செவ்வாய், 18 மார்ச், 2014

மறைவானவவைகள் நபிக்கு தெரியுமா?


எனக்கு மட்டும் மறைவானவை தெரிந்திருக்குமானால், அதிகமதிகமாக நன்மைகளை நான் செய்திருப்பேனே, எந்த தீங்கும் என்னை நேராதவாறு என்னை காத்துக்கொண்டிருப்பேனே, என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதாக அல்லாஹ் (7:188 ) வசனத்தில் சொல்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சில மறைவான விஷயங்களை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அல்லாஹ் சொல்லிக்கொடுத்தான் அடிப்படையில் அறிவித்திருக்கிறார்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் தெரியாது.

சிலவற்றை சொல்லிக்கொடுத்துள்ளான் என்பதை நாமும் மறுக்கவேயில்லை. அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளானா? என்பது தான் எனது கேள்வி.

அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளான் என்றால் மேலே நான் குறிப்பிட்டுள்ள இறை வசனத்திற்குரிய‌ பதிலை நீங்கள் தர வேண்டும்.

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் யுத்தத்தின் போது அவர்களுக்கு கடவாய்ப்பற்கள் உடைக்கட்டிருக்குமா ?
உடைக்கப்பட்டிருக்காது. !
அப்படி தான் 7 :188 வசனத்தில் அவர்கள் சொல்கிறார்கள்!!

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தூரத்தில் ஏற்ப்பட்ட சத்தம் எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக இரவோடு இரவாக குதிரையில் பயணப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஏன் சென்றார்கள்? வீட்டிலிருந்தவாறே சொல்லியிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் சஹாபாக்களை கொலை செய்யத்தான் அழைக்கிறார்கள் என்பதை அறியாமல் எதிரிகளுடனான உடன்படிக்கைக்கு சஹாபாக்களை ஏன் அனுப்பினார்கள்? தெரிந்தே தான் அனுப்பினார்கள் என்று சொல்ல வருகிறீரா?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் , ஆயிஷா அம்மா மீது அவதூறு சொல்லப்பட்ட போது, அதை நினைத்து அவர்கள் சொல்லனா மனவேதனையை ஏன் அடைய வேண்டும்?
இவ்வாறு அவதூறுகள் பரவும் என்பது முன்கூட்டிய அவர்களுக்கு தெரியும் எனும் போது, ஆயிஷா அம்மாவையும் தன்னுடனே அவர்கள் அழைத்துக்கொண்டே சென்றிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தன் மனைவி மீது அவதூறு கிளம்பியதும், அதை அறிவதற்காக ஆயிஷா அம்மாவின் பணிப் பெண்ணிடமேல்லாம் இதை குறித்து ஏன் விசாரிக்க வேண்டும்? தம் மனைவி மீதே ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும் ?

அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்து விட்டார்கள் என்கிற ஒரு ஹதீஸை இதற்கு ஆதாரமாக காட்டுகிறீர்கள். அது பலகீனமான் செய்தி என்பது ஒரு புறம் இருக்கட்டும் .
ஒரு வாதத்திற்கு சரியான அறிவிப்பு என்றே வைப்போம், மறைவான, இனிமேல் நடக்கப்போகிற எல்லா விஷயங்களையும், நாளை நடக்கப்போகிற விஷயங்களையும் , கியாமத் நாள் வரை உள்ள சம்பவங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொல்ல வேணடுமானால், தமது வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
அவர்கள் காலத்தில், ஆப்ரிகா கண்டத்தில் வசிக்கக்கூடிய ஒரு எறும்பு இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறது தெரியுமா? என்று அதையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
அதுவா அதற்கு அர்த்தம்?

சொர்கதிற்குரிய , நரகத்திற்குரிய ஒவ்வொரூ நபரையும் பெயர் குறிப்பிட்டு, இவர் நரகத்திற்கு செல்வார், இவர் சொர்கத்திற்கு செல்வார் என்று சொல்ல துவங்கினால், தமது நபித்துவ வாழ்வில் பெரும்பகுதியை இதை அறிவிப்பதற்கு தான் அவர்கள் செலவிட்டிருக்க வேண்டும்.

இதை மறுத்து, இல்லை, எல்லாவற்றையும் இல்லை, அவசியமான செய்திகளை மட்டும் சொன்னார்கள் என்று நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றால், அவசியமான சில செய்திகள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, மற்ற எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டவராவீர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக