செவ்வாய், 18 மார்ச், 2014

உள்ளுணர்வு தனித்து இயங்குமா?


Consciousness என்கிற கடவுள் எந்த உடலையும் மனதையும் சார்ந்து இராமல் Pure Consciousness ஆக மட்டுமே இருக்கிறார்.

என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால், எதையுமே சாராத உங்கள் கான்சியச்னஸ் எது? என்பதை எனக்கு விளக்க வேண்டும். கான்சியச்னஸ் என்பது காலத்திற்கு அப்பாற்ப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், எதையுமே சாராமல் தனித்து இயங்கும் வகையில் அது நம்மிடம் இருக்கிறதா? எவரிடமாவது இருக்கிறதா? 

கான்சியச்னஸ் என்பது உருவமற்ற ஒரு அலை வடிவு என்று சொன்னாலும் அது இயங்குவதற்குரிய ஒரு physical entity வேண்டும். அதுவும் தான் விஞ்ஞானம்.

நான் விழிப்பது வரை எதையுமே உணராத நம் கான்சியச்னஸ், கண்களை நாம் திறந்த பிறகு இந்த உலகை உணருகிறது என்றால், அங்கே உணர்ந்தது கான்சியச்னஸ் என்றாலும் உணர்த்தியது கண் என்கிற physical entity .
உடல் என்கிற திடப்பொருளின் உதவியுடன் சிந்திக்கிற அறிவுடனும் மூளையின் உதவியுடனும் தான் கான்சியச்னஸ் இயங்கும்.

அதனால் தான் உயிருடன் இருக்கும் எனக்கு கான்சியச்னஸ் இருக்கிறது என்கிறோம், உயிரற்று போன ஒரு உடலுக்கு கான்சியச்னஸ் இல்லை என்கிறோம்.
அதனால் தான் விழித்திருக்கும் போது என் உடல் சோர்வு, கை கால் வலி ஆகியவற்றை அறிகிற எனது கான்சியச்னஸ், நான் தூங்கும் போது அவற்றை அறிவதில்லை!

அல்லாமல், கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த physical entity யின் உதவியும் தேவையில்லை என்று நீங்கள் சொன்னால், தூங்குகிற போது எனது கான்சியச்னஸ் என் கை கால் வலியை ஏன் உணரவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் வாதப்படி கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த உருவ அமைப்பும் தேவையில்லை , அது தான் விஞ்ஞானமும் சொல்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.
அதனால் நீங்கள் அனைத்தையுமே விஞ்ஞானத்தின் படி நம்பி விட்டீர்கள் என்றாகி விடுமா?
உருவமில்லாத கான்சியச்னஸ் குறித்து சொல்லும் விஞ்ஞானம், அது எப்படி முதலில் தோன்றியது என்று சொல்கிறதா ? இல்லையே!
அந்த கான்சியச்னஸ் எப்படி நம்மை படைத்தது என்று சொல்கிறதா? இல்லையே.
நான் பேசுவதையும் கேட்பதையும் அது கவனிக்கும் என்று சொல்கிறதா? இல்லையே.

இதையெல்லாம் விஞ்ஞானம் சொல்லாத போதும் கூட கடவுள் பரம்பொருள், அவர் அனைத்தையும் கவனிப்பார், என்று நீங்களும் தானே நம்புகிறீர்கள்?

எதற்கு உங்களிடமே பதில் இல்லையோ அதை பிறரிடம் கேள்வியாக கேட்க கூடாது என்பது சாதாரண விதி!

- மாற்று மதத்தவருடனான உரையாடலில் ஒரு பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக