளவே இயலவில்லை.
அந்த நயவஞ்சகர்களும் தங்களை இனங்காட்டிக் கொள்ளவும் இல்லை.

இன்னார் தான் நான் என தன்னை குறித்த அடையாளத்தை வெளிப்படுத்த தயங்குகிறவன் தான் எதிரிகளிலேயே மிகவும் வன்மமானவன்.

நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் சொல்லும் சில செய்திகள்.. வசனத்தின் கருத்துக்கள்..

இவர்கள் எதை உள்ளத்தால் நம்பவில்லையோ, அதை, பிறர் மெச்சுவதற்காக அல்லது நம்புவதற்காக தம் வாயால் சொல்வர் (பார்க்க 9:62)

தகவல்களை அதன் உண்மையான வடிவில் கூறாமல் திரித்தும் மறித்தும் கூறுவர் (பார்க்க 9:48)

நம்பிக்கை கொண்ட முஃமின்களையும் மோசடி செய்யாத உண்மையாளர்களையும் இவர்கள் கேலி செய்வர் (பார்க்க 9:79)

தங்களுக்கு இலாபமெனில் ஒன்றை அனுசரிப்பர், நட்டமெனில், ஆத்திரம் கொள்வர் (பார்க்க 9:58)

தங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் தேர்வு செய்து கொள்வர் (பார்க்க 24:49)

நபிகளார் காலத்து நயவஞ்சகர்களின் குணாதிசயங்களில் பெரும்பான்மையானவை இன்றைய நடு நிலைவாதிகளாக‌ தங்களை காட்டிக் கொள்வோரிடம் உள்ளதை காண முடிகிறது.

நயவஞ்சகர்களும் காஃபிர்கள் தான் என்று கூறும் இறைவன், இவர்களுக்கு கடுமையான தண்டனையையும் தருவதாக தன் திருமறையில் கூறுகிறான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக