வெள்ளி, 7 மார்ச், 2014

ஃபிர்அவ்ன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தமுமுக‌




தேர்தலில் பங்கு பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ள தமுமுக, இஸ்லாமிய சமுதாய மக்களை அதற்கு பகடையாக பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில், இவர்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் பதிவுகள் மூலம் இவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.

அந்த வரிசையில், ஓட்டுக்காக இவர்கள் எத்தகைய தரத்திற்கும் செல்வார்கள் என்கிற சான்று பகர்கிற அறிவிப்பு ஒன்றை மீண்டும் இங்கே நினைவூட்டுகிறோம்.

நான் தான் அல்லாஹ் என்று சொல்லி இணை வைப்பின் சிகரமாய் திகழ்ந்த ஃபிரவ்னின் மரணத்தை மக்களுக்கு ஒரு சான்றாய் காட்டி எச்சரிக்கை செய்கிறான் அல்லாஹ்.

இணை வைப்பு எந்த அளவிற்கு கொடியதோ அதை விடவும் பல மடங்கு கொடியதும் அல்லாஹ்வினால் துளி மன்னிப்பு கூட கிடைக்காததும் தான் ஒருவன் தன்னையே இறைவன் என்று வாதிடுவது.

அத்தகைய மாபாதக காரியத்தை செய்து பெருவாரியான மக்களை வழிகெடுத்த சம காலத்து ஃபிர்வ்ன் தான் இந்த சாய் பாபா. தமக்கு அல்லாஹ்வின் ஆற்றல் உள்ளதாய் ஊரை ஏமாற்றி வந்த இந்த ஏமாற்றுப் பேர்வழி, இறப்பதற்கு முன்னால் வேண்டுமானால் அவன் திருந்தி நேர்வழி அடைவதற்காக பிரார்த்திக்கலாம், அதுவே அவன் இறந்து விட்டால் அதற்காக ஒரு உண்மை முஸ்லிம் மகிழ்ச்சி தான் அடைவான், மகிழ்ச்சி தான் அடைய வேண்டும் !

ஆனால், தங்களுக்கு ஓட்டும், பதவி சுகங்களும் கிடைக்கும் என்றால், ஒரு முஃமீனுக்கு இருக்க வேண்டிய இத்தகைய உயரிய கொள்கையை கூட காலில் போட்டு மிதிக்கும் வகையில், அவரை நாடறிந்த ஆன்மீகவாதி எனவும், மிகப்பெரிய சமூக சேவகர் எனவும் அவரது இறப்புக்காக நாங்கள் கவலை கொள்கிறோம் எனவும் நா கூசாமல் புகழ்ந்து தள்ளி தங்களது நயவஞ்சகப் போக்கினை தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர் இந்த தமுமுகவினர்.

அவர்கள் அவரது சமூக சேவையை தானே பாராட்டினார்கள்,தன்னை கடவுள் என்று சொன்னதை பாராட்டினார்களா என்று இதற்கு கூட முட்டுக் கொடுக்க சில நடுநிலை செம்புகள் கிளம்பி வரத்தான் செய்வர் !

ஆனால், தன்னை கடவுளாக மக்களிடம் போலியாய் காட்டி கல்லா நிறைக்கத்தான் இந்த சமூக சேவை என்கிற போலி நாடகம் என்பதும்,

இது போன்ற சேவைகள் செய்வதற்கு கூட தன்னை ஃபிர் அவ்னாக மக்களிடம் காட்டி சம்பாதித்த பணம் தான் தேவைப்பட்டது என்பதும் சிந்தனையை அடகு வைத்த இது போன்ற ஓட்டுப்பொறுக்கிகளுக்கு புரியாததில் வியப்பில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக