கேள்விக்கு பிறந்த கூட்டமொன்று உள்ளது. நடு நிலை என்கிற தனி மதத்தில் இது ஒரு வகை சாதியினர். இவர்களுக்கு கேள்வி மட்டுமே கேட்க தெரியும்.
அந்த சாதியை சேர்ந்த ஒருவர் வழக்கம் போல் ஜெயா நாளை மோடியை ஆதரித்தால் உங்களை என்ன செய்வது? என்று தனி மெஸேஜில் நம்மிடம் கேள்வியெழுப்பினார்.
கேள்விக்கு பிறந்த ஜாதி என்று இவரைப்பற்றி தெரியாத நிலையில், மோடிக்கு எதிராக மிகப்பெரிய மாற்று அரசியல் திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நினைத்து, எனக்கு தெரிந்து எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல, நீங்கள் இதற்கு மாற்றாக யாரை ஆதரிக்க சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.
இந்த சாதாரண கேள்விக்கு விடை சொல்ல இயலாமல் முக்கி, மோதி, பின் நம்மை கெட்ட வார்த்தைகளால் வசை பாடி இவர் அடித்த பல்டிகளை கண்ட போது தான் புரிந்தது, இவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பது.
ஜெயலலிதா மோடியை ஆதரித்தால் என்ன செய்வது என்று கேட்கும் கூட்டத்தார் இது நாள் வரை செவ்வாய் கிரகத்தில் இருந்து, நேற்று தான் தரையிறங்கியிருக்கிறார்களா?
இவர்கள் எந்த கட்சியை சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் இதற்கு முன் பாஜகவை ஆதரித்ததேயில்லையா?
அல்லது அதிமுகவுக்கு தூது விட்டதேயில்லையா?
இவர்கள் சார்ந்திருக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் கூட போயஸ் தோட்டத்தில் காவல் கிடந்ததும், அம்மையார் இவர்களை மதிக்காததால் பின் வெளியேறி சுயமரியாதை பீறிட்ட வரலாறுகள் நமக்கு தெரிதாதா?
இந்தியாவில் எந்த கட்சியும் பாஜக பக்கம் செல்லாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது என்பதே உண்மை.
இவர்கள் வக்காலத்து வாங்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை குறித்து கூட அந்த உத்திரவாதம் கிடையாது.
சம்மந்தப்பட்ட கேள்விக்கு பிறந்தவர், தனிப்பட்டமுறையில் எனக்கு அனுப்பிய கேள்விகளை பொதுவில் வைத்துக் கேட்கட்டும் பார்க்கலாம், அதை நாம் இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.
இன்னும் சொல்லப்போனால், தற்போதைய அரசியல் சூழலில், இருக்கின்ற கட்சிகளிலேயே பாஜக பக்கம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பது அதிமுகவுக்கு தான் என்பதே உண்மை !
தங்கள் சுய லாபத்திற்காக அரசியல் நடத்துபவர்களுக்கும், செவ்வாய்க் கிரகத்திலிருந்து நேற்று குதித்து வந்த அரைகுறைகளுக்கும் இது புரியாததில் வியப்பேதுமில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக